iravukku aayiram kaigal - 47 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 47

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 47

ராமை சந்திக்க பிரேமா என்றொரு பெண்மணி வந்திருந்தார்.கூடவே அவருடைய பெண்ணான ப்ரீத்தியும் வந்திருந்தாள்.ப்ரீத்திக்கு 18 வயதிருக்கும்.உக்காருங்க மேடம் என்ன விஷயம் என்றான். இது நடந்து 10 வருஷத்துக்கு மேல ஆச்சு .அதனால போலீஸ் கூட இந்த கேஸ் எடுக்க மாட்டேங்கிறாங்க.பரவாயில்ல சொல்லுங்க மேடம் என்னால முடிஞ்சது செய்யுறேன்.இவ பேரு ப்ரீத்தி என் ஒரே பொண்ணு.இவளோட அப்பா ஜெகன் சமீபத்துல கார் accident ல இறந்துட்டார். 10 வருஷம் முன்னாடி இவளை கடத்திட்டு போயிட்டாங்க.அப்போ 3 லட்சம் பணம் கொடுத்தாதான் இவளை விடுவேன்னு சொன்னாங்க. நாங்களும் போலீசுக்கு போகாம அந்த பணத்தை குடுத்து இவளை அழைச்சுட்டு வந்தோம். ஆனா அதுக்கப்புறம் போலீஸ் எவ்ளோ முயற்சி பண்ணியும் அவங்களை கண்டு பிடிக்க முடியலை. இப்போ என்ன பிரச்னை?இவங்க அப்பா ஜெகன் இறந்தது accident இல்லையானு ஒரு சந்தேகம்.ஏன்னாஅவர் அந்த சம்பவத்தை மறக்கலை . நமக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு சொல்லிகிட்டே இருந்தார்.போலீஸ்கிட்டேயும் complaint கொடுத்தார். இப்போ அவங்களை கண்டுபிடிக்க முடியுமா? ஏன்னா எங்களுக்கு இருக்கிற சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசு என் பொண்ணுதான். அவளுக்கு திரும்ப ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு. டீடெயில்ஸ் எதுவும் வச்சிருக்கீங்களா? ப்ரீத்தி அந்த பைலை கொடும்மா. உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்கா ப்ரீத்தி. அவங்க என்னை மயக்கத்திலே வச்சிருந்தாங்க. அதனாலே எனக்கு எதுவும் தெரியல சார். சரிம்மா நான் பாக்குறேன்.உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? இல்ல சார் . போன் நம்பர் குடுத்துட்டு போங்க.

தீபு இந்த கடத்தல் சம்பந்தமா எதுவும் நியூஸ் வந்திருக்கானு பாரு. கூகிள் மூலமாக செய்தியை தேடி எடுத்து வந்தாள். வந்திருக்கு பாஸ் பிரபல தொழிலதிபர் ஜெகன் மகள் கடத்தல். பணத்தை கொடுத்து மீட்டனர். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்.அப்போ இதை விசாரிச்ச இன்ஸ்பெக்டர் பேரு போட்டிருக்கா பாரு ஆமாம் பாஸ் துரை.. துரைதான் இதை விசாரிச்சிகிட்டு இருந்திக்கிறாரு இப்போ retire ஆயிருப்பாரு.சரி அவர்கிட்டே ஒரு appointment fix பண்ணு. நாம நேர்ல போய் பாப்போம்.துரை எளிதில் appointment கொடுக்கவில்லை.அரைமணி நேரம்தான் உங்களுக்கு time என்றார்.அந்த ப்ரீத்தி கேஸ் ல ஜெகன் எங்களை நம்பாம பணத்தை கொடுத்ததால் இப்போ அவரையே கொன்னுட்டாங்க.ஏதாவது clue கிடைச்சுதா சார்? க்ளூவா இப்போ வரைக்கும் எங்களுக்கு புரியாதது கடத்துன ஆளை பத்தி ப்ரீத்தி ஒரு வார்த்தை சொல்லலை. அதுவே எங்களுக்கு பெரிய சறுக்கல்.அப்போ எடுத்த போட்டோஸ் kidnap பண்ண உபயோகபடுத்துன கார் டீடெயில்ஸ் எல்லாம் இந்த பைலிலே இருக்கு . அவங்க ஜெகன்கிட்ட பேசுனா records கூட எங்ககிட்ட இல்ல. அதையும் ஜெகன் வெச்சுக்கிட்டார்.அவங்க மனைவிகிட்டே கூட இதை சொல்லல.அவரே பணத்தை கொடுத்துட்டு பொண்ணை அழைச்சுட்டு வந்துட்டார். எந்த இடம்னு ஏதாவது சொன்னாரா?அது ஒரு முருகன் கோவில். அங்க இருந்த பல பேரை விசாரிச்சோம் .ஆனா எந்த பலனும் இல்லை.நீங்க ஒன்னு பண்ணுங்க இந்த கேஸ் எல்லாம் எடுக்காதீங்க டைம் வேஸ்ட் தவிர உங்களுக்கும் ஆபத்து . அவங்க ரொம்ப dangerous ஆன ஆளு அவ்ளோதான் சொல்லுவேன்.

என்ன பாஸ் இவர் இப்படி சொல்றாரு ? அவரை சொல்லி தப்பில்லை, இந்த கேஸ் கொஞ்சம் சிக்கலானதுதான் ஆனா கண்டிப்பா நம்மளால solve பண்ண முடியும். ப்ரீத்திகிட்டயே என்ன நடந்ததுன்னு கேப்போம்.ப்ரீத்தி அப்போ நான் 4th ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தேன் ஸ்கூல் முடிஞ்சு கார்லே வந்துட்டு இருக்கிறப்போ இன்னொரு ஆள் முன் சீட்டுல ஏறுனாரு.அவருக்கும் டிரைவர் அங்கிளுக்கும் பழக்கம் போலன்னு நெனைச்சு ஒன்னும் சொல்லாம இருந்தேன். ஆனா அந்த ஆள் கத்திய காண்பிச்சு வண்டிய நிப்பாட்ட சொன்னான். அதுக்கப்புறம் அங்க பக்கத்துல இருந்த இன்னொரு வண்டிக்கு என் கழுத்துல கத்தி வெச்சு கூப்பிட்டுட்டு போனாங்க. அதோட நான் மயக்கமாயிட்டேன்.திரும்ப நான் வரும்போது டாடி தான் என்னை மயக்கதுலேயிருந்து எழுப்புனாரு. ம்ம் எத்தனை நாள் அடைச்சு வச்சிருந்தாங்க.ஒரு நாள்தான். அந்த ஆள் யாருனு அடையாளம் காட்ட முடியுமா ? நிச்சயமா. .உங்க டிரைவருக்கு என்ன ஆச்சு ?அன்னிக்கி மாயமானவர்தான் அதுக்கப்புறம் போலீஸ் அவங்க வீட்டுக்கு போய் விசாரிச்சும் எங்க இருக்கார்னு தெரியல.போலீஸ் அணிவகுப்பு ஏதாவது நடத்துனாங்களா குற்றவாளிகளை கண்டுபிடிக்க? ஆங் ஒரு தடவை. ப்ரீத்தி உங்களுக்கு எந்த detail ஞாபகம் வந்ததில் உடனே எங்களை காண்டாக்ட் பண்ணுங்க அது எவ்ளோ சின்ன டீடைலா இருந்தாலும் ஓகே வா . ஓகே சார்.

அந்த டிரைவர் பேரு ராஜு.பிரேமாவுக்கு போன் செய்தான் ராம்.மேடம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா சொல்லுங்க சார்.
நான் ஜெகன் சார் ரூமை பார்க்க முடியுமா ?பார்க்கலாம் சார் அவர் ரூமுக்கு யார் போறதையும் அவர் விரும்புனதில்லே.நீங்க வாங்க உங்களுக்கு ஏதாவது information கிடைக்கலாம்.பிரேமா மேடம் அந்த கடத்தல் சம்பவம் நடந்தப்போ நீங்க எங்க இருந்தீங்க ?நான் என் friend வீடு விசேஷத்துக்கு ஊட்டி போயிருந்தேன், என்கிட்ட அவர் ப்ரீத்தியை கடத்துனதை பத்தி ஒரு வார்த்தை சொல்லலை.ஆனா ப்ரீத்தி நான் ஊர்லயிருந்து வந்தவுடனே எல்லாத்தையும் சொல்லிட்டா . அவர் இது சம்பந்தமா எங்கிட்ட எதுவும் பேசலை.ஜெகனுடைய ரூம் நீட் ஆக இருந்தது.அவரின் அன்றாட குறிப்புகள் எழுதும் டைரியையைத்தான் ராம் தேடினான்.ஜெகனின் போன் என்ற கேள்விக்கு அதை ப்ரீத்திதான் பத்திரமாக வைத்திருக்கிறாள் என்று சொன்னார் பிரேமா.ப்ரீத்தி அறையிலிருந்து அதை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.அதில் ஏகப்பட்ட காண்டாக்ட்கள் இருந்தன.போனை சுவிட்ச் ஆப் செய்த நிலையிலேயே ப்ரீத்தி வைத்திருந்தாள்.accident ஆன அன்று போனை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு போய்விட்டார். அந்த போன் தான் அவர் நினைவா எங்ககிட்ட இருக்கு.ராம் அந்த போனை ஆராய்ந்தான். 10 வருடங்கள் முன்னாடி உள்ள காண்டாக்ட்கள் இருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியாமல் யோசித்தான். பழைய டிரைவர் ராஜூவுடைய நம்பர் இருந்தது. அது நிச்சயம் உபயோகத்தில் இருக்காது.ராஜூவுடைய போட்டோ ஒன்று கிடைக்குமா என கேட்டான்.பழைய ஆல்பம் ஒன்றை எடுத்து கொடுத்தார். அதில் இருந்த ராஜு போட்டோவை எடுத்துக்கொண்டான். சரிங்க இந்த போனை நான் எடுத்துட்டு போறேன் ஏதாவது information கிடைக்குமான்னு பார்க்குறேன் . சரிங்க சார்.
தீபு எனக்கு ஒரு விஷயம் புரியல ஒருவேளை ப்ரீத்தியை கடத்துனவங்க மிரட்டி இருப்பாங்களோ .வாய்ஸ் ரெகார்டிங்ஸ் ஏதாவது இருக்கிறதா என பார்த்தான். அப்படி எதுவும் இல்லை. இருக்கலாம் பாஸ் ராஜுவுக்கு ஏதாவது கிரிமினல் ரெகார்ட் இருக்கானு பார்க்கணும் ஒரு வேளை ஜெயிலில் இருந்தால் ? அப்படியெல்லாம் இருந்தால் போலீசுக்கு தெரியாமல் இருக்காது.ராஜு வீட்டுக்கே போய் பார்த்தால் என்ன?அவனே இல்லாத போது அவன் வீட்டுக்கு போய் பார்த்து என்ன பிரயோஜனம்.ம்ம் நிச்சயம் இந்த போன் மூலம்தான் கம்யூனிகேட் பண்ணி இருக்கணும்.எதுக்கும் நாம நெட்ஒர்க் ஆபரேட்டர் கிட்ட கேட்டு பார்ப்போமா ?. சரி ட்ரை பண்ணி பாப்போம் ப்ரீத்தியை கடத்துன அன்னிக்கி யாரெல்லாம் ஜெகனுக்கு கால் பண்ணாங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுவோம். அதுலேர்ந்து அந்த பர்டிகுலர் ஆளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணுவோம்.

ஜெகனுடைய போன் கால் ஹிஸ்டரி உடனடியாக கிடைக்காது கொஞ்சம் டைம் ஆகுமென்று சொன்னார்கள். சரி அது வரை நாம வெயிட் பண்ணலாம் . அந்த முருகன் கோயில்னு சொன்னாங்களே அங்கே போய் பார்ப்போமா ? போகலாம் சார். 10 வருஷங்களில் முருகன் கோவில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. கோவிலை சுற்றி வந்தான் ராம்.அங்கிருந்த சித்தர் ஒருவர் சமீபத்தில் தான் முக்தி அடைந்ததாகவும் அவருடைய சீடர் இப்போது அங்கே ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்தது.போலீஸ் கடத்தல் சம்பவம் பத்தி விசாரிச்சாங்க ஆனா எங்க யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டோம். இந்த போட்டோல இருக்குற ராஜுங்கிற ஆளை பார்த்தாலோ இல்ல ஏதாவது தகவல் தெரிஞ்சலோஉடனே எங்களுக்கு சொல்லுங்க. சரிங்க சார். எல்லா வாட்ஸாப்ப் குழுக்களிலும் ராஜு பற்றி தெரிந்தால் உடனே தெரிவிக்கவுமாறு request கொடுத்திருந்தான்.

ஜெகனுடைய கால் history கிடைத்து விட்டது. ராஜுதான் கடத்தல் சம்பவம் நடந்த அன்று கடைசியாய் பேசி இருந்தான். வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ராஜு கிடைத்தால்தான் இந்த கேசில் முன்னேற்றம் ஏற்படும்.ராஜூவுடைய குடும்பத்தை சந்தித்தான். அவர்கள் இப்போது ஓரளவு நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள் எனவும் எங்கிருந்தோ ராஜு அவ்வப்போது பணம் அனுப்புகிறான் என்றும் தெரிவித்தனர்.அவனுடைய வீட்டில் அந்த முருகன் கோவில் படம் ஒன்று பெரியதாக மாறியிருந்தது. அம்மா சார் அவர் முருக பக்தர் வருஷா வருஷம் காவடி எடுக்க எங்கிருந்தாலும் வந்து விடுவார் என்றார்கள். தைப்பூசம் நெருங்கி கொண்டிருந்தது. கோவிலில் சிசிடிவி கண்காணிப்பை அதிகரிக்க சொல்லியிருந்தான்.அதே போல வெளி மாநிலங்களில் உள்ள முருகன் கோவிலுக்கும் request அனுப்பியிருந்தான். ராம் முயற்சி வீண் போகவில்லை. கேரளாவில் இருந்து ஒருவர் ராஜூவை பார்த்ததாக மெசேஜ் பண்ணியிருந்தார். அவனுடைய லொகேஷனையும் அனுப்பியிருந்தார். கேரளா
போலீஸ் விரைந்து சென்று அவனை பிடித்தது ஆனால் அது வேறு ராஜு என்று தெரியவந்ததால் ராம் ஏமாற்றம் அடைந்தான். தீபு இப்போ ராஜூவை வெளியே கொண்டு வர என்ன வழின்னு தெரியலையே ? கடத்த சொன்ன ஆள பத்தி எந்த இன்போர்மஷனும் இல்லையே . இருக்கு அவன் பேரு ரமேஷ். இன்ஸ்பெக்டர் கொடுத்த பைலில் அந்த information இருந்தது. மறுபடி அந்த பழைய இன்ஸ்பெக்டரை சந்தித்த போது மொத்தம் மூணு பேரு involve ஆயிருக்கிறதா ஜெகன் எங்கிட்ட சொன்னாரு .அதிலே ஒருத்தன்தான் ரமேஷ். அவன் சொந்த ஊரு காஞ்சிபுரம். அங்க அவன் கூட ஜெயிலில் பழக்கமானவன் ஒருத்தனும் சேர்ந்துதான் இந்த கடத்தல் பண்ணி இருகாங்க. ரமேஷுடைய உருவத்தை வரைய ஏற்பாடு செய்ய பட்டது. ப்ரீத்தி கொடுத்த தகவிலின் அடிப்படையில் உருவமொன்று வரையப்பட்டது. அதை வைத்து trace செய்த போது அவன் ஒரு accident இல் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பு சொன்னது.