அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த பார்சல் பிரிக்க வேண்டாம்னு கான்ஸ்டபிள் தடுத்ததும் நானும் ஒண்ணும் பண்ணலை. அப்போ அங்க வந்த ஒருத்தர் எங்க மேல மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு அந்த பார்சலை எடுத்துட்டு போயிட்டாரு. அவர் பார்க்க எப்படி இருந்தாரு. 35 வயசு இருக்கும் . எழில் மிருணாளினிகிட்டேயிருந்து பார்சல் அப்படின்னா ஏதோ முக்கியமான விஷயமா இருக்கும். அந்த கூரியர் சர்வீஸ் ஆள பிடிச்சி வர வை ஷிவானி என்றான். அவனிடம் விசாரித்த போது அது எந்த முகவரியில் இருந்து வந்தது என தெரிந்தது. உடனடியாக அந்த முகவரிக்கு விரைந்தான் எழில். அது ஒரு அநாதை ஆசிரமமாக இருந்தது, இங்கே மிருணாளினி அடிக்கடி வருவாங்க என்றார்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புதான் அந்த பார்சல் அனுப்பியிருக்கிறாள் மிருணாளினி. ரஷ்மியை சாயங்காலம் டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஜாக்கிரதையா இரும்மா என்று சொல்லி அனுப்பினாள் ஷிவானி. ரஞ்சித் உங்க வீட்ல ஆனந்த் ஏதாவது டாக்குமென்ட் தவற விட்டுட்டு போனானா, அப்படியேதும் தெரியவில்லையே. அப்படி இருந்தா ஆனந்த் என்னை கூப்பிட்டு சொல்லி இருப்பானே என்றான். ஏதோ ஒன்றை ஆனந்த் ரஞ்சித் வீட்டில் தவற விட்டு போயிருக்கிறான் என்றான் எழில்.
ஆனந்த் வீட்டுக்கு வந்த நபரை ஸ்கெட்ச் செய்து பார்த்தபோது ரஞ்சித் அவன் அருகில் உள்ள வீட்டின் கார் டிரைவர் என அடையாளம் காட்டினான் , உடனடியாக அவனை கைது செய்து விசாரித்தபோது 5000 தரேன்னு சொன்னாங்க. அதான் அந்த மாதிரி செஞ்சேன் , இப்போ அந்த பார்சல் எங்கே அதை மறுபடி இன்னொரு இடத்துக்கு கூரியர் பண்ண சொன்னாங்க அதுக்குள்ள மாட்டிக்கிட்டேன். பார்சல் என் கார்ல தான் இருக்கு என்றான். அனுப்ப வேண்டிய முகவரியை வாங்கி கொண்டான், காரில் இருந்த பார்சல் பிரித்தபோது அது ஒரு சிறிய காமிராவாக இருந்தது. அதில் இருந்த மெமரி கார்ட் போட்டு பார்த்த போது நிறைய பெண்களின் போட்டோவாக இருந்தது.காணாமல் போன பெண்கள் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டிருக்கலாம் என ஷிவானி சொன்னாள். எக்ஸாக்ட்லி அது அந்த ஆசிரமமா கூட இருக்கலாம். உன்கிட்ட யார் பேசுனா என்று கேட்டுகொண்டிருக்கும் போதே ஓட்டம் பிடித்தான் டிரைவர் . அவனை விரட்டி சென்ற எழில் அவன் எஸ்கேப் ஆகிவிட்டான் ஷிவானி என்றான். உடனே அந்த ஆசிரமத்தை சோதனை செய்த போது 10 பெண்களும் ஒரு ரூமில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தான் எழில்.
அனைவருமே ஆனந்தால் கடத்தி வரப்பட்டவர்கள் என தெரிந்தது. அவர்கள் முகவரிக்கு விசாரித்து அவர்களை அனுப்பி வைத்தான் எழில்.அந்த தப்பிய டிரைவர் எங்கு போனான் என தீவிரமாக தேட தொடங்கினார்கள். எல்லா பெண்களும் ஷிவானிக்கும், எழிலுக்கும் நன்றி சொன்னார்கள். ஆனந்தை சீக்கிரம் அரெஸ்ட் செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.ஷிவானி ரஷ்மிக்கு நன்றி தெரிவித்தாள்.மிருணாளினி தன் உயிரை தியாகம் செய்துதான் இத்தனை பெண்களையும் காப்பாற்றியிருக்கிறாள் என்றான் எழில். அந்த காமிரா புதிதாக வாங்கப்பட்டது . அதனால் அங்கு உள்ள காமிரா ஷோரூமில் தான் வாங்க பட்டிருக்க வேண்டும் என தெரிந்தது, விசாரித்து பார்த்த போது ஆனந்த் அவனுடைய நண்பன் அட்ரஸ் குடுத்திருந்தான், உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்தபோது அங்கிருந்த ஆனந்தின் நண்பன் சிக்கினான். அவனை கைது செய்து கவனித்ததில் அருகில் இருந்த கார் ஷெட் ஒன்றில் பதுங்கி இருந்த ஆனந்த்தை போலீஸ் கைது செய்தது, இனி நீ ஒன்றும் செய்யமுடியாது காலம் பூரா தமிழ்நாட்டு ஜெயிலிலே களி திங்க வேண்டியதுதான் என்றான்.
ஆனந்த் எதுவும் பேசவில்லை. மிருணாளினியை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் அடைத்து வைத்த பெண்கள் பற்றி அவளுக்கு தெரிந்து விட்டதால் அவளை கொன்றதாக தெரிவித்தான். கிரண் தான் தன்னை காட்டிக்கொடுத்தான் என்பதனால் அவன் மேல் கோவமாய் இருப்பான் என எழில் நினைத்தான். ஆனந்தை கைது செய்து சென்னைக்கு கொண்டு போனார்கள். விசாரணை தொடர்ந்து நடந்தது. கிரண் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.விஷயத்தை கேள்விபட்ட ஸ்வேதா,சிவா,உதித், நரேஷ் எல்லோரும் மகிழ்ந்தார்கள். குமாருடன் தனக்கு இருந்த தொடர்பு பற்றியும் போலீசில் வாக்குமூலம் அளித்தான் ஆனந்த் . ஆனந்த் அப்பா அவனை ஒரு முறை சிறைக்கு வந்து பார்த்து போனார், ஷெரின் இன்னும் 6 மாத காலத்தில் விடுதலை ஆவாள் என செய்திகள் வந்தன, ஷெரினை எல்லோரும் போய் பார்த்தார்கள்.
மிருணாளினி ,ஷெரின் போன்றோர் செய்த தியாகத்தால் பல பெண்களின் வாழ்வு காப்பாற்றபபட்டிருக்கிறது என்றான் சிவா. சிவாவும், ஸ்வேதாவும் ஹனிமூன் பிளான் செய்தார்கள். ஷிவானி நாம எப்போ ஹனிமூன் போறது என்றாள் எழிலிடம் , நமக்கு ஏது லீவு எல்லா நாளும் டூட்டி தானே என்றான், இருந்தாலும் உனக்காக போவோம் என்றான்,
ஷிவானியும், எழிலும் பல குற்றங்களை கண்டறிந்ததற்காக போலீஸ் துறையால் பாராட்ட பட்டனர். குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது, மிருணாளினியை கொன்ற குற்றத்துக்காக ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, இதை கேட்ட அவன் அப்பா அதிர்ச்சி அடைந்தார். ஷெரின் 6 மாதத்தில் விடுதலை செய்யப்பட்டாள். சிவாவுக்கும், ஸ்வேதாவுக்கும் மற்றும் ஷிவானி,எழிலுக்கும் நன்றி தெரிவித்தாள். உதித் தான் ஷெரினை விரும்புவதாக சொன்னதும் அதை முதலில் மறுத்த ஷெரின் பிறகு எல்லோருடைய வற்புறுத்தலில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள் . உதித் ,ஷெரின் திருமணம் சிறப்பாக எழில்,ஷிவானி தலைமையில் நடைபெற்றது.சிறையில் இருந்த ஆனந்த் ரொம்பவும் அமைதி ஆகி விட்டதாக சொன்னார்கள். கிரண் இறந்து போன அந்த பெண்ணின் நினைவிலேயே போலீஸ் வேலையை விட்டுவிட்டான். ஷிவானியும், எழிலும் இதை எதிர்பார்க்கவில்லை. எப்படியோ லீவு எடுத்துக்கொண்டு ஹனிமூன் போனார்கள் எழிலும் ஷிவானியும். என்ன இருந்தாலும் ஆனந்த் மிருணாளினியை கொன்று இருக்க கூடாது என்றான். நிர்மலாவையும், திலகவதியையும் நாம் மறக்க கூடாது. சிவா, ஸ்வேதா ரம்யாவையும் , சேகரையும் நினைவு கூர்ந்தனர், சேகர் நமக்காக உயிரை விட்டான் என்றான் சிவா. யாழினியின் இரண்டு குழந்தைகளையும் சௌமியாவே தத்து எடுத்து கொள்வதாக சொன்னாள்.
இதை கேள்விப்பட்ட ஷிவானி மகிழ்ச்சி அடைந்தாள் . எழில் நேரில் சென்று அவளுக்கு நன்றி தெரிவித்தான். சௌமியா தன்னை மன்னித்து விடும்படி எழிலிடம் சொன்னாள் . ஏதோ பதவிக்கு ஆசைப்பட்டு என்னென்னவோ செய்து விட்டதாக வருத்தப்பட்டாள். அந்த இரண்டு குழந்தைகளும் மகிழ்வோடு இருப்பதை பார்த்து யாழினி ஆத்மா சாந்தி அடையும் என நினைத்தான். ஆனந்த் சிறையிலேயே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாக செய்தி கேள்விப்பட்டான். உடனே ஷிவானியும், எழிலும் அவனை பார்க்க போனார்கள். அவன் ஹாஸ்பிடல் சென்று இருப்பதாக தெரிவித்தனர், அங்கு போன போது அவன் எழில் கையை பிடித்து கொண்டு அழுதான். நான் செய்த பாவங்களுக்கு என்னால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை என்றான். நீ திருந்திவிட்டாய் இனிமேல் எல்லாமே உனக்கு நல்லதே நடக்கும் என்றான் எழில். எனக்கு ஒரு தடவை சிவாவையும்,ஸ்வேதாவையும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றான்.அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றான், நான் பேசி பார்க்கிறேன் என்றான் எழில்.
ஷிவானி அதெல்லாம் வேண்டாம் என்றாள். நீண்ட யோசனைக்கு பிறகு ஸ்வேதா, சிவாவிடம் பேசினான், அவனால் இனிமேல் பழையபடி இருக்க முடியாது, நீங்கள் இருவரும் ஒருமுறை வந்து பார்த்து போக வேண்டும் என்றான். இப்போது வேண்டாம் எழில் சார். அவனுடைய குற்ற உணர்வு அதிகமாகி விடும் . அவனை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது என்றான் சிவா. சிவா சொல்வதும் சரிதான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றாள் ஸ்வேதா. உதித், ஷெரின் ஹனிமூன் போனார்கள். அப்போது மிகுந்த பதட்டத்துடன் இருந்தாள் ஷெரின், என்ன புதுசா வெட்கம், பதட்டம் எல்லாம் என்றான் உதித். நான் செஞ்ச தப்பினாலே எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்றாள். நிர்மலா உயிர் போயிடுச்சே என்றாள். அதெல்லாம் மறந்துடு நமக்குன்னு ஒரு குழந்தை அதோட சந்தோஷமான வாழ்க்கை அதுதான் இனிமே நமக்கு முக்கியம் என்றான். நீண்ட காலத்துக்கு பிறகு சிவாவும், ஸ்வேதாவும் ஒருமுறை ஆனந்தை பார்த்து விட்டு வரலாமென முடிவெடுத்தார்கள்.உதித், நரேஷ் இருவரும் கூட வந்தார்கள். அவர்கள் வருகையை பார்த்ததும் மகிழ்ந்து போனான் ஆனந்த், அவ்வளவு கொடூரமானவனாக இருந்தவன் இந்த தனிமையில் எல்லாவற்றையும் இழந்து தன்னை தேடும் காலம் இது என சிவாவுக்கு தோன்றியது. அவன் உதித் கைகளை பிடித்துக்கொண்டான்.
நரேஷ் அவனை பரிதாபமாக பார்த்தான். அப்போது அவன் திடீரென ஸ்வேதாவின் கால்களில் விழுந்தான். அவளுடைய பாதங்களை பிடித்து கொண்டு அழுதான்.ஸ்வேதாவின் கண்களும் ,சிவாவின் கண்களும் கலங்கிவிட்டன. அத்துடன் அவன் உயிரை விட்டு இருந்தான் அவன் கையில் விஷக்குப்பி இருந்தது. ஆனந்த் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்தனர் ஷிவானியும், எழிலும். என்றென்றைக்குமாக அவன் தன் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டான் என எழிலும்,ஷிவானியும் நினைத்தனர். அவனுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொண்டனர். சிவாவும், ஸ்வேதாவும் அந்த நிகழ்வை தங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத பகுதியாக கருதினர்.உதித்தும், ஷெரினும் கூட அதன் பின்னணியை ரொம்ப நாள் மறக்க முடியாது இருந்தனர்.
நிறைந்தது ... நன்றி !மீண்டும் சந்திப்போம்