தீபனுக்கும்,சுஜாவுக்கும் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாள் தீப்தி.எல்லோருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். புகைப்படம் எடுத்துகொண்டு விடை பெற்றனர். பாவம் தீப்தி எப்படியோ துணை இல்லாமல் இருக்கிறாள் என்றான் தீபன். சீக்கிரமே அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றாள் சுஜா.இருவரும் ஹோட்டல் அறைக்கு திரும்பினர். மணி ஏதோ ஒரு வட மாநிலத்தில் சுற்றி திரிந்த போது போலிசாரால் கைது செய்யப்பட்டான். அவன் பிடிபட்ட செய்தியை சுரேஷ் தீபனுக்கு சொன்னான். நான் உடனே சென்னை வருகிறேன் என்றான் தீபன். சுஜா நான் இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்துவிட்டு வருகிறேனே என்றாள்.சரி உன் விருப்பம் என்றான். மணி கைது செய்யப்பட செய்தியை சதீஷுக்கும் சொல்லி இருந்தான் சுரேஷ். தீபன் சென்னைக்கு வந்ததும் அவனை போய் இருவரும் பார்த்தனர். சதீஷ் தாடியும்,சோகம் நிரம்ப இருப்பதை பார்த்ததும் வருத்தம் அடைந்தான். சதீஷ் நீ ஒரு தவறும் செய்யவில்லை பிறகேன் உன்னை வருத்திக்கொள்கிறாய் என்றான். போலிஸ் என்னை இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார்கள். அது என்னை நிம்மதி இழக்க செய்து விட்டது என்றான் சதீஷ். எதாவது சாப்பிட்டுவிட்டு ஸ்டேஷன் போவோம் ஆர்டர் செய்கிறேன் என்றான் தீபன். சதீஷ் மணிதான் குற்றவாளி என நிருபீத்தால் ஒழிய எனக்கு இந்த கேசில் இருந்து நிம்மதி கிடைக்காது என்றான்.
மூவரும் போலிஸ் ஸ்டேஷன் சென்றனர். மணியை பிடித்து போலீசார் அடித்து உதைத்திருந்தனர். அவன் பலகீனமாக அமர்ந்திருந்தான். என்னாச்சு சார் இப்படி அடிச்சிருக்கீங்க செத்து கித்து போயிட போறான் என்றான் சதீஷ். சாவடிக்கிறான் சார் இவன் அந்த கொலையை செய்யலைன்னு சொல்லுறான். மணி கொலை செய்ததை ஒத்துக்க மாட்டேன் என்கிறான் என்றது போலீஸ். அனால் வீணாவும் அவனும் ஒன்றாக இருந்தது உண்மை எனவும் தான் பாத்ரூம் போய்விட்டு திரும்ப வரும்போது அங்கே வீணாவை ஏற்கனவே யாரோ கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று இருந்தார்கள் என்றான் மணி. பதட்டத்தில் வீணா மீது விழுந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து போடும் பொது அந்த கத்தியில் அவனுடைய கைரேகை பதிவாகி இருந்தாக தெரிவித்தான்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுஜாவும், தீப்தியும் அதிர்ச்சி அடைந்தனர். சாரதா மரணத்தில் தனக்கு சந்தேகம் இருக்கிறதென்றும் அவருக்கு சொந்தமான 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க யாராவது அவரை கொலை செய்து இருக்கலாம் என்றான். போலிஸ் அவன் சொன்ன தகவலை உறுதிப்படுத்த மறு postmortem செய்ய கோர்டில் உத்தரவு கேட்டிருந்தது. மணியை எவ்வளவு தூரம் நம்புவது என்று போலிஸ் தெரியாமல் தவித்தது.
கோர்டில் சாரதா உடலை மறு postmortem செய்ய உத்தரவு வாங்கினார்கள் போலீசார். அதன்படி மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ததில் சாரதாவின் பின்னந்தலையில் பலத்த அடிபட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக தெரிய வந்தது. அது தற்கொலை அல்ல கொலை என்று போலீசார் தீர்மானித்தார்கள். சாரதா கொலையாளி வெளியே சுற்றி திரிவதாக போலீசார் கருதினர். சுரேஷுக்கு தீப்தி மேல் சந்தேகம் வந்தது. தீப்தி கடத்தப்பட்ட நாளில் தான் வீணாவும் பணத்தை டெபாசிட் வங்கியில் செய்திருக்கிறாள்.சுரேஷ் தீப்தியின் பின்னணி அவள் என்பு படித்தாள் எங்கு வேலை செய்கிறாள் என்பதை தீபனுக்கும் சதீஷுக்கும் தெரியாமல் விசாரித்து வந்தான். அப்போது அவளுடைய பாய் பிரண்டு பிரவீன் என்பவனை பற்றி தெரிய வந்தது . அவனை தொடர்பு கொண்டபோது தீப்தி ரொம்ப ஆபத்தானவள். அவளிடம் இருந்து விலகியே இருங்கள் என்றான். சுரேஷ் அவனிடம் நடந்ததை சொல்லி அவனுக்கு எதாவது தகவல் தெரிந்தால் உடனே தனக்கு தெரிவிக்கும்படி சொன்னான். சாரதா உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. போலிஸ் உடன் மூவரும் ஹைதராபாத் போயிருந்தனர். அவர்கள் அங்கிருந்த போலிசை விசாரித்த போது முதலில் மறுத்த போலீசார் பிறகு எக்ஸ் எம் எல் ஏ குமார்தான் சாரதா கேசிற்கு முக்கிய குற்றவாளி. அவர் மேல் ஏற்கனவே சாரதா கம்ப்ளைன்ட் குடுத்தும் போலிஸ் அவனுடைய செல்வாக்கு காரணமாக அந்த கேஸ் எடுக்கவில்லை என்றார்கள்.
எக்ஸ் எம் எல் ஏ குமாரை சந்தித்தார்கள். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க . வீணா கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே மாதிரி சாரதா கொலையை நீங்க விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றான் குமார். குமார் நாங்க உண்மையை தெரிஞ்சிக்க விரும்பறோம். நீங்கதான் அந்த கொலையை செஞ்சீங்கன்னு மணி சொல்றான். அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நெனைக்கிறேன். போதும் நீங்க இங்கிருந்து போகலாம் என்றான் குமார் கோவத்துடன். இதுவே நான் உங்களை கடைசியா பார்க்கிறதா இருக்கட்டும் என்றான். மணியை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவன் என்ன செய்தான் என்பதை மறுபடியும் நடித்து காட்ட சொன்னார்கள்.மணி நடித்து காட்டினான். வீணாவுடன் தனக்கு கல்யாணத்துக்கு முன்பும் தொடர்பிருந்ததாக அவள் கல்யாணத்துக்கு பின்பும தொடர்பு இருந்ததாகவும் சொன்னான். பத்து லட்சம் பற்றி எனக்கெதுவும் தெரியாது என்றான் மணி. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றான். போலிஸ் அவனை முழங்காலில் சுட்டது. பிறகு அவனை ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்.
சுஜாவும், தீப்தியும் சென்னை திரும்பினார்கள். சுஜாவும், தீபனும் தீப்தியை அழைத்துக்கொண்டு matrimony நிறுவனம் ஒன்றில் மாப்பிள்ளை பார்க்க சென்றார்கள். தீப்தி அதிகம் ஆர்வம் காட்டவில்லை. லடைசியில் திலக் என்பவனை ஓகே செய்தாள். மணி தீபனை காண விரும்புவதாக போலிஸ் சொன்னது. ஆஸ்பிடலில் போய் அவனை பார்த்தான். வீணா கொலையாளியை கட்டாயம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றான். வீணா தன்னிடம் ஒருவரின் சீக்ரெட் தனக்கு தெரியும் என்றும் அதன் மூலம் lottery அடித்திருக்கிறது என்றும் சொன்னாள். அதுவே அவள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது என்றான். அந்த சீக்ரெட் என்னவென்று எவ்வளவோ வற்புறுத்தி கேட்டபோதும் வீணா சொல்ல மறுத்துவிட்டாள் எனவும் மணி சொன்னான். வீணா வீட்டில் மறுபடி சோதனை செய்தான் சுரேஷ் . அவளுடைய சோசியல் மீடியா அக்கௌன்ட்களையும் சோதனை செய்தான். ஒரு பலனும் இருக்கவில்லை.வீணா வுடைய ஆபீசில் விசாரித்த போது வொர்க் பிரஷர் காரணமாக சீக்கிரமே வேலையை ராஜினாமா செய்ய போவதாக சொன்னாள் என்றார் அவளுடைய மேனேஜர்.
தீப்திக்கும், திலக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சதீஷ் இப்போது கொஞ்சம் நம்பிக்கை கொண்டவனாக இருந்தான். அவனுக்கும் , தீபனுக்கும் இந்த நிச்சயதார்த்த விழா சற்றே ஆறுதல் ஆக இருந்தது. சுஜா ஓடி ஓடி எல்லா வேலைகளையும் செய்தாள். போலிஸ் செக்யூரிட்டி கொஞ்சம் அதிகமாகவே போடப்பட்டு இருந்தது. தீப்தியும், திலக்கும் மோதிரம் மாற்றிகொண்டனர். தீபன் தன்னுடைய கடமையை தான் செய்து முடித்து விட்டதாக நினைத்தான். சுரேஷ் தீப்திக்கு நெருக்கமானவர்களை நோட்டமிட்டான். இப்போது தீபனிடம் தீப்தி பற்றி எதுவும் சொல்லவேண்டாம் அவளுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை முதலில் கண்டறிய வேண்டும் என நினைத்தான் சுரேஷ். மணி சிகிச்சை முடிந்து ஜெயில் திரும்பினான். அவன் மேல் சாரதா கொலை கேசும், வீணா கொலை கேசும் இருந்தது. தீபனின் சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை தீப்திக்கு வழங்கலாமா என சுஜாவிடம் ஆலோசனை கேட்டான் தீபன். அதுக்கென்ன தாராளமா குடுங்க இதுல என்ன கேக்க ஒண்ணுமில்லை தீபன் என்றாள் சுஜா. அதற்காக வக்கீலை பார்த்து வந்தான். தீப்தி எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை என்றாள். அதெல்லாம் உன்னுடைய பாதுகாப்புக்குத்தான் என்றான் தீபன்.
குறிப்பிட்ட நாளில் தீபன், திலக், தீப்தி, சுஜா எல்லோரும் register ஆபீஸ் போய் தீப்தி பெயரில் சொத்துக்களை மாற்றி எழுதி வந்தனர். திலக்கிற்கும் அதில் பங்கு உண்டு என்பது போல எழுதியதால் தீப்தி சற்றே வருத்தமடைந்தாள். சுஜா அடுத்தென்ன என்பது போல தீபனை பார்த்தாள். தீபன் வீணா கேசில் இருந்து மணியை காப்பாற்ற வேண்டும் என்றான். சாரதா கொலையும் அவன் செய்யவில்லை என்று சொல்கிறான். போலீசார் சாரதா எம் எல் ஏ குமார் மீது கொடுத்த பழைய கேஸ் தூசி தட்டி எடுத்தனர். குமார் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர். கோர்ட் அனுமதி கொடுத்தது. குமார் வீட்டை சோதனை செய்த போது சாரதாவை கொல்ல பயன்படுத்தபட்டதாக கருதப்பட்ட ஆயுதம் கிடைத்தது, குமார் அது எப்படி தன்னுடைய வீட்டுக்கு வந்ததென தெரியாது என்றான். போஈசே குமாரை அரெஸ்ட் செய்தது, தீப்தி கல்யாண நாள் குறிக்கப்பட்டது. யார் யாரை அழைக்க வேண்டும் எவ்வளவு பேருக்கு சாப்பாடு போன்று பல விஷயங்களை பேசினர். சுஜாவும் தீப்தியை தன் சகோதரி போலத்தான் கருதினாள்.சுரேஷ் மணியிடம் யுவனை தெரியுமா என விசாரித்தான். வீணா சொல்லியிருக்கிறாள்.வீணாவுக்கும் யுவன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றான் மணி. சுரேஷ் சதீஷிடம் உனக்கு தெரிந்த வீணாவுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரையாவது அறிமுகம் செய்து வைத்திருக்கிறாளா என்றான். அப்படி யாரையும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. திலக் தீப்தியை வெறுக்கவும் இல்லை அதே சமயம் விரும்பவும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தான். திலக்கிடம் யுவன் , வீணா கொலை பற்றி அச்சம் இருந்தது. அதனால் முடிந்தவரை தீப்தியுடன் சமாதானமாக போனான். எம் எல் ஏ குமார் தான் சாராதாவை மிரட்டியது உண்மை என்றும் அந்த ஆயுதம் எப்படி தன் வீட்டுக்குள் வந்ததென்று தெரியாது என்றான். அதில் உள்ள ரத்தக்கறை சாரதாவுடையதுதான் என டெஸ்டில் உறுதி ஆயிற்று.