DAD'S ARE ALWAYS LIER'S - 3 in Tamil Fiction Stories by Pramila books and stories PDF | DAD'S ARE ALWAYS LIER'S - 3

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

DAD'S ARE ALWAYS LIER'S - 3

அன்று சரியாக 8 மணி. அப்பா அப்போது ஆபீஸில் இருந்தேன் , அன்னைக்கு அப்பாவுக்கு அதிகமாக வேலை இருந்தது. நான் என் வேலையை வேகமாக செய்து கொண்டு இருந்தேன். அப்போ எனக்கு ஒரு போன் வந்தது 📞 .

மகா இடையில் " யார் போன் பண்ணது ? " என்றாள் . " குட்டி இப்பதானே சொன்னேன் பேச கூடாதுன்னு " " ஓகே அப்பா பேச மாட்டேன் நீங்க சொல்லுங்க " எங்க விட்டேன் ம்.... ம் போன் வந்தது .... போனை எடுத்தேன் . அப்போ உன்னோட தாத்தா தான் போன் பண்ணாரு. நான் போனை காதில் வைத்ததும் , உன் தாத்தா என்கிட்ட " தனுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறோம். நீ சீக்கிரம் வா " என்று சொன்னார். அதன் பிறகு அப்பா வேகமாக ஹாஸ்பிடலுக்கு வந்தேனா, நான் உள்ளே வந்ததும் திடீரென ஒரு அழுகுரல், அது யார் தெரியுமா ? அது என்னோட குட்டி இளவரசி 👸 மகா தான் . ( மகா இப்பொழுது சிரிக்கிறாள் 😁😄 ).

ஆ ... ஆ... அடுத்து நான் உன்னையும் உன் அம்மாவையும் பார்க்க ஏங்கி கொண்டு இருந்தேன் 🙄 . அப்பொழுது ஒரு நர்ஸ் உன்னை கொண்டு வந்து என் கையில் கொடுத்தாங்க , ஆனால் உன் சித்தப்பா இருக்கானே 🤦‍♂️🤦‍♂️ அவன் அது என் குழந்தை என் கிட்ட குடுங்க அப்படின்னு அவன் உன்னை வாங்கிக் கொண்டான் .

( இப்பொழுது மகா கிருஷ்ணாவை பார்க்கிறாள். அவன் அவளை பார்த்து சிரிக்கிறான் 🙂. மகா பேசியது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..... பின் மகா தன் கைகளால் காதுகளைப் பிடித்து கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்கிறாள் 🙅‍♀️, பின் கிருஷ்ணா மடியில் சென்று அமர்கிறாள். இப்பொழுது கிருஷ்ணாவும் கதையை கேட்க காத்துக் கொண்டிருக்கிறான் 🙃. அசோக் தன்கதையை தொடர்கிறான் . )

அடுத்து உன் பாட்டி உன்னை வாங்கிக் கொண்டார் . பின் அவர் சொன்னார் , என் செல்லம் யார் கண்ணும் உன் மேல படக் கூடாது என்றார் . பின் தன் கண் மையை உன் கன்னத்தில் வைத்தார் 🙂. அடுத்து உன் தாத்தா முந்திக் கொண்டார் . மொத்தத்தில் யாரும் உன்னை என் கையில் தருவதாக இல்லை 😔😒.

ஹாம் ஓகே உன் தாத்தா என்ன சொன்னார் தெரியுமா " அடக்கடவுளே எனக்கு ஒரு பேத்தி தான் கேட்டேன் ஆனால் நீங்கள் ஒரு தேவதையைை கொடுத்திருக்கீங்க" என்று சொன்னார். கடைசியாக உன்னை என்னிடத்தில் கொடுத்தார்கள் . உண்மையா சொன்னா நீீ எவ்வளவு அழகா இருந்தேன்னு வார்த்தையால் சொல்லவே முடியாது நீீ அப்படி இருந்த ......


அடுத்து...... ( அப்புறம் என்னாச்சு மகா ஆவலோடு )

அடுத்து என்ன நாங்க எல்லோரும் சண்டை போட்டு கொண்டு இருந்தோம் ... "எதுக்கு? " அப்படி என்று தானே கேட்கப் போகிறாய் இரு நானே சொல்கிறேன் , எதற்கு எனில் நீ யார் என்று தான் , உன் தாத்தா சொன்னார் நீ அவரோட தேவதை என்று👰‍♀️ , நான் சொன்னேன் நீ என்னோட இளவரசி என்று👸 , உன் சித்தப்பா சொன்னான் நீ அவனோட ( பட்டர்பிளை 🧚‍♀️மகா சொல்கிறாள். ) அடுத்து உன் தாத்தா என்னிடம் கேட்டார் " சரி நீ உன்னோட இளவரசிக்கு என்ன பரிசு கொண்டு வந்திருக்க " அதற்கு நான் சொன்னேன் , இவளே என்னோட பெரிய பரிசு , ஆனாலும் நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன் , ஒரு இளவரசிக்கு மிக முக்கியமான ஓன்று அது என்னவெனில் என்னோட இளவரசிக்கு அவளுடைய கீரிடம் தான்👑. ( ஓ... அப்பா நீங்க தான் எனக்கு அந்த கிரீடத்தை கொடுத்தீர்களா ? ஆனால் அது இப்பொழுது எங்கே இருக்கிறது ? அப்பொழுது கிருஷ்ணா "ஓ மை பட்டர்ஃப்ளை🤦 அது தெரியணும்னா கதையை முழுவதும் கேட்கணும் " என்றான் . )

அப்பொழுது ஒரு குரல் கேட்டு நாங்கள் எல்லோரும் திரும்பி பார்த்தோம் , அது அந்த நர்ஸ் தான் அவங்க சொன்னாங்க உன்னோட அம்மாவுக்கு மயக்கம் தெளிந்து விட்டது அவங்க குழந்தையை கேட்கிறாங்க என்று சொன்னார்கள். உடனே நாங்க உன்னை உன் அம்மாவிடம் கூட்டிச் சென்றோம். உன்னை பார்த்ததும் தனுவுக்கு , அவ்வளவு சந்தோஷம் உன்னை வாங்கி தனது அருகில் வைத்துக் கொண்டாள். உன்னைப் பார்த்து ரசித்தாள். நீ சிரிப்பதை பார்த்து அவளும் சிரித்தாள் , ஆனால் நீ உன் அம்மாவை பார்த்ததும் அழத் தொடங்கிவிட்டாய் ( கிருஷ்ணா சிரிக்கிறான் 😁😆 , பின் அவன் மகாவை பார்த்து " அப்பொழுது முதல் இப்பொழுது வரை நீ உன் அம்மாவை பார்த்தால் அழுது கொண்டுதான் இருக்கிறாய் " என்றான். மூவரும் சிரித்தனர் )

இப்பொழுது மட்டும் இல்லை அப்பொழுதும் அனைவரும் இப்படித்தான் சிரித்தோம் . ஆனால் , உன்னுடைய அம்மா கண்களில் இருந்து கண்ணீர் அருவி ஊற்றியது. உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் குட்டி, இந்த உலகத்தில் எந்த ஒரு அம்மாவும் ஏன் உன்னுடைய பாட்டி கூட தான் , தன் வயிற்றில் பத்துமாதம் சுமந்து அன்பா அக்கறையா கவனமா பார்த்துகிட்ட குழந்தை முதல் முறை இவ்வுலகத்திற்கு வரும் போது, முதன்முதலில் அழும்போது அந்த குரல் கேட்டு சந்தோசத்தில் கண்டிப்பாக சிரிக்கத்தான் செய்வார்கள். அதற்குப் பிறகு குழந்தை அழும் போது எப்பொழுதும் சிரிப்பு வராது. ஆனால் அந்த முதல் முறை எல்லா அம்மாவுக்கும் சந்தோஷம் தான் இருக்கும்....

ஆனால் உன் அம்மா அப்பொழுது கூட , "அசோக் என்னுடைய இந்த குட்டி தேவதையே அழ வேணாம்னு சொல்லுங்க எனக்கு கஷ்டமா இருக்கு" என்று தான் சொன்னாள்.
இப்பொழுது யார் முகத்திலும் சிரிப்பு இல்லை 😶😐 .


**********************
To be continued