அந்த கடையின் சிசிடிவி footage செக் செய்து பார்த்த போது மூன்று பேர் ரவியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்றது தெரிய வந்தது.அடுத்தடுத்த கொலைகளால் போலிசுக்கு பெரிய தலைவலி ஏற்பட்டது, முதலில் யுவன், இப்போது ரவி. பாஸ்கர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ரவியை கடத்தி கொன்றவர்கள் யாரென கண்டறிய வேண்டும். தீபனும், சுரேஷும் தொடர்ந்து யுவன் கொலையாளியை கண்டறிய முடியாமல் திணறினர்.பாஸ்கரை தேடும் பணியை போலீஸ் முடுக்கி விட்டது. தீபனும் சுஜாவும் கோவிலுக்கு போயிருந்தார்கள். கடவுளே எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை என்று சுஜா மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். தீபன் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். சீக்கிரமே எல்லா பிரச்னையும் தீர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டான் .தீபன் என்ன சுஜா நாம் சிம்பிள் ஆக register திருமணம் செய்து கொண்டால் என்ன என்றாள். ம் நானும் அது பற்றி யோசித்தேன் வக்கீலிடம் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவுக்கு வருவோம் என்றான். தீபன் உனக்கெதுவும் ஆக கூடாதென்பதே என் பயம் என்றாள்.நீ பயப்படும்படி ஒன்றும் நடக்காது என்றான்.
வக்கீல் கோர்ட்டில் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி தீபன், சுஜா திருமணத்தை நடத்த முடிவு செய்தார். அதன்படியே பர்மிசன் வாங்கினார். சுஜா இதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . தீபன் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். மிகுந்த நெருக்கமானவர்களை மட்டும் அழைப்பதென முடிவு செய்தான். சுரேஷ், சதீஷ், வீணா, தீப்தி போன்றோர் மட்டும் அதில் கலந்து கொண்டனர். சுஜா தீபனின் கையை பிடித்துக்கொண்டாள். மாலையும் மோதிரமும் மாற்றிக்கொண்டனர். தீபன் சுஜாவின் கழுத்தில் தாலி கட்டினான்.
சுஜா தேங்க்ஸ் தீபன் இவ்வளவு நெருக்கடியிலும் நீ என்னை கை விடவில்லை என்றாள்.என்ன சின்னப்பிள்ளை மாதிரி பேசுகிறாய் நான்தான் உன்னை திருமணம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றான். எல்லோரும் தங்களுடைய திருமண வாழ்த்துக்களை சுஜாவுக்கும், தீபனுக்கும் தெரிவித்தனர். ஏதோ ஒருவகையில் சுரேஷ் நிம்மதி அடைந்தான். முதல் இரவு அறைக்கு வீணா துணை சூழ சுஜா சென்றாள். நீ நினைச்சபடி இந்த வாழ்க்கை நல்லபடியா அமையும் என்றாள் வீணா.
பாஸ்கர் கைது செய்யப்பட்டு விட்டதாக தீபனுக்கு போன் வந்தது. சுரேஷும், தீபனும் விரைந்து ஸ்டேஷன் சென்றார்கள். விசாரணையில் தான் சுஜாவை விரும்பியது மட்டுமே உண்மை ஆனால் யுவனை கொல்ல நினைக்கவில்லை என்றார்.நரேஷை அனுப்பி சுஜாவின் நடவடிக்கைகளை பின்தொடர சொன்னதும் உண்மை என்றார். தீபன் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவராக இருந்து கொண்டு இப்படி செய்ய
வெட்கமாக இல்லையா என்றான். பாஸ்கர் சுஜாவை பின்தொடர்ந்து துன்புறுத்திய வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டேஷன் விட்டு வெளியே வரும் போது ஒரு பிரைவேட் நம்பரில் இருந்து கால் வந்தது தீபனுக்கு. சொல்வதை மட்டும் கேள். நாங்கள் தீப்தியை கடத்தியிருக்கிறோம் போலிசுக்கு போனால் தீப்தி உயிரோடு கிடைக்க மாட்டாள் பத்து லட்சம் பணத்தோடு வந்து தீப்தியை கூட்டிப்போ என்றது அந்த ஆண் குரல். சுரேஷிடம் விஷயத்தை சொன்னான் . இது என்ன புது பிரச்னை என்றான் சுரேஷ். எந்த இடத்துக்கு வரவேண்டும் என எதாவது சொன்னர்களா பிறகு சொல்கிறேன் என்று சொன்னான். வீட்டுக்கு போய் சுஜாவிடம் இந்த விஷயத்தை சொன்னான். இது என்ன புது குழப்பம் என்றாள் சுஜா.
பத்து லட்சம் பணம் தயார் செய்து கொண்டு போன் கால் வருகைக்காக காத்திருந்தான் தீபன் . சுரேஷ் தீப்தியுடைய போன் கால் போன்றவற்றை ஆராய முயன்றான். பிரயோஜனம் இருக்கவில்லை. மதியம் பன்னிரண்டு போல போன் வந்தது. என்ன பணம் ரெடி பண்ணிவிட்டாயா தீபன் ? போலீஸ் எல்லாம் போகவில்லையே நீ போக மாட்டாய் என்று தெரியும் . சரி நான் அந்த இடத்தின் location மெசேஜ் பண்ணுகிறேன் என்றான். பத்து நிமிடத்தில் location வந்தது . தீபனும் சுரேஷும் கிளம்பினர். தீபன் துப்பாக்கியை தொட்டு பார்த்து கொண்டான். அவர்கள் சொன்ன இடத்துக்கு முக்கால் மணிநேரத்தில் சென்று விட்டார்கள். மறுபடியும் போன் வந்தது. ஆளில்லா பில்டிங் ஒன்றில் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை வைத்துவிட்டு வந்தான் தீபன், அடுத்த அரைமணிநேரத்தில் தீப்தியை அதே பில்டிங்கில் மயங்கிய நிலையில் கண்டுபிடித்தான் தீபன். என்னாச்சு தீப்தி என்று அவளை தூக்கிகொண்டு காரில் போட்டு கொண்டு ஆஸ்பிடல் விரைந்தான். தீப்திக்கு ஒன்றுமில்லை அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் என்று டாக்டர் சொன்னார்.
தீப்தி தீபனை கட்டிகொண்டு அழுதாள். நீங்கள் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் என் நிலை என்னவாகி இருக்கும் என்றாள். ஒன்றும் கவலைப்படாதே தீப்தி இனி நீ என்னுடனே இரு. நீ என் வீட்டிலேயே இரு தனியாய் பெங்களூர் செல்ல வேண்டாம் என்றான். தேங்க்ஸ் தீபன் என்றாள் . இட்ஸ் ஓகே தீப்தி என்றான். சுஜா தீப்தியை ஆறுதல்படுத்துமாறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். எதற்கு தீப்தியை கடத்தினார்கள் வெறும் பணத்திற்காகவா ? அப்படியென்றால் நிறைய பணம் கேட்டிருக்கலாமே வெறும் பத்து லட்சம் மட்டும் கேட்டிருக்கிறார்கள் என்று சுரேஷ் யோசித்தான். தீப்தியின் போன் வாங்கி பார்த்தான். சுரேஷ் அவளை கேள்விகள் கேட்டு தொந்தரவு பண்ணவேண்டாம் என்று தீபன் சொன்னான். அடுத்தடுத்து ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறதே என்றான் தீபன்.சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் என்றான் சுரேஷ். தீப்தி ரொம்பவும் பயந்து போயிருந்தாள்.ரவியை கடத்திய கும்பலில் ஒருவனை பிடித்தது போலிஸ்.எதுக்காக ரவியை கொலை பண்ணுனீங்க என்ற கேள்வியுடன் அவனை ரவுண்டு கட்டியது போலிஸ். அவனும் நாங்களும் ஒரு gang ஆகத்தான் வேலை பண்ணினோம். திடீர்னு அவன் திருந்தி எங்களை போலீசில் போட்டுகொடுத்து விடுவானோ என்று பயந்துதான் அவனை கொன்றோம். போன்ல இருந்த மெமரி கார்டு ஏண்டா எடுத்தீங்க? அந்த கார்டுல எங்க அக்கௌன்ட் விவரங்கள் எல்லாம் இருந்தது என்றான்.
அவனிடம் மற்ற இருவரை பற்றி தகவல்களை திரட்டியது போலீஸ்.உங்க gang மற்றும் பாஸ்கருக்கும் எதாவது connection உண்டா என விசாரித்தது போலிஸ். யுவன் யாரென்று கூடத்தெரியாது என்றான் அவன். தீபனும், சுரேஷும் போலீஸ் மூலமாக இந்த தகவல்களை கேட்டறிந்தனர். போலீசிடம் தீப்தி கடத்தப்பட்டது பற்றி சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டான் தீபன். நாட்கள் கடந்தன. சுஜாவும், தீபனும் பழையபடி ஆபீஸ் வேளைகளில் பிஸி ஆனார்கள். சுஜா இப்போது மின்னும் புது தாலியோடு உரிமையுடன் அவளுடைய சொந்த ஆபீஸ் வந்தாள். தீப்திக்கு ஒரு நல்ல பையனாய் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று தீபனிடம் சொன்னாள். அவளுக்கென்று யாருமில்லை என சுஜா கவலைப்பட்டாள். கவலைப்படாதே சுஜா முதலில் நம்முடைய பிரச்னைகள் தீரட்டும் . அதன் பிறகு அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றான். ம் அதுவும் சரிதான் என்றாள். சுரேஷ் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் வாங்கினான். தீபனிடம் கல்யாண விஷயத்தை சொன்னான். எனக்கு ஹெல்ப் பண்ண போய் எங்கே உனக்கு எதாவது ஆகிவிடுமோ என பயந்தேன் என்றான் தீபன்.சுரேஷ் கல்யாணத்துக்கு வீணா, சுரேஷ், தீப்தி, தீபன், சுஜா எல்லோரும் போயிருந்தார்கள். யுவனை யார்தான் கொன்றிருப்பார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில் இந்த கல்யாண விழா எல்லோருக்கும் மகிழ்வு தந்தது . வீணா இப்போதைக்கு குழந்தை வேண்டாமென சொல்லிவிட்டதாக சதீஷ் சொன்னான். அதில் சதீஷுக்கு வருத்தம்தான். வீணா கூட மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தாள் சுஜா. தீபன் தன்னை நன்கு பார்த்துக்கொள்வதாக சொன்னாள்.கெட்டிமேளம் முழங்க மணப்பெண் கழுத்தில் சுரேஷ் தாலி கட்டினான். எல்லோரும் போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர். மணப்பெண் சஞ்சனாவுக்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான் சுரேஷ். இவர் பார்க்கும் வேலையை விட சொல்லுங்கள் அண்ணா என்றாள் தீபனிடம். நான் வேண்டுமானால் என் ஆபீசிலேயே வேலை தருகிறேன் என்றான் தீபன் . சுரேஷ் மையமாக சிரித்தான்.எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு பத்து மணி இருக்கும். தீபனுக்கு போன் வந்தது சதீஷ்தான் போன் பண்ணியிருந்தான். வீணாவை காணவில்லை என்றான், அவள் போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது என்றான்.
எல்லா இடங்களிலும் தேடினார்கள். வீணா போன் லாஸ்ட் location மண்டபத்தை காட்டியது. போலிசும் வந்து விட்டார்கள். ஒவ்வொரு அறையாக தேடினார்கள். ஏதேனும் விபத்தில் சிக்கியிருப்பாளோ என்ற கோணத்திலும் செக் செய்தனர். சுரேஷும் வந்துவிட்டான், கார் பார்கிங்கில் தேடினான். மொட்டை மாடிக்கு போய் தேடினான். வீணா மண்டபத்தில் இல்லை. தீபன் வீட்டுக்கு போய் பார்த்தார்கள் அங்கேயும் இல்லை, கடவுளே வீணா பத்திரமாக வந்து விடவேண்டுமென்று சுஜா வேண்டிக்கொண்டாள். வீணா தன்னுடைய வீட்டுக்கு போயிருப்பாளோ என்று அங்கும் தேடினர். அங்கும் இல்லை. சதீஷ் அவள் ஏதாவது கோவமாக இருந்தாளா அப்படியெதுவும் இல்லை என்றான். அவளுடைய பர்சனல் திங்க்ஸ் இருக்கும் அறைக்கு போனார்கள். அவளுடைய டைரி போன்றவற்றை ஆராய்ந்தார்கள். அதில் எதுவும் இல்லை. போலிஸ் தங்களுடைய ஸ்டேஷன் திரும்பினார்கள் இன்னும் ஆட்களை சேர்க்க . சிசிடிவி footage, கல்யாண வீடியோ எல்லாவற்றையும் பார்த்தார்கள். யாரோ ஒரு பெண்மணி கையை பிடித்துகொண்டு வீணா மேலே மாடிக்கு போவது தெரிந்தது. அங்கே ஸ்டோர் ரூம் இருந்தது. எல்லோரும் அந்த கல்யாணமண்டபத்தின் ஸ்டோர் ரூம் அறையை நோக்கி உடன் புறப்பட்டார்கள்.