சதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள் வைஷ்ணவி.சதீஷ் ஜஸ்ட் ஒன் வீக் டைம் குடுங்க வீணாவை கொன்னவங்களை கண்டுபிடிச்சிடறேன். நீங்க இது வரைக்கும் என்ன பண்ணினீங்க ?. நான் என்னோட தண்டனையை குற்றம் செஞ்ச, அதுக்கு உடந்தையா இருந்த எல்லோருக்கும் குடுக்க போறேன் என்றான். ப்ளீஸ் சதீஷ் நீங்க தப்பு மேல தப்பு பண்ணுறீங்க நல்லவிதமா சரண்டர் ஆயிடுங்க என்றாள் வைஷ்ணவி.போன் இணைப்பை துண்டித்தான் சதீஷ். எவ்வளவு தீவிரமாக தேடிய போதும் சதீஷ் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் கத்தி குத்து காயங்களுடன் குமாரின் உடல் கிடைத்தது. வைஷ்ணவி பதட்டத்துடன் ஸ்போட்டுக்கு விரைந்தாள். எல்லா பார்மலிடிஸ் முடிந்த பிறகு குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கன்ட்ரோல் செய்ய முடியாமல் போலிஸ் தடுமாறியது. கூடவே அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் உயரதிகாரிகள் வைஷ்ணவியை suspend செய்ய போவதாக செய்தி பரவியது.ஆனால் எப்படியோ இதுதான் லாஸ்ட் வார்னிங் என்று சொல்லி suspend ஆர்டரை தள்ளி வைத்தனர்.இப்போது சதீஷ் இரண்டு மாநில போலிஸ் தேடுதலுக்கு ஆட்படுத்தப்பட்டான்.
ஹைதராபாத் போலீஸ் சதீஷ் அங்கு இல்லை சென்னைக்கு திரும்ப தப்பித்து சென்று விட்டதாக சொன்னார்கள். வைஷ்ணவி சுரேஷிடம் பேசினாள். சதீஷின் க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே போவதாகவும் அது சதீஷின் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னாள். சதீஷுக்கு யார் ஹெல்ப் பண்ணுகிறார்கள் என்று தெரியாமல் போலீஸ் தவித்தது. வைஷ்ணவி பிரதாப் மற்றும் பாஸ்கரை சிறையில் பார்க்க வருபவர்களின் லிஸ்டை சோதித்தாள்.அதில் ஜான் என்னும் ஆட்டோ டிரைவர் ரெகுலர் ஆக பிரதாப்பை சந்தித்து போவது தெரிந்தது. அவனும் ஒரு ஆட்டோ டிரைவர். ஜான் பற்றி மேலும் தகவல்கள் கிடைத்தன. ஜான்தான் சதீஷுக்கு உதவுகிறான் என்றும் தற்போது சதீஷ் நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுகிறான் என்ற தகவலும் கிடைத்தது. போலீஸ் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் சதீஷை தேடிக்கொண்டிருந்தது. போலீஸ் ஜானின் மொபைல் ஒட்டு கேட்க முடிவு செய்து அவ்வாறு செய்ததில் பிரதாப் ஜானிடம் சதீஷ் தனக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை வாங்கி தருமாறு சொல்லியிருக்கிறான் என்று தெரிந்தது அப்படி வாங்கி கொடுத்தால் அதில் பாதியை ஜான் எடுத்துக்கொள்ளலாம் எனவும் சொல்லியிருக்கிறான். சதீஷ் அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தான்.
சதீஷுடைய அடுத்த இலக்கு மலர்விழி என்று தெரிந்தது. மலர்விழிக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அவள் செக்யூரிட்டி பற்றி அதிகம் கவலைப்படவில்லை. மலர்விழி தனக்கும் வீணாவை கொல்ல பயபடுத்திய கத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள்.சதீஷ் ஜானின் சகோதரன் வீட்டில் தங்கியிருந்தான். சதீஷ் மலர்விழியிடம் பேசி அவளை எச்சரித்தான் மரியாதையாக உண்மையை சொல்லும்படி சொன்னான். அவள் ஏற்கனவே நான் போலீசில் எல்லாம் சொல்லிவிட்டேன் என்றாள். இனி உன்னை காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாது என்றான் சதீஷ். ஜானையும், அவரது சகோதரனையும் பிடித்து கவனித்ததில் சதீஷ் இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிவித்தார்கள். சதீஷை சுற்றிவளைத்து போலிஸ் அரெஸ்ட் செய்தது. அதே சமயம் மலர்விழியை காப்பாற்றிவிட்டோம் என நினைத்து வைஷ்ணவி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்போதுதான் கிஷோர் மலர்விழியை கடத்திய செய்தி இடி போல வைஷ்ணவியை தாக்கியது. உடனடியாக மலர்விழி வீட்டுக்கு போனாள். மலர்விழி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஷாப்பிங் போனதால் வந்த வினை என்றும் போலீசாரும் கூட போன போதும் கிஷோர் சாதரணமாக பேசி அவளை அழைத்து போய்விட்டதாக தெரிவித்தனர்.
சதீஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.குமரேசனையும் , குமாரையும் தான்தான் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான். இப்போது கிஷோர் எதற்காக மலர்விழியை கடத்தி உள்ளான் என போலீஸ் கேட்டபோது அவனும் வீணா கூட ஒன்றாய் படித்த காலத்தில் வீணாவை ஒருதலையாய் விரும்பியவன் . அதனால் மலர்விழியின் கணக்கை முடிக்க அவன் தயாராகி விட்டான் என்றான் சதீஷ். கிஷோரிடம் பேசினாள் வைஷ்ணவி. மலர்விழிக்கும் வீணாவுக்கும் சம்பந்தம் இல்லை என்றாள். இருக்கு ஆனா நேரடி பகை இல்லை. யார் மூலமாவோ வீணா கொலையை மலர்விழி செய்து இருக்காங்க என்றான். நான் மலர்விழியிடம் பேச வேண்டும் என்றாள் வைஷ்ணவி. சரி குடுக்குறேன் 5 மினிட்ஸ் அவ்வளவுதான் என்றான். என்னாச்சு மலர்விழி நான்தான் அப்பவே வார்ன் பண்ணினேனே என்றாள். அவன் என்னை ஒன்னும் பண்ணமாட்டான். ஏன்னா இந்த கேஸ் ல மிச்சம் இருக்குறது நான் மட்டும்தான். என்னையும் கொன்னுட்டா உண்மை தெரியாமலேயே போயிடும் என்றாள்.கிஷோர போனை பிடுங்கி மலர்விழிகிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கிறதுன்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தான்.
கிஷோர் மலர்விழியை எங்கு வைத்திருக்கிறான் என சதீஷை போலீஸ் விசாரித்தது. நீங்க வீணா கொலையாளியை கண்டுபிடிக்கிற வரை ஏதாவது ஒன்னு நடந்துகிட்டேதான் இருக்கும் என்றான் சதீஷ். தீபனும், சுஜாவும் பெங்களூரில் இருந்து திரும்பினர். சுரேஷ் சதீஷ் கைது செய்யப்பட்டதை தீபனிடம் தெரிவித்தான். மூவரும் சதீஷை பார்க்க வக்கீலுடன் சென்றிருந்தனர். வைஷ்ணவியையும் சந்தித்தனர். தீபன் நீங்களாவது உங்க பிரெண்டுக்கு அட்வைஸ் பண்ணுங்களேன் என்றாள் வைஷ்ணவி .சதீஷ் சுஜாவின் கையை பிடித்துக்கொண்டான். வீணா சாகும்போது எவ்வளவு வேதனையை அனுபவிச்சாளோ அதே வேதனையை குற்றவாளிகள் அனுபவிக்கனும் என்றான்.ம் புரியுது சதீஷ் சட்டத்தை நம்ம கையில் எடுத்துக்க முடியாதில்லை என்றான் சுரேஷ்.கொஞ்சம் நேரம் வைஷ்ணவியிடம் பேசிவிட்டு விடைபெற்றுகொண்டார்கள் மூவரும். சுஜா சதீஷ் நிலைமை பார்த்தா பாவமா இருக்கு என்றாள். கிஷோர் கையிலே இப்போ மலர்விழி உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு என்றான் தீபன். கிஷோர் என்னை விட்டுடு தேவையில்லாம சட்டத்தோட விளையாடிகிட்டு இருக்க என்றாள் மலர்விழி. வீணாவை கொன்னது உனக்கு இருந்த பகை ஆனா யுவனை கொன்னது ஏன் ? என்றான்.
யுவன் என்றதும் அமைதி ஆனாள் மலர்விழி. சாரதாவை வச்சு வீணாவை கொன்னது நீ. யாரை வச்சு யுவனை கொன்ன ?சொல்லு என்றான் கிஷோர். நீ கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை என்றாள். சரி இந்த சாப்பாட்டை சாப்பிடு . உன்னை கொல்ல போறது இல்லை ஆனா உன் மகன் ? மகன் என்றதும் பதட்டம் அடைந்தாள். கிஷோர் அவனை ஒன்னும் பண்ணிடாதே . நான் ஒன்னும் பண்ண மாட்டேன் அவனை, அவனே போய் சிக்கியிருக்கான். அவன் இப்போ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது என்றாள். உனக்கு தாய்ப்பாசம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு அதை நீ யுவனை கொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் என்றான். சொல்லு உனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லு உன்னையும் உன் மகனையும் விட்டுடறேன். சொல்றேன் சாரதா தன்னோட சொத்துக்களை எம் எல் ஏ குமார் பிடுங்கிக்க பார்க்குறதா சொன்னாங்க. அந்த சொத்துக்களை பாதுகாக்க அதை பராமரிக்க வீணாவுக்கு பவர் ஆப் attoney குடுக்க தீர்மானிச்சாங்க.அதே சமயம் வீணா தன பேர்ல மொத்த சொத்தையும் மாத்தி எழுதி தரும்படி எங்கிட்ட கேட்டா. அதை நான் சாரதா கிட்ட சொல்ல வீணா கதையை முடிக்க என் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க, அப்போதான் கத்தியை வாங்கி குடுக்க சொல்லி என் பையன் திலக் கிட்ட சொன்னேன். திலக்தான் சாரதாவுக்கு கத்தி வாங்கி கொடுத்தான். ஏற்கனவே மணி மேல இருந்த ஆசை அதோட மணியும் வீணாவும் ஒண்ணா இருக்கறது தெரிஞ்சு வீணாவை கொன்னாங்க சாரதா . அவங்க அங்கிருந்து தப்பிக்க உதவி செஞ்சேன் நான்.
அதே சமயம் திலக் எங்கேயோ தலைமறைவாயிட்டான். சாரதாவை கொன்னது யாருன்னு தெரியாத எனக்கு. யுவனை ஏன் கொன்னே ? யுவனை நான் கொல்லலே. திலக்குக்குதான் அந்த உண்மை தெரியும்.அவனை ஒன்னும் பண்ணிடாதே ப்ளீஸ். சரி மேடம் நீங்க இங்கேயே இருங்க அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு. நான் உங்க பையனை கூப்பிட்டு வரேன் என்றான். நான்தான் எல்லா உண்மையும் சொல்லிட்டேனே இன்னும் என்ன என்றாள். இதுல எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு , கிராஸ் verification பாக்கி இருக்கு. அது முடிஞ்சதும் நானே உங்களை வீட்டில் கொண்டு போய் விடறேன் என்றான். தீப்தி திலக் இருவரும் ஒற்றுமையாய் வாழ்வதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர் தீபனும், சுஜாவும். அனால் தீப்திக்கு கிரிமினல் மாப்பிள்ளை பார்த்திருப்பதை சுஜாவோ, தீபனோ அறியவில்லை. வைஷ்ணவி சதீஷை அழைத்துகொண்டு ஹைதராபாத் போனாள். குமாரை எப்படி கொன்றான் என்பதை நடித்து காட்டினான். மேலும் குமாரை கொன்ற இடத்துக்கும் கூட்டிப்போனான். திலக் எங்கிருக்கிறான் என தெரியாததால் கிஷோர் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை தள்ளிபோட்டான். அதே சமயம் போலீசார் கிஷோரின் பின்னணி குறித்து விசாரித்து வந்தனர்.
கிஷோர் எங்கு இருக்கிறான் என தேடியவண்ணம் இருந்தனர் போலீசார். நீங்க இங்க பாதுகாப்பா இருக்கலாம் என்றான் தீபன். கிஷோர் வீணாவை கொன்னவங்களை பழி வாங்க நான் எந்த ஹெல்ப்பும் பண்ண தயாராய் இருக்கேன் என்றான் தீபன். அதே சமயம் திலக்கை பற்றி தெரியவில்லை தீபனுக்கு. கிஷோரும் சொல்லவில்லை. கிஷோருக்கு அடைக்கலம் கொடுக்கசொல்லி இருந்தான் சதீஷ். மணியிடம் சிறையில் இருந்த சதீஷ் பேசினான். மணி நீ தப்பித்து விட்டதாய் நினைக்கிறாய் ஆனால் இல்லை உன்னை கொல்லவே சிறை வந்திருக்கிறேன் என்றான். வேண்டாம் சதீஷ் நான் செய்தது தப்புத்தான். ஆனால் வீணா மரணத்துக்கு நான் காரணமில்லை என்றான். உன்னை நிதானமாக கொல்லுவேன் என்றான் சதீஷ்.