Oru Naalum Unai Maraven - 10 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | ஒரு நாளும் உனை மறவேன் - Part 10

Featured Books
Categories
Share

ஒரு நாளும் உனை மறவேன் - Part 10

கமலனை அரெஸ்ட் செய்த செய்கி தீயாய் பரவியது. சிவாவும், ஸ்வேதாவும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஷிவானி கூட ஆச்சரியம் அடைந்தாள். கமலன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரஷர் வந்த போதும் அதை திறமையாக கையாண்டான் எழில்.ஷிவானி சஸ்பென்ஷன் முடிந்து டூட்டியில் ஜாயின் செய்கிறாள். வரதன்அரசியல் பின்னணி பற்றிய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுகிறாள். யாரும் எதிர்பாராவிதமாக வரதனுக்கு இரண்டு வார பெயில் கிடைக்கிறது. நிர்மலா சற்று கலக்கமடைகிறாள் . எதிர்பார்த்தது போல வரதன் நிர்மலாவை இனிமேலும் நீ இந்த கேசில் தலையிட்டால் அடுத்த பலி நீதான் என எச்சரிக்கிறான். இதற்கிடையில் சேகரை கொன்றது தான் தான் என ஒருவன் போலீசில் ஸரண்டர் ஆகிறான்.இதனால் கமலன் கேஸ் சற்றே வலுவிழக்கிறது. வரதன் பற்றி மேலும் அறிய ஷிவானி திருநெல்வேலி போகிறாள். வரதனின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் நெல்லைக்கு போகிறாள்.

ஒரு மாதத்திற்கு பிறகு கமலன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வருகிறான். அவனுடைய கட்சியில் இருந்து கமலன் நீக்கபடுகிறான். எழிலை பழி வாங்க துடிக்கும் கமலன் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான். வரதன் முக்கியமான எவிடெண்ஸ்களை அழிப்பதற்க்கான முயற்சியில் இறங்குகிறான். ஷிவானி எழிலுக்கு ஃபோன் செய்தாள். வாழ்த்துக்கள் எழில் ஒரு வழியா கமலனை கட்சிய விட்டு தூக்கிட்டாங்க போல என்றாள். ம் நீங்க எங்க இருக்கீங்க . திருநெல்வேலி. உங்களோட அடுத்த டார்கெட் என்ன என்றான் எழில்.என்னோட அடுத்த டார்கெட் வரதன் தான். அவனை என்ன பண்ண போறீங்க ?பேசாம அவனை நீங்க என்கவுண்டர் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுவும் சரிதான் .ஆல் த பெஸ்ட் எழில் என்றாள். நெல்லையில் வரதன் ரெகுலராக தங்கும் லாட்ஜ் பற்றிய விவரங்கள் கிடைத்தது. அவனுடைய அடுத்த ஸ்கெட்ச் கமலனுக்கு எதிராக சாட்சி சொல்ல போகும் ஒரு அரசியல்வாதியை கொல்ல போவதாகவும் இருந்தது.

சிவாவும், ஸ்வேதாவும் சேகர், ரம்யா இருவரின் ஆன்மா சாந்தி அடைய சில பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிர்மலாவையும் அவள் தம்பியையும் அழைத்திருந்தனர். சிவா அப்பா, அம்மா சேகரின் அப்பா அம்மா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். சிவா மனதில் பழி வாங்கும் தீ எரிந்து கொண்டிருந்தாலும் நிர்மலா,ஸ்வேதா ஆகியோருக்காக பொறுமை காத்தான். ஷிவானி கமலனுக்கு எதிராக சாட்சி சொல்லப் போகிறவரோடு பேசினாள். நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க சார் என்றாள். நான் பார்த்துக்கிறேன் மேடம் நீங்க கவலைப்பட வேண்டாம் என்றார்.வரதன் பற்றி போலீஸ் informer குடுத்த தகவல் அடிப்படையிலேயே நெல்லையில் வரதன் தங்கவிருந்த விடுதிக்கு அடுத்து ஒரு வீட்டில் தங்கியிருந்தாள். ஷிவானிக்கு துணையாக இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் இருந்தனர்.

லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் சென்று ரிபோர்டிங் செய்யும்படி ஃபோன் வந்தது. மற்ற இரு கான்ஸ்டபிள்களையும் கண்காணிக்கும்படி சொல்லிவிட்டு ஸ்டேஷன் விரைந்தாள். என்னாச்சு சார் ரிப்போர்ட் பண்ண சொல்லியிருந்தாங்க என்றாள். உங்க உயிருக்கு ஆபத்து நீங்க உடனே சென்னைக்கு போங்க. வரதன் ஸ்கெட்ச் போட்டிருக்கிரது உங்களுக்குதான். எங்களுக்கு உங்களால பாதுகாப்பு எதுவும் உடனடியா கொடுக்க முடியாது இன்னும் ஒரு மணி நேரத்துல வரதன் நீங்க தங்கி இருக்கிற இடத்துக்கு வர போறதா தகவல் கிடைச்சிருக்கு அதனால லேட் பண்ணாம இங்கிருந்து போய் விடுங்கள் என்றார்கள். என்ன போலீஸ் நீங்க ஒரு போலீசுக்கு பாதுகாப்பு இல்லையா என்றாள். சாரி மேடம் என்று பதில் வந்தது. என்ன ஆனாலும் சரி வரதனை என்கவுண்டர் செய்வதென்று முடிவெடுத்தாள் .ஷிவானி கூட இருந்த இருவரின் போனும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஷிவானி வெளியே வந்து ஆட்டோ ஒன்றை பிடித்து அவள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தாள். அவளுடைய திங்க்ஸ் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு வெளியே வந்த போது வரதன் அங்கு வாசலில் நின்றான்.

என்ன ஷிவானி மேடம் என்னை என்கவுண்டர்ல போட இவ்வளவு தூரம் வரணுமா.. இப்போ நீங்க என்னை தொட கூட முடியாத இடத்துக்கு போக போறீங்க என்றான். அவனை சுற்றி ஆட்கள் இல்லை. அவன் தனியாகத்தான் வந்திருந்தான். ஷிவானி உடல் வேர்த்து விறுவிறுக்க தொடங்கியது. பதி ஏதும் பேசாமல் கையில் இருந்த போனில் இருந்து மாவட்ட போலீஸ் தலைமைக்கு கால் செய்ய முயன்றாள். அவள் ஃபோன் அடுத்த வினாடி பறந்து விழுந்தது. வேறு வழியில்லாமல் திகைத்து நின்றபோது வரதன் அவனுடைய கைதுப்பாக்கியை எடுத்தான். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக வந்த ஜீப் மோதி தடுமாறி கீழே விழுந்தான் வரதன் , அவன் நிமிர்வதற்குள் அவனுடைய காலில் ஒரு குண்டு பாய்ந்தது . அடுத்து அவன் சுதாரித்து எழும் முன் அவனுடைய நெஞ்சு பகுதியில் அடுத்த குண்டு பாய்ந்தது. சுருண்டு விழுந்தான். ஷிவானி என்ன நடந்தது என்று புரியாமல் திகைத்து போயிருந்த வேளையில் எழில் அங்கே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த தொடங்கினான். அவள் கண்கள் கண்ணீரை விழுங்க சிரமப்பட்டு கொண்டிருந்தது.


இங்க இருக்க வேண்டாம் வாங்க போகலாம் என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்று போலீஸ் வண்டியில் ஏற்றினான். அவளுடைய ஃபோன் தொடர்ந்து அடித்து கொண்டிருந்தது. ஷிவானி ஃபோன் அட்டென்ட் செய்ய மனமில்லாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். எழில் ஷிவானி ஃபோன் அட்டென்ட் பண்ணுங்க என்றான். பேச்சே வராமல் தவித்து போயிருந்தாள் ஷிவானி. எழில் எல்லாவற்றையும் திட்டம் போட்டுத்தான் வைத்திருந்தான். அன்று மாலை பெண் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்த முயன்ற வரதன் என்கவுண்டர் என்ற செய்தி வெளியானது. இதை பார்த்த சிவா, நிர்மலா மற்றும் ஸ்வேதா நிம்மதி பெருமூச்சு விட்டனர்.நிர்மலா ஷிவானி மற்றும் எழிலுக்கு நன்றி தெரிவித்தாள். ஷிவானி எழில் தொடர்ந்து பிஸி ஆக இருந்ததால் அவனை பார்க்க முடியாமல் தவித்தாள். எழில் ஃபோன் செய்தான் வருகிற சண்டே அன்று மீட் பண்ணுவோம் என்று சொல்லி இருந்தான்.

ஒரு பக்கம் எழிலுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபக்கம் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன அதனாலேயே சஸ்பெண்ட் ஆவதில் இருந்து தப்பித்து கொண்டான் . ஷிவானி மனதளவில் பெரிய மாற்றத்தை கொண்டிருந்தாள். அவளுக்கு புது தைரியமும் எந்த வித சூழ்நிலையயும் எதிர் கொள்ளும் ஆற்றலும் தோன்றியது. எழிலை பார்க்க போகிறோம் என்பதே ஷிவானிக்கு புது உணர்வு குடுத்தது அவளுக்கே இது ஆச்சரியமாய் இருந்தது. வாங்க ஷிவானி என்று வரவேற்றான். சாரி எழில் என்னால உங்களுக்கு பெரிய தொந்தரவு என்றாள். வேற யாரும் வரதனை உங்களை மாதிரி கிட்ட கூட நெருங்கி இருக்க முடியாது என்றான். எனக்கு என்னவோ தோணுச்சு அதான் உங்களை தேடி நெல்லைக்கு வந்தேன் என்றான். என்ன சாப்பிடறீங்க நீங்களே ஆர்டர் பண்ணுங்க என்றாள் சிரிப்புடன். இதென்ன ஆளே மாறிட்டீங்க .. என்றான் எழில். விடைபெற மனமில்லை. வீட்டில் வந்து டிராப் செய்தான்.

சிவா வீட்டு டின்னர் விருந்தில் நிர்மலாவும் அவள் தம்பியும் கலந்து கொண்டனர். இனி என்ன என்றான்? சிவா நிர்மலாவை பார்த்து. இனிமேல் தான் ஆனந்த் வேலையை காட்டுவான் என்றாள். அதெல்லாம் எழில் கிட்டே நடக்காது என்றான் சிவா. ஆனந்த் மட்டுமில்லை கமலனும் இனி சும்மா இருக்க மாட்டான் என்றாள். கூடிய சீக்கிரம் தீர்ப்பு ஆனந்துக்கு கொடுத்தால் தேவலை என்றான் சிவா. ம் நான் இவனை படிப்பதற்காக வெளிநாடு அனுப்பலாம் என நினைக்கிறேன் என்றாள் நிர்மலா. அதுவும் நல்ல யோசனைதான் என்றாள் ஸ்வேதா. சேகரும், ரம்யாவும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றான் பெருமூச்சுடன் . ஷிவானி தப்பித்ததே பெரிய விஷயம் என்றாள் ஸ்வேதா.
ஷிவானி எழிலை மனமார விரும்ப தொடங்கியிருந்தாள். அதை எப்படி அவனிடம் சொல்லுவது என்று தயங்கினாள்.

ஷிவானி எழிலுக்கு ஃபோன் செய்தாள். என்ன மேடம் மறுபடி ஏதாவது பிரச்சனையா என்று கேட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மாதான் என்று சொல்லி விட்டு மையமாக சிரித்தாள். இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன் நானே கூப்பிடுகிறேன் என்றான். ஓகே ஓகே என்று சொன்னாள். ஷிவானி குடும்பம் அவளை அந்த வேலையை விட சொல்லி கட்டாயபடுத்தி கொண்டிருந்தார்கள். இனி அவளால் வேலையையும் விட முடியாது எழில் மீது கொண்ட காதலையும் விட முடியாது. அரவிந்த் மனைவி சிவாவுக்கு ஃபோன் செய்தாள். நான் எழிலிடம் நேரில் பேச வேண்டும் நீங்களும் வர முடியுமா என்று கேட்டாள். கண்டிப்பாக வருகிறேன் என்றான். இருவரும் எழிலை அலுவலகத்தில் சந்தித்தார்கள்.
அப்போது அரவிந்த் மனைவி அரவிந்தின் மேலும் சில பெரிய இடத்து தொடர்புகள் பற்றி சொன்னாள். அதில் இன்னும் சில பெண்கள் சுமதி போலவே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை சொன்னாள் .அந்த பெண்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றாள். நானும் வெளிநாடு போக போகிறேன் என்றும் சொன்னாள்.

ஷிவானி இன்றைக்கு எப்படியும் தான் காதலை சொல்லி விடுவது என முடிவெடுத்தாள். எழிலை ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு வர சொல்லியிருந்தாள். அவன் வர சற்று தாமதம் ஆனது. அவளுக்காக பூங்கொத்து ஒன்றை வாங்கி வந்திருந்தான். ரொம்ப அழகாய் இருக்கிறது என்றாள். ரொம்ப நேரம் நாம இங்கே இருக்க வேண்டாம் என சொல்லி முடிபபதற்குள் அவனுடைய தோள்பட்டையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு துளைத்தது. அவன் மயங்கி ஷிவானி மேல் சரிந்தான்.