ரவிதான் போன் பண்ணியிருந்தான். என்னாச்சு ரவி என்றான் சுரேஷ் .நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கப்புறம் யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி அனாவசியமா இந்த விஷயத்துல தலையிடாதே உன் உயிர் போயிடும்னு மிரட்டினான் சார். ஓ ..நீங்கதான் சீக்கிரம் அவனை கண்டுபிடிக்கணும் என்றான். நீங்க ஒன்னும் பயப்படவேண்டாம் ரவி சீக்கிரம் அவனை கண்டு பிடித்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் சுரேஷ்.யுவன் மரணத்துக்கு பின்னால் யார் இருப்பதென்று ஒரே குழப்பமாக இருந்தது.போலீஸ் யுவன் கொலைக்கான மோட்டிவ் கண்டறிய முடியாமல் திகைத்தார்கள். யுவனுக்கு நெருக்கமான யாரோதான் அவன் படுக்கையறை வரை சென்று கத்தியால் குத்தி கொன்று இருக்கிறார்கள்.தீபன் தன்னுடைய எல்லா வேலைகளையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு யுவன் கொலையாளியை கண்டறியும் முயற்சியில் இறங்கினான். சுஜாவுக்கு சப்போர்ட் ஆக இருக்குமென்று வீணாவை கொஞ்சநாட்கள் வந்து சுஜாவோடு தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். அவளும் சுஜாவுக்கு ஆறுதலாக இருந்தாள்.
ரவியிடம் அவனுக்கு போன் பண்ணி மிரட்டியவனின் நம்பர் வாங்கி trace செய்தான் அது ஏதோ இன்டர்நெட் கால் என்பதால் சரியான விவரம் கிடைக்கவில்லை. சுரேஷ் யுவனின் லேப்டாப் முழுக்க சல்லடை போட்டும் எந்த விவரமும் கிடைக்காமல் இருந்தது. அவன் எதாவது தகவலை அவனுடைய friends யாருக்காவது அனுப்பியிருக்கலாம் என்பதால் அவனுடைய ஈமெயிலை ஆராய்ந்தான். பாஸ்கருக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தான். முக்கியமான விஷயம் என்று அதில் தீபனும். சுஜாவும் இருக்கும் போடோக்கள் இருந்தன. பாஸ்கருக்கு போன் செய்தான் சுரேஷ். ஆமாம் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்.அந்த போட்டோக்களை எதற்காக உங்களுக்கு அனுப்பினார் எதாவது தெரியுமா ?அது தெரியவில்லை என்றார் பாஸ்கர். அந்த போட்டோக்களை கவனமாக பார்த்த போது அதில் இருந்த மூன்றாவது நபர் தென்பட்டார். கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஒருவன் எல்லா போட்டோக்களிலும் இருப்பதை சுஜா கண்டுபிடித்தாள்.
அவன் யாரென்று பாஸ்கருக்கும் தெரியவில்லை. போலீசிடம் சொல்லி அவனுடைய போட்டோவை கிரிமினல் ரெகார்ட்களில் தேட சொல்லி கேட்டுக்கொண்டான் சுரேஷ்.
இரண்டு நாட்களில் அவன் பெயர் நரேஷ் என்றும் அவன் ஒரு தொழில்முறை போட்டோகிராபர் என்பதும் தெரியவந்தது. அவை சுஜாவும், தீபனும் பாண்டிச்சேரி போயிருந்த போது எடுத்த போட்டோக்கள் . பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கு முன் யுவனிடம் பேசி அவனை கூட்டு சேர்க்க முயற்சித்த போது யுவன் கோபப்பட்டதாகவும் அந்த போட்டோக்களை வாங்கி கொண்டு தன்னை போலீசில் சொல்லிவிடுவதாக மிரட்டினான்.ஆனால் எனக்கும் யுவன் கொலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றான்.எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்பதோடு போலிஸ் அவனை விட்டு விட்டார்கள். நரேஷ் ஸ்டுடியோவை ஆராய சுரேஷ் முடிவெடுத்தான். நரேஷ் எதையோ மறைக்கிறான் என்று பட்டது. ரவிக்கு போன் செய்தவன் நரேஷ் ஆக இருப்பானோ என்ற சந்தேகம் எழுந்தது. அவன் போன் நம்பர் கிராஸ் செக் செய்தான். அது நரேஷ் இல்லை என்பது தெரிந்தது.நரேஷ் ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு காசு கொடுத்து ஸ்டுடியோவின் duplicate சாவியை வாங்கினான் சுரேஷ்.
அந்த ஸ்டுடியோவின் பின் பக்க கதவு வழியாக நுழைந்தான் சுரேஷ். தீபன் யாரும் வருகிறார்களா என பார்த்துக்கொண்டான். சிஸ்டமில் ஏராளமான முகம் தெரியாதவர்கள் போட்டோக்கள் இருந்தன. சீக்ரெட் என்ற போல்டர் இருந்தது . அதில் தீபன் பெயருள்ள போல்டர் காப்பி செய்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான் சுரேஷ். வெளியில் வந்து தன்னுடைய மொபைலில் அந்த போல்டெர் ஓபன் பண்ணி பார்த்தான். அதில் இருந்த போட்டோவில் பாஸ்கரும்,நரேஷும் தோள் மீது கை போட்டுக்கொண்டு இருந்தார்கள். பிறகெதற்கு பாஸ்கர் தனக்கு நரேஷை தெரியாது என்று சொல்ல வேண்டும் என சுரேஷ் யோசித்தான். வேறு சில சுஜாவும், தீபனும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் தான் இருந்தன. உடனே பாஸ்கரையும், நரேஷையும் கைது செய்து விசாரிக்கும்படி போலிசை கேட்டுகொண்டான் சுரேஷ், இருவர் போனும் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பாஸ்கரும்,நரேஷும் தேடப்படும் நபர்களாக அறிவித்தார்கள் போலிஸ். யுவனுக்கு பாஸ்கர் பற்றியும், நரேஷ் பற்றியும் தெரிந்திருக்கிறது. அதனால் பாஸ்கரே யுவனை கொன்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்றான் தீபன்.
சுஜாவிடம் விஷயத்தை சொன்ன போது நம்மை சுற்றி என்னவெல்லாமோ நடக்கிறது தீபன் என்றாள். நீ பயப்படாதே சுஜா நான் வக்கீலிடம் பேசி விட்டேன் அடுத்த மாதம் இறுதில் விவாகரத்து கிடைத்து விடும் . அதற்கு அடுத்த வாரம் நம்முடைய கல்யாணம் என்றான். நீ சொல்வது நடக்குமா தீபன்?நிச்சயம் என்றான். வீணா கொஞ்ச நாட்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டுக்கு திரும்பினாள்.
ரவி, பாஸ்கர், நரேஷ் மேலும் யாரெல்லாம் இதில் இன்வோல்வ் ஆகியிருக்கிறார்களோ என்று தீபன் நினைத்தான். பாஸ்கர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவர் ஏன் நரேஷோடு கூட்டு சேர வேண்டும் என்றெல்லாம் யோசித்தான். இதில் யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் என்றும் சிந்தனை செய்தான். சுஜா என்னால்தானே எல்லாம் வந்தது என்றாள். நான்தான் உன்னை முதலில் விரும்பினேன் அவர்கள் கொல்வதென்றால் என்னை கொன்றிருக்கலாம் என்றான். போதும் தீபன் எல்லாம் சரியாகிவிடும் என்று அவனை அணைத்துக்கொண்டாள். ஒரு வாரம் கழித்து நரேஷை கைது செய்து விட்டதாக போலிஸ் சுரேஷுக்கு சொன்னார்கள். அவனை விசாரித்த போது பாஸ்கர் சொல்லித்தான் தான் தீபனையும்,சுஜாவையும் பாலோவ் செய்ததாகவும் போட்டோக்கள் எடுத்ததாகவும் சொன்னான். பாஸ்கர் எங்கிருக்கிறார் என தனக்கு தெரியாதென்றும் சொன்னான். மேலும் அவனை விசாரித்தபோது பாஸ்கருக்கும் சுஜா மேல் ஆசை இருந்ததாக சொன்னான். பாஸ்கர் வீடு பூட்டியிருந்தது, பூட்டை உடைத்து சோதனை போட்டார்கள். ஒரு ரூம் முழுக்க சுஜாவின் ஓவியங்களும்.போட்டோக்களும் இருந்தன, சுரேஷ் மலைத்துபோனான்.
தீபனும் பாஸ்கர் வீட்டுக்கு வந்து விட்டான். போலிஸ் அவனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன சுரேஷ் ஏதாவது கிடைத்ததா என்று கேட்டான். பாஸ்கர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வீடெடுத்து வசித்து வந்தார்.சுஜாவின் போட்டோக்களை பறிமுதல் செய்தது போலீஸ். அவர் ரொம்ப நாள் தப்பிக்க முடியாது என்றது போலீஸ் தரப்பு. அவரின் டெலிபோன் ஹிஸ்டரியையும் ஆராய்ந்தது போலீஸ். ரவிக்கு இந்த விஷயத்தை சொன்னான் சுரேஷ். இருந்தாலும் எனக்கு போன் பண்ணியது நிச்சயமாக பாஸ்கர் இல்லை என்றான். அந்த குரல் உன்னுடைய காரில் போகும் பேசியிருந்தால் அதில் நான் வைத்திருந்த கருவியில் பதிவாயிருக்கும் என்றான் சுரேஷ், நான் செக் பண்ணிவிட்டு உங்களுக்கு அதை போர்வர்ட் பண்ணுகிறேன் என்றான். சீக்கிரம் அந்த குரல் சுஜாவுக்கு தெரிந்திருக்கலாம் என்றான். சரி சார் .
நரேஷ் மறுபடி ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். அவன் வெளியே இருப்பதும் நல்லதுதான் பாஸ்கர் அவனை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்றது போலீஸ்.
நான் என்னிடம் அவன் மிரட்டி பேசிய பதிவை எடுத்துவிட்டேன் . நான் உங்களுக்கு பத்து நிமிடத்தில் அதை அனுப்புகிறேன் என்றான், மறுபடி அவன் தொடர்பு கொள்ளவில்லை. சரி நாம் அவன் location போவோம் என்று தீபனும் ,சுரேஷும் கிளம்பினார்கள்.ரவி மறுபடி போன் செய்தான் . இங்கே சிக்னல் சரியாக கிடைக்கவில்லை மறுபடி உங்களுக்கு அனுப்பிவிட்டு சொல்கிறேன் என்றான். நாங்கள் அங்கு வருகிறோம் என்றான் தீபன் அதற்குள் லைன் கட் ஆகிவிட்டது. வேகம் காரை எடு சுரேஷ் என்றான். அவர்கள் அங்கு போய் சேர்ந்த பொது யாரும் அங்கு இல்லை. ரவி போன் கீழே கிடந்தது. அது நொறுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மெமரி கார்டு எடுக்கப்பட்டு இருந்தது. ரவி ஆபத்தில் இருப்பதாக இருவருக்குமே தோன்றியது, சோர்வுடன் வீட்டுக்கு திரும்பினார்கள் சுரேஷும், தீபனும்.நீ கொஞ்ச நாளைக்கு ஏன் இந்த கேஸ் முடியும் வரை எங்களோடு இரு சுரேஷ் என்றான் தீபன். ம் அதனால் உங்களுக்குத்தான் ஆபத்து அதிகம் என்றான் சுரேஷ்.
சுரேஷ் ரவி ரெகுலர் ஆக போகும் இடங்களில் தேடினான் , அவனுடைய மனைவியும் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து வைத்தாள். ரவியுனுடைய காரை ஆராய்ந்தான் சுரேஷ். அதில் ஒரு pendrive இருந்தது. அதில் அவன் பேசியது ஏதாவது பதிவாயிருக்கலாம் என நினைத்தான். அதை எடுத்து அதில் பதிவாகியிருந்த உரையாடல்களை கேட்டான். அதில் அவன் மனைவியுடன் பேசியதுதான் அதிகம் இருந்தது,கார் டிக்கியை திறந்து பார்த்தவன் அதிர்ந்தான் .அங்கே ரவி கை கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தான். போலிசுக்கு போன் செய்தான். போலிஸ் எல்லாவற்றையும் செக் செய்து postmortem செய்ய பாடியை அனுப்பினர், அவனிடத்தில் எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை. அடித்தே கொண்டிருக்கலாம் என போலிஸ் சொன்னார்கள். ரவியின் மனைவி இன்னும் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள் தீபனும்,சுரேஷும். அவளுடைய பின்னணி குறித்து விசாரித்தார்கள் . சுஜாவிடம் போனில் நடந்ததை விவரித்தான் தீபன். அந்த காரை போலிஸ் பறிமுதல் செய்துவிட்டதாகவும் சொன்னான். அந்த ஏரியா வில் சிசிடிவி footage எதுவும் பதிவாகி இருக்குமா என செக் செய்ய சொன்னாள் சுஜா, அதன்படி இவர்களும் தேடினார்கள் . ஒரு கடையின் முகப்பில் இருந்தது . கார் நின்ற இடத்துக்கு அருகில் இருந்தது. போலிஸ் கடை முதலாளிக்கு போன் பண்ணி உடனே வர சொன்னார்கள். ரவி கொலையை ஒருவராக செய்திருக்க முடியாது என போலீஸ் சொன்னது,