Yadhumatra Peruveli - 18 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 18

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 18

அவர்கள் எல்லா அறையையும் செக் செய்த பொது எப்படியோ அந்த ஸ்டோர் ரூமை தவற விட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு போய் பார்த்த போது ரத்தம் வழிந்து கதவு இடுக்கு வழியாக வந்து கொண்டிருந்தது. ஐயோ வீணா என அலறினான் சதீஷ். அவன் அழ தொடங்கிவிட்டான். ஸ்டோர் ரூம் கதவு போலிசாரால் திறக்கப்பட்டது. வீணா கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தாள். சுஜா அதை பார்த்து கதறி அழுதாள்.forensic department ல் இருந்து ஆட்கள் வர வைக்கப்பட்டனர். மோப்ப நாய் ஒன்றும் வர வழைக்கப்பட்டது . அது கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு சதீஷை பார்த்து குரைத்தது. சதீஷ் அழுகையை நிறுத்திவிட்டு வீணா வீணா என்றான். போலீஸ் பாடியை postmortem செய்ய அனுப்பினார்கள். கல்யாண வீடியோவில் வீணாவை அழைத்து போகும் பெண்மணி அணிந்திருந்த வாட்ச் மாடல் ஜூம் செய்து பார்த்த பொது அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஸ்பெஷல் ஆக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த மாதிரி வாட்ச் விற்பனை செய்யும் கடைகளை போலீசார் அணுகினார்கள்.சீக்கிரமே அந்த பெண்மணியை கண்டு பிடித்துவிடுவோம் என போலீஸ் சொன்னார்கள் . வீணாவின் போன் கிடைத்தது, அவள் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தன. இது ஏதோ திட்டமிட்ட கொலை போல இருந்தது. வீணாவின் போனை செக் செய்ததில் அவள் சாவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ஐஸ் கிரீம் parlour ஒன்றை சர்ச் செய்திருந்தாள்.

சுரேஷ் அந்த ஐஸ் கிரீம் parlour மேனேஜரை சந்தித்து வீணா அங்கு வந்ததை உறுதிபடுத்தி கொண்டான். சிசிடிவி footage செக் செய்த போது அவள் கூட நெருக்கமான சிரிப்புடன் அந்த வாலிபனும் பெண்மணியும் இருந்தார்கள். அவனுக்கு வயது இருவத்து மூணு அல்லது இருவத்து நாலு இருக்கலாம் . போலீஸ் அந்த வீடியோ வை கைப்பற்றியது. அவன்தான் பில்லுக்கு பணம் செலுத்தியிருந்தான். அதில் அவன் போன் நம்பர் குடுத்திருந்தான். அவன் பெயர் மணி என்று தெரிய வந்தது. உடனடியாக அவனை போன் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. ப்ரெசென்ட் location ஹைதராபாத் என்று அறிந்தார்கள். சுரேஷும், தீபனும் கூட போலீசுடன் ஹைதராபாத் ஹைதராபாத் புறப்பட்டார்கள். சுஜா எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவோம் என்றான் தீபன். சதீஷுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தவித்தாள் சுஜா. போலிஸ் மறுபுறம் சதீஷையும் சந்தேகப்பட்டு விசாரித்தார்கள். தீப்தி சுஜாவையும், சதீஷையும் சமாதானபடுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றாள்.

வாட்ச் தயாரிப்பாளரிடம் இருந்து அவர்களுடைய முகவரி கிடைத்துவிட்டது.ஹைதராபாத் சென்றதும் மணி தங்கியிருந்த location க்கு விரைந்தார்கள் போலீசார். வீணாவின் நல்லடக்கத்தை சுரேஷும், தீபனும் ஹைதராபாத்தில் இருந்து வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சதீஷ் சொல்லிவிட்டான். மணி வீடு பூட்டியிருந்தது . பூட்டை உடைத்து உள்ளே போன பொது படுக்கையறையில் அந்த பெண்மணி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.இவர் ஏன் தூக்கில் தொங்கவேண்டும் என சுரேஷ் தன்னைத்தானே கேட்டுகொண்டான். அவர் கையில் அதே வாட்ச் இருந்தது. அதில் வாய்ஸ் பதிவு செய்யும் வசதி இருந்தது. தெரியாமல் வீணா கொலைக்கு காரணமாகிவிட்டேன் என்னை மன்னிக்கவும் என்று அவர் குரல் பதிவு இருந்தது. மாடிக்கு விரைந்தார்கள் அது மணி தங்கியிருந்த அறையாக இருக்க வேண்டும். அந்த அறையை செக் செய்தனர் போலிஸ் . அவனுடைய பீரோவில் இருந்து வீணாவும் அவனும் சேர்ந்து இருந்த போட்டோ ஒன்றை கண்டெடுத்தனர். மணி எங்கு போயிருப்பான் என அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்மணி என்பதும் மணி அங்கு குடியிருந்தான் என்பதும் தெரியவந்தது. அந்த பெண்மணி பெயர் சாரதா என்றும் தெரிய வந்தது. போலிஸ் விசாரணையை தொடர சுரேஷும், தீபனும் சென்னை திரும்பினார்கள்.

வீணா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. யுவன், ரவி,இப்போது வீணா என அடுத்தடுத்த கொலைகள். வீணா வங்கி கணக்கை செக் செய்த போது அதில் பத்து லட்ச ரூபாய் வரவு வைக்கபட்டிருந்தது, சுரேஷ் தேதியை குறித்து கொண்டான். வீணாவின் postmortem ரிப்போர்ட் வந்தால்தான் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியும் என்றான் தீபன். சுஜா வீணாவுக்கு எதற்கு அவ்வளவு பணம் யார் கொடுத்திருப்பார்கள் என்றாள். எனக்கு எதுவுமே தெரியாமல் போய்விட்டதே என்றான் சதீஷ். மணி எங்கு பதுங்கியிருப்பான் என போலிஸ் மண்டையை உடைத்து கொண்டது. ஒரு வாரம் கழித்து தான் வீணாவின் postmortem ரிப்போர்ட் வந்தது. வீணா சாவதற்கு ஒரு மணிநேரம் முன்பு விருப்பத்துடன் யாருடனோ உடலுறவு கொண்டிருக்கிருக்கிறாள் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. சதீஷுக்கு அது மேலும் அதிர்ச்சியை இருந்தது. மணியும் ,வீணாவும் காலேஜில் ஒன்றாக படித்தவர்கள் என்று தெரியவந் தது. வீணாவே சாரதா மற்றும் மணியை ஏர்போர்ட்டில் இருந்து பிக் அப் செய்து மண்டபத்துக்கு அழைத்து வந்தது தெரிந்தது.


சுஜா வீணா இப்படி அநியாயமாய் சாவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றாள் தீபனிடம். அவள் மனதில் என்னவோ இருந்திருக்கிறது என்றான் சதீஷ். கல்யாணத்துக்கு முன்பே அவளுக்கு மணியுடன் பழக்கம் இருந்திருக்க வேண்டும். அது கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்திருக்கிறது என்றான் சுரேஷ். சாரி சுரேஷ் உன் கல்யாண சந்தோசத்தில் எல்லோரும் நிம்மதியாய் இருக்கலாம் என்று பார்த்தால் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என்றான் தீபன். சரி சுரேஷ் உன் மனைவி தனியாய் இருப்பாள் நீ வீட்டுக்கு போ என்றான் சதீஷ். சரி நான் போகிறேன் ஏதாவது அப்டேட் கிடைத்தால் போன் பண்ணு தீபன் என்றான். தீப்தி எதுவும் பேசவில்லை. தீப்தி உன்னை கடத்தியவர்கள் பற்றி ஏதாவது உனக்கு நினைவிருக்கிறதா ?எதுவும் அப்படி நினைவில்லை அவர்களுடன் இருந்த போது மயக்கமாகிவிட்டேன் என்றாள். கைப்பற்றப்பட்ட மணியின் கைரேகைகளை வீணாவை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியில் இருந்த கைரேகைகளோடு ஒத்து போனது. மணிதான் கொலையாளி என்பது உறுதியானது. சாரதாவின் கணவர் இறந்த பின் தனியாக வசித்து வந்தார்.

சுஜாவுக்கு அடுத்து என்ன செய்யபோகிறோம் அல்லது என்ன நடக்கபோகிறது என்பது பற்றி எதுவும் தோன்றவில்லை. தீப்திக்கும் நடப்பவை யாவும் புதிராக இருந்தது. தீபன் தொடர்ந்து போலீசாருடன் தொடர்பில் இருந்தான். அவர்கள் மூன்று கொலைகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தனர். யுவன் ,ரவி, இப்போது வீணா . ரவி மரணம் ஏதோ gang வார் என முடிவெடுத்தனர். யுவன் கொலைக்கும் வீணா மரணத்துக்கும் ஏதோ தொடர்பிருப்பதாக போலீசார் நினைத்தனர். சுஜாவிடம் வீணா யுவன் பற்றி விசாரித்தனர், ஒருவேளை யுவனுக்கும், வீணாவுக்கும் தொடர்பு இருந்ததா என்று விசாரித்தனர். அப்படியெல்லாம் கிடையாது என சுஜா மறுத்துவிட்டாள்.வீணாவுக்கும் சதீஷுக்கும் கல்யாணம் செய்ய காரணமே யுவன்தான் என்றாள் சுஜா. வீணாவுடைய கல்யாண ஆல்பம் செக் செய்தது போலீஸ் அப்போதும் மணி வந்திருக்கிறான். அது பற்றி யுவனுக்கு தெரிந்திருக்கலாம் என்றது போலீஸ். கொஞ்ச நாட்கள் நாம் எங்காவது போகலாம் என்றால் சுஜா தீபனிடம். தீப்தியையும் அழைத்து செல்வதுதான் அவளுக்கு பாதுகாப்பு என்றான்.

மலேசியா போகலாம் என்றாள் தீப்தி. சரி அதற்கான ஏற்பாடுகளை செய் சுஜா என்று சொல்லிவிட்டான். இன்னும் ஒரு வாரத்தில் மலேசியாவுக்கு போகலாம் என்றான். சுரேஷ் தான் இங்கு போலிஸ் கூட சப்போர்ட் பண்ணுவதாக சொன்னான். தீப்தி மலேசியா என்று சொன்னதற்கு காரணம் இருந்தது. அங்கு அவளின் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். சுஜாவும், தீபனும் அதோடு தீப்தியும் மலேசியா கிளம்பி போனார்கள். நண்பர்களுடன் தங்கி கொள்வதாக தீப்தி சொல்லிவிட்டாள். தீபன் ஜாக்கிரதை தீப்தி ஏதாவது எமெர்ஜென்சி என்றால் உடனே கூப்பிடு என்றான். சரி தீபன் என்றாள். சுஜா நிம்மதி பெருமூச்சு விட்டாள். சுஜா ஹோட்டல் ரூம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொண்டான் தீபன், போதும் தீபன் நீ போலிஸ் வேலை செய்தது என்னையும் கொஞ்சம் பார் என்றாள் சுஜா. நாம் நிம்மதியாக இருக்கத்தான் இங்கு வந்திருக்கிறோம் . நீ எதையும் நினைக்காதே என்றாள். சரி சுஜா இனியும் ஒரு இழப்பை கூட என்னால் அனுமதிக்க முடியாது என்றான். அவளை கட்டிக்கொண்டான். சுஜா சஇ லவ் யு என்று அவள் உதட்டில் முத்தமிட்டான்.

ஒவ்வொரு அடியையும் உள்ளுணர்வோடு எடுத்து வைத்தான் தீபன். சுஜாவுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். சுஜா மலேசியாவில் முக்கியமான இடங்களை தீபனுடன் சுற்றிபார்த்தாள். சதீஷ் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. தினமும் போலிஸ் ஸ்டேஷன் போக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டான் சதீஷ். யுவன் விவகாரத்தையும், வீணா விவகாரத்தையும் சேர்த்து வைத்து சதீஷிடம் கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்தார்கள் போலீஸ். மணி சீக்கிரம் கிடைக்க வேண்டுமென கடவுளிடம் வேண்டிகொண்டான் சதீஷ். ஆனால் மணி ஹைதரபாத்தில் இருந்து எங்கு தப்பி போனான் என்பது தெரியாமலே இருந்தது. சுஜா தீபன் நமக்கு சீக்கிரம் குழந்தைகள் வேண்டும் என்றாள். ம் நிச்சயம். இப்போதிருக்கும் மனநிலை கொஞ்சம் மாறட்டும் அடுத்து நமக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றித்தான் என் சிந்தனை முழுக்க இருக்கிறது என்றான். தீபன் என்னுடைய எல்லாமும் உன்னுடையது என்றான். தீப்திக்கு போன் பண்ணி விசாரித்தான். எல்லாம் ஸ்மூத் ஆக போய்க்கொண்டிருக்கிறது என்றாள். அந்த வாரக்கடைசியில் வந்து பார்ப்பதாக சொன்னாள். வேண்டாம் நாங்களே நீ தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறோம் என்றான் தீபன். தீப்தி சரி தீபன் நீ வரும் போது எல்லாம் நீட் ஆக இருக்கும். இப்போது கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது என்றாள். சுரேஷ் போன் பண்ணியிருந்தான்.