Iravai Sudum Velicham - 25 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 25

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 25

வேகமா கிளம்பு தீப்தி நீ கெளம்புறதுக்குள்ளே விழாவே முடிஞ்சிடும் போல. convocation விழாவுக்கு இவ்ளோ ஆடம்பரம் தேவையா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் சிம்பிளாதான் டிரஸ் பண்ணியிருக்கேன் . ரஞ்சன் பேமிலியில் எல்லோருமே பெரிய படிப்பு படித்தவர்கள் . ரஞ்சனும் இப்போது அந்த லிஸ்டில் சேர போகிறான். ஸ்போர்ட்ஸ், படிப்பு ரெண்டிலும் excellent வாங்கியவன் ரஞ்சன்.மேகலா, குமார் தம்பதியர் இவர்களை வரவேற்றனர்.ரொம்ப
பெருமையா இருக்கு.. ரஞ்சன் எங்கே ? இங்கேதான் இருந்தான் . சரி பக்கத்துல friends கூட பேசிட்டு இருப்பான். போன் பண்ணி பாக்குறேன். ரஞ்சன் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க போன்ல சார்ஜ் இருந்திருக்காது நாங்க போய் பார்க்குறோம் என்றார்கள் தீப்தியும் ரஞ்சித்தும்.

ரஞ்சன் விழா முடிந்த பிறகும் வரவில்லை.மேகலா அழ தொடங்கினாள். என்ன ஆச்சுன்னு தெரியலியே ?. friends ஆளுக்கொரு பக்கமாக தேட துவங்கினர். அப்போது அவனுடைய friend விழா நடந்து கொண்டிருந்த போது அங்கே சத்தமாக இருந்ததால் ரஞ்சன் வெளியே நின்று பேசி கொண்டு இருந்ததை பார்த்ததாக சொன்னான். ரஞ்சனின் தந்தை குமார் தாமதிக்காமல் போலீசுக்கு தகவல் சொன்னார்.ரஞ்சனுடைய போன் கழிவறையில் கிடந்ததாக கொண்டு வந்து போலீஸ் கொடுத்தார்கள்.சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தது. போனை தயக்கத்துடனே on செய்து பார்த்தார்கள். காலேஜ் உள்ளேயும் வெளியேயும் போலீசார் தேடினார்கள். ரோந்துகளை தீவிரப்படுத்தினார்கள். சந்தேகப்படும்படி விழாவிற்கு வந்தவர்களை விசாரணைக்கு அழைத்து போனார்கள். ரஞ்சித்தும், தீப்தியும் எப்படி ஆறுதல் சொல்வதென தவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ரஞ்சனின் உடல் யூனிவர்சிட்டி நீச்சல் குளத்தில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள் மேகலாவும்,குமாரும்.அவனுக்கு நீச்சல் நல்லா தெரியும் எப்படி இது நடந்தது என குழம்பினர். போலீஸ் வந்து உடலை மீட்டு போஸ்டமோர்டெம் செய்ய அனுப்பினர்.கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இன்னைக்கி காலைலதான் இறந்திருக்காரு ரெண்டு நாளா அவரை kidnap பண்ணி வெச்சிருந்திருக்காங்க.எதுக்காக என் பையன அநியாயமா கொல்லனும்?ரஞ்சன் உடம்புல காயங்கள் எதுவும் இல்லை. அவர் தண்ணீல விழுந்ததால் இறந்தாரா?அல்லது கொன்னு நீச்சல் குளத்துல போட்டாங்களானு போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்ல தெரிஞ்சுடும்.தீப்தியும், ரஞ்சித்தும் ராமுக்கு போன் செய்ய முடிவெடுத்தனர்.அப்போது ரஞ்சனுடைய போன் அடித்தது. குமார் நடுக்கத்துடனேயே எடுத்தார். என்ன சார் ஜில்லுனு இருக்கா? உடம்பு ஐஸ் கட்டி மாதிரி ஜில்லுன்னுதான் இருக்கும் மார்ச்சுவரில .போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.போலீஸ் அந்த எண்ணை trace செய்ய முயற்சித்தார்கள். ராம் உடனடியாக களத்தில் இறங்கினான்.அவனுக்கு எதற்காக நீச்சல் குளத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரியவில்லை.போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்ததாக செய்தி வந்தது.சின்ன பையன் ராம் ,எங்களால அவங்க படுற வேதனையை பார்க்க முடியல . சரி தீப்தி நான் விசாரிக்கிறேன். உண்மை எப்படி இருந்தாலும் அதை ஏத்துக்கணும் என்று சொன்னான் ராம்.ரஞ்சனின் போனுக்கு வாட்ஸாப்ப் மெசேஜ் ஒன்று வந்தது . இது வெறும் ஆரம்பம்தான் என்று மட்டும் அந்த மெசேஜ் வந்திருந்தது. காலேஜ் விழாவின் போது பதிவான அனைத்து விடீயோக்களையும் ராம் பார்வையிட்டான்.சிசிடிவியையும் ஆராய்ந்தான். ரஞ்சனின் அப்பா குமாரிடம் பேசிய போது உங்களுக்கு தொழில் ரீதியாக எதிரிகள் இருக்கிறீங்களா என விசாரித்தான். ஒரே பிள்ளை சார் அப்படி எந்த எதிரியும் இல்லை என்றார். கூட படித்த மாணவர்களும், மாணவிகளும் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

ராம் அந்த நீச்சல் குளத்துக்கு போனான். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதே மாதிரி சம்பவம் இதுக்கு முன்னாடி இங்கே நடந்திருக்கா என இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தான். இல்ல இந்த கேம்பஸ்ல இதுதான் first டைம்.இங்க நீச்சல் coach யாரு அவரை பார்க்கணுமே என்றான் ராம். அவர் பேரு மூர்த்தி. அன்னிக்கி விழங்கிறதுனால கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன் தம்பி என்றார்.மத்தபடி ஸ்விம்மிங் கிளாஸ் ல ரஞ்சன் எப்படி ? ரொம்ப திறமைசாலி சார் . ஆனா மத்தவங்ககிட்ட எதுவும் பேசமாட்டார். நீச்சல் குளத்துக்கு வந்தா அவர் பாட்டுக்கு practice பண்ணிட்டு போயிட்டே இருப்பார்.ம்ம் அவருக்கு சிகரெட், ட்ரிங்க்ஸ் மாதிரி பழக்கம் உண்டா தெரியுமா ? அப்படியெல்லாம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது சார்.மூர்த்தியிடம் போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டான்.

ராமுக்கு இது வெறும் ஆரம்பம்தான் என்ற மெசேஜ் கவலையை கொடுத்தது. போலீஸ் எவ்வளவு சீக்கிரம் அவனை கண்டுபிடிக்கிறார்களோ அவ்வளவு நல்லது என நினைத்தான்.போலீசார் நீச்சல் குளத்து உரிமையாளர்களுக்கெல்லாம் வாட்ஸாப்ப் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.யாரவது சந்தேகப்படும்படி சுற்றி தெரிந்தாலோ அல்லது குழப்பம் ஏற்படும்படி நடந்து கொண்டாலோ உடனடியாக தெரிவிக்கும்படி சொல்லப்பட்டது. எத்தனை நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் ?ராம் இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து யோசித்தான் , Ranjan topper அவனை போல topper களை அடுத்து கொல்வானோ என்ற சந்தேகம் எழுந்தது.ரெண்டு நாள் kidnap பண்ணி வைத்திருந்து என்ன சொல்ல வந்திருப்பான். பணமும் கேட்கவில்லை. வேறெந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இது ஒரு revenge என்ற புள்ளியில் மட்டுமே நிற்பதாக ராம் நினைத்தான். ஒரு வேளை இது accident ஆக இருக்குமோ என யோசித்து பார்த்ததில் அதற்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றியது.
மறுபடியும் ரஞ்சன் போனுக்கு கால் வந்தது. இம்முறை ராமே எடுத்தான் ஸ்பீக்கரில் போட்டான். என்ன ராம் சார் ரொம்ப குழம்பாதீங்க . மரணம் எல்லோருக்கும் நிச்சயம் . இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த வாக்கியத்தை கேட்டதும் குமார் துடித்து போனார்.போலீசார் போன் காலை trace செய்ய முடியாமல் திணறினர். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நம்பரில் இருந்து கால் வந்தது அது பதிவு செய்யப்பட்ட கால் ஆக இருந்தது. வெளிநாட்டிலிருந்து கால் பண்ணுகிறானோ என்ற சந்தேகமும் எழுந்தது . அதை பற்றியும் போலீஸ் விசாரிக்க தொடங்கினார்கள்.குமாரின் அப்பா போலீஸ் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். விரைந்து கண்டுபிடிக்குமாறும் இன்னொரு உயிர் போக கூடாதென நான் நினைப்பதாகவும் மீடியாகாரர்களிடம் சொன்னார். ரஞ்சன் எப்படி கேம்பஸ் விட்டு வெளியே போனான் எப்படி திரும்ப நீச்சல் குளத்துக்கு வந்தான் எனவும் குழப்பமாய் இருந்தது. அவனுடைய போனின் லாஸ்ட் கால் ஒரு பெண்ணுடையதாக
இருந்தது. அந்த பெண்ணின் பெயர் பூஜா. நான்தான் கால் பண்ணின் ஜஸ்ட் பேசலாம்னு கூப்பிட்டேன் சத்தமா இருந்ததாலே வெளியே வந்து பேசினான். ம்ம் வேற ஏதாவது secrets ? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்.சரி பூஜா நான் உங்களை நம்புறேன்.

இந்த முறை ரஞ்சனுடைய ஸ்விம்மிங் coach செல்வம் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. செல்வம் சிறு வயது முதலே ரஞ்சனுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருபவர். குமாரிடம் இதை பற்றி பேசும் போது அப்போ நாங்க பெங்களூரில் இருந்தோம். அங்க எங்களுக்கு செல்வதோடு அறிமுகம் ஏற்பட்டது என்றார். செல்வம் எப்படிப்பட்டவர் என விசாரித்தான்.ஆள் நல்ல கண்டிப்பானவர் ஒரு accident டெத் கூட நடந்ததில்லை.போன் அடித்தது நீங்க வந்து அவரை கூடி போகலாம் பக்கத்துல எலிகண்ட் ஸ்விம்மிங் பூல் வேகமா வாங்க. அதுக்கு முன்னாடி அவர் பேசுறத கேளுங்க. என்னை மன்னிச்சிடுங்க நான் செஞ்சது தப்புதான் , இனிமே அடுத்தவங்க உயிரோட விளையாடமாட்டேன் . போய் பார்த்தபோது பயத்தில் அவர் உடல் விரைத்திருந்தது. ஒன்னும் இல்லை சார் யு ஆர் safe என்றார் இன்ஸ்பெக்டர்.அவன் யாரு எப்படி இருந்தான்னு சொல்ல முடியுமா ஓகே ரிலாக்ஸ்.அவன் காலேஜ் போற பையனாட்டம் இருந்தான் சார். நேத்து காய்கறி வாங்க போனப்போ என்னை பேர் சொல்லி செல்வம் அங்கிள்னு கூப்பிட்டான். வாங்க நானே drop பன்றேன்னு சொன்னான், என் வண்டி சர்விசுக்கு விட்டிருந்தேன் .நம்ம கிட்ட நீச்சல் கத்துக்கிட்டவங்களோட relative ஆகஇருக்கும் போலன்னு நெனச்சேன்.அப்புறமா என்ன நடந்ததுன்னு தெரியல மயங்கிட்டேன்.பார்த்தா நீச்சல் குளத்திலே இருக்கேன். எதுக்காக அப்படி சொன்னேங்க . அவன் சொல்ல சொன்னான் . அதை அப்படியே சொன்னேன் சார். உண்மையிலேயே ஏதாவது இருந்தா சொல்லிடுங்க சார்.அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவர் பெரு என்னன்னு கேட்டதுக்கு கார்த்திக்கு சொன்னான் .அவன் தனி ஆளா இருந்தானா இல்லை வேற யாரவது கூட இருந்தார்களா ?அவன் தனி ஆளுதான் சார்.நல்லா ஸ்விம்மிங் தெரிஞ்ச ஆளு மாதிரி தெரிஞ்சான். எப்படி சொல்லறீங்க ? எங்கிட்ட ஒரு அரைமணி நேரம் குழந்தைங்க தண்ணீல தவறி விழுந்தா எப்படி காப்பாத்தணும்னு பேசினான்.வித்தியாசமானவனா இருக்கானே ,அவனுடைய குறிப்பிட்ட அடையாளமா ஏதாவது மச்சம், தழும்பு அப்படி ஏதாவது. அப்படி எதுவும் இல்லை ஆனா அவன் ரெண்டாவது தடவை பெயர் சொல்லும்போது பிரியா பிரதர் கார்த்திக்னு சொன்னான் சார்.