Quotes by Ramakrishnan Anantha in Bitesapp read free

Ramakrishnan Anantha

Ramakrishnan Anantha

@ramakrishnananantha614311
(412)

மெல்லிய அலைகள் வெண்மணல் கரையைத் தொட்டுச் செல்லும் காட்சி மனதிற்கு மிகவும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

அந்த நீலநிற கடலின் அழகு, படகுகள்... எப்பா என்ன ஒரு இயற்கையின் காட்சி...

குறிப்பு - நேற்று 29 செப்டெம்பர் 2026, மொரிஷியஷில் எடுத்தது...

Read More
epost thumb

வானவில்லின் வண்ணங்களை அள்ளிய இறகுகள்,
சிங்கார நடையுடன் துள்ளி விளையாடும் மைனா!
உன் குரல் மது, உன் தோற்றம் அழகு,
ஊரைச் சுற்றும் உன் பயணம் ஒரு புது அனுபவம்!
​சூரிய ஒளிப் பட்டுப் பளபளக்கும் உன் உடம்பு,
மஞ்சள் மூக்கில் ஊறும் இனிமையான பாட்டு!
மரக் கிளையில் அமர்ந்து தேடிடும் உன் பார்வை,
இயற்கையின் அற்புதம் இந்த அழகிய மைனா!
​கண்ணைச் சுற்றியுள்ள மஞ்சள் மஸ்காரா,
மிடுக்கான நடையில் அழகிய மைனா!
வானத்தில் பறக்கும் உன்னைப் பார்க்க ஆசை,
எங்கள் வீட்டில் விருந்தினராக என்றும் வா!
Found this beauty today morning at my gym

Read More

பறவைகளும் நானும் ஓரினம்

​பச்சை வண்ணக் கிளியே... உனக்கு
செந்நிற மூக்கு எங்கிருந்து வந்தது?
​பிரவுன் நிற மைனாவே... உன்
வண்ணச் சிறகுக்கு யார் வண்ணம் கொடுத்தது?
மஞ்சள் மூக்கும், கண் மஸ்காராவும்
உனக்கு யார் போட்டது?
​காகமே... நீ கருப்புதான்,
இருந்தாலும் நீ அழகுதான்!
கரியநிறக் காகமே, உன்னைப் பார்க்கையில்
உன் நிறத்தைக் கடனா தருவாயோ?
என் கூந்தலுக்கு நான் கருமை சேர்த்துக்கொள்வேன்!
​குயிலே, குயிலே... பாடும் அழகுக் குயிலே,
உன் குரலைக் கொஞ்சம் தருகிறாயா?
கிளிப் பேச்சு கேட்கும் மனிதர்,
இன்னொரு மனிதன் பேச்சுக்குக் காது கொடுப்பதில்லை!
​சிங்கார சிட்டுக்குருவியே...
உன்னைப் பார்க்கையில் தோன்றும் ஆசையிது,
நானும் நீங்களும் ஓரினம்தானே...
​சில காலம் உங்கள் சிறகுகளைக் கடனா தருவீர்களா?
உங்களைப் போல ஆனந்தமாய்ச் சிறகடித்து,
உயர உயரப் பறக்க எனக்கும் ஆசை!
​உற்சாகமாய் இந்த ஊரையே ஒரு சுற்று
சுற்றி வர எனக்கும் ஆசை!

Read More