தீப்தி அன்று ஆபீசுக்கு லீவு சொன்னாள். காலை எட்டு மணிக்கு போன் வந்தது .தீப்தி பணம் ரெடி பண்ணிட்டியா ? ரெடி பண்ணிட்டேன், அப்போ egmore ஸ்டேஷனுக்கு வந்துட்டு கால் பண்ணு, தீப்தி egmore ஸ்டேஷனுக்கு பணத்தோடு போனாள். நீ இப்போ பிளாட்பாரம் நம்பர் 1 க்கு போ . அங்க இருக்குற டஸ்ட் பின் ல பையை போடு .பணம் சரியாய் இருந்தால் மீனாவை அனுப்பறேன். ரெண்டு நாள் கழித்துதான் டிரைவரை அனுப்புவேன். அதுக்குள்ள நீ போலீசுக்கு போகாம இருக்கணும் என்றது அவள் போனில் வந்த மெசேஜ். தீப்தி அவர்கள் சொன்னபடியே செய்தாள்.கண்கள் கட்டிய நிலையில் கைகள் பின்புறம் கட்டப்பட்டவாறு மீனா வந்து சேர்ந்தாள். ரொம்ப தேங்க்ஸ் தீப்தி எனக்காக எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க என்று மீனா சொன்னாள். அடுத்த ரெண்டு நாளில் டிரைவர் ரமேஷும் வந்து சேர்ந்து விட்டான். ஆபீசில் ஏதோ பொய் சொல்லி சமாளித்து விட்டாள் தீப்தி. மீனாவிடம் என்ன நடந்தது என விசாரித்தாள் தீப்தி, எப்பவும் போல வீட்டுக்கு போற ரூட்ல ஒரு பொண்ணு லிப்ட் கேட்டா , டிரைவரும் இது கம்பெனி வண்டிமா யாரையும் ஏத்தக்கூடாதுன்னு சொல்லியும் கேக்கலை. ரொம்ப urgent அப்படின்னு சொன்னா. முகத்தை கம்பளியால் மூடி இருந்தா . கார்ல ஏறுன கொஞ்ச நேரத்துல என் கழுத்துல கத்திய வெச்சு டிரைவரை மிரட்டி என்னை எங்கேயோ கொண்டு போயிட்டா.அதுக்கப்புறம் நான் மயக்கமாயிட்டேன். மீனா அந்த பொண்ணு வாய்ஸ் ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்ததா இல்ல தீப்தி.
ரமேஷை விசாரித்த பொது அதே பதிலைத்தான் சொன்னான் . எப்படி அவங்களுக்கு தீப்தி நம்பர் கிடைச்சுது எதுக்காக தீப்திக்கு கால் பண்ணனும் . அதை பத்தி எனக்கு தெரியல மேடம் என்றான் ரமேஷ். நாம இப்போ இதை இப்படியே விட்டா இன்னும் வேற யாரையும் kidnap பண்ணி பணம் பறிச்சுக்கிட்டே இருப்பாங்க. நாம போலீசுக்கு போனா மீனாவோட உயிருக்குத்தான் ஆபத்து , நாம ராம் சார்கிட்டயே பேசலாம் என்று ரஞ்சித் சொன்னான். சரி ரமேஷ் நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன் . சரிங்க மேடம்.
ராம் எனக்கு ஏன் முன்னாடியே இதை சொல்லலை எதுக்காக அவசரப்பட்டு பணத்தை குடுத்தீங்க என கடிந்து கொண்டான். ரமேஷ், மீனா ரெண்டு பேரையும் பாக்கணுமே .. பாக்கலாம் சார். நாளைக்கு ரெண்டு பேரையும் உங்க வீட்டுக்கு வர சொல்லுங்க அங்கேயே பேசலாம்.சரி என்று தீப்தி சொன்னாள்.ராம் மீனா கிட்ட தனியா பேசணும் என்றான். மீனா உனக்கு டிரைவர் மேல சந்தேகம் இருக்கா? சே சே அவர் ரொம்ப நல்ல மாதிரி . அவர் மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏதாவது ஒரு அடையாளம், சிக்னல், சவுண்ட், நீங்க வண்டியில போறப்ப கேட்டுச்சா ? இல்ல சார் . நான் உடனே மயங்கிட்டேன். மறுபடி கண்ணை திறந்து பார்க்கும் போது egmore ஸ்டேஷன் ல தான் இருந்தேன். இதுக்கு முன்னாடி இதே மாதிரி உங்களுக்கு நடந்திருக்குதா ?இல்ல
இதான் முதல் முறை. அவங்க உங்ககிட்டே தப்பா நடந்துக்கிட்டாங்களா ? இல்லே சார். ரமேஷ் எப்போவுமே நீங்க அதே ரூட் ல தான் போவீங்களா . ஆமா சார். எத்தனை வருஷமா இந்த கம்பெனி ல வண்டி ஓட்டறீங்க . மூணு வருஷமா சார்.ம்ம் சரி ரமேஷ் உங்களையும் மயக்கத்திலேயே வச்சிருந்தாங்களா ? ஆமாம் சார்.எங்க உங்களை ரிலீஸ் பண்ணாங்க . நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் ல சார். சரி kidnap பண்ணும்போது எந்த இடத்துல மீனாவை இறக்கி விடீங்க.அது எனக்கு தெரியாது சார்.என்னையும் மயக்கமாக்கிட்டுதான் அந்த பொம்பளையே டிரைவ் பண்ணாங்க சார். ஒரு லேடி இவ்ளோவும் செஞ்சாங்களா ? கூட யாரும் இல்லையா ? இல்ல சார்.
டிரைவருடைய ப்ரோபைலையும் ,மீனாவுடைய ப்ரோபைலையும் தீப்தி ராமிடம் கொடுத்தாள். ரமேஷுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒரே ஒரு தங்கை அவள் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறாள். அப்பா இறந்து விட்டார். அம்மா தையல் தொழில் செய்கிறார். ரமேஷ் வீட்டுக்கு ராம் போயிருந்தான். ரமேஷுடைய அம்மா மட்டும் இருந்தாள். என் பேரு ராம் ரமேஷோட friend என அறிமுகப்படுத்திக்கொண்டான்.அவனுக்கு போன் பண்ணவா,வேண்டாம்மா நான் உங்களை பாக்கத்தான் வந்தேன். ஏதாவது லோனுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா ? ஆமாம்பா அது உனக்கெப்படி தெரியும் . ரமேஷ் சொன்னாப்ல. ஆமாம் இந்த தையல் மெஷின் எல்லாம் ரொம்ப பழசாயிடிச்சி புதுசு வாங்கணும் . என் பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்கு அதுக்கு நகை வாங்கணும் . மொத்தம் 4 அல்லது 5 லட்சம் தேவைப்படும். சரிம்மா நானும் ஏற்பாடு பண்ண ட்ரை பண்றேன். டீயாவது குடிச்சிட்டு போப்பா . இல்லம்மா வேண்டாம் கொஞ்சம் வேலை இருக்கு .
மீனாவுடைய வீட்டுக்கு போனான். மீனா காணாமல் போனவுடன் எங்களுக்கெல்லாம் ஒரே பதட்டமா போயிட்டுது என்றார் மீனாவின் அப்பா. மீனாவுக்கு அம்மா கிடையாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் என்றார். அங்கிள் இது சொந்தவீடா ஆமாம்பா நான் ரெயில்வே இருந்து retire அனுப்ப கிடைச்ச பணத்திலிருந்து கட்டுனது . சரி அங்கிள் நான் வரேன் என விடை பெற்றான்.
தீப்தி உன்கிட்ட பேசுனா வாய்ஸ் male வாய்ஸ் ஆஹ் இல்ல female வாய்ஸ் ஆஹ் first தடவை கால் பண்ணப்போ male வாய்ஸ் அப்புறம் மீனாவை ரிலீஸ் பண்ணும்போது female வாய்ஸ் வந்தது.ம்ம் எதுக்கும் ரமேஷை ஜாக்கிரதையா இருக்க சொல்லு. ஓகே ராம்ரெண்டு நாட்களில் ராம் பயந்தது போல் நடந்து விட்டது. டிரைவர் ரமேஷை யாரோ கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்.
அவனுடைய காரிலேயே இறந்து கிடந்தான். இதை கேள்விபட்ட தீப்தி அதிர்ச்சி அடைந்தாள்.என்ன ராம் இப்படி ஆயிடிச்சு ? அவன் நம்மகிட்டேயிருந்து எதையோ மறைச்சு இருக்கான். டிரைவர் ரமேஷ் வீட்டுக்கு ரஞ்சித், தீப்தி, ராம், மீனா எல்லோரும் போயிருந்தனர். அவனுடைய அம்மா பார்த்தியாப்பா என் புள்ளைய என்று கதறி அழுதாள். அப்போதுதான் ரமேஷுடைய தங்கையை முதலில் பார்த்தான் ராம். அவள் பெயர் திவ்யா. கூடவே மற்றொரு பெண்ணும் அழுது கொண்டிருந்தாள்.அந்த பெண் யாரென விசாரித்த போது திவ்யாவுடன் கூட வேலை பார்க்கும் பெண் என சொன்னார்கள். போலீஸ் விசாரித்ததில் ரமேஷுடைய நெருங்கிய நண்பர்கள்தான் இதை செய்திருக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறு போல என பேசிக்கொண்டார்கள்.ராம் ஆறுதலாக நாலு வார்த்தை கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான்.திவ்யாவுடைய போன் நம்பரை மீனா கேட்டு வாங்கி கொண்டாள்.ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடுங்க என்று மீனா சொன்னாள்.மீனா ரமேஷோட துக்கத்துக்கு வந்தவங்க யாராச்சும் உன்னை kidnap பண்ணவங்க மாதிரி தோணுச்சா ? அப்படி எதுவும் இல்லை சார் . நல்லா கண்ணை மூடி யோசிச்சு பாரு ஏதாவது ஒரு clue கண்டிப்பா இருக்கும். என்னால அந்த பொண்ணு போட்டிருந்த ஸ்பிரேயையும் அவ கையிலே இருந்த தழும்பையும் மறக்கவே முடியாது சார். அவ முகத்தை என்னால பாக்க முடியல ஆனா அவ என் கண்ணை கட்டும்போது அவ கையிலே இருந்த தழும்பு தட்டுப்பட்டது சார். எந்த கையிலே இடது கையிலே சார்.
போலீஸ் ரமேஷுடைய கால் ஹிஸ்டரி செக் செய்ததில் ரமேஷுடைய நண்பனான குமார் என்பவனை கைது செய்தது. குமாரும் ரமேஷை கொன்றதாக ஒப்புக்கொண்டான்.பணம் தர மறுத்ததால் கொன்றேன் என வாக்குமூகம் கொடுத்திருந்தான் குமார். ரமேஷ் சொல்லித்தான் மீனாவையும் கடத்தியதாகவும் ஆனால் சொன்ன மாதிரி பணத்தை தராததால் அவனை கொன்றேன் எனவும் சொன்னான். ram ஸ்டேஷனுக்கு போய் இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டு குமாரிடம் பேசினான். அப்போ உன்கூட வந்த லேடி யாரு என்றான். எனக்கு எந்த லேடி பத்தியும் தெரியாது . என்கிட்டே வந்து இந்த பொண்ண பத்திரமா பாத்துக்க நான் சொல்றப்ப ரிலீஸ் பண்ணா போதும்னு சொன்னான் ரமேஷ். தீப்தி நம்பர் குடுத்து பேச சொன்னான். ரமேஷ் அவங்கள மிரட்டி 5 லட்சம் வாங்க சொன்னான். அவங்களும் அவன்கிட்டே கொடுத்தாங்க. ஆனா என்னோட ஷேர் பணத்தை தராமல் ஏமாத்திட்டான்.
ரமேஷ் போனை பாக்கலாமா இன்ஸ்பெக்டர் . அவங்க தங்கச்சிகிட்டேயே ரமேஷ் திங்ஸ் எல்லாத்தையும் குடுத்துட்டோம். ரமேஷ் தங்கை திவ்யாவை தொடர்பு கொண்டான். ரமேஷ் போன் உங்ககிட்ட இருக்காமே உடனே அந்த போனை எடுத்துக்கிட்டு வாங்க. நான் இப்போ கடையில இருக்கேன் நீங்க வந்து வாங்கிக்க முடியுமா? ஓகே நான் இப்போவே வரேன் என்றான், திவ்யாவிடம் இருந்து போனை வாங்கி செக் செய்தான். அந்த போனில் இருந்த contacts லிஸ்டில் இருந்த மை wife என்ற நம்பருக்கு கால் செய்தான். ஹலோ ஹலோ என்ற குரலை கேட்டதும் ராம் துண்டித்தான்.
தீப்தி மீனாவை கடத்துனது யார்னு கண்டு பிடிச்சிட்டேன். யார் ராம் சார். நாளைக்கு சொல்றேன். நாளைக்கு மீனாவோட பர்த்டே எல்லோரையும் invite பண்ணலாம். முக்கியமா திவ்யாவை invite பண்ணனும் என்றான். மீனா வீட்டில் மொத்தம் 10 பேர் வந்திருந்தார்கள் ஆபீஸ் ஸ்டாப் கொஞ்ச பேரும், திவ்யாவும் அவள் friend ரம்யாவும் வந்திருந்தார்கள். கேக் வெட்டிய பிறகு எல்லோரும் ஒரு கேம் விளையாடலாமா என்றான் ராம்.