DAD'S ARE ALWAYS LIER'S - 2 in Tamil Fiction Stories by Pramila books and stories PDF | DAD'S ARE ALWAYS LIER'S - 2

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

DAD'S ARE ALWAYS LIER'S - 2

இப்போது நான் என் மகளை தேட , அவள் எங்கள் வீட்டு டைனிங் டேபிள் மேல் அமர்ந்து , தன் தலையை கீழே சாய்த்து , கன்னத்தில் கையை வைத்து , கண்களில் கண்ணீரோடு என்னை பார்த்தாள் 😕😭 . சண்டைக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை.. ஏனெனில் இது வழக்கமாக நடப்பதே.. அப்படியே காரணம் இருந்தாலும் அதில் உப்பு காரம் எதுவும் இருக்காது 😜 .
நான் என் மகள் அருகே சென்று " என் மகா குட்டிக்கு என்னாச்சு ? " என்று கேட்டேன். அவள் என்னை பார்த்து " அப்பா நான் எது செய்தாலும் அதை அம்மா தப்புன்னு சொல்றாங்க , என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க ," என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

இப்பொழுது கிருஷ்ணாவும் எங்களோடு வந்து அமர்ந்தான். அவன் " ஓ மை பட்டர்ஃபிலை , இங்க பாரு இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா இங்க பாரு இப்ப நான் உங்களுக்கு ஒரு மேஜிக் காட்ட போறேன்🥳💫 " என்றான். மேலும் தனக்கு தெரிந்த சிலவற்றை செய்தும் காட்டினான்🎉 இருந்தும் பயனில்லை , இன்னும் இளவரசியின் அழுகை நிற்கவில்லை.😶

இப்பொழுது நான் தான் ஏதாவது செய்ய வேண்டும். கிருஷ்ணா தன் முயற்சிக்கு பிறகு என்னை பார்க்கிறான் . இப்பொழுதும் அந்த பார்வைக்கு அதே அர்த்தம் தான். ஆனால் இம்முறை அவன் முகத்தில் சிரிப்பு இல்லை. இம்முறை என்ன பொய்க்கதை😅 என்ற ஆர்வம் தான் இருந்தது . நான் என் மகளை பார்த்தேன் .....

'ஓ ஓ ஓ மகா குட்டி நிமிர்ந்து உட்காருங்க ' அவளிடமிருந்து பதில் இல்லை. நான் மீண்டும் ' ஒஓஓஓ குட்டி ' இம்முறை நானே அவள் தலையை நிமிர்த்தி என்னை பார்க்கும் படி செய்தேன் , மகா என்னிடம் " என்னப்பா "என்று சலித்துக்கொண்டாள். " குட்டி நிமிர்ந்து உட்காருங்கள், இல்லேன்னா " என்று இடையில் நிறுத்தினேன் . அவள் , " இல்லைன்னா என்ன ? சொல்லுங்கப்பா " என்றாள் . நான் " மகா குட்டி இல்லைனா .... உன்னோட கிரீடம் கீழே விழுந்திடும் டா😉😋 " என்றேன்.

அவள் ஆர்வமாக அவளின் தலையை தடவி கிரீடத்தை தேடுகிறாள்👸 . ஆனால் அவளுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான்😕 . அவர் மீண்டும் கோபமாக , " போங்கப்பா நீங்க பொய் சொல்றீங்க " என்றாள்.

" மகா, அப்பா உன்னிடம் பொய் சொல்வேனா ?" இம்முறை பதில் மகளிடம் இல்லை . ஆனால் கிருஷ்ணா தன் மனதினுள் ( நீங்க எப்பவும் போய் தான் சொல்றீங்க 🤭🙃 பாவம் அவளுக்கு தான் அது தெரியவில்லை😕 ) சிறு புன்னகையோடு. அப்படி என்றால் கிரீடம் எங்கே ?" என்றாள் . கிருஷ்ணா மனதினுள் ( ஆஹா சபாஷ் சரியான கேள்வி 😁😉 ) நான் மகாவிடம் " மகா குட்டி அதை நான் உன்னிடம் எப்படி கூறுவது " கிருஷ்ணா ( வாயில் தான் 🤪 )

நான் , " அது ஒரு சின்ன கதை தான் , ஆனால் பெரிய ரகசியம் 🤭 " . இப்பொழுது அவள் கண்ணீர் நின்று அவளது கவனம் எனது வார்த்தைகளில் இருந்தது . இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்🙂. மகா ஆவலுடன் " என்ன ரகசியம் அது ? " என்றாள். நான் " நீ பிறந்த போது நடந்த விஷயம் அது, அப்ப நீ குழந்தை , அதனால் உனக்கு தெரியாது. " எனக்கூறி, நான் சற்று அமைதியாக , " என்னப்பா சொல்லுங்க ஏன் நிறுத்திட்டீங்க ?" ஆவலின் கூச்சத்தில் மகாவும் கிருஷ்ணாவும். " சரி சொல்வேன், ஆனால் இதை யாரிடமும் சொல்லக் கூடாது , ஏனெனில் இது ரகசியம் " நான் உண்மையில் என்ன சொல்வது என்று தெரியாமல் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தேன்😅😉😅🙃.

" ஓகே சொல்ல மாட்டேன் . நீங்க சொல்லுங்க". நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆனால் அதற்கு முன்னால் நீ சாப்பிட வேண்டும் " என்றேன். மகாவும் " ஓகே அப்பா ஆனால், நீங்கள் தான் ஊட்ட வேண்டும் " புன்னகையுடன் 🙂. கிருஷ்ணா வாய்ப்பை பயன்படுத்தி, " பட்டர்பிளை அம்மாவும் சாப்பிடவில்லை , அம்மாவை போய் கூப்பிடுங்க " என்று சொன்னவாறு இரண்டு இட்லியை என்னிடம் நீட்டினான். மகா " போங்க சித்தப்பா நீங்க எப்பவும் அம்மாவுக்கு தான் சப்போர்ட்🤨😠😡 " என்றாள். நான் என் பங்குக்கு " குட்டி அம்மா தானே திட்டினாங்க விடுடா " என்றேன் . அதற்கு மகா " அப்பா இப்ப நீங்க கதை சொல்லப் போறீங்களா இல்லையா ? " என்றாள் , சற்று கோபமாக😡... சரி ஆனால் குறுக்கே பேசக்கூடாது எனக் கூறி கதையை தொடங்கினேன் ..

*****************
To be continued

நமக்கு பல நேரங்களில் பலரும் கதை கூறுவது உண்டு... ஆனால் அதை எல்லாம் நாம் நம்பி விடுவதில்லை .. ஆனால் ஒரு சிலரிடம் கேட்கும் கதைகள் எப்பொழுதும் மறக்க இயலாததாகவும் இனிமையான நினைவாகவும் மாறிவிடும்... பல கதைகளை நமது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என பலரும் கூறக் கேட்டிருப்போம்.... எடுத்துக்காட்டாக ராஜா ராணி கதை, இளவரசி கதை, சில சமயங்களில் பேய்க்கதைகள் கூட 👻 , இப்படி பல கதைகள்.... 😅.. ஆனால் அந்த ஒரு நபர் கூறிய மறக்க முடியாத கதை என்று அனைவருக்கும் ஒன்று இருக்கும், அப்படி மறக்க முடியாத கதையை உங்களுக்கு கூறியது யார் review வில் சொல்லிவிட்டு போங்க....😍