anthi maalai in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | அந்தி மாலை

Featured Books
Categories
Share

அந்தி மாலை

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் என்ற பாட்டை ஜானு முணுமுணுத்து கொண்டே மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாள் . இந்த மாலை பொழுது அவளை போன்ற படித்து முடித்து கல்யாணத்துக்கு அல்லது வேலைக்கு செல்வதற்கு தயாரான பெண்களுக்கு ஆறுதலான நேரம். வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு டிவி பார்க்கலாம் ஏதாவது கேம்ஸ் விளையாடலாம். ஜானுவுக்கு எந்த கவலையுமில்லை . அவளுக்கு தம்பி ஒருத்தன் இருந்தான். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். அவனோடு சண்டை போட கூட முடியாது. அவன் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி படித்து வந்தான். வார கடைசியில் எப்போதாவது வருவான். அவனுடைய ப்ரோபோசல் கதைகளை கேட்க ஸ்வாரசியமாய் இருக்கும். இவளுக்கும் காதலிக்க ஆசைதான் ஆனால் அப்பா ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அப்படிப்பட்டவள் வாழ்க்கையில் வந்தவன்தான் ஆனந்த் . பெயர் ரொம்ப பழசாய் இருக்கிறதென்று குறை பட்டு கொள்ள வேண்டியதில்லை. ஆள் நல்ல ஜிம் பாடி.. நல்ல உயரம் . அவன் இவள் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வரும்போது தான் பழக்கம். இப்போதைய சூழலில் கேஸ் சிலிண்டர் கிடைப்பது அரிதான சூழலில் இப்படி ஒருத்தன் கிடைப்பது அதிர்ஷ்டம் என்றெண்ணினாள் . அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான். இவளுக்கு அவன் மேல் முதலில் இண்டரெஸ்ட் இருக்கவில்லை. அவனுடைய instagram பக்கத்தை பார்த்த பிறகு மலைத்து போய்விட்டாள் .ஏகப்பட்ட பெண்கள் சூழ் ஆளாக இருப்பான் என்று பார்த்தால் ரொம்பவும் நேர்மையாக 10 பாலோவர்ஸ் வைத்திருந்தான். இத்தனைக்கும் கலர் கலராய் பில்டர் போட்டு போட்டோக்கள் வைத்திருந்தான். அவனுக்கு லேசான திக்குவாய். ஒரு நாள் அப்படி கேஸ் சிலிண்டர் போட வரும் போது இவளே அவன் பெயரை கேட்டாள் .தடுமாறி போய்விட்டான். அப்புறம் போனில் பேசலாம் என்று பார்த்தால் எப்பவுமே பிஸி என்று வந்தது.

ஆனந்த் வீடு டவுன் விட்டு சற்று தள்ளி இருந்தது. எப்படியோ அவனை பற்றி அக்கம் பக்கம் விசாரித்து தெரிந்து கொண்டாள். பெரிதாக அவனுக்கு என்று என்ன சேமிப்பு இருக்க போகிறதென்று நினைத்தாள் . அன்று டிவி பார்த்து கொண்டிருந்த போது மணி மதியம் 12 இருக்கும். யாரோ கொல்லைப்புறம் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது . இவள் வீட்டிலோ யாரும் இல்லை. பயந்து விட்டாள். அவசரமாக வாசல் கதவை திறக்க போனால் அது லாக் ஆகி விட்டிருந்தது. இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என்று ரொம்பவும் பயந்து விட்டாள்.இவள் வீடும் மற்ற வீடுகளை விட்டு சற்று தள்ளி தான் இருந்தது .பதட்டதுடன் டிவியை அணைத்தாள். யாருக்கு ஃபோன் பண்ணலாம் என நினைக்கும் போதே ஆனந்திடம் இருந்து சிலிண்டர் வந்திருப்பதாக ஃபோன் வந்தது. திருடன் திருடன் என இவள் கூச்சலிட திருடன் ஓடி போய்விட்டான். ஆனந்த் வீட்டு முன் கதவை திறந்து விட்டான். ரொம்ப தாங்க்ஸ் ஆனந்த் நீ மட்டும் வராம போயிருந்தா திருடன் உள்ளே வந்திருப்பான் என்றாள். அவன் எக்ஸ்ட்ரா 10 ரூபாய் மட்டும் வாங்கி கொண்டு போனான்.

ஆனந்தின் கதையை கேட்க ஆர்வமாய் இருந்தாள் ஜானு. ஆனால் அவனோ இவ்ளோ உம்மணாமூஞ்சியாக இருக்கிறானே என்று வருத்தப்பட்டாள் . காலை 7 மணிக்கே ஃபோன் செய்தாள் . வீட்டில் சிலிண்டர் கேஸ் ஸ்மெல் அடிக்கிறது கொஞ்சம் வந்து பாக்க முடியுமா என்றாள். வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்த சமயம் அது. தப்பாக நினைத்து விடுவானோ என்றும் யோசித்தாள் . அவனும் உடனே வந்து சேர்ந்தான். என்ன என்ன செய்யக்கூடாது செய்ய வேண்டியது எல்லாவற்றையும் சொன்னான். இவள் டீ குடிக்கிறியா என்றாள். டீ நல்லா இருக்குது என்றான். என்னை உனக்கு
பிடிக்கலையா என்றாள் தயங்கி தயங்கி. அவன் ஏதும் சொல்லாமல் கிளம்பினான்.இவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. இவன் வேலை பார்க்கும் சிலிண்டர் ஏஜென்ஸியில் வேலை காலி இருந்ததை அறிந்தாள் . இவள் அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அந்த வேலையை வாங்கினாள் . இவளை அங்கு பார்த்ததும் ஆனந்த் முகத்தில் புன்னகை பூத்தது. ஆனால் ஒன்றும் சொல்லமுடியாமல் தவித்தான்.

இப்போது அவர்கள் காதலித்தார்கள்.ஆனந்த் அவளுக்காக பூ , அல்வா போன்றவற்றை நேரம் கிடைக்கும் போது வாங்கி கொடுத்தான். அவர்கள் தனிமையில் அதிகம் பேச முடிவதில்லை. ஒரு சண்டே வேளாங்கண்ணி கடற்கரை போகலாம் என முடிவெடுத்தார்கள். இருவரும் டூ வீலரில் போகவே விரும்பினார்கள். அவள் அவன் பேச்சை கேட்க விரும்பினாள் . அவன் ஜாடையில் பேச பேச அவன் மேல் பிரியம் கூடி போயிற்று. கடற்கரை காற்று வாங்கினார்கள். நீ என்னை கட்டிப்பியா என்றான். அவள் அவனை அணைத்துக்கொண்டாள் . நீதான் என் புருஷன் என்றாள். யுத்தம் வந்ததும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட அவனுக்கு வேலை பளு அதிகமாயிற்று.முன்னை போல அவனை அதிகம் பார்க்க கூட முடியவில்லை. ஃபோன் வழக்கத்தை விட அதிக பிஸி ஆகி விட்டிருந்தது.

ஜானுவுக்கும் நேரம் சரியாக இருந்தது. வருகிற வாடிக்கையாளர்கள் பிரச்சனை செய்தனர். சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி வேலையை விட்டாள். ஜானுவை பெண் கேட்டு சிலர் வந்து போயினர்.நாம எங்காவது ஓடி போலாமா என்றாள் ஆனந்திடம் அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு சமாளிப்போம் என்றான். வீட்டுக்கு தெரிந்து விட்டது. அவனை பற்றி எப்படியோ அப்பாவுக்கு தெரிந்து விட்டது . ஜானு உன் ஃபோன் குடு என்று நடு ரோட்டில் போட்டு உடைத்து விட்டார். அந்த சிலிண்டர் ஏஜென்ஸியில் சொல்லி அவனை வேலையில் இருந்து எடுக்க சொல்லி கம்ப்ளைண்ட் கொடுத்தும் விட்டார். ஜானு அழுது அழுது பார்த்தாள் . அவனை எப்படியாவது பார்க்கலாம் என்று நினைத்தாள்.

நாளை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் ஜானு பிடிவாதம் பிடிக்காமல் கல்யாணம் செய்து கொள் என்றார் அப்பா. அவன் வரமாட்டான். அவனை நினைத்து வீணாய் அழாதே என்றார். பெண் பார்க்கத்தானே வருகிறார்கள் என்று தம்பி சமாதானப்படுத்தினான். அவளுடைய தம்பியை அனுப்பி ஆனந்தை தன்னை வந்து கூட்டி செல்லும்படி சொன்னான்.இரவுகள் கஷ்டமாய் இருந்தது. ஜானுவுடைய தம்பி விசாரித்து விட்டு வந்தான். போன வாரமே ஆனந்த் கல்யாணம் முடிந்து விட்டதாம் அவன் ஊரை விட்டு போய் போய்விட்டான். அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தது நம்முடைய அப்பாதான் என்றான். ஜானு துடித்து போனாள் ஆனால் அவளுடைய கல்யாணத்துக்கு சம்மதித்தாள்.

கல்யாண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. மாப்பிள்ளை நன்கு படித்திருந்தான். அதோடு நாகரிகமாகவும் பழகினான் . ஒரு வருடத்தில் அவள் குழந்தைக்கு தாயானாள் . வீட்டில் அவள் சொல்வதுதான் சட்டம். அவள் மாமியார் உறங்கி கொண்டிருந்தார். அப்போது சிலிண்டர் வந்து இருப்பதாக குரல் வந்தது. பெரியவர் ஒருவர்தான் குரல் கொடுத்தார். பாவம் அந்த பையன் ஊமை அவரால் பேச முடியாதென்றார் . கதவை திறந்து பார்த்த போது ஆனந்த் சிலிண்டர் ஒன்றுடன் நின்று கொண்டிருந்தான்.