Shiva's Yoga is all Maya - Part 2 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 2

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 2

சிவாவின் - Yoga எல்லாம் மாயா.. Part - 2


நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.


உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com
.


இப்படியே நாட்கள் செல்ல.. நான் ஒரு weekend ல் திருச்சி போய் அம்மா அப்பா வை போய் பார்த்துவிட்டு வந்தேன்.
நானும் சொன்னபடி yoga class போகவில்லை. எதற்கு வம்பென்று. ஆனால் yoga class போன வரைக்கும் கழுத்து வலி தெரியவில்லை. ஆனால் Yoga நிப்பாட்டி கொஞ்ச நாளுக்கு எல்லாம் மறுபடியும் தலைகாட்டியது.

எங்கள் office annual function பெரிய level ல் செய்ய decide பண்ணி, ஒரு நல்ல event organiser ஐ தேடிட்டு இருந்தாங்க.. Meeting ல் Discussion வரும்போது நான் மாயா Name suggest பண்ணேன். அவங்க யார் னு கேட்க, என்னோட friend னு casual ஆ சொல்லி வைக்க..

பின் receptionist,
மாயா - Karthik friend- for event organiser referred by Karthik project leader IT wing போட்டு,
matter full ஆ type பண்ணி forward ஆகி.. எல்லா finance, personal HR வரைக்கும் போயி..

கடைசியில்.. மாயா Karthik Girl friend னு எல்லாரும் பேச.,
எனக்கே ஒண்ணும் புரியலை. என் friend Ram வந்து, என்ன மச்சான் உன் பேரும் யாரோ மாயா பேரும் notice board full ஆ கிழிஞ்சி தொங்குதுனு சொல்ல, எனக்கு அப்பதான் அதன் seriousness புரிந்தது.

Finance dept. லேருந்து மாயா வை Quotation கொடுக்க சொல்லி personal ஆ meet பண்ண சொல்லியிருந்தாங்க.

அவள் office வரும் போது நான் அங்கு இல்லை.
மாயா வந்து office ல் event பத்தி enquire பண்ண... என் wing staff லாம்.. Karthik Girl friend னு கிண்டல் பண்ணி மாயா வை ஒருமாதிரி ஓட்ட... ஒண்ணும் புரியாமல் இதெல்லாம் என்னோட திட்ட மிட்ட வேலை னு மாயா தப்பாக புரிந்து கொண்டு கோபத்தில் quotation paper யை அங்கேயே கிழித்து போட்டு dammit என்று சத்தம் போட்டு வந்து விட்டாள்.

அதேநாள் Evening colony ல் உள்ள விநாயகர் temple சிறப்பு பூஜை யில் நான் கலந்து கொண்டு பிரகாரத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் மாயா, புஸ்க்கு கோவிலுக்கு வர.. என் மீது செம கோபத்தில் இருப்பது மாயாவை பார்த்தவுடனே தெரிந்தது.

முன்பே ராம் போன் பண்ணி alert பண்ணி யிருந்தான். Afternoon Office ல மாயா கோபப்பட்டு கத்தினதை..‌ அதுவும் என் மீது செம காண்டு ல இருப்பதை. நான் எதற்கும் தயாராக வே இருந்தேன்.

அன்றைக்கு என் நேரமே சரியில்லை போல.. கோவிலுக்கு மாயா light pink chidithar ல் simple makeup ல் வந்திருந்தாள். ரொம்ப நாள் கழித்து அவளை இந்த மாதிரி chudi யில் பார்ப்பது அழகாக இருந்தது. மாயா சுவாமி அலங்காரத்தையே பார்த்து கொண்டிருக்க.. நான் மாயா வை பார்த்து கொண்டே ஜஸ்ட் காய்ந்த உதட்டை ஈரப்படுத்த நாக்கால் என் உதட்டை தடவ, கரக்டாக அதேசமயம் மாயா நிமிர்ந்து என்னைபார்க்க, அவள் முகபாவம் மாறியது. அப்போது தான் strike ஆனது நான் உதட்டை ஈரப்படுத்திக் கொள்வதை.. சட் டென்று நான் normal ஆக.. திரும்பி மாயா என்னை பார்த்த பார்வை படு கேவலமாக இருந்தது. அதிலும்.. கோவில்ல கூட.. நீ யெல்லாம் என்ன ஜென்மம்.. என்பது போல இருந்தது.

எல்லாம் முடிந்து கோவிலிருந்து பிரசாதம் வாங்கி கொண்டு கீழே ஃப்ரண்டுடன் பேசி கொண்டே நடக்க.. புயலாக வந்த மாயா... Excuse me.. sorry.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. தனியா.. என்றாள். பின்னாடி யே வந்த கட்டபுஸ்க்கு மாயாவுக்கு தெரியாமல் என்னை பார்த்து சைகையில் மாயா உன் மேல் ரொம்ப கோபமாக இருக்கிறாள். எதுவும் தப்பா பேசிடாதே.. என்று எச்சரித்தாள்.
நான் friend க்கு sorry சொல்லிவிட்டு.. கூட்டம் இல்லாத இடம் நகர்ந்து மாயா வை பார்க்க..‌ எரிமலை போல் கொதித்து கொண்டிருந்தாள். கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு.. என்னையே பார்த்தாள்.

நீ மாறவே மாட்டியா? எப்பவும் இப்படித்தான் இருப்பியா? எப்ப பாரு என்னய tease பண்றதுதான் உன் வேலையா?. கோவில்ல கூட..

இல்ல மாயா..

Don't talk..

இங்க காலனி, Yoga Centre ல அசிங்கபடுத்தின.. இப்ப உன்னோட office ல..
உன்னோட staffs எல்லாரும் முன்னாடி..
நான் அசிங்க பட்டு நிக்கனும். அதானே உனக்கு வேணும். ..

I am sorry.. அது இல்ல மாயா.. எனக்கும்.. அதுக்கும்...

Don't talk..

என்னய அசிங்கபடுத்துறதே உன் வேலை யா வச்சிருக்கியா?
இப்ப கூட கோவில்ல..
ச்சே.. Bangalore ல ஒருத்தன் துரத்தி துரத்தி அசிங்கபடுத்தினான். முடியாம இங்கே ஓடி வந்தேன். இங்க இப்ப நீ.. இனி நான் எங்கேதான் ஓடறது.. மனசில தெம்பில்லை.. என்றாள் கண்ணீர் மல்க.
உன்ன யாரு எனக்கு உங்க office ல event organise பண்ண recommend பண்ண சொன்னது?
நான் கேட்டேனா?
நான் தான் சொல்லியிருக்கேன்ல.. உன் சகவாசமே வேணாம், தயவும் வேணாம் னு. Gap விட..

மாயா, இப்ப நான் எது சொன்னாலும் உனக்கு புரியாது. புரிஞ்சிக்கவும் மாட்ட..
ஓகே.. இனி என்னால உனக்கு எந்த வித problem ம் வராது.
சீக்கிரமா.. நான் இங்கேயிருந்து வேற area, place க்கு shift ஆகி போயிடறேன். இனிஉன்னோட மூஞ்சியில முழிக்க மாட்டேன், போதுமா என்றேன் feelings டன் மெதுவாக.

முதல்ல அத செய்.. என்று தன் தலைமேல் கைகளை வைத்து கும்பிட்டபடி சொல்லி, டப் பென்று விலகி, திரும்பி பார்க்காமல் நடந்து சென்றாள்.

புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

நான் அப்படியே வருத்தத்துடன் பக்கத்தில் இருந்த மரத்தில் சாய்ந்து மேலே வானத்தில் நிலவை பார்க்க..

இதையெல்லாம் பார்த்து ரொம்பவும் மனசு கஷ்ட்டபட்ட ஸ்ருதி.. மெதுவாக என் கிட்ட வந்து..

கார்த்தி சாரிடா.. ரொம்ப feel பண்றியா?
மாயா எப்பவும் இப்படித்தான்.. . பட பட னு பொரிஞ்சி தள்ளிடுவா..
என்னடா பேச மாட்டேங்கிற.. feel பண்ணாதடா..
உண்மையிலேயே இந்த flat, colony யை காலி பண்ணிட்டு போகப்போறியா?
வேணாண்டா please.

சட் டென்று திரும்பி ஸ்ருதி யை பார்த்து ஓஹோ..ஹோ.. னு சிரித்து.. நீயும் நம்பிட்டியா?
வேற வேலையே இல்லை எனக்கு, உன் ஃப்ரண்ட் க்காக ஊரை காலி பண்ணிட்டு போயிடுவேன்? அப்பறம் எப்படி உங்க இரண்டு பேரையும் daily வம்பிழுக்கிறது? எப்படி எனக்கு timepass ஆறது?.
‌ஏதோ உன் ஃப்ரண்ட் மனசு கஷ்ட்டபடறாளே, இப்ப இந்த மாதிரி ஏதாவது சொன்னா கொஞ்சம் relief ஆ feel பண்ணுவான்னு சொன்னேன்.

அடப்பாவி, கொஞ்ச நேரத்தில‌ என்னயே feel பண்ண வச்சிட்டியேடா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. மறுபடியும் உன்கிட்ட பல்பு வாங்கிட்டேன் பாரு. நீ திருந்தவே மாட்டியா? படவா..உன்ன
என்று கழுத்தை நெரிப்பதை போல கையை வைத்து கொண்டு வந்தாள்.

கட்ட புஸ்க்கு உன் height க்கு அதெல்லாம் முடியாது.
அப்பறம் foreign லேருந்து home made Vodka வருது. உனக்கு எத்தனை bottle வேணும் னு சொல்லு?

டேய் நீ அடங்கமாட்ற.. மவனே இரு உன்ன வச்சிக்... ச்சீச்சி.. ஏதோ பாவம் னு console பண்ண வந்தா.. மவனே..

வேண்டுமென்றே ஓ..ஹோ.. ஹோ.. என்று மறுபடியும் சிரித்து, ஓடிப் போ ..கட்டபுஸ்க்கு.. என்றேன்.

படவா, உன்னயெல்லாம்.. என்றவாறு திரும்பி திரும்பி பார்த்து திட்டிக் கொண்டே சென்றாள்.

ஓவரா ஆட்டாம போ..

கீழேயிருந்து ஒரு கல்லை எடுத்து என் மீது வீசினாள்.
சிரித்துக்கொண்டே நகர்ந்தேன்.

இதுக்கு கூட நீ இன்னும் வளரனும் என்றேன்.
போடா உங்க... என்ற சப்தம் இருட்டில் கேட்டு மறைந்தது.

அடுத்த நாள், Office ல் ராம் நேத்து என்னாச்சு? மாயா ஏதாவது சண்டை போட்டாளா? என்று கேட்க, அதெல்லாம் ஒண்ணமில்லை சமாளிச்சாச்சு..

சரி Last time மாயா ஏதோ boutique shop வச்சிருக்கா னு சொன்னில்ல.. அட்ரஸ் கொடு. என்னோட cousin ஒருத்தி க்கு marriage. So அங்க Dresses எடுக்க மாயா Shop போக சொல்றேன்.

அட்ரஸ் கொடுத்துட்டு யப்பா டேய் என்னோட பேரை Use பண்ண வேண்டாம் னு சொல்லு.. ஏற்கனவே Ukraine - Russian war மாதிரி போயிட்டிருக்கு.

ராம் சிரித்துக்கொண்டே... ஓகே டா.. சொல்லலை.

ராம் க்கு கொடுத்த மாயா boutique shop address எப்படியோ அவனோட lady staffs கொஞ்சம் பேருக்கு தெரிஞ்சு, அதுவும் கார்த்தி சார் Girl friend னு தெரிஞ்சி.. யார் சொன்னாங்களோ? இல்ல வேணும் னு கோத்து விட்டாங்களோ.. என் கிரகம்.. அதுக ஒரு 4,5 பேர் Shop போய் அதகளம் பண்ணி., மாயா வை நீங்க எங்க கார்த்திக் சார் close friend தானே.. discount கொடுங்க.. னு படுத்தி...
எனக்கு information கட்டபுஸ்க்கு மூலமா வர, நான் உடனே புஸ்க்கு போன் மூலமாவே எங்க staffs யை கொஞ்சம் கடுமையா திட்டி, என் பேரை Use பண்ண வேண்டாம் னு சொல்ல..
அதுல ஒரு குரங்கு, ஃபோனை cut பண்ணிட்டு, Shop ல் சத்தமாக ஏய் கார்த்திக் சார் phone ல feel பண்றாருடி. அவரு ஃப்ரண்ட் மாயா மேடம் ரொம்ப feel பண்ணுவாங்களாம். அதனால ரொம்ப லாம் discount கிடையாதாம். சரி நாம இந்த Rate க்கு commit ஆவோம் னு.. தேரை இழுத்து தெருவில விட்டுட்டு போயிடுச்சு.

இதை வேற புஸ்க்கு என்கிட்ட போன் ல சொல்லி.. மவனே இன்னைக்கு உனக்கு மண்டகப்படி தான். எங்கயாவது Pakistan border பக்கம் தப்பிச்சி போயிடு. ஏற்கனவே உன் விஷயத்தில மாயா கதகளி ஆடுவா.. இதுல உன்னோட staffs சலங்கைய வேற கட்டிவிட்டாள்க.. பார்த்துக்கோ என்றாள்.
எனக்கு என்ன பண்றதுனே தெரியல.

ராம் க்கு போன் பண்ணா, டேய் நம்ம staff காயத்ரி க்கு மட்டும் தான் boutique address கொடுத்தேண்டா என்றான். காயத்ரி ய கேட்டா.. மாலா.. விஜி.. ஸ்வேதா .. இன்னும் பக்கத்து section வரைக்கும் list போயிகிட்டே இருந்தது. எல்லாம் என் விதி. வருவது வரட்டும் னு ஈவினிங் காக wait பண்ணேன்.
ஈவினிங் வந்ததது. Park ல் இருந்தேன். 7 மணி போல் park க்கு மாயா, கட்டபுஸ்க்கு வருவது தெரிந்தது. புஸ்க்கு வரும் போதே சிரிப்புடன் மாயா ஜஸ்ட் பின்னாடி யே வந்தாள். கையால் நல்லா மாட்டுனனு சைகை பண்ணி கொண்டே..

நான் என் கையில் இருந்த file folder ரால் ஒருசைடு முகத்தை மூடிக் கொண்டு போன் பேசுவதை போல நடிக்க..

கிட்டே வந்த மாயா விடம் கட்ட புஸ்க்கு போட்டு கொடுத்தது.

கார்த்திக் சார் நம்மகிட்ட முகத்தை காண்பிக்க மாட்டாராம். ஏன்னா நேத்து நம்மகிட்ட வேற place க்கு shift ஆகி போயிடுவேன்.. நாளையிலிருந்து உங்க முகத்தில முழிக்க மாட்டேனு சொன்னாருல.. அதான் இப்ப நம்ம கிட்ட முகத்தை காட்ட வெட்கப்பட்டுகிட்டு மூடிக்கிறாரு ஏன் சார் அப்படி தானே.

நான் phone ல் busy யாக இருப்பது போல் நடிக்க, புஸ்க்கு எனக்கு போன் பண்ண அது ரிங் ஆக..

புஸ்க்கு, கார்த்திக் சார்.. இதுதான் ரியல் போன் கால். ஓவர் ஸ்மார்ட் ஆ ஆக்ட் பண்ணாதிங்க.
நான் வசமாக மாட்டினேன்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மாயா, கோபமாக.. என்னிடம்.. அதே சமயம் மெதுவாக பொறுமையுடன்..

நான் உன் கிட்ட என்ன சொன்னேன்?.

எனக்கு அந்த slang நம்ப popular வாழைப்பழ comedy யை ஞாபகத்திற்கு கொண்டு வர,

உடனே,
வாழப்பழம் வாங்கிட்டு வரச்சொன்னிங்க..

What? வாழப்பழமா? What nonsense?

அதற்குள் கட்டபுஸ்க்கு என்னோட சேர்ந்து..
ஒரு ரூபாய்க்கி எத்தனை பழம்?
என்று சொல்லி.. உடனே நாக்கை கடித்து கொண்டாள்.

நான் உடனே .. ரெண்டு பழம்
என்று சொல்ல..

மாயா விற்கு ஒண்ணும் புரியவில்லை.

ஸ்ருதி நீ கூடவா..? What is this?

Sorry மாயா..‌ அந்த slang கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ comedy மாதிரி இருந்தது னால நானும் என்னை மறந்து involve ஆகி சொல்லிட்டேன். Sorry டி.
எல்லாம் இவனால வந்ததுதான், என்றாள் என்னை பார்த்து.

நான் உடனே.. ஓகே, உங்க problem என்ன?

மாயா மறுபடியும்..
நான் உன் கிட்ட என்ன சொன்... sorry.. திரும்பவும் வாழைப்பழ காமெடி ஆயிடும்.. leave it..
Okay.. நீ உன் மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

உன்னயத்தான்..

What..?

இல்ல உன் கிட்ட ஒரு matter சொல்லனும். அதான் உன்னய நினைச்சிகிட்டிருந்தேன்.

நீ ஒண்ணும் என்னைய நினைக்கவும் வேண்டாம், ஒரு matter ம் சொல்லவும் வேண்டாம். சும்மா இருந்தாலே போதும்.
இன்னைக்கு உங்க staffs.. shop ல் behave பண்ணது.. நினைச்சாலே.. எனக்கு எரியுது.

இல்ல மாயா Office ல Function Grand party. நல்ல Offer.. னு topic divert பண்ண try பண்ணேன்.

ஒரு Offer ம் வேண்டாம். நீ ஏதும் பண்ணாலே இருந்தால் போதும் எங்களுக்கு.

ஓகே.. உங்களுக்கு வேணாம்னா போங்க,
எங்க Office Annual Function க்கு AR Rehman music concert Grand ஆ fix பண்ண போறாங்க.. நல்ல Event Organiser தேடிகிட்டிருக்காங்க.. நான் உங்க பேர Suggest பண்ணலாம் னு பார்த்தேன். வேணாம் னா போங்க எனக்கென்ன? நல்ல Offer இது.
சிறப்பா பண்ணிங்கன்னா.. Every time எங்கள் Officeல நடக்குற Party Grand Function க்கு நீங்க Permanent ஆ fix ஆயிடலாம்.
Main ஆ Rehman Sir பார்வை trust உங்களுக்கு கிடைச்சதுன்னா.. even Foreign ல கூட நிறைய chance வரும். இப்ப வரைக்கும் நான் உங்களுக்காக இதை Hold பண்ணி வச்சிருக்கேன். இன்னும் 2 நாளாச்சுனா என் கையை விட்டு போயிடும். வெளியே நிறைய பேர் இந்த Offer க்காக Wait பண்ணிகிட்டிருக்காங்க. அப்பறம் உங்க இஷ்டம்.
A R Rehman ன்ன வுடனே ஸ்ருதி.. மாயா.. மாயா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்டி ஒத்துக்கோடி.. நல்ல offer.

இருடி, இதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு பார்க்கணும். இவன நம்ப முடியாது. பொய்யா விளையாட்டு க்கு சொல்றானா? இல்ல உண்மை தானா னு Confirm பண்ணதுக்கு அப்பறம் தான் நாம..

மாயா, I am completely changed.
ஸ்ருதி க்கு கூட தெரியும். ஏன் ஸ்ருதி?

கட்டபுஸ்க்கு திரு திரு வென விழித்து.. ஆ..மா.. ஆமாம் கரக்ட் என்று தந்தியடித்தாள்.
மாயா யோசனையில் ஆழ்ந்தாள்.

தொடரும்...

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com
- உங்கள் சிவா