Yadhumatra Peruveli - 7 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 7

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 7

ஹாய் சுஜா என்னை இங்கு எதிர்பார்க்கவில்லை தானே என்பதற்குள் வீணாவே சொன்னாள் . லாஸ்ட் மினிட் ல தான் எனக்கே தெரியும் தீபன் அவரோட ஃப்ரெண்ட் அப்படின்னு. எங்கே அவர் என்றாள் சுஜா. கார் பார்க் பண்ண போயிருக்கான் சதீஷ் என்றான் தீபன் . ஹாய் வீணா என்றவாறு வந்து சேர்ந்தான் சதீஷ். சுஜாவை சதீஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் வீணா.அவங்க தனியா பேசட்டும் என்றவாறு சுஜாவும்,தீபனும் வேறொரு டேபிள் ஒன்றில் அமர்ந்தார்கள்.என்ன சுஜா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க .அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்கே யுவன் . அவரு வெளியூர் போயிருக்காரு என்றாள். ம் நான் வந்ததுல உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையே ,சே சே நீங்க சதீஷ் ஃப்ரெண்ட் ஆ இருப்பீங்க அப்படின்னு எதிர்பார்க்கல அதுல எனக்கு சந்தோஷம்தான்.வீணாவிற்கு
சதீஷை பிடித்து விட்டது.சதீஷூக்கும் வீணாவை பிடித்து விட்டது. எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள். நான் சுஜாவை டிராப் பண்ணிவிடுகிறேன் என்றான் தீபன். உங்களுக்கு ஓகே வா சுஜா . சுஜா தயங்கியவாறு சரி பாஸ் என்றாள் . பாஸ் எல்லாம் ஆபீஸ் ல இங்கே நாமெல்லாம் ஃபிரண்ட்ஸ் என்றான் தீபன். ஓகே தீபன் என்றாள்.

அவன் அதிகம் பேசவில்லை. அது சுஜாவுக்கு பிடித்திருந்தது. சுஜாவுடைய வீடு அருகே வந்ததும் சற்று முன்பாகவே இறங்கி கொண்டாள் . இன்னும் நீங்க எதையும் மறக்கல போல அப்படியெல்லாம் இல்லை. அப்போ ஒரு பேச்சுக்கு கூட வீட்டுக்கு வாங்க அப்படின்னு கூப்பிடலியே. நீங்க என்னை தப்பா நினைக்க வேண்டாம் பிளீஸ் என்றாள். யுவனிடம் இருந்து சுஜாவுக்கு கால் வந்தது. சரி பார்க்கலாம் பை என்று கிளம்பி விட்டான் தீபன். என்னாச்சு வீணா ஃபோன் பண்ணினா எல்லாம் ஓகே தானே. பையனை வீணாவுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு போல. உன் பாஸ் ஃப்ரெண்ட்தானே அவரு.எனக்கு அதிலே ரொம்ப ஹாப்பி . நீ ஏன் எதுவுமே பேச மாட்டேன் என்கிறாய். நீ சாப்பிட்டாயா யுவன் . ம் ஆச்சு . எப்போ வருகிறாய் யுவன். நீ இல்லாமல் நான் ரொம்ப தடுமாறுகிறேன் யுவன். சீக்கிரமே வருகிறேன் சுஜா என்றான்.யுவனுக்கும் கவலையாய்த்தான் இருந்தது. இருந்தாலும் தானும் வேலை செய்தால்தான் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியும் என்பதை அவன் உணர்ந்து இருந்தான்.தீபன் உடன் தனக்கான எல்லைகள் குறித்து யோசித்து கொண்டிருந்தாள் சுஜா. எந்த விதத்திலும் தீபானுடனான உறவு , அது சாத்தியம் இல்லை என்பதே அவள் அறிவுக்கு எட்டியிருந்தது.

வீணாவுடன் பேசி பார்க்கலாமா என்று யோசித்தாள் . அவள் இப்போதுதான் மகிழ்ச்சியாய் இருக்கிறாள். ஒரு நிலையான வாழ்க்கையில் நுழைய போகிறாள் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தாள். யோசித்தவாரே தூங்கியும் போனாள் . யுவன் வருவதற்கு ஒரு நாள் முன்பே அவள் அம்மா வீட்டில் இருந்து யுவனும் இவளும் இருக்கும் வீட்டுக்கு வந்து விட்டாள். வீட்டை சுத்தப்படுத்தினாள். யுவன் மறுநாள் காலை வந்து விடுவதாக சொல்லி இருந்தான். யுவன் வரப்போகிறான் என்பதே அவளுக்கு ஆறுதல் அளித்தது. ஆபீஸ் போயிருந்தாள். தீபன் அன்று வெளியில் ஏதோ வேலையாக போயிருந்தான். இவளுக்கு அது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. சுறுசுறுப்பாக அலுவலக வேலைகளை முடித்தாள். யுவனுக்கு ஏதாவது ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என எண்ணினாள். மாலை 6 மணிக்கு கிளம்பும் போது தீபன் அலுவலகம் வந்து விட்டான். வேறு வழியில்லாமல் அவனை சந்திக்கும்படி ஆகி விட்டது. என்ன சொல்கிறார்கள் உங்கள் ஃப்ரெண்ட் வீணா என்றான். அவளுக்கு இஷ்டம்தான் என்றாள் . வருகிற சண்டே பெண் பார்க்க வருகிறோம் என்றான். நீங்கள் அவசியம் வரவேண்டும் யுவனையும் கூட்டிக்கொண்டு. நிச்சயமாக என்றாள் . கிளம்பி விட்டீர்களா ஆமாம் . சரி நீங்கள் ஃப்ரீ ஆனதும் எனக்கு ஃபோன் பண்ணுங்கள் கொஞ்சம் பேச வேண்டும் என்றான். சரி பாஸ்.

என்னவாக இருக்கும என யோசித்தாள் . ஒன்றும் பிடிபடவில்லை. ஏதாவது அலுவலக விஷயமாக இருக்கும என நினைத்தாள் . மறுநாள் யுவன் வந்து விட்டான். என்ன ஆச்சு போன விஷயம் என்றாள் .சக்ஸஸ்தான். நிறைய பேரை சந்திக்க முடிந்தது என்றான். உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்றான். வீணா விஷயத்தை சொன்னாள் . வருகிற சண்டே வா ம் அவசியம் போவோம். அவன் குளிக்க போனான். தீபன் என்ன திட்டம் போடுகிறான்?அவன் மனதில் என்ன உள்ளது என்பதே தெரியாமல் இருக்கிறது.இன்னைக்கு நீ ஆபீஸ் போறியா என்றான். ஆமாம் போய்த்தான் ஆகிய வேண்டும் என்றாள். சரி ஈவினிங் டின்னர் எங்காவது வெளியில் போகலாம் என்றான். சரி எனக்கு ஓகே என்றாள். யுவன் தான் எழுதியவற்றை தொகுக்க ஆரம்பித்தான். ஏன் எனக்கு ஃபோன் பண்ணவில்லை என்றான் தீபன். சரி பரவாயில்லை மதியம் லஞ்ச் என்னுடன் சாப்பிடுங்கள் என்றான். அவசியம் பேச வேண்டும் என்றான். சரி சார் . மதியம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். என்ன விஷயம் சார் அவன் சில அலுவலக வேலைகளை சொன்னான். சரி என்று கேட்டுக்கொண்டாள். நீங்கள் வேறு வேலை தேடுவதாக வீணா சொன்னாள் . அதெல்லாம் வேண்டாம் என்றான். இங்கே உங்களுக்கு என்ன பிரச்சனை ? பிரச்சனை எதுவும் இல்லை ஒரு மாற்றத்துக்காகத்தான். நீங்கள் விரும்பும் மாற்றம் என்ன ப்ரமோஷன் வேண்டுமா என்னை சந்திக்க பிடிக்கவில்லையா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை . நீங்கள் எனக்காக ரொம்பவும் சிரத்தை எடுத்து கொள் கிறீர்கள் என்றாள் . அவன் சிரித்தான். இப்பவும் சொல்கிறேன் நீங்கள் சுதந்திரமாக இங்கே வொர்க் பண்ணலாம் . ஓகே தானே ஓகே சார்.

யுவனிடம் மதியம் நடந்ததை சொன்னாள் . அப்போ வேறு வேலை தேட வேண்டாம் என்றான். அவர் உண்மையில் நல்ல டைப்தான் போல இருக்கிறது என்றெண்ணி கொண்டான் யுவன். இருவரும் டின்னர் முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். யுவன் நீ எப்போதும் போல என்னை நேசிப்பாயா ? இதென்ன கேள்வி. நீ ஏன் ரொம்பவும் யோசிக்கிறாய் என்றான். பேசாமல் தூங்கு என்றான். அவள் மனதில் தீபன் பற்றி இருந்த சந்தேகங்கள் போய்விட்டன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக யுவனிடம் இருந்து நழுவி நழுவி தீபனிடம் செல்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது. காலை 8 மணிக்கெல்லாம் ஃபோன் செய்துவிட்டான் தீபன். சைட் ஒன்றை பார்க்க வேண்டும் நான் உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன் சேர்ந்து போகலாம் என்றான். இவளும் சரி என்று சொன்னாள். அவள் கிளம்பிக்கொண்டிருந்த போதே வந்து விட்டான். யுவன் போய் அவனிடம் பேசிக்கொண்டிருந்தான். யு ஆர் வெரி லக்கி யுவன் என்றான் தீபன். தாங்க்ஸ் சார். ஈவினிங் நானே டிராப் செய்து விடுகிறேன் என்றான் . மறுபடியும் நன்றி என்றான். அவள் வந்தவுடன் வண்டி கிளம்பி விட்டது. யுவன் மனதில் சலனங்கள் இல்லை.

அவர்கள் அன்று பாண்டிச்சேரி போக வேண்டி இருந்தது. இந்த மீட்டிங் நமக்கு ரொம்ப முக்கியமானது. அவசியம் ஏற்பட்டால் நாம் தங்கி இந்த டீல் முடிக்க வேண்டும் என்றான். இவள் நிச்சயம் சார் என்றாள். நேராக பாண்டிச்சேரி அலுவலகத்துக்கு போனார்கள் . நாள் பூராவும் பிஸி ஆகிய இருந்தார்கள். இரவு 7 மணிக்குத்தான் அவர்களால் சற்று பிரேக் எடுத்து கொள்ள முடிந்தது. மழை வேறு வரும் போல இருந்தது. என்ன நாம் ரெஸ்டாரண்ட் போகலாமா ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கிறது என்றான். சரி சார். இருவரும் இரவு தங்க வேண்டும் . நாளை காலை டீல் ஃபைனல் மீட்டிங் இருக்கிறது என்றான். சரி சார். யுவனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி விடுங்கள். இல்லை நானே சொல்கிறேன் என்று யுவன் நம்பர் வாங்கி பேசினான். யுவன் இட்ஸ் ஓகே சார் என்றான். உங்களுக்கு ரூமி புக் பண்ணி இருக்கிறேன். ரிசப்ஷன் ஹெல்ப்பிடமும் சொல்லி இருக்கிறேன் என்றான். நான் கொஞ்சம் பார்ட்டி வரை போகிறேன். எப்படியாவது இந்த விஷயத்தை எட்டிவிட்டால் நமது கம்பெனி வளர்ச்சிக்கு நல்லது என்றான். அவளுடைய அறைக்கு சென்றாள் . அவள் மனம் ஏதேதோ கற்பனைகளால் மிதந்து கொண்டிருந்தது. வீணாவுக்கு ஃபோன் செய்தாள் . அவள் பிஸி என்று வந்தது. யுவனுக்கு ஃபோன் செய்தாள் . கவனமாக இரு என்று மட்டும் சொன்னான்.

மணி 11 இருக்கும கதவு பெல் அடித்தது. உடைகளை சரி செய்து கொண்டு கதவை திறந்தாள் . தீபன் நின்றிருந்தான். அவள் மனம் வேகமாக துடித்தது. கூடவே ஒரு பெண்ணும் வந்திருந்தாள். இவங்க பேரு தீப்தி இப்போதான் மீட்டிங் சம்பந்தமா அர்ஜண்ட் ஆக வந்து இருக்காங்க. இவங்க பெங்களூர் டிவிஷன் . உங்க கூட ரூம் ஷேர் பண்ணிக்குவாங்க . உங்களுக்கு ஓகே தானே சுஜா என்றான். நிச்சயமா என்றாள் . தீப்தி புன்னகைத்தபடி இருந்தாள் .தீபன் விடை பெற்றுக்கொண்டான். தீப்தி அதிகம் பேசவில்லை. மறுநாள் 7 மணிக்கே தீப்தி கிளம்பி தீபனை பார்க்க கிளம்பி விட்டாள் .இவளும் கிளம்பி தயாராய் ஆனாள். அங்கே ப்ரேக்ஃபாஸ்ட் மீட்டிங் எல்லோரும் தயாராய் இருந்தனர். இவள் அவசரமாக அதில் கலந்து கொண்டாள். மீட்டிங் 12 மணிக்கு முடிந்தது. சக்ஸஸ் ஆன டீல் என்ற மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் நன்றி சொன்னான் தீபன்.. இவள் கிளம்ப தயாரான போது ரொம்ப தாங்க்ஸ் சுஜா. நீங்கள் இல்லாவிட்டால் எனக்கு சப்போர்ட் கிடைத்திருக்காது என்றான். தீப்தி லக்கேஜ் எங்கே என்று ரிசப்ஷன் கவுன்டரில் விசாரித்தாள் சுஜா. அவற்றை தீபன் ரூமுக்கு மாற்றிவிட்டோம் . அவர்கள் இரவு தங்குகிறார்கள் என்றார் ரிசப்செனிஸ்ட் . சுஜா இதெல்லாம் சகஜம் என்றெண்ணி கொண்டாள். தீபன் ஃபோன் பண்ணினான். நீங்க பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. நான் யுவன் கிட்ட பேசிட்டேன் என்றான். இவள் யுவனுக்கு ஃபோன் பண்ணி கிளம்பி விட்டதாக சொன்னாள். விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது, தீபன் தீப்தியுடன் உல்லாசமாய் இருக்க போகிறான் என நினைக்க நினைக்க வேதனையாய் இருந்தது சுஜாவுக்கு.