Iravai Sudum Velicham - 30 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 30

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 30

ராம் தீபுவிடம் அந்த டைரி பற்றி கேட்ட போது அவள் சொன்ன விஷயம் அதிர்ச்சியாய் இருந்தது. ரேவந்த் ராகவனுடைய மகனே இல்லை எனவும் ரேவந்த்தின் தந்தை யாரென தெரியவில்லை எனவும் எழுதி இருந்தார். ஆனால் அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவனுடைய எதிர்காலமே பாதிக்கப்படும். பார்வதி எனக்கு செய்த துரோகத்துக்கு அவளுக்கு காலமே தண்டனை வழங்கட்டும் என்று எழுதி இருந்தார்.ரேவந்த் பிறந்த போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் தனக்கு தெரியாமல் நாடகம் ஆகிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதனால் எனக்கு பிறகு என்னுடைய எல்லா சொத்துக்களும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு போகட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த விஷயம் எப்படியோ ஆனந்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் மூலமாக சம்பந்தப்பட்ட ஆளுக்கு தெரிந்திருக்கிறது.

ராம் இந்த விஷயத்தை ரேவந்த்திடம் எப்படி சொல்வதென யோசித்தான். வேண்டாம் முதலில் இதற்கான ஆதாரங்களை திரட்டுவோம் ரேவந்த்தின் தந்தை யாரென தெரிந்து கொள்வோம் என முடிவெடுத்தான். ரேவந்த் பிறந்த ஹாஸ்பிடலை தீப்தியிடம் கேட்டு தெரிந்து கொண்டான். அந்த ஹாஸ்பிடலுக்கு போய் விசாரித்த போது அங்கிருந்த nurse ஒருவர் ராகவன் அங்கு சாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்ததாகவும் , டாக்டர் தங்கப்பாண்டியிடம் பேசியதாகவும் தெரிவித்தாள். டாக்டர் தங்கப்பாண்டியிடம் பேசிய போது அது அந்த விவரங்களை ராகவனிடமே கொடுத்து விட்டதாக கூறினார். ரேவந்த்தின் உண்மையான அப்பா யாரென்றே கேள்விக்கு அவரிடத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காசியின் மொபைல் நம்பர் மற்றும் கால் ஹிஸ்டரி கேட்டு மணிமாறனை தொடர்பு கொண்டான். முதலில் தயங்கியவர் ராகவனுக்காக இதை செய்கிறேன் ஒரு வாரம் டைம் குடுங்க என்றார்.

ராமை ரேவந்த் தொடர்பு கொண்டான். என்னாச்சு அங்கிள் உங்களை அதுக்கப்புறம் பாக்கவே முடியலே .. அது ஒண்ணுமில்ல ரேவந்த் கொஞ்சம் பிஸி வேற ஒண்ணுமில்லை. அம்மா எப்படி இருகாங்க ? நல்லா இருக்காங்க . சரி ரேவந்த் ஏதாவது அப்டேட் இருந்தா நானே உன்னை கூப்பிட்டு சொல்றேன் என்றான். இப்போது ரேவந்த் சம்பந்தப்பட்ட ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் எங்கு போய் தேடுவதென்று யோசித்து கொண்டிருந்தான் ராம். நீலாங்கரை வீட்டுக்கே போய் பார்க்கலாமா? இல்லை ஆனந்த் வீட்டுக்கு போகலாமா ? ஆனந்த் வீட்டுக்கு போயிருந்தான். ஆனந்த் அறையை சோதித்தான் எதுவும் இல்லை. இந்த கேஸ் எங்கு போய் முடியுமோ என்ற கவலையில் ஆழ்ந்தான்.
டாக்டர் தங்கப்பாண்டியிடம் இருந்து போன் வந்தது என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள் நீங்கதான் என்னை காப்பாத்தணும். சீக்கிரம் அந்த டாக்குமெண்டை கண்டுபிடித்து என்னை காப்பாத்துங்க என்றார். ராமுக்கு தலை சுற்றியது. போலீசிடம் பேசி அந்த நீலாங்கரை வேருக்கு திரும்ப சென்றான். ரேவந்தும் உடன் வந்திருந்தான். இந்த வீட்ல ரகசிய அறை அல்லது லாக்கர் இருக்குதா ரேவந்த் அப்படியெல்லாம் எதுவும் இல்லை ராம் சார். பின்ன ஏன் இந்த வீட்டை உங்க அப்பா பயன்படுத்தனும்.அவருக்கு தனியா இருக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். நாம இன்னும் அந்த டாக்குமெண்டை தான் தேடுறமா ?வேற யாராவது கிளோஸ் friends உங்க அப்பாவுக்கு நம்பிக்கையானவங்க இருக்காங்களா ? அப்படி ஒருத்தர் இருந்தாரு அவர் சமீபத்துலதான் இறந்தார் . அவர் பேரு குமார். நாளைக்கு நான் அவங்க வீட்டுக்கு போறேன் என்றான் ராம். நானும் வரவா வேண்டாம் ரேவந்த் என்றான்.

மறுநாள் குமார் என்பவர் வீட்டுக்கு சென்றான். ரேவந்த் சொல்லி இருந்தான் நீங்க வருவீங்கன்னு என்றாள் சைந்தவி . ராகவன் அங்கிள் அப்படி எதுவும் டாக்குமெண்ட் கொடுத்துட்டு போகலை . ஒருவேளை அது pendrive ஆக கூட இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் மாதிரி கூட இருக்கலாம். அப்படியா அன்னிக்கி அங்கிள் ரேவந்த்துக்கு surprise gift கொடுக்கிறேன்னு சொன்னப்ப என்ன வாங்கலாம்னு என்னை கேட்டாரு.. நான் ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கி குடுங்கன்னு சொன்னேன். அவரும் வாங்கினார் உனக்கெப்படி தெரியும் நானும் அவரும்தான் போய்
வாங்கினோம். அப்புறம் என் ஸிஸ்டெம்ல
அதை போட்டு type பண்ணிக்கிட்டு இருந்தாரு.அதை எடுத்துட்டு போகும் போது அன்னைக்கே அவரை கொலை பண்ணிட்டாங்க.அந்த ஹார்ட் டிஸ்க் எங்க போச்சுன்னு தெரியலியே . பரவாயில்ல உன் ஸிஸ்டெம்ல அவர் type பண்ண file இருக்கும்ல அதை பார்க்கலாமா? சரி வாங்க . அவர் type பண்ணி வைத்திருந்த பைலை பார்த்த போது ராமுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

ராகவனுக்கு தனக்கு ஏதாவது நடக்குமென்று முன்பே தோன்றியிருக்கிறது . அதனால் அந்த உண்மையை ரேவந்திடம் அவரே சொல்ல தீர்மானித்திருக்கிறார். ராமுக்கு போன் வந்தது, டாக்டர் தங்கப்பாண்டியை யாரோ சுட்டுக்கொன்று விட்டதாக சொன்னார்கள். ராம் அந்த ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். டாக்டர் தங்கபாண்டி அதிகாலை வாக்கிங் போகும்போது யாரோ சுட்டிருக்கிறார்கள் .ரேவந்த் பற்றிய உண்மை தெரிந்த அதில் சம்பந்தப்பட்டவர்ளை கொன்று கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே காசியின் கால் ஹிஸ்டரி மணிமாறனிடம் இருந்து வந்தது, ஆயுத அதிர்ச்சியும் காத்திருந்தது.காசி புதிய சிம்மை வாங்கியிருந்தான் பார்வதியின் நம்பர்தான் அதிகம் receive செய்யப்பட்டதாக கால் லிஸ்டில் இருந்தது.
தங்கபாண்டியன் மகள் டாக்டர் கவிதாதான் தொடர்ந்து அந்த ஹாஸ்பிடலை நடத்துவதாக தெரிய வந்தது.

டாக்டர் கவிதா இன்னும் தங்கபாண்டி இறந்த துக்கம் மாறாமல் இருந்தாள். நீங்க மட்டும் அந்த டாக்குமெண்டை கரெக்ட் டைமுக்கு கண்டுபிடிச்சி இருந்தா என் அப்பா உயிர் போயிருக்காது .ரொம்ப சாரி. இதே ஹாஸ்பிடல்ல முன்னாடி வேலை செஞ்ச nurse மூலமா அந்த document டூப்ளிகேட் copy எடுத்துட்டோம்.ஆனா அப்பாவை கொன்னவங்க நோக்கம் தெரியல.எனக்கு அந்த டாக்குமெண்ட் copy கிடைக்குமா? நிச்சயமா என்றாள். அதை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டான். அதில் ரேவந்த்தின் உண்மையான தந்தை யாரென போட்டிருந்தது.

ரேவந்த் காசி மூலம் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது .உடனே பார்வதிக்கு போன் செய்தான்.என்ன ஆச்சு மேடம்? எனக்கு ஒன்னும் புரியல என்று அழுதாள். நான் உடனே வரேன் என்று சொன்னான். ராம் அங்கு போய் சேர்ந்த போது போலீஸ் சூழ்ந்திருந்தது . பார்வதி வாங்கி கணக்கில் இருந்து ராகவனை கொள்வதற்கு பணம் கை மாறி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தார்கள். பார்வதியை அரெஸ்ட் செய்தர்கள். கிரண் என்னையும் அரெஸ்ட் செய்யுங்கள் என்றான். என் பையன் போனப்புறம் நான் மட்டும் இனிமே என்ன செய்ய போறேன் என்றான். என்ன சார் சொல்லறீங்க? என்னோட பையன்தான் ரேவந்த் . எனக்கும் பார்வதிக்கும் தொடர்பு இருந்தது அப்போ ராகவன் வெளிநாட்டில் இருந்தார். எங்களுக்கு பிறந்த குழந்தைனு தங்கபாண்டி மூலமா தெரிஞ்சிகிட்ட ராகவன் சொத்தையெல்லாம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு எழுத தீர்மானிச்சார் அதனாலதான் அவரை காசியை வைச்சு தீர்த்து கட்டினா. இந்த உண்மை தெரிஞ்ச டாக்டர் தங்கப்பாண்டியையும் ,
ஆனந்தையும் நான்தான் கொன்னேன், எங்க பையனே போன பிறகு எங்களுக்கு எதுக்கு இந்த சொத்து எல்லாம் என்றான். நீங்க சொல்றத எப்படி நம்புறது ? நீங்களே சொத்துக்கு ஆசைப்பட்டு ரேவந்த்தை கொன்னிருக்கலாம் இல்லையா ?சத்தியமா நான்தான் அவனோட அப்பா வேணும்னா டி ஏன் ஏ டெஸ்ட் பண்ணி பாருங்க. அதுக்கு அவசியமில்லை என்று ராம் சொன்னான். அந்த டாக்குமெண்டை போலீசாரிடம் ஒப்படைத்தான். போலீசார் கிரானையும் கைது செய்தனர். ரேவந்த் சாவுக்கு யார் காரணமோ அவங்களை பழி வாங்காம விடமாட்டேன் என்றான்.அதுக்கு அவசியம் இல்லே அப்பா என்றான் ரேவந்த். எங்களுக்கு வேற வழி தெரியல.நீங்களா ஒத்துக்குவீங்கன்னுதான் இப்படி ஒரு நியூஸ் பரப்புனோம் . ரேவந்த் பார்வதியிடம் எதுவும் பேசவில்லை. கிரணிடம் கேவலம் சொத்துக்காகவா இதையெல்லாம் பண்ணினீங்க?கிரண் அமைதியாய் இருந்தான். ராம் ரேவந்த்தை ஆறுதல் படுத்தினான். ராம் அந்த ஹார்ட் டிஸ்கை தேடி கண்டு பிடித்திருந்தான். இது ராகவன் உங்ககு குடுக்க இருந்த surprise gift . நீயே ஓபன் பண்ணி பாரு. அதை திறந்து பார்த்த போது நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன், பார்வதியும் கிரணும் எனக்கு துரோகம் செய்திருந்தாலும், யார் என்ன சொன்னாலும் என்றைக்கும் நீ என் மகன்தான்.உன்னுடைய தந்தை கிரணாக இருந்தாலும் என்னுடைய அனைத்து சொத்துக்களையும் உனக்கே சேரும். அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டேன். இப்படிக்கு ராகவன். ரேவந்த் அதை படித்ததும் கதறி அழுதான். ராமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ராகவன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொண்டான்.

நிறைந்தது .. நன்றி! மீண்டும் சந்திப்போம்