iravukku aayiram kaigal - 48 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 48

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 48

தைபூசமன்று ராம், ப்ரீத்தி, தீபு, பிரேமா எல்லோரும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கவனிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கேரளா.ராஜு வரவில்லை. அவன் வீட்டில் விசாரித்த போது அவருக்கு உடம்பு சரியில்லாததால் இந்த வருஷம் வர முடியலன்னு அவரோட friend மூலமா சொல்லி விட்டாரு. ராம் நம்ப முடியாமல் சிசிடிவி காட்சிகளை மறுபடி ஆராய்ந்தான்.கேரளாவில் இருந்து வநத குரூப் ஒன்று இன்னும் அங்கேயே தங்கி இருப்பதாக lodge ஒன்றில் இருந்து தகவல் கிடைத்தது .ராம் விரைந்து அங்கு போனான்.ஆமா சார் ஒரு ஆள் நேத்து கோவிலுக்கு போனப்போ மயக்கம் போட்டு விழுந்துட்டாரு . அவங்க இப்போ ஹாஸ்பிடல் போயிருக்காங்க.ஸ்ரீதேவி நர்சிங் home .உடனடியாக அங்கு ப்ரீத்தியை அனுப்பி வைத்தான். ப்ரீத்தியை பார்த்ததும் ராஜு உறைந்து போனான். எப்படி இருக்கீங்க ராஜு அங்கிள் ? அங்கு இருந்து வேகமாக வெளியேற முயற்சித்த போது போலீஸ் அவனை பிடித்தது.

நான், கதிர், ரமேஷ் மூணு பெரும் சேர்ந்துதான் இந்த கடத்தல் பிளானை போட்டோம். ரமேஷ் ஒரு விபத்துல சிக்கி இறந்துட்டான். கதிர் அந்த பணத்தை எங்க பங்கை கொடுக்காம ஏமாத்திட்டான்.அவனை எதிர்த்து பேச முடியல என் பிள்ளைகளை கொன்னுடுவேன்னு மிரட்டுனான்.திரும்ப என்னை இந்த ஊருக்குள் வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பி வெச்சான் . ஆன நீங்க என்னை கண்டுபிடிச்சிடீங்க. அவன் போட்டோ எதுவும் உங்ககிட்ட இருக்கா?இல்லையே சார். ஜெகன் சார் accident க்கு அப்புறம் ஒரு நாள் கதிர் எனக்கு போன் பண்ணி இன்னும் கொஞ்ச நாள்தான் அதுக்கப்புறம் ஒரு bulk அமௌன்ட் நம்ம கைக்கு வர மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னான். அதுக்கப்புறம் நீ வெளியே வரலாம்னு சொன்னான். போலீஸ் ஒரு பக்கம் என்னை தேடுனப்போ நான் அடைக்கலமானது இந்த ஆசிரமத்தோட கிளை இருக்கிற கேரளாவுல. அங்கேயிருந்து இங்கே வந்தப்போதான் உங்ககிட்ட மாட்டிகிட்டேன்.ரமேஷ்தான் ஜெகனை மெரட்டுனான். என்னோட வீட்டுக்கு போனால் கதிர் போட்டோ கிடைக்கும் என்றான். ராஜுவுக்கு அப்போது போன் வந்தது. வீட்டில் இருந்த பெரிய பையனை காணவில்லை என கூறினர். என்னால முடியாது சார் அவனுக்கு எப்படியோ நான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டா விஷயம் தெரிஞ்சு போச்சு. என்னை விட்டுடுங்க சார் என அழுதான். ஓகே ஓகே நாங்க இப்போ போறோம் . ரெண்டு நாட்கள் கழித்து ராஜு போன் பண்ணினான். பையன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் சார். நாங்க குடும்பத்தோட கேரளாவுக்கே போறோம். ரொம்ப நன்றி சார் என்றான்.

ராம் ராஜூவுடைய கால் ஹிஸ்டரியை நெட்ஒர்க் ஆபரேட்டர் மூலமாக வாங்கினான். அப்போது ப்ரீத்தியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று பிரேமா போன் செய்தார். ராம் வேகமாக பிரேமா வீட்டுக்கு போனான். என்ன நடந்துச்சு போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர். இன்னைக்கு சாயங்காலம் காலேஜ் விட்டு வரப்போ கத்தி காட்டி மிரட்டி யாரோ ப்ரீத்தியை கடத்திட்டு போயிட்டாங்க . டிரைவரை அழைத்து விசாரித்தான் உன் பேரென்ன முத்து.எத்தனை வருஷமா வேலை பாக்குறீங்க 10 வருஷமா ..கடத்தல் கும்பலிடம் இருந்து போன் வந்தது.10 லட்சம் டிரைவர் கிட்ட குடுத்து அதனுப்புங்க அவன் மட்டும் தனியா வரணும் என்று போனில் மெசேஜ் வந்தது. போலீஸ் follow பண்ணினால் பொண்ணு உயிரோட இருக்காது என்று எச்சரித்தார்கள்.
ரமேஷ் இவனை வரவேற்றான் என்ன மச்சி பழைய technic நம்மகிட்டயேவா ?நான் முந்திகிட்டேன் அவ்ளோதான் கதிர் என்றான்.ப்ரீத்தி வாயை துணி கொண்டு அடைத்து வைத்திருந்தான் ரமேஷ். இவங்க அப்பனை போட்டு தள்ளினேன் ஆனா இவளை வெச்சுதான் பெரிய அமௌன்ட் கேட்கலாம்னு இருந்தேன் ஆன நீ குறுக்க வந்துட்டியே என்று துப்பாக்கியால் சுட்டான் முத்து என்ற கதிர்.ரமேஷின் போனில் இருந்து பிரேமாவுக்கு இன்னொரு மெசஜை அனுப்பினான் பணம் பத்தாது அதனால் 50 லட்சம் டிரைவரிடம் குடுத்து அனுப்பவும் . உனக்கு எவ்ளோ கொலை பண்ணாலும் போதாது இல்ல என்ற குரல் கேட்டு திரும்பினான். ராம் முத்துவின் மகனை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருந்தான். வேணாம் சார் வேணாம் நான் செஞ்சதெல்லாம் தப்புதான் என்று கெஞ்சினான். என் பையனை ஒன்னும் பண்ணீடாதீங்க என்றவாறு ப்ரீத்தியினை நோக்கி குறி வைத்தான் .நீ எந்த எல்லைக்கும் போவேன்னு தெரியும் அதனால உன்னோட துப்பாக்கியை காரிலேயே மாத்தி வெச்சோம் அதுல இப்போ இருந்தது டம்மி புல்லெட்ஸ்.. ரமேஷ் ப்ரீத்தியை ரிலீஸ் பண்ணு என்றான் . என்றான்.முத்து என்ற கதிர் கைது செய்யப்பட்டான்.

ரமேஷ் குறித்து ராஜு சொன்னது பொய். ரமேஷுடைய நம்பருக்கு பல முறை ராஜு கால் செய்திருப்பதை கண்டுபிடித்தான். ரமேஷை போலீசில் சொல்லி அதே போல ஒரு கடத்தல் நாடகத்தை திரும்பவும் நடத்தினான் ராம். ரமேஷ் முத்துவின் மகனை அங்கே அழைத்து வரவும் ஏற்பாடு செய்திருந்தான்.

 

ராமுக்கு தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது. வணக்கம் சார், ராம் இருக்காங்களா?நான் ராம்தான் பேசுறேன். உங்ககிட்ட ஒரு கேஸ் விஷயமா பேசணும் .எப்போ வந்தா பாக்கலாம் ? உங்க பேரு.. என் சாரதா.என்ன விஷயம் சொல்லுங்க அதை போனில் சொல்ல முடியாது . சரி இன்னைக்கி ஈவினிங் 5 மணிக்கு வாங்க. ரொம்ப நன்றி சார்.

ஆபீஸ் வந்த பெண்மணிக்கு 50 வயதிருக்கும்.வாங்க உக்காருங்க என்றான், போன்ல பேசியிருந்தேன் என் பேரு சாரதா .ஞாபகம் இருக்கு என்ன விஷயம் சொல்லுங்க. என்னோட முன்னாள் husband பிரேமை கொன்னுட்டாங்க சார். ம்ம் எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகி 10 வருஷமாகுது. என்னால அவரை இன்னும் மறக்க முடியல.மறுபடி நான் என் வீட்டுல போர்ஸ் பண்ணதால கல்யாணம் பண்ணிக்கிட்டேன் .அவரும் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டாரு.பிரேமோட wife பேரு நித்யா.எப்படி நடந்தது அவர் மரணம்.ரோட்ல காய்கறி வாங்க போனவரை 4 பேர் சேர்ந்து வெட்டி இருக்காங்க.அவர் அங்கேயே இறந்துட்டாரு.வெரி சாரி. கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தான். போலீஸ் என்ன சொல்லுறாங்க.அவங்க என்னை மதிக்கலே .இருந்தாலும் என் வக்கீல் மூலமா விசாரிச்சப்போ அந்த ஏரியாவுல கஞ்சா புழக்கத்தை காட்டி கொடுத்ததா என் husband பத்தி சொல்லி இருகாங்க. ஆனா அது உண்மையில்லை. நீங்கதான் அந்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கணும். எப்போதும் கேக்குற கேள்விதான் நீங்க யார் மேலயாவது சந்தேகப்படுறீங்களா?என்னால அவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியல. யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியல. சரி மேடம் மத்த டீடெயில்ஸ் எல்லாம் குடுத்துட்டு போங்க நான் விசாரிக்கிறேன்.பிரேமுக்கு ரவி என்ற சகோதரனும், கீதா என்ற சகோதரியும் இருந்தனர்.பிரேம் இரண்டாவதாக திருமணம் செய்த பெண் பெயர் நித்யா அவளது சகோதரன் சரவணன். சரவணனும் அவர்களுடனே வசித்து வந்தார்.நித்யாவின் அம்மா, அப்பா உயிரோடு இல்லை. பிரேம் சம்மந்தப்பட்ட செய்தித்தாள் செய்திகளை சேகரித்தான்.கங்காதரன் என்பவன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தான். தீபு இந்த கேசுல motive என்னவாயிருக்கும்னு கண்டுபிடிக்க முடியல.அதான் பாஸ் எனக்கும் புரியல. அவர் ஒரு சாதாரண பேங்க் ஆபீசர். அவர் சமூக சேவகரும் கிடையாது.அவரை போய் ரவுடிங்க ஏன் திடீர்னு கொல்லனும்.நாளைக்கு நான் பிரேம் வீட்டுக்கு போறேன் என்றான் ராம். நீ கங்காதரன் ப்ரொபைல் ஒன்னு ரெடி பண்ணு அவனோட குடும்ப பின்னணி, friends ஒண்ணுத்தையும் விடாதே அதுலதான் இந்த கொலைக்கு காரணமான ஆள் பத்தி தெரிய வரும். அதே சமயம் சாரதாவுக்கு என்ன இத்தனை வருஷம் கழிச்சு அக்கறை என்ற கோணத்திலும் யோசித்தான். கொலை நடந்த காட்சியின் சிசிடிவி காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டு இருந்தது.அது அவர் காய்கறி வாங்கிவிட்டு வழக்கமாக டீ குடிக்கும் பேக்கரியாக இருந்தது,அதை இப்போது மூடி விட்டார்கள்.ராம் பிரேம் வீட்டுக்கு போன போது யாருமில்லை. எதுவும் அதிக பதட்டமில்லாமல் இருந்தது. ப்ரேமுடைய அப்பா பரமசிவம் மட்டுமே இருந்தார். வாப்பா நீ வருவேன்னு சாரதா போன் பண்ணி சொன்னா.எல்லோரும் வெளிய போயிருக்காங்க. என் மூத்த பையன்தான் பிரேம். என்னவோ என்னால இன்னும் நம்ப முடியல. ம்ம் பரமசிவம் சார் உங்க மகனுக்கு யார் கூடயாவது முன்விரோதம் எதுவும் இருந்ததா ? அப்படி இருந்தாலும் இப்படி நடுரோட்டுல வெட்டுற அளவுக்கு ஒருத்தரும் இல்லை தம்பி. என் வக்கீல் ஒருத்தர் இருக்காரு பேரு பாலகிருஷ்ணன்.அவர் கிட்ட பேசுங்க அவர் எல்லா விஷயமும் டீடைலா சொல்லுவாரு.பாலகிருஷ்ணனுடைய விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்தார். நான் உங்க பாமிலியிலே உள்ள எல்லோரையுமே மீட் பண்ணனும் எப்போ வரலாம் என கேட்டான். நான் ஏற்கனவே நீங்க இந்த கேஸ் எடுத்து investigate பண்ண போறீங்கன்னு சொல்லி வெச்சுட்டேன்.வர சண்டே வந்தீங்கன்னா சரியாய் இருக்கும்.சரிங்க சார் கண்டிப்பா வரேன்.