Yadhumatra Peruveli - 22 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 22

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 22

மலர்விழி தன்னுடைய உதவியாளர்களில் யாரோ ஒருவர்தான் தன்னுடைய அடையாளத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும், அவர்களில் ஒருவர்தான் வீணாவையும் யுவனையும் கொல்ல கத்தி வாங்கி கொடுத்திருக்க வேண்டும் என எண்ணினாள். சதீஷ் வீணா கொலையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கொல்ல தீர்மானித்தான் அதோடு யாரோ அவனுக்கு மலர்விழி காரை கடத்த உதவி செய்து இருக்கிறார்கள். சுஜா இந்த விஷயங்களை தீப்தியிடம் கூறினாள். சுரேஷ் தீப்தியை நெருக்கமாக கண்காணித்து வந்தான். தீப்தியின் முன்னாள் காதலனான பிரவீனிடம் சொல்லி வைத்திருந்தான். சுஜாவும், தீபனும் தீப்தியை பார்த்து சில நாட்கள் பெங்களூரில் திலக் மற்றும் தீப்தியுடன் தங்கி வர விரும்பினர். தீப்தியிடம் தீபன் பேசினான். அதுக்கென்ன எப்போ வேணா வாங்க என்றாள். தீபன் தீப்தி சந்தோஷமா இருப்பாளா? இல்லை நம்ம மேல கட்டயபடுத்தி கல்யாணம் பண்ணிவேச்சோம் அப்படின்னு கோவமா இருப்பாளா? என்றாள். அதுதான் நேரிலேயே பார்க்க போறோமே என்றான் தீபன். ம் எனக்கு என்னவோ கவலையா இருக்கு உனக்கு அதை பத்தி கவலை இல்லை என்றாள் சுஜா.சாயங்காலம் ரெடி ஆ இரு டாக்டர் கிட்டே போய்விட்டு வரலாம். குட் நியூஸ் ஆ கூட இருக்கலாம் என்றான். ம் எனக்கும் குழந்தை என்றால் ஆசைதான் என்றாள்.

போலிசுக்கு வீணா,யுவன், சாரதா கேசில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் புதிய லேடி இன்ஸ்பெக்டர் வைஷ்ணவியை appoint செய்தது. வைஷ்ணவி துடிப்பான பெண் இன்ஸ்பெக்டர். வைஷ்ணவி சுரேஷிடம் பேசினாள். சுரேஷ் தீபனும், சுஜாவும் பெங்களூர் வரை சென்று இருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னான். வைஷ்ணவி சதீஷை இன்னும் ஒரு வாரத்தில் பிடித்து விடுவதாகவும் இந்த கேசை சால்வ் செய்து காட்டுவேன் என்றும் சொன்னாள்.சுரேஷ் இதுவரை நடந்ததை வைஷ்ணவியிடம் சொன்னான். மலர்விழியோடு பேசினாள் வைஷ்ணவி . மலர்விழி உதவியாளர்களோடு விசாரணை நடத்தி பார்த்தாள் எந்த பயனும் இருக்கவில்லை. எக்ஸ் எம் எல் ஏ குமாரிடமும் ஹைதராபாத் சென்று பேசினாள். அவர் தனக்கும் வீணா கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். சாரதா விஷயத்தில் தன தலையீடு இருந்ததாகவும் இப்போது அந்த நிலம் சம்பந்தமாக தான் ஒன்றும் செய்ய போவதில்லை என்றார். குமாரை ரகசியமாக கண்காணிக்க இரண்டு போலீசாரை நியமித்து விட்டு சென்னை திரும்பினாள் வைஷ்ணவி. மலர்விழி வைஷ்ணவிக்கு போன் செய்திருந்தாள். மேடம் எனக்கு எங்கிட்ட கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேலை பார்த்த கிஷோர் என்கிறவன் மேல சந்தேகம் இருக்கு . அவன் அட்ரஸ் போன் நம்பர் மெசேஜ் பண்ணுங்க என்றாள்.


கிஷோரிடம் பேசியபோது எனக்கு மலர்விழி மேடம் attitude பிடிக்கலை அதனாலதான் வேலையை விட்டு நின்னேன். மத்தபடி எனக்கு இந்த விவகாரத்திலே எந்த சம்பந்தமும் கிடையாது என்றான். உங்களுக்கு வேற யார்மேலாவது சந்தேகம் இருக்கா என்றாள். எனக்கு அப்படி யாரையும் தோன்றவில்லை. உங்களுக்கு சதீஷை தெரியுமா என்றாள். தெரியாது என்றான். பெங்களூர் சென்ற தீபனையும் சுஜாவையும் திலக் தீப்தி இருவரும் வரவேற்றனர். அவர்கள் நல்ல பெரிய வீடாக வாங்கியிருந்தனர். கல்யாணத்தின் பொது கொஞ்சம் upset ஆக இருந்தேன். இப்போது திலக் இல்லாமல் நான் இல்லை ரொம்ப ஹாப்பி என்றான். எனக்கும் அப்படித்தான் என்றான் திலக் . எனக்கு கவலையாக இருந்தது இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்றாள் சுஜா. நாங்கள் கொஞ்ச நாட்கள் இங்கு தங்கலாம் என்று இருக்கிறோம் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காதே என்றான் தீபன். எங்களுக்கு புது வாழ்வு கொடுத்தவர் நீங்கள். தாரளமாக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருங்கள் என்றான் திலக் . தீப்தியும் அதை ஆமோதித்தாள். வைஷ்ணவி யுவன் கொலையில் யுவனுக்கு நெருக்கமான யாரோதான் அவனை கொன்றிருக்க வேண்டும் என்று ரிப்போர்ட் சொன்னது எனவே மறு விசாரணையை சுஜாவிடம் இருந்து தொடங்கலாம் என்று முடிவெடுத்தாள்.

சுஜா பெங்களூரில் இருப்பதை அறிந்தவள் சுரேஷிடம் சுஜா போன் நம்பர் வாங்கி பேசினாள். யுவனுடைய நெருங்கிய வட்டாரம் யார் யார். நான் , சுரேஷ், சதீஷ், வீணா , தீபன் அதோடு பாஸ்கர். ஒ உங்களை விரும்பிய எழுத்தாளர் பாஸ்கரா ?ஆமாம். அவரை எங்கள் குடும்ப உறுப்பினராக கருதினோம் என்றாள். உங்களுக்கு யார் மேலேயும் சந்தேகம் வரவில்லையா குறிப்பாக தீபன் மேல்? அப்படியெல்லாம் இல்லை தீபனை எனக்கு ரொம்ப வருஷமாக தெரியும் அவர் ஒரு பெண்ணுக்காக கொலையெல்லாம் செய்பவரில்லை. எனக்காக என்னுடைய சம்மதத்திற்காக காத்திருந்தார். ம் யுவனுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது, அவர் என்னை மிகுந்த அன்போடுதான் நடத்தினார். அவன் அதோடு நேர்மையான ஆள் கூட. சரி சுஜா வேறு ஏதாவது தகவல்
தேவைப்பட்டால் கூப்பிடுகிறேன் என்றாள். வீணா கொலையில் சம்பந்தப்பட்ட மணியிடம் பேசினாள் வைஷ்ணவி. எவ்வளவோ அறைகள் இருக்க ஸ்டோர் ரூமுக்கு ஏன் போனீர்கள் உனக்கு வீணாவை கொல்ல உத்தேசம் இருந்ததா என்றாள். அது வீணாவுடைய ஐடியா . நான் அந்த இடத்தை தேர்ந்தெடுக்க வில்லை என்றான்.

வைஷ்ணவி தீபனிடமும் பேசினாள். யுவன் கொலையில் எனக்கு உங்கள் மேல்தான் சந்தேகம் இருக்கிறது என்றாள். திட்டமிட்டு வெளியூர் பயணம் போய் இருக்கிறீர்கள் . நான் ஏன் யுவனை கொல்ல வேண்டும் அவர் ஏற்கனவே விவாகரத்துக்கு சம்மதித்து விட்ட போது நான் ஏன் கொல்ல வேண்டும் என்றான். நீங்களும் சுஜாவும் எதையாவது மறைத்தால் இப்போதாவது சொல்லி விடுங்கள் என்றாள். அப்படியெல்லாம் ஒரு விஷயமும் இல்லை என்றான். சரி எதாவது தகவல் தேவையென்றால் பிறகு கூப்பிடுகிறேன் . எக்ஸ் எம் எல் ஏ குமார் போன் பண்ணியிருந்தார். இன்று காலை சதீஷ் போன் பண்ணி என்னை மிரட்டினான் . சாரதாவுக்கும் , வீணாவுக்கும் என்ன தொடர்பு என கேட்டு மிரட்டினான். எனக்கு தெரியாது என்று சொன்னபோதும் என்னை அவன் இல்லாமல் பண்ணிவிடுவதாக சொன்னான். நீங்கள் பயப்பட வீண்டாம் ஏற்கனவே உங்கள் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன். நாங்கள் அவனை monitor செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்றாள். என்னை எப்படியாவது இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்றான் குமார். நிச்சயமாக என்று சொல்லிவிட்டு சதீஷுடைய போன் டவர் location எங்கே என்று பாருங்கள என்று சொன்னாள்.போலீஸ் சதீஷை பிடிக்க தீவிரமாய் இன்க தொடங்கியது.

கிஷோரின் போன் ஹிஸ்டரி செக் செய்தாள் வைஷ்ணவி . ஏதும் துப்பும் துலங்கவில்லை. மலர்விழி ஷாப்பிங் சென்றபோது தான் காரை காணவில்லை என கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தாள். அந்த ஷாப்பிங் கொம்ப்லெழ் சென்று கார் காணமல் போன அன்று குறிப்பிட டையத்தில் cctv footage வாங்கி பார்த்தாள். அதில் யாரவது சதீஷுக்கு உதவி செய்கிறார்களா என செக் செய்தாள். அதில் சதீஷ் மட்டுமே இருந்தான். சதீஷ் காரை ஒட்டி செல்வது பதிவாகி இருந்தது. இன்னும் கொஞ்சம போர்வர்ட் செய்து பார்த்த போதும் எதுவும் சிக்கவில்லை, சுங்கசாவடி அருகே காரை சதீஷ் விட்டு சென்ற வீடியோ பார்த்தாள் அதிலும் சதீஷை தவிர யாருமில்லை. திடீரென சுரேஷ் மேல் சந்தேகம் வந்தது. ச்சே ச்சே சுரேஷ் ஆக இருக்காது என முடிவெடுத்தாள். மேலும் எதுவும் க்லு கிடைக்காததால் விரக்தி அடைந்தாள். ஸ்டேஷன் திரும்பினாள்.சிறையில் இருக்கும் பாஸ்கரையும்,பிரதாப்பையும் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி சொன்னாள்.பாஸ்கர் சோர்வாக இருந்தார். நான் செய்த தப்பு சுஜாவை விரும்பியதுதான். யுவன் நல்லவன் அவனுக்கு இதைப்பற்றி தெரியவில்லை. நான் நேரிடையாக சுஜாவிடம் என் விருப்பத்தை தெரிவித்திருக்க வேண்டும் நான் ஒரு கோழை என்றார். ம் உங்களுக்கு தெரிந்தவரை ரகசியமாக யாரும் யுவனுக்கு நட்பை இருந்தார்களா?அப்படியோருத்தரும் கிடையாது என்றார். வேண்டுமானால் சுஜாவை விட்டுகொடுத்தற்காக அவர் மீது கோபம் கொண்டு யாரேனும் கொன்று இருக்கலாம் என்றார். ஓகே பாஸ்கர் நீங்கள் ஜாமீன் வேண்டாமென்று சொல்லிவிட்டீர்களாமே? ஆமாம் எனக்கு ஒன்றிலும் விருப்பமில்லை என்றார்.

வைஷ்ணவி யார் யார் பாஸ்கரை சிறையில் வந்து சந்தித்தார்கள் என்ற லிஸ்டை கேட்டிருந்தாள். பாஸ்கர் மகள்தான் வந்து சந்தித்து இருக்கிறாள். அவள் மெடிக்கல் காலேஜில் பைனல் இயர் படிக்கிறாள் என்ற தகவலே கிடைத்தது. பிரதாப்பை சந்தித்தாள் வைஷ்ணவி. உன்னை ஏன் சதீஷ் கொல்லாமல் விட்டான் என்றாள். நான் அவருடன் ஒத்து போனதால் என்னை விட்டார். இல்லையென்றால் என்னையும் கொன்று இருப்பார். மலர்விழி கார் கடத்தியதில் உங்களுக்கு யாராவது உதவினார்களா . சதீஷ் வேறு யாரிடமும் போன் பேசினாரா என்றாள். அப்படி ஏதும் இல்லை மேடம். எனக்கு தெரிந்து அவருக்கு யாரும் உதவிகள் செய்யவில்லை. அவர் வீணாவை அளவு கடந்து நேசித்தார் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.அந்த வீடியோ வெளிவரக்கூடாது என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார். சரி பிரதாப் இப்போவும் ஒன்றும் கெட்டுபோகவில்லை . சதீஷ் எங்கு போயிருப்பார் என்பது தெரிந்தால் சொல்லிவிடு என்றாள். எனக்கு சத்தியமாக தெரியாது என்றான். அப்போது அவளுக்கு போன் வந்தது எம் எல் ஏ குமாரை கடத்திவிட்டான் சதீஷ் . அவர் வீட்டிலிருந்து துப்பாக்கி முனையில் அவரை கடத்திவிட்டான் என்றது ஹைதராபாத் போலீஸ். இது என்ன பெரிய தலைவலி. நான் சதீஷிடம் பேசவேண்டும் ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றாள். அதே சமயம் சிறையில் பிரதாப்பை சந்திக்க வந்தவர்கள் லிஸ்டும் ரெடி பண்ண சொன்னாள். தீபனும்,சுஜாவும் சென்னை திரும்பினர். ஹைதராபாத் போனாள் வைஷ்ணவி . என்னை விட்டுவிடு என்று கெஞ்சி கொண்டிருந்தார் குமார் சதீஷிடம்.