Yadhumatra Peruveli - 6 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 6

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 6

சுஜாவின் கதை

இறக்கைகள் படபடக்க அந்த புறா அறையை விட்டு பறந்தது. நெடுநாள் ஆயிற்று அவன் அந்த அறைக்கு வந்து. எப்படியோ அந்த புறா அங்கு கூடு கட்டியிருந்தது. எத்தனையோ நாட்கள் ஆயிற்று அவன் எழுதி.சுஜாவை கூப்பிட்டு அறையை சுத்தப்படுத்த சொல்லவேண்டும். சுஜா பாவம் அவள்தான் எவ்வளவு வேலைகளை செய்வாள். இவனே அங்கிருந்த விளக்குமாறு எடுத்து அறையை சுத்தம் செய்தான். இவனுக்கும் சுஜாவுக்கும் கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. சுஜா வேலைக்கு போய்வருவதால் கவலை இல்லை. இவன் எழுத்து வேலையாய் இருந்தான். யுவனுக்கு காப்பி குடித்தால் தேவலை போல இருந்தது. சுஜா அன்று வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த போது இவன் தூங்கி கொண்டிருந்தான். சுஜா மெசேஜ் பண்ணியிருந்தாள்.டிபன் சாப்பிட்டாயா என்று கேட்டிருந்தாள் . அவளுக்குத்தான் எத்தனை பிரியம். தன்னுடைய பொறுப்பற்ற தன்மையை அவள் எவ்வளவு தூரம் சகித்து கொள்கிறாள்.பெற்றோர் இல்லாத பையனான யுவனுக்கு அவனுடைய மாமா தான் சுஜாவை கல்யாணம் செய்து வைத்தார். யுவன் அவனுடைய தோழி வீணாவுக்கு ஃபோன் செய்தான். அவள் எடுக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தாள். என்னடா விஷயம் கொஞ்சம் வேலையாய் இருந்தேன் என்றாள். சும்மாதான் கூப்பிட்டேன் ஈவினிங் மீட் பண்ணலாமா? என்றான். சரி நானே ஃபோன் பண்ணுறேன் என்றாள்.


என்னடா எப்ப பார்த்தாலும் மூஞ்சை தூக்கி வெச்சு இருக்க.. உனக்கு உங்க அப்பா அம்மா எழுதி வெச்ச சொத்து இருக்கு . தங்கமான வொய்ஃப் , பிறகென்ன கவலை என்றாள் வீணா. இருக்கு வீணா எனக்கு சுஜாவை நினைச்சா கவலையா இருக்கு . சுஜாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனா எனக்குத்தான் பிரச்சனை என்பது குற்ற உணர்ச்சியாய் இருக்கிறது.அவளோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவளை வேற கல்யாணம் பணணிக்க சொல்லிகிட்டு இருக்காங்க. ம் எனக்கு புரியுதுடா உன் நிலைமை.எதாவது ஒரு வழி பிறக்கும் அவசரப்பட்டு சுஜா மனது நோகும்படி ஏதும் செய்து விடாதே என்றாள் வீணா. பேசாம நீ ஒரு வெளிநாட்டு பயணம் போய் வாயேன் சுஜா கூட. உனக்கு ஒரு மாற்றமாக இருக்கும். ம் அவளிடம் பேசி பார்க்கிறேன்.உங்க வீட்ல உனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டதா சொன்னாயே ? எனக்கு உன்னைத்தான் பிடித்ததிருந்தது நீதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் என்றாள். எனக்கு இப்பவும் உன் கூட வாழ ஆசைதான் என்று சொல்லிவிட்டு கண்களை தாழத்திக்கொண்டாள் . உன் ரேஞ்ச் என்ன நீ ஏன் இப்படி பேசுகிறாய் என்றான். உண்மையைத்தான் சொன்னேன் என்றாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுஜா யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். அவர் வந்துட்டாரு அப்புறமா பேசுறேன் என போனை துண்டித்தாள்.வீணா எப்படியிருக்கா அவளுக்கென்ன நல்லாயிருக்கா என்றான். என்ன டிபன் பண்ணட்டும். சப்பாத்தி பண்ணட்டுமா ?ம் சுஜா இங்கே வாயேன் என்று அவளை இறுக அணைத்துகொண்டான். என்ன திடீர்னு ?உனக்கு என் மேல கோவம் இல்லையா ?சுஜா அதெப்படி உனக்கு இப்படியெல்லாம் தோணுது. ம் சரி ஏற்கனவே நேரமாகுது நான் போய் சமைக்கிறேன் என்றாள். நாம ஒரு foriegn ட்ரிப் போகலாமா?யாரு வீணா சொன்னாளா ? ஆமா நமக்கும் ஒரு மாற்றமா இருக்கும். ம் ஆபீஸில் லீவு கேட்டு பார்க்கிறேன் . சப்பாத்தி நல்லா இருக்கு என்றான். சுஜா எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு வரும் போது அவன் தூங்கிகொண்டிருந்தான். அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு போர்வையை சரி செய்தாள்.சுஜா மனதிலும் ஆசைகள் இல்லாமல் இல்லை. குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது.
அதே சமயம் அவள் மனதில் என்னவோ தீபன் வந்து போனான். அவளுடைய பாஸ் தீபன் .தீபன் தன்னுடைய விருப்பத்தை சொல்லி 6 மாதமாகிறது. இவள் உடனே மறுப்பை தெரிவித்து விட்ட பிறகு அவன் இவளை தொந்தரவு செய்யவில்லை. இருந்தாலும் வேறு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தாள். யுவனிடம் கூட சொல்லவில்லை.

சுஜா வழக்கம் போல வேலைக்கு போய்விட்டாள். புறா இன்னும் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தது. என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது பாஸ்கரிடம் இருந்து ஃபோன் வந்தது. அவனும் இவனை போல வளர்ந்து வரும் எழுத்தாளர் தான், என்னப்பா போனையே காணோம் என்றான். இப்போது என்ன செய்கிறாய் என்றான் . ஏதாவது உருப்படியாக எழுதலாம் என்று பார்க்கிறேன் அப்போ நான்தான் தொந்தரவு பண்ணிவிட்டேனா என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு என்னுடைய இலக்கில்லா பயணங்கள் நூல் வெளியாகிறது ,நீ அவசியம் வர வேண்டும் என்றான். வீணாவையும், சுஜாவையும் கூட அழைத்து வா. பார்த்து ரொம்ப நாளாகிறது என்றான். சரி பாஸ்கர் நான் முயற்சி செய்கிறேன்.ஓகே பை என்றான். சுஜாவுக்கும் , வீணாவுக்கும் ஃபோன் செய்தான். இருவருமே உற்சாகத்தோடு வர சம்மதித்தனர். மறுநாள் மாலை 4 மணிக்கு ஃபங்சன்.
சுஜா மதியமே ஆபீஸில் இருந்து வந்து விட்டாள். பாஸ்கர் எழுத்து மேல் இருந்த மரியாதையால் சுஜா உடனே வர சம்மதித்து விட்டாள் . மதியம் 3 மணி போல கிளம்பிவிட்டார்கள் சுஜாவும், யுவனும். போகிற வழியில் வீணாவை பிக்அப் செய்து கொள்வதாக ஏற்பாடு.

விழாவில் பல எழுத்தாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். அனைவரும் பாஸ்கர் நூல்களை பாராட்டினார்கள். ஆனால் முற்போக்கு என்ற பெயரில் பாஸ்கர் கதாநாயகிகள் செய்வதை பலரும் உள்ளுக்குள் எதிர்த்து கொண்டிருந்தனர்,விழாவில் யுவனையும் பேச அழைத்திருந்தார்கள். உற்சாகமாக கை தட்டினார்கள் வீணாவும், சுஜாவும். அப்போது பேசிய யுவன் ஒழுக்கத்தை பெண்கள்தான் பேணிக்காக்க வேண்டும்மென்ற கட்டாயம் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது,அது எவ்வளவு தூரம் சரி என்பதை பாஸ்கரின் புத்தகங்கள் உடைத்து பேசுகின்றன. வீணாவும் ,சுஜாவும் ஏதோ தங்களு பேசிக்கொண்டிருந்தனர். யுவன் பேசி முடித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தீபன் வந்துகொண்டிருந்தான்.பாஸ்கர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து தீபனை வரவேற்றான். தீபன் கண்கள் சுஜா இருந்த திசையிலேயே இருந்தது. தீபனை பேச சொல்லி பாஸ்கர் கேட்டு கொண்டான். இது ஒரு அருமையான விழா எனக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் விழா. பாஸ்கர் நூல்கள் மேல் எனக்கு நிறைய மதிப்பு உண்டு. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர் கட்டமைக்கும் சுதந்திர உலகம் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே உண்மை என்றான்.

சிற்றுண்டி வழங்கப்பட்டது. யுவனையும், வீணாவையும்,தீபனுக்கு அறிமுகபடுத்தி வைத்தாள் சுஜா. அப்போது பாஸ்கர் அங்கே வந்தான், நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம் என்றான் . எனக்கு தெரியாது சுஜா இங்குதான் வர பர்மிஷன் கேட்டார்கள் என்று இல்லையென்றால் நானும் சேர்ந்தே வந்திருப்பேன் என்றான். சுஜா ஒன்றும் பேசவில்லை. வீணா நிறைய எழுத்தாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தாள் .தீபன் விடைபெற்றுக்கொள்ளும்முன் ஒரு நிமிடம் சுஜாவிடம் தனியாக பேசினான். என்னாச்சு சுஜா என்றான் யுவன், தீபன் இந்த ஃபங்சன் போட்டோஸ் whatsapp பண்ண சொன்னாரு என்றாள். சுஜா,யுவன்,வீணா மூவரும் பாஸ்கரிடம் விடை பெற்றுக்கொண்டனர்,வீட்டுக்கு வாயேன் வீணா என்றாள் சுஜா. இன்னொரு நாள் வரேன் என்றாள். என்ன சுஜா போலாமா சரி போலாம் . தீபன் ரொம்ப நல்லா பேசுறார். அதோட சிம்பிள் ஆ இருக்காரு என்றான் யுவன். ஒருத்தரோட வெளித்தோற்றம் பார்த்து எடை போடாதீங்க யுவன் என்றாள் சுஜா. ம் அதுவும் சரிதான். தீபனை பற்றி தீபன் தன்னிடம் ப்ரபோஸ் செய்ததை பற்றி சொல்லலாம் என நினைத்தாள். பிறகு தேவையில்லாமல் யுவனை குழப்பம் அடைய செய்ய வேண்டாம் என்று யோசித்து அத்தோடு தீபன் பற்றிய பேச்சை முடித்து வைத்தாள்.

யுவன் புதியதொரு நாவல் எழுத தீர்மானித்தான். சில இடங்களுக்கு பயணம் போக தீர்மானித்தான். நானும் வருகிறேனே என்றாள் சுஜா. அவை எல்லாம் சுத்த கிராமங்கள். உனக்கு ரொம்ப போர் அடிக்கும், நீ வேண்டுமானால் உன் அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் தங்கி இரேன் என்றான். ம் என்னை விட்டு போக எப்படித்தான் உனக்கு மனசு வருகிறதோ என்றாள். அப்படி இல்லை சுஜா என்றான்.அடுத்த வாரம் யுவன் கிளம்பிவிட்டான். இவளும் தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். தீபன் முகம் அனிச்சையாய் வந்து போனது, அவனுடைய போட்டோவை பார்த்து கொண்டிருந்தாள். தான் செய்வது சரியா என்று அவளுக்கு தோன்றவில்லை.சுஜா யுவானை நினைத்து கவலை அடைந்தாள் . போகிற இடத்தில் ஒரு வசதியும் இருக்காது. என்னதான் எழுதுவானோ என்று யோசித்தாள். போனை ஸ்விட்ச் ஆஃப் வேறு செய்து வைத்திருப்பான். தீபன் போட்டோ அனுப்ப சொன்னது ஞாபகம் வந்தது. அனுப்பி விட்டு அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். ஏதும் வராததால் ஏமாற்றம் அடைந்தாள். வீணாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்ன சுஜா எப்படி இருக்கிறாய்? ஏதோ இருக்கிறேன் நாம மீட் பண்ணுவோமா ஈவினிங் மேட்ரிமோனி மாப்பிள்ளை ஒருத்தர மீட் பண்ணனும் ,நீயும் வரியா என்றாள்.சரி வரேன் .அன்று சண்டே என்பதால் ரொம்ப போர் அடித்தது . பாஸ்கர் எழுதிய நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தாள்.

ஈவினிங் வீணா சுஜாவை பிக்அப் செய்து கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றாள். சுஜா கொஞ்ச நேரத்தில் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்றாள். அப்போது சுஜாவை விட்டு விட்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள் வீணா. சுஜா ஏதோ மெனு கார்டை பார்த்து கொண்டிதருந்தாள். அதில் நிச்சயம் என் பெயர் இருக்காது என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். தீபன் தீபன் அவள் மனம் படபடவென அடித்துக்கொண்டது. வீணா வந்து விட்டாள். பாஸ் நீங்க இங்கே ? என்றாள் சுஜா .