Yadhumatra Peruveli - 10 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 10

Featured Books
  • అంతం కాదు - 73

    ధర్మాత్మ విస్తరణ: కొత్త సైన్యాలు, గ్రహాల విలయంఇక అక్కడితో కట...

  • అఖిరా – ఒక ఉనికి కథ - 5

    ఆ రాత్రంతా అఖిరా నిద్రపోలేక అలాగే ఆలోచిస్తూ కూర్చుని ఉండిపోయ...

  • అంతం కాదు - 72

    ఫైనల్కదాఅయితే ఇప్పుడు విలన్ ధర్మాత్మ నా అని ప్రతి ఒక్కరూ నిత...

  • అంతం కాదు - 71

    దుర్యోధనుడు ఏంటి మామ వీడిని చంపడానికి నువ్వు వెళ్లాలా నేను చ...

  • ​నా విజయం నువ్వే

    ​నా విజయం నువ్వేScene 1 — EXT. HIGHWAY – DAYబస్సు రోడ్డుమీద...

Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 10

யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிருந்தாள். வீணாவும் வந்து பார்த்துவிட்டு போனாள்.சுஜா இரண்டு நாட்கள் கழித்து ஆபீஸ் வந்த போது ஏகப்பட்ட வேலைகளும் குவிந்திருந்தன . அவள் சற்றே மலைத்து போய்விட்டாள். டேக் யுவர் ஓன் டைம் என்று தீபன் சொல்லிவிட்டு போய்விட்டான். வேலையெல்லாம் முடிக்க மணி இரவு 9 ஆகிவிட்டது. யுவனை வரசொல்லி சொல்லி இருந்தாள். இன்னும் காணவில்லை. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஒரு வழியாக 9 30 மணிக்கு யுவன் வந்து சேர்ந்தான். சாரி சுஜா கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்றான். கம்பெனி கப் இருந்த போதும் யுவனோடு பைக்கில் செல்லவே விரும்பினாள். மறுநாள் மழையில் நனைந்தது ஜுரம் வந்து விட்டது. இன்னைக்கு நீ ஆபீஸ்போக வேண்டாம் சுஜா என்றான் யுவன். கஷாயம் வைத்து கொடுத்தான். அவசியம் போயே ஆக வேண்டும் என்றாள். சரி நான் டிராப் செய்கிறேன் என்றான்.


ஆபீஸ் போய் அரைமணி நேரத்தில் ஜுரம் அதிகமாகிவிட்டது. அதிகம் அதை காட்டிக்கொள்ளாமல் வேலையில் ஈடுபட்டிருந்தாள் .தீபனை காணவில்லை. மதியம் லீவு சொல்லலாம் என்று பார்த்தாள். தீபன் ஃபோன் கூட பண்ணவில்லை. சரி நாமே ஃபோன் செய்யலாம் என நினைத்தாள். அப்போதுதான் டென்ஷன் ஆக அவன் என்ட்ரி ஆனதை பார்த்து லீவு கேட்பதா வேண்டாமா என குழம்பினாள்.சுஜா கம் டூ மை ரூமி என்று இன்டர்காம் மூலமாக சொன்னான். இவள் மனம் என்ன சொல்வானோ என நினைத்து உள்ளே போனாள். என்னாச்சு உங்களுக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கீர்கள் . ஏதாவது உடம்பு சரியில்லையா என்பதற்குள் அவள் தலை சுற்ற துவங்கியது . மயங்கி அவன் மேல் விழுந்தாள் . சுஜா சுஜா என்ன ஆச்சு என்று அவளை தொட்டு பார்த்தான். அவளை தண்ணீர் தெளித்து எழுப்பினான். வாங்க ஹாஸ்பிடல் போலாம் என்றான். பரவாயில்லை சார் என்றாள். மறுபடி மயங்கினாள் .அங்கிருந்த லேடி ஸ்டாஃப் ஒருவரையும் அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான். யுவனுக்கு ஃபோன் செய்து ஹாஸ்பிடல் வரும்படி சொன்னான்.

சுஜா கண்விழித்த போது வீணா,சதீஷ், யுவன் மூன்று பேரும் கவலையாய் அருகில் இருந்தனர். தீபனை காணாதது சோர்வாய் இருந்தது சுஜாவுக்கு. மறுபடி கண்களை மூடிக்கொண்டாள். இப்போ எப்படி இருக்கு என்று கேட்டான் சதீஷ். பரவாயில்லை நாம எப்போ வீட்டுக்கு போவோம் என்றாள் சுஜா. அதெல்லாம் டாக்டர் சொல்லுவாரு டாக்டரை பார்க்கத்தான் தீபன் போயிருக்காரு என்றாள் வீணா. சாரி யுவன் உங்களை ரொம்ப பயமுறுத்தி விட்டேனா என்றாள். அவன் கண்கள் கலங்கி இருந்தன. நான்தான் போகாதே என்று அப்பவே சொன்னேனே என்றான். இப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிக்கிட்டு இருந்தார். தீபன் வந்தான் அவளை எப்படி அணுகுவது என்று அவனுக்கு தெரியவில்லை. நீங்க எப்போ குணமாகுறீங்களோ அப்போ ஆபீஸ் வந்தா போதும் என்றான்.
யுவன் தீபனின் கைகளை பிடித்துகொண்டு என்னால வெறும் நன்றின்னு மட்டும் சொல்ல முடியல என்றான். தீபன் விடை பெற்றுக்கொண்டான். ஈவினிங் டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என்று சொல்லி இருந்தான் தீபன் . சுஜாவுக்கு தான் தீபன் மேல் மயங்கி விழுந்தது நினைவுக்கு வர சற்றே நாணம் உண்டாயிற்று.

மாலை 7 மணி போல வீடு வந்து சேர்ந்தார்கள். ஜுரம் குறைந்திருந்தது. யுவன் நீ என்னால ரொம்ப கஷ்டப்படுகிறாய் என்றாள். பேசாமல் படுத்துக்கொள் . நான் ஏதாவது சாப்பிட தயார் செய்கிறேன் என்றான். சுஜா தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். யுவன் சோர்வாக தூங்கி கொண்டிருந்தான். தீபனிடம் பேச வேண்டும் போல இருந்தது.ஹாஸ்பிடலில் அவனிடம் பேச நினைத்த போது வார்த்தை வரவில்லை. மணி 11 ஆகி விட்டது. ஏதோ மெசேஜ் வந்த சத்தம் கேட்டது. மேதவாக சிரமப்பட்டு ஃபோன் எடுத்தாள். தீபனிடம் இருந்து தான் கெட் வெல் சூன் என்று மெசேஜ் வந்திருந்தது. தாங்க்ஸ் என மெசேஜ் அனுப்பினாள். என்ன மாதிரி வாழ்க்கை இது என்று சிறிய எண்ணம் தோன்றி மறைந்தது. யுவன் விழித்து கொண்டான் அவளை அணைத்தவாறு படுத்துக்கொண்டான். யுவனுக்கு சுஜாதான் உலகம் அந்த உலகத்தில் மற்ற சிந்தனைகள் கிடையாது. மறுநாள் சற்றே தெளிந்திருந்தாள் . யுவனுக்கு அவசர வேலை ஒன்று இருந்தது. என்ன நான் போய்விட்டு வரட்டுமா என்றான் சுஜாவிடம். எனக்கு ஒன்றுமில்லை நீ போய்விட்டு வா தைரியமாக என்றாள். மருந்துகளை சாப்பிடு நான் ஒரு 2 மணிநேரத்தில் வந்து விடுகிறேன் என்றான்.
சரி என்றாள்.

வீடு முழுக்க சாமான்கள் பேக் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தன. அவளுக்கு மூச்சு முட்டியது . மாடிக்கு போய் சிறிது நேரம் நின்றாள். அப்போது தீபனிடம் இருந்து கால் வந்தது. பரவசத்தை கட்டுபடுத்த முடியாமல் ஃபோன் எடுத்தாள். சுஜா சுஜா ஆர் யு ஓகே என்ற குரல் கேட்டு அமைதியாய் இருந்தாள். சொல்லுங்க சார். சாரி சுஜா நான் வந்து வீட்டில் பார்த்திருக்கணும் . அதெல்லாம் பரவாயில்லை சார். இப்போ எப்படி இருக்கீங்க ? ஓகே தான் சார். நாளைக்கே ஆபீஸ் வரலாமின்னு பாக்கிறேன் யுவன் தான் வேணாம்னு .. அதெல்லாம் வேணாம் நீங்க எப்போ குணமாகுறீங்களோ அப்போ வாங்க என்றான். கொஞ்சம் அர்ஜெண்ட் கால்ஸ் இருக்கு மறுபடி கூப்பிடறேன் என்றான். ஓகே சார். இப்போது சற்று நிம்மதியாக இருந்தது. மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து காப்பி போட்டு குடித்தாள் . சற்றே ஆறுதலாக இருந்தது. யுவன் சொன்னபடி வந்துவிட்டான். அவனிடம் தீபன் ஃபோன் பண்ணியது பற்றி எதுவும் சொல்லவில்லை. யுவன் பழங்கள் வாங்கி வந்திருந்தான் அவற்றை ஜூஸ் போட்டு அவளிடம் கொடுத்தான். அவனும் கொஞ்சம் குடித்தான்.

மூன்று நாட்கள் கழித்துதான் ஆபீஸ் போக முடிந்தது. சுஜாவுக்கென ஒரு போக்கே வாங்கி வைத்திருந்தான் தீபன். அது அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விட்டு போன வேலைகளை பார்க்கத் தொடங்கினாள். வீணா ஃபோன் பண்ணியிருந்தாள். நிச்சயதார்த்ததுக்கு இன்னும் 3 நாட்கள் இருந்தது ஷாப்பிங் போக வேண்டும் என்றாள். சரி வருகிறேன் ஈவினிங் 7 மணிக்கு என்றாள் . வீணாவுடன் ஷாப்பிங் செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சதீஷுக்கு ஃபோன் செய்தாள் வீணா. அவன் வந்து இருவரையும் பிக்அப் செய்து வீட்டில் விட்டான். யுவனுக்கு சில உடைகளை வாங்கியிருந்தாள். அவற்றில் ஒன்றை தீபனுக்கும் கொடுக்க எண்ணினாள். தீபன் என்ன நினைப்பானோ என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அதை வீணா நிச்சயதார்த்தம் அப்போது அவன் அணிந்தால் நன்றாக இருக்கும என்று நினைத்தாள். மறுநாள் அவனே கேட்டுவிட்டான்.ஷாப்பிங் போனீர்களாமே எனக்கு ஒன்றும் வாங்க வில்லையா என்றான். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியில்லை சார் நீங்கள் அதை விரும்புவீர்களா என்று தெரியவில்லை என்றாள். அவன் வேறு ஏதோ டாபிக் பேசினான்.

நிச்சயதார்த்த நாளும் வந்தது, கல்யாணமண்டபத்தில் பரபரப்புடன் தீபானுக்காக காத்திருந்தாள் சுஜா. அவள் அவனுக்கு எடுத்த உடைகளையே தொட்டு பார்த்து கொண்டிருந்தாள். அவன் சதீஷ் கூடவே பேசிக்கொண்டு பிஸி ஆக இருந்தான். இவள் தீபனுக்கு ஃபோன் போட்டு அந்த மண்டபத்தின் 103 அறையில் இருப்பதாகவும் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று வைத்திருப்பதாகவும் சொன்னாள் . அவன் சதீஷிடம் சொல்லிவிட்டு அந்த அறைக்கு விரைந்தான். அங்கே ஒரு சிறு பெண்ணும் அவள் கையில் கிப்ட் பேக் ஒன்றும் இருந்தது. நீங்கதான் தீபன் அங்கிள் ஆ என்றாள். ஆமா சுஜா ஆண்ட்டி இதை உங்ககிட்ட கொடுத்து வர சொன்னாங்க என்றாள். அதை வாங்கி கொண்டவன் தாங்க் யு சோ மச் என்றான். அது கொஞ்சம் அளவு வித்தியாசபட்ட போதும் ரொம்ப பிடித்திருந்தது. அதை உடுத்திக்கொண்டவன் கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டான். அவளை எங்கு தேடியபோதும் கிடைக்கவில்லை. எங்கு போனாய் சுஜா என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவன் அவளுக்கு அந்த புதிய உடையில் செல்பி எடுத்து அனுப்பினான்.

சுஜா வீணாவோடு இருந்தாள். நிச்சயதார்த்த வேலைகளில் இருந்தாள் .யுவன் கூடவே இருந்தான். யுவன் மேல் லேசான பொறாமை ஏற்பட்டது தீபனுக்கு. நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்டார்கள் வீணாவும்,சதீஷூம் . எல்லோரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சுஜா இந்த டிரஸ் போட்டுக்கொண்டதற்கு நன்றி என்றாள் தீபனிடம். உங்களுக்கு என்ன வேண்டும் எதுவானாலும் கேளுங்கள் என்றான். கடற்கரைக்கு அழைத்து போவீர்களா நீங்கள் பிராமிஸ் செய்திருக்கிறீர்கள் என்றாள். நிச்சயமாக என்றான். சுஜா அவனிடம் விடை பெற்றுக்கொண்டாள் . அவள் மனம் ஏனோ நிறைந்திருந்தது. அவனுடைய போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தாள். தான் தவறு செய்வதாக அவளுக்கு தோன்றவில்லை . மாறாக ஒரு புதிய உலகில் தனக்கு பிடித்தவனோடு பயணம் செய்ய போவதாக தோன்றியது. அவள் தீபனிடம் என்ன மாதிரி நிலைப்பாட்டை எடுக்க போகிறாள் என்பதை அவள் மனம் ரகசியமாக வைத்திருந்தது. அந்த ரகசியம் யுவனுக்கு தெரியாதது.

தீபன் தன்னையே மறந்திருந்தான் . அவன் மனம் சுஜாவின் அரவணைப்பிற்க்காக ஏங்கியது . வார்த்தைகள் இல்லாமல் அவன் மனம் தவித்து கிடந்தது. அவள் எஸ் சொல்லும் அடுத்த நொடி தான் இந்த உலகத்தின் மிக அதிர்ஷ்டசாலி ஆகிய மாற போவதாக நினைத்தான். அதே சமயம் அவளை நிரந்தரமாக தன்னுடைய மனைவியாக இருக்க அவள் சம்மதிப்பாளா?. இப்படியாக அவனுடைய சிந்தனைகள் நீண்டன . அவளிடம் இருந்து ஃபோன் வரும் என ஆவலாய் காத்துக்கிடந்தான்.
சுஜாவோ ஒரு தீப்பொறி போல தீபனிடம் இருந்து முத்தத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.