அன்பார்ந்த வாசகர்களுக்கு இது என்னுடைய முதல் படைப்பு . நான் எதேனும் பிழை செய்தால் அதை மன்னித்து எனக்காக துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்......
ஓர் அழகிய கிராமம். கிராமத்தை சுற்றிலும் தென்னை,மா,கொய்யா என தோப்புகளும் பச்சை போர்வை போர்த்தியது போல வயல் வெளிகளும் நிறைந்த ஊரு ... விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள். வசதி படைத்தவர் ஏழ்மையில் உள்ளோர் என இருவகை பிரிவினர்..... இருவகை பிரிவினருக்கும் விவசாயம் தான் ஏழை எளிய மக்கள் அவர்கள் நிலங்களில் உழுது பயிரிட்டு அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
மேல்தட்டு மக்கள் அவர்களின் வேளாண்மை பொருட்களை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபம் பெறுகின்றனர்.
அந்த கிராமத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் தான் நம் கதையின் நாயகி பொற்கொடி. இவள் பள்ளி படிப்பை ஊரில்உள்ள பள்ளியில் முடித்து விட்டு கல்லூரி படிப்பை பக்கத்தில் உள்ள நகரத்தில் பயின்று வருகிறாள் . கணித பிரிவில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் . என்ன தான் விவசாயம் அடிப்படை தொழிலாக இருந்தாலும் கல்வி என்பது முக்கியம் என்பதை அறிந்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்கள் அந்த ஊரில் உள்ள பெற்றோர்கள் . கொடி வீட்டின் செல்லப்பிள்ளை , ஒரே பிள்ளை அவளும் அவள் தாய் கௌரி இருவர் மட்டுமே அவர்களது வீட்டில் தந்தை இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது தந்தை இல்லாத குறையை தீர்த்து தாயாகவும் தந்தையாகவும் தன் மகளை வளர்த்து வருகிறாள் கௌரி .
அம்மா ... மா..... கௌரி டார்லிங் நான் போய் மாமா வீட்டுல மாடு கண்ணு போட்ருகான் பாத்துட்டு சீம்பால் சாப்பிட்டு வரேன்....
சரி டி அதுக்கு எதுக்கு இந்த கத்து கத்துற ....
இல்லாம உனக்கு வயசு ஆகுது ஸ்பீக்கர் வேல செய்யுதா இல்லையா அப்டின்னு டெஸ்ட் பண்ணேன் என சொல்லியவள் நிற்காமல் ஓடி விட்டாள்
அவள் சொன்னதை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் ஆனது அவளது தாய்க்கு..... அடியே எனக்கு வயசு ஆய்டுச்சா என திரும்ப அவள் எங்கே அவள் தான் அப்போதே பறந்து விட்டாளே .....
முரளி மாமா .... முரளி மாமா எங்க இருக்கீங்க என கத்தி கொண்டே சென்றவள் முரளியை கண்டு மாமா, மாமா எங்க கண்ணு குட்டி நான் பார்க்க தான் வந்தேன் ... எங்க ? எங்க ?
நீயா கண்ணு குட்டிய பார்க்க வந்தியா இல்ல சீம்பால் சாப்பிட வந்தியா ( அச்சோ இவரு என்ன கண்டு புடிசிட்டாரு கொடியின் மைண்ட் வாய்ஸ் ). இஇ என இளித்து வைத்தால் போ போய்ட்டு சமையல் அறையில் இருக்கு கொட்டிக்கோ என்று சொல்லிவிட்டு முரளி கிளம்பிவிட்டான்.
முரளி கொடியின் மாமன் மகன்.கல்லூரி படிப்பை முடித்து விட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறான் . தனியாக ஒரு computer coaching centre நடத்தி வருகிறான் . அவனுக்கு பொற்கொடி என்றால் பிரியம் , இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைக்க வேண்டும் என நினைத்து இப்போது இவளே மனைவியாக வேண்டும் என இவளுக்குக்காக வாழும் ஜீவன்களில் முரளியும் அடக்கம்.
அந்த கிராமத்தின் பெரிய வீட்டு பிள்ளை வரதன் . தாய் துளசி தந்தை சொக்கன் , பெரிய வீட்டு பிள்ளை என்ற பகட்டு இல்லாமல் எவ்வித பாகுபாடு இன்றி பழக கூடிய தூய உள்ளம் படைத்தவன் பெற்றவர்கள் போலவே பிள்ளையும் ஏற்ற தாழ்வு காட்டாது வாழும் குடும்பம் . பள்ளி படிப்பை முடித்த கையோடு தந்தையின் தொழிலுக்கு உதவி செய்ய வந்து விட்டான்.தந்தை எவ்வளவு சொல்லியும் கல்லூரி செல்ல விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டான்.
கரும்பு சாகுபடி செய்து அதை ஆலைக்கு கொண்டு சேர்த்து சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றனர். ஒரு வருடத்தில் மூன்று பட்டங்களாக கரும்பை நடவு செய்யலாம் கரும்பை நடவு செய்து சாகுபடி செய்ய ஒரு வருட காலம் ஆகும் .கரும்பை வெட்டி 24 மணி நேரத்திற்குள் ஆலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும . கரும்பு உற்பத்தியில் நமது நாட்டில் மூன்றாவது இடத்தை பெற்ற பெருமை நம் மாநிலமான தமிழ்நாட்டிற்கே....
வரதன் தாயின் வேண்டுகோள் படி கரும்பு உற்பத்தி என்பது அவர்களின் பிரதான வேளாண் முறையானது . வருடா வருடம் தவறாது கரும்பு பயிரிட வேண்டும் வரதனுக்கு. இவ்வாறு அவர் அவர் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் காலம் இவர்களை எப்படி சேர்த்து விளையாட போகிறது என காத்திருந்து பார்ப்போம்...
நீங்கள் தரும் கமெண்ட் தான் என்னை தொடர்ந்து கதை எழுத வைக்கும் , கதையை வாசித்து விட்டு மட்டும் செல்லாமல் தயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவிட்டு என்னை ஊக்க படுத்துங்கள்....உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு உக்கமே,நான் தொடர்ந்து கதை எழுத எனக்கு உதவுவது உங்கள் கருத்து தான்
நன்றி மக்களே........ 🥰🙏🏼