Oru Devathai Paarkkum Neram Ithu - 4 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

Featured Books
  • ચતુર

    आकारसदृशप्रज्ञः प्रज्ञयासदृशागमः | आगमैः सदृशारम्भ आरम्भसदृश...

  • ભારતીય સિનેમાનાં અમૂલ્ય રત્ન - 5

    આશા પારેખઃ બોલિવૂડની જ્યુબિલી ગર્લ તો નૂતન અભિનયની મહારાણી૧૯...

  • રાણીની હવેલી - 6

    તે દિવસે મારી જિંદગીમાં પ્રથમ વાર મેં કંઈક આવું વિચિત્ર અને...

  • ચોરોનો ખજાનો - 71

                   જીવડું અને જંગ           રિચાર્ડ અને તેની સાથ...

  • ખજાનો - 88

    "આ બધી સમસ્યાઓનો ઉકેલ તો અંગ્રેજોએ આપણા જહાજ સાથે જ બાળી નાં...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

விஷால் மறுபடி கண் விழித்து பார்த்த போது அவனுடைய வீட்டில் இருந்தான். சுபா கவலையோடு அவன் அருகில் இருந்தாள் . அனன்யா எங்கே என்று கேட்டான் . மருந்து வாங்க போயிருக்கா இப்போ வந்து விடுவாள் யார் உன்னை இப்படி பன்னாங்க ? டான்ஸ் class பசங்களா ? ஆமாம் ..பிரதீப் அவங்க கூட இருந்தானா ? விஷால் அமைதியாய் இருந்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். சரி சுபா . அனன்யா வந்து விட்டாள் . பிரதீப் தான் இவனை இப்படி பண்ணி இருக்கான் என்றாள் சுபா .அனன்யா விஷால் அருகில் அமர்ந்தாள். சுபா வெளியே போய் விட்டாள் . அனன்யா என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்றாள் .மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . தாங்க்ஸ் அனன்யா என்றான்.

பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாமென நினைத்தான் விஷால். கொஞ்ச நாள் டான்ஸ் கிளாஸ் பக்கம் போக வேண்டாம் என முடிவெடுத்தான் . சுபாவோ பிடிவாதமாக இருந்தாள் . அவங்களுக்கு பயந்துகிட்டு ஒதுங்கி போறதா என்றாள் . சரி வரேன் என்றான் விஷால். இன்னும் கை ,கால்களில் வலி இருந்த போதும் சுபா ஆடுவதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் . அவனை அடித்தவர்கள் அன்றும் வந்திருந்தனர்.சுபா இவனை டான்ஸ் ஆட கூப்பிட்டாள் . இவன் எழுந்து நிற்கவே தடுமாறினான் . அவள் இவனை தோளில் சாய்த்து கொண்டாள் . சரி வா போகலாம் என்றாள் .சாரி சுபா என்றான்.இட்ஸ் ஓகே நீ சரியானதுக்கப்புறம் என் கூட competition ல கலந்துக்க என்றாள் .சரி சுபா . நீ செய்யுற உதவிக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேன்னு தெரியல ...என்றான் விஷால்.
காலேஜ் வர இன்னும் ரெண்டு நாட்களாகும் என்று அனன்யாவிடம் சொல்லி விட்டான் விஷால். சுபா லீவு போட்டு விட்டாள். ஏன் சுபா இப்படி பண்ணுனே, அதான் எனக்கும் தெரியல என்றவாறு சிரித்தாள். எங்க வீட்டுக்கு போகலாம் வாயேன் என்றாள்.அவளுடைய பிரியத்தை எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. சரி வரேன் ஆனா நீ சமைக்கிறேன்னு என்னை டார்ச்சர் பண்ண கூடாது . நிச்சயமா இல்ல ,அவளுடைய டூ வீலரில் இவனை அழைத்து சென்றாள் .

சரி ஏதாவது games ஆடலாமா என்று கேட்டாள் . கொஞ்ச நேரம் வீடியோ games விளையாடி கொண்டிருந்தார்கள். மதியம் அனன்யா வந்துவிட்டாள் . என்னாச்சு அனன்யா நீ ஏன் லீவு போட்டே ? என்னவோ எனக்கு பிடிக்கல வந்துட்டேன் என்றாள் . அனன்யா போய் சமைக்க தொடங்கினாள் . சுபா போய் ஏதோ கடையில் சில சாமான்களை வாங்கி கொண்டு வர போனாள் . இவன் அனன்யாவை பின்புறமாக அணைத்தான்.கொஞ்சம் பொறு சமைச்சிட்டு வரேன். இந்த டிரஸ் சூப்பர் ஆக இருக்கு என்றான். சுபா வந்துவிட்டாள் . ஓ அதுக்குள்ள அவசரமா என்றாள். அப்படியெல்லாம் ஒன்னுமில்லே என்றான்.
கிச்சன் இல் இருந்தவாறே மென்மையாக பாட தொடங்கினாள் அனன்யா. விஷால் தன்னை அறியாமல் நாற்காலியில் அமர்ந்தபடி உறங்க துவங்கினான். என்ன தூங்கி விட்டானா என்றபடி வந்தாள் அனன்யா. பாவம் தூங்கட்டும் என்றாள் சுபா. நான் போய் குளித்து விட்டு வரேன் வந்ததுக்கப்புறம் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் சுபா. சரி சுபா. அனன்யா ஏதோ ஒரு பாட்டை மியூசிக் பிளேயர் இல் போட்டாள் .சுபா வந்ததும் அனன்யா இவனை எழுப்பினாள் . தூங்கிட்டேனா என்று சிரித்தான். அனன்யா,சுபா , விஷால் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட துவங்கினர் . நான் இவனை வீட்டிலே டிராப் பண்ணிடுறேன் என்றாள் அனன்யா. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றாள் சுபா. இல்ல இன்னொரு நாள் வரேன் என்றான் விஷால்.அனன்யா இவனை வீட்டில் விட்டாள் . அப்புறமா ஃபோன் பண்றேன் என்றாள் .
இது எந்த வகையான அன்பு என்று புரியாமல் விஷால் திணறி போனான். சுபாவும் அதே அளவு அன்பை செலுத்துகிறாளே என்று வியந்தான் . தன்னுடைய இயல்பிலிருந்து விடுபட்டு ஒரு புதிய உலகத்தை அடைந்தான் விஷால் .இப்போது அவனுக்கு தேவை எல்லாம் அனன்யாவின் சந்தோஷம் மட்டுமே. ஒருபுறம் பிரதீப்பின் நட்பை இழந்தாலும், சுபாவின் நட்பு அந்த வேதனையை மறக்க செய்தது .அனன்யாவின் சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தான்.
அதே சமயம் தான் ஏதாவது சாதித்தால் ஒழிய அனன்யாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தான் அனன்யாவின் எதிர்காலத்திற்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான்.இவனும் அவளும் சேர்ந்த ஒரு மகிழ்ச்சியான உலகத்திற்காக இன்றைய தினம் அவன் கடுமையாக உழைக்க வேண்டும், வெறுமனே காதல் சுகத்துக்காக அவளின் எதிர்காலத்தை பாதிக்குமாறு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அனன்யா போன் செய்திருந்தாள் . என்ன ஒரே யோசனை? எல்லாம் நம்ம எதிர்காலம் பற்றி தான்… அப்படி என்ன யோசிச்சீங்க? உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்காமலே நான் பாட்டுக்கு உன்னை நெருங்கி இருக்கிறேன்… உன் மனசுல என்னதான் இருக்கு? நீயும் நானும் சேர்ந்து இருக்கணும் வேற ஒன்னும் இல்ல.. சும்மா சொல்லாதே உனக்குன்னு கனவுகள் இருக்காதா? இருக்கு ஆனா நீ இல்லாம அது சாத்தியம் இல்லை என்றாள் அனன்யா.இதை கேட்டதும் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினான் விஷால் .நாளைக்கு காலேஜ் வரியா என்றால். ஆமா நிச்சயம் வருவேன். வரும்போது எனக்கு ரோஸ் வாங்கிட்டு வா என்றாள் சரி அனன்யா விஷால் சீக்கிரமே நம்ம படிப்பு முடிந்ததும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றால் சிரித்துக் கொண்டே. என்ன அவசரம் என்றான் விஷால். என்னவோ எனக்கு தோணிச்சு
கல்யாணம் முடிஞ்ச உடனே அது கொஞ்சம் லேட்டா வச்சுக்கலாம் .. எது என்றான்? இப்ப அவசியம் தெரியனுமா இல்ல எனக்கு புரியல என்றான் விஷால். அவள் சிரித்துக் கொண்டே போனை வைத்து விட்டாள்.

ரோஸ் வாங்கிக் கொண்டு காலேஜுக்கு போயிருந்தான். அவள் எப்பவும் போல மலர்ந்த மலரை போல இருந்தாள். இவனைப் பார்த்ததும் உற்சாகமாக நேத்து நைட்டு அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். எதை பத்தி என்றான். நீ ரோஸ் வாங்கிட்டு வர்றத பத்தி .இவனே அவளுக்கு ரோஸ் வைத்து விட்டான். சுபா எனக்கு ரோஸ் என்றாள் .. அவளுக்கும் ஒன்றைக் கொடுத்தான் அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள் . மூவரும் கேண்டினுக்கு சென்றனர். சுபா உங்க கல்யாணத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணுனீங்களாமே ?என்னை பத்தி என்ன யோசிச்சீங்க என்றாள் . நீ ஒரு டான்ஸ் மாஸ்டர் அதனால உனக்கு ஒரு டான்ஸ் மாஸ்டர் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான். அதெல்லாம் எனக்கு வேண்டாம் பா என்றவாறு வெட்கப்பட்டாள் . சுபாவும், அனன்யாவும் ஒரு அளவுக்கு நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தான் அப்படி இல்லை என நினைத்தான்.

எப்படியாவது இந்த செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்திட வேண்டும் என்று நினைத்தான் அதை அனன்யாவிடம் சொன்னான். நைட் ஸ்டடி பண்ணலாமா என்று சுபா கேட்டாள்.. எங்க வீட்டிலேயே வச்சுக்கலாம் என்று சுபா சொன்னாள். அனன்யா எங்க வீட்ல விட மாட்டாங்களே என்றாள்.. நான் வந்து உங்க வீட்ல சொல்றேன் என்று சுபா சொன்னாள் அப்படின்னா சரி எனக்கு ஓகே தான் விஷால் நீங்க ரெண்டு பேரும் எனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கீங்க இந்த ஹெல்ப்பை கேக்குறதுல எனக்கு வெட்கமில்லை என்றான் விஷால். நீ கவலைப்படாத விஷால் எல்லாம் பாசிட்டிவா நடக்கும் என்றாள் அனன்யா

இரவு 7 மணிக்கு சுபாவின் வீட்டை அடைந்தான் விஷால். அனன்யா ஒரு வழியாக வீட்டில் பேசி சுபா வீட்டுக்கு போவதற்கு பர்மிஷன் வாங்கி இருந்தாலள் . அவர்களிடம் திட்டம் ஒன்று தயாராக இருந்தது. எப்போது எதை படிக்க வேண்டும், எதைப் படிக்க கூடாது ,இப்படி படிக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுடைய சிந்தனையில் இருந்தது. அனன்யா ஒன்பது மணிக்கு வருவதாக சுபா சொன்னாள் . நீ ஏதாவது சாப்பிடுறியா என்று கேட்டாள் . சாப்பிட்டு தான் வந்தேன் என்றான் விஷால் .அவளுடைய நோட்ஸ் மொத்தமும் கொண்டு வந்து கொடுத்தாள். இவன் அவற்றை கவனமாக படிக்க தொடங்கினான்.

இடையில் சந்தேகம் வந்தால் சுபாவிடம் கேட்டு தெரிந்து கொண்டான். 9 மணிக்கு அனன்யா வந்து விட்டாள். நான் போய் காபி போட்டு எடுத்து வருகிறேன் என்று கீழே சென்றாள் சுபா. என்ன விஷால் ரொம்ப சீரியஸா படிக்கிறீங்க போல என்றாள் அனன்யா ..சும்மா என்ன சீண்டாதே அப்புறம் கஷ்டம் ஆகிவிடும் என்றான் விஷால் இதைக் கேட்டு சிரித்தாள் அனன்யா.சரி இங்க வாங்க மேக்ஸ்ல தானே நீங்க வீக் அத சொல்லி தரேன் என்றாள் .அருகில் வந்து அமர்ந்தான் விஷால் அவளுடைய மணம் அவனுடைய ஏதேதோ எண்ணங்களை உசுப்பேத்தியது. கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்து கொண்டான். அவள் ஆரம்பத்தில் ஃபார்முலாக்களை எப்படி மனப்பாடம் செய்வது என்று சொல்ல ஆரம்பித்தாள் . காப்பி வந்தது.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்று சுபா கேட்டாள் ,என்னத்த பண்றது படிக்கணும் இல்ல என்றாள் அனன்யா. அனன்யாவுக்கு உன் மேல ரொம்ப ஆசை என்றாள் சுபா .காபி சூப்பரா இருக்குது என்றான் விஷால்.

இப்போ ஒரு பிரேக் எடுத்துக்கலாமா மணி 12 தொட்டது சரி நீங்க ரெண்டு பேரும் கீழே போய் தூங்குங்க நான் இங்கே படுத்துக்கிறேன் என்றான் விஷால். சரி என்று சொல்லிவிட்டு சுபாவும் அனன்யாவும் சென்றனர். மறுபடியும் நாலு மணிக்கு தொடங்கலாம் என்று சொல்லி இருந்தனர் .. நாலு மணிக்கு அனன்யா மட்டும் மேலே வந்தாள் . சுபா எங்கே? என்றான் விஷால். அவ நல்லா தூங்குகிறாள். அனன்யா இவனை லேசாக அணைத்துக் கொண்டாள். இப்ப அவசியம் படிக்கணுமா என்றாள் . கண்டிப்பாக.. அப்போ ஒரு கிஸ் குடு என்றாள். இதுக்கு எதுக்கு பர்மிஷன் என்றான் விஷால்.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தாள் அனன்யா. நினைச்சேன் என்றவாறு சுபா வந்து நின்றாள்.. இப்படியாக அந்த நாள் முடிந்தது

சுபா மனதிலும் ஆசைகள் இல்லாமல் இல்லை .ஆனால் அவளுக்கு பொருத்தமானவனை தேடுவதில் சிக்கல் இருந்தது. சுபாவிடமே கேட்டான் விஷால், என்ன சுபா உனக்கு யாரையுமே பிடிக்கலையா ? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு உன்னை பிடிக்கும். காதல் என்பது வேற ,பிடிச்சிருக்கிறது வேற என்றாள் சுபா என்ன பொறுத்த வரைக்கும் காதல் என்பது நம்பிக்கை. அது யார் கிட்ட வருதோ அவங்களை அடுத்த செகண்டே கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான்..

இன்னும் இரண்டு நாட்களில் காதலர் தினம் வருகிறது. அனன்யா, சுபா இரண்டு பேருமே அன்று லீவ் போட்டு விடலாம் என இவனுக்கு ஐடியா கொடுத்தார்கள். என்ன செய்யலாம் என்று பிளான் போட்டார்கள். திருச்சி மலைக்கோட்டைக்கு போகலாம்.. வேண்டாம் வேண்டாம் என்றான் விஷால். சிம்பிளா சுபா வீட்டில் கேக் வெட்டலாம் என்றான். அதெல்லாம் வேண்டாம் நாம மலைக்கோட்டைக்கு போறோம் அப்புறம் சினிமாவுக்கு போறோம் அப்புறம் தஞ்சாவூர் பெரிய கோவில் போறோம் என்றாள் அனன்யா. சுபாவும் அதை ஆமோதித்தாள் . எப்போதும் போல் காலேஜ் வந்து அதன் பிறகு சேர்ந்து போகலாம் என முடிவெடுத்தார்கள்.சுபாவுக்கு நிறைய ப்ரொபோசல் வந்தன ஆனால் அவள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. கொஞ்ச நாளாய் அவளுடைய மனதில் குழப்பம் இருந்தது அது சரியா வருமா வராதா என்று ? அவளுடைய மனம் ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருந்தது.


அன்று காதலர் தினம். விஷால் மனம் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. விஷால் சீக்கிரமே காலேஜ் வந்து விட்டான் அனன்யாவும் வந்துவிட்டாள். இவனை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் சொன்னாள் . சுபா இன்னும் வரவில்லை. தஞ்சாவூர் ஸ்டேஷனில் மீட் பண்ணுவதாக சுபா சொன்னாள் . ஏன் சுபா ஒரு மாதிரி இருக்கிற என்றான் விஷால்.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே ... கையில ஏதோ கார்டு வச்சிருக்கியே கிரீட்டிங் கார்டா ? யார் அந்த அதிர்ஷ்டசாலி பையன்? என்றான் நீதான் விஷால்.. ஐ லவ் யூ விஷால் என்றவாறு இவனை கட்டி அணைத்தாள் ...