Iravai Sudum Velicham - 14 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 14

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 14

தீப்தி ஒரு லாங் டிரைவ் போலாமா என்றாள். இந்த நேரத்துலயா ?ப்ளீஸ் ப்ளீஸ் என்றாள். சரி வா போவோம் உன் விருப்பம்தான் என் விருப்பம் என்றான். மிதமான வேகத்தில் காரை செலுத்தினான். தீப்தி தன் செல்போன் கேமராவால் ஜன்னல் வழி வீடியோ எடுத்துக்கொண்டே வந்தாள். இவர்களை மின்னல் வேகத்தில் கார் ஒன்று ஓவர் டேக் செய்தது. ஒரு கணம் தடுமாறினாலும் சுதாரித்து கொண்டான். தீப்தி தன்னை மறந்து இயற்கை அழகை படமாக்கி கொண்டு இருந்தாள். இவனை ஓவர் டேக் செய்த கார் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தது .கொஞ்சம் குறைவான ஸ்பீடில் வண்டியை செலுத்தினான். அப்போதுதான் அதை கவனித்தான். இரண்டு பேர் காருக்கு வெளியே சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். ஒருவன் மற்றொருவன் கழுத்தில் கை வைத்து தள்ளிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென காரில் அமர்ந்திருந்தவன் வெளியே சண்டை போட்டவனை நோக்கி சுட்டான். அவன் சுருண்டு விழுந்தான் . வேகமா காரை எடு என காருக்குள் இருந்தவன் கட்டளையிட்டான். இதற்கிடையில் தீப்தி வீடியோ எடுப்பதை மற்றவன் பார்த்துவிட்டான். தீப்தி என்ன செய்யுற அவங்க பாத்துட்டாங்க வேகமா போலாம் ரைட் என்றவாறே காரை செலுத்தினான் ரஞ்சித். அவங்க வீடியோ எடுத்துட்டாங்க சரி ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாங்க follow பண்ணு. இரண்டு கார்களும் அளவுக்கு மீறிய வேகத்தில் சென்றன .

தீப்தி நீ காரை எடுத்துட்டு hotel போயிடு . நான் இப்படியே அவங்களுக்கு போக்கு காட்டி நேரா அங்க வந்துடறேன் என்றான்.வேண்டாம் ரஞ்சித் இது ரொம்ப ரிஸ்க் என்றாள் . வேற வழியில்லை இல்லைனா ரெண்டுபேரும் மாட்டிப்போம் என்றான். அரைமனதாக தீப்தி காரை செலுத்தினாள். ரஞ்சித் விழுந்தடித்து ஓடினான். மலைப்பாதையில் ஓடியவாறே போலீசுக்கு போன் செய்தான் .ஒருவன் மட்டும் இறங்கி ரஞ்சித்தை விரட்டினான். மற்றொருவன் காரை தீப்தி போன திசையில் விட்டான் . தீப்தி அதற்குள் அவன் பார்வையில் இருந்து மறைந்திருந்தாள் .ரஞ்சித்துக்கு போன் செய்த போது ஸ்விட்ச் off என்று வந்தது . தீப்தி அந்த விடீயோவின் copy ஒன்றை ராமுக்கு வாட்ஸாப்ப் அனுப்பியிருந்தாள். உடனடியாக புறப்பட்டு வரும்படி சொல்லி இருந்தாள் . காலை வரை காத்திருக்க அவள் மனம் ஏற்கவில்லை. மறுபடி ரஞ்சித்தை தேடி போவோமா என யோசித்தாள். சிக்கலை பெரிதாக ஆக்க வேண்டாம் மறுபடி ரஞ்சித்துக்கு போனை போட்டாள். not reachable என்று வந்தது. எல்லாம் தன்னால்தான் வந்தது என அழுதாள். போன் அடித்தது ராம்தான் பேசினான். ரஞ்சித் எங்கே என்றான். எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னாள். காலையில் தான் வந்து விடுவதாகவும் எங்கும் போகாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டான்.இந்த முறை ரஞ்சித்திடம் இருந்து போன் வந்தது . போனை குடுத்துட்டு உன் புருஷனை கூட்டிட்டு போ என்றது குரல். எங்கே வரணும்னு காலையிலே சொல்றேன். போலீசுக்கு போனா உன் புருஷன் உயிர் இங்கேயே போயிடும்.

காலையில் ராம் வந்துவிட்டான். போலீசுக்கு போனால் பிரச்சனை என்று தீப்தி சொன்னாள். இதற்கிடையில் இறந்த ஆள் பற்றிய செய்தி பேப்பரில் வந்திருந்தது. ஹனிமூனுக்கு வந்த வாலிபர் சுட்டு கொலை .போலீஸ் அவனை கொன்றவர்களை தீவிரமா தேடி வந்தனர் . அவர் மனைவி ரம்யா கதறி அழுதது பார்ப்போரை கலங்க செய்தது என செய்தியில் வந்தது . தீப்தி எத்தனை மணிக்கு போன் பண்றதா சொன்னாங்க . டைமெல்லாம் சொல்லல . நான் போலீஸ் ஸ்டேஷன் போய் அந்த ரம்யாவை மீட் பண்றேன். ஏதாவது தகவல் கெடைச்சா கால் பண்றேன் . வேண்டாம் ராம் நீங்க கால் வந்ததுக்கப்புறம் போங்க .. சரி அடுத்த 10 நிமிஷத்தில் கால் வந்தது. தீப்தி இப்போ நீ வீடியோவை எடுத்துக்கிட்டு நேரா நான் அனுப்புன லொகேஷனுக்கு வந்து சேறு . நீ மட்டும் வா விடியோவை யாருக்காவது அனுப்பலாம்னு நெனைச்சா ரஞ்சித்தோட எலும்பு கூட மிஞ்சாது பாத்துக்கோ .
சரி வரேன். இப்போ என்ன பண்றது ராம் , நீ தைரியமா போ லொகேஷன் ஷேர் பண்ணு. இப்போ ரஞ்சித் தான் முக்கியம் .வீடியோ இருந்த மெமரி கார்டை பத்திரப்படுத்தி கொண்டாள். ரஞ்சித்துக்கு எதுவும் ஆயிருக்க கூடாதென வேண்டிக்கொண்டாள். ராம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். காரில் போனவர்களை தான் பார்த்ததாக சொன்னான். போலீசார் இறந்து போனவனுடைய மனைவி லலிதாவை வரவழைத்தனர். ராம் சொன்ன அடையாளங்களை கேட்ட பின் அப்படி யாரையும் தனக்கு தெரியாது என்று சொன்னாள். லலிதாவின் போன் நம்பரை வாங்கிக்கொண்டான். தான் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் என்றும் இந்த கேஸ் கண்டுபிடிக்க தான் உதவி செய்யவதாகவும் சொன்னான். லலிதா வேறு ஒரு உணவகம் ஒன்றில் ராமை சந்தித்தாள். என் புருஷனை கொன்னவங்கள கண்டுபுடிச்சி குடுங்க சார் எவ்வளவு பணம் வேணாலும் தரேன் என்றாள். உங்களது லவ் marriage ஆ. ஆமாம் சார் பேப்பர் ல பார்த்தேன் . உங்க அப்பா அம்மா இல்லை அண்ணண் தம்பி யாராவது இதை செஞ்சிருப்பாங்களோ ?ஒரு வேலை நீங்களே இதை செஞ்சிருப்பீங்களோன்னு போலீஸ் சந்தேகப்படுது. அப்படி எல்லாம் நான் ஏன் சார் செய்ய போறேன் என் புருஷனுக்கு நான் என்னைக்கும் துரோகம் நெனைக்க மாட்டேன் சார். தீப்திக்கு போன் போட்டான். அவங்க இங்க இல்ல என்றாள் . வேற லொகேஷன் அனுப்பிருக்காங்க. சரி தீப்தி நீங்க போங்க . ஒருவேளை போலீசுக்கு பயந்து மாறியிருக்கலாம் . சரி அப்ப நான் உங்களை முழுசா நம்பறேன் லலிதா . உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சாலும் ஷேர் பண்ணுங்க என்றான்.சரி பாக்கலாம் நீங்க இப்போ எங்க தங்கியிருக்கீங்க ஹோட்டல் அசோகால ஓகே , நான் ஈவினிங் வந்து மீட் பண்றேன்

தீப்தி இந்த முறை அந்த இடத்தை அடைந்த போது ரஞ்சித் மட்டும் கட்டபட்டு கிடந்தான். மயங்கி கிடந்தான். ரஞ்சித் ரஞ்சித் எழுந்திருங்க .. ம்ம் கொஞ்ச நேரம் ஆகும் . மயக்க ஊசி போட்ருக்கோம். சரி அந்த மெமரி கார்டு கொண்டா . அதை போட்டுப்பார்த்து உறுதி செய்துகொண்டார்கள். நீங்க ரெண்டு பெரும் போலாம் . மறுபடி எதுவும் ட்ரை பண்ணா பேசிகிட்டு இருக்க மாட்டோம் . ரஞ்சித்தை கை தாங்கலாக அழைத்து போய் காரில் ஏற்றினாள். வழியில் வாட்டர் பாட்டில் வாங்கி அவனை மயக்கத்திலிருந்து எழுப்பினாள். தீப்தியை பார்த்ததும் என்ன செஞ்ச தீப்தி என்றான் ? மெமரி கார்டு கொடுத்துட்டேன். ஏன் அவசரப்பட்ட தீப்தி
ராம் எங்க என்றான். அவர் அந்த பையனோட மனைவி லலிதாவை பார்க்க போயிருக்காரு . சரி தீப்தி மொதல்ல ஹாஸ்பிடல் போ என்றான்.ஹாஸ்பிடலில் ரஞ்சித் காயங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டான். ரொம்ப அடிச்சாங்களா ரஞ்சித். அவங்க எப்பவும் கொலை பண்ற கிரிமினல்ஸ் மாதிரி தெரியல . ஐ மீன் கூலிப்படை மாதிரி தெரியல .ஏதோ டூர் வந்த எடத்துல நடந்த சண்டைல திடீர்னு இப்படி நடந்து போச்சு . தீப்தி ராமுக்கு போனை போட்டாள். ரஞ்சித் வந்துட்டான் ராம் சார் என்றாள் . இப்போ ஹாஸ்பிடல் ல இருக்கோம் . இன்னும் ஒரு மணி நேரத்துல ஹோட்டல்ல இருப்போம் .