iravukku aayiram kaigal - 46 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 46

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 46

ராமுக்கு ஏற்கனவே போன் செய்த ஆள் திரும்ப போன் செய்தான். சொல்லுங்க சார் நான் உங்களை மீட் பண்ணனும் . எதுக்காக? விக்ரம் இந்த கொலையை பண்ணலை.எப்படி சொல்லறீங்க?அந்த நேரத்துல அவன் என் கூடத்தான் இருந்தான்.சரி எங்க மீட் பண்ணலாம். நானே மெசேஜ் பன்றேன் என்றான். மெசேஜ் வந்ததும் ராம் அவன் சொன்ன இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போய் சேர்ந்தான்.என் பெயர் வருண் விக்ரமும் நானும் கிளோஸ் friends தான்.. அவன் கொலை செஞ்சிருப்பானு எனக்கு தோணலை.பின்ன எப்படி அவனோட கைரேகை ப்ரியா மேல வந்தது . ப்ரியா கொல்லப்பட்டதா சொல்லப்படுற நேரத்துல என் கூட பார்ல இருந்தான் சார் . அந்த ஜீப் அவனோடாதில்லை. என்னுடையது, நீங்க இதை போலீசில் சொல்லியிருக்கலாமே? அவன் ஏன் surrender ஆனான்னு புரியாம நான் போய் சொன்னாலும் யாரும் நம்ப போறதில்லை. வருண் ஏதாவது எவிடென்ஸ் இருக்கா அவன் உங்க கூட இருந்ததுக்கு? அப்படி எதுவும் இல்லையே சார் . anyway தேங்க்ஸ் வருண். நான் விக்ரம் கிட்ட பேசி பார்க்குறேன் என்றான் ராம்.

போலீஸ் அனுமதி பெற்று விக்ரமை சந்தித்தான். எதுக்காக நீங்க இதை செய்யறீங்கன்னு புரியல . ப்ரியாவோட உங்களுக்கென்ன சம்பந்தம் .என்னை எதுவும் கேக்காதீங்க நான் பதில் சொல்ற நிலைமையை கடந்துட்டேன் என்றான் விக்ரம்.ராம் ஏமாற்றத்துடன் திரும்பினான். வருணுக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.இரண்டு நாட்கள் கழித்து போலீஸ்கிட்டேயிருந்து கால் வந்தது . உங்களுக்கு வருண் அப்படின்னு யாரையும் தெரியுமா ? சொல்லுங்க சார் என்ன ஆச்சு? அவர் accident ல இறந்துட்டார்.
அவர் கால் ஹிஸ்டரில உங்க நம்பர் எமெர்ஜெண்சி னு save பண்ணியிருந்தார். அதான் உங்களை கூப்பிட்டோம் . நான் உடனே வரேன் . வருண் குடும்பத்தார் கதறி அழுது கொண்டிருந்தனர். லாரி மோதி சம்பவ இடத்திலே மரணம் . வருணுடைய போனை ராம் கேட்டு வாங்கி கொண்டான். ஆனால் அது லாக் ஆகி இருந்தது . வருணின் மரணம் சந்தேகத்துக்கு இடமானதாக போலீசார் சொன்னார்கள்.மேலும் வருணும் குடித்திருந்ததாக சொன்னார்கள். வருண் மறைவு ராமை ரொம்பவும் வருத்தமடைய செய்தது . இருந்த ஒரே சாட்சியையும் கொன்று விட்டார்களே என்று குமைந்தான். வருணுடைய போனை லாக் ஓபன் செய்ய கடையில் கொடுத்திருந்தான்.

வருணும் ,விக்ரமும் கூட படித்தவர்கள் என்று தெரிந்தது . வருண் நல்ல வேலையில் இருந்தான். பார்த்திபனிடமும், சதீஷிடமும் வருணை சந்தித்தது பற்றி சொன்னான் ராம். அப்போ யாருக்காகவோ இந்த பழியை விக்ரம் ஏத்துக்கிட்டு இருக்கான் என்றார்கள். வருண் சொன்ன பாரின் சிசி டிவி footageகளை ஆராய்ந்தார்கள் அதில் ஒன்றும் தெளிவாக இல்லை. பார் சர்வீஸ் பையனிடம் வருண், விக்ரம் போட்டோவை காட்டி விசாரித்த போது அவர்கள் எப்போவுமே சேர்ந்துதான் வருவார்கள் . ஆனா அன்னிக்கி என்னவோ ஒரு போன் வந்துச்சு திடீர்னு விக்ரம் கிளம்பி போயிட்டாப்ல என்றான். ஆங் அப்போ வருண் ஏதோ சொன்னாப்ல அவளுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்காதேன்னு சொன்னாரு சார். அவங்க பேரு எனக்கு ஞாபகம் இல்லையே . சரி ஏதாவது ஞாபகம் வந்த இந்த நம்பர்ல கூப்பிடு என்றான் ராம். இதுல ஏதோ ஒரு பொண்ணு involve ஆகியிருக்கான்னு தெரியுது. யாரைன்னு சந்தேகப்படுறது ? என கேட்டான் பார்த்திபன்.

ப்ரியாவுக்கு ஒரு அஞ்சலி கூட்டம் நடத்தலாம் என ராம் சொன்னான். அதில் பங்கு பெரும் நபர்களை வைத்து ஏதாவது clue கிடைக்கிறதா என பாப்போம். ப்ரியாவுடைய paintings நிறைய இருக்கு அதை எக்ஸிபிஷன்ஆஹ் நடத்தலாம் என்று பார்த்திபன் ஐடியா கொடுத்தான். சதீஷும் அதை ஆமோதித்தான்.அஞ்சலி கூட்டத்தோடு painting எக்ஸிபிஷன் சேர்த்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லோரும் தங்களுடைய நினைவஞ்சலி குறிப்புகளை விட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருந்தான் பார்த்திபன். வீடியோ coverage arrangement செய்திருந்தான்.எல்லோரும் ப்ரியாவிற்காக வந்திருந்தார்கள் .ஸ்வாதி சற்று தாமதமாக வந்தாள்.ப்ரியாவே ஒரு எக்ஸிபிஷன் வைக்கனும்னு ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தாள் என சதீஷ் சொன்னான். எல்லோரும் குறிப்பிட்டு ராமிடம் ஒரு விஷயத்தை சொன்னார்கள்.ஒரே ஒரு painting மட்டும் மிஸ் ஆகிறது அதனுடைய போட்டோவையும் ராமுக்கு வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள். அது ஒரு குதிரையின் ஓவியம் அந்த ஓவியம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொன்னார்கள் .

ராமுக்கு செல்போன் கடையில் இருந்து போன் வந்தது. போன் லாக் எடுத்துவிட்டோம் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். வருணின் போனில் ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ் இருந்தது, என்னை யாரோ மிரட்டுகிறார்கள் சார் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்று மட்டும் இருந்தது.அவனுடைய போனில் இருந்த கால் ஹிஸ்டரி தேடி பார்த்ததில் அவனும் விக்ரமும் பேசியதுதான் அதிகம் இருந்தது. காணாமல் போன painting தேடி எடுக்கும்படி சொன்னான் ராம்.பார்த்திபனும் சதீஷும் அதை எங்காவது பார்த்தார்களா என கேட்டு friends குரூப்பில் ஷேர் செய்திருந்திருந்தார்கள்.ராம் குற்றவாளியை நெருங்கி விட்டதாகவே நினைத்தான். ஆனால் குற்றவாளி சாட்சிகளை அழித்து கொண்டே வருவது ராமுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
ப்ரியா கடைசியாக வரைந்த ஓவியம் அந்த குதிரை ஓவியம் என்பதையும் அவளுடைய நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர்.வருணின் போனில் ஏரளமான போட்டோக்கள் இருந்தன. அதில் அழிக்கப்பட்ட போட்டோக்கள் இருக்கிறதா என ராம் பார்த்தான். அவனுடைய முயற்சி வீண் போகவில்லை.ராம் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டான்.

பார்த்திபனையும், சதீஷையும் அழைத்து விஷயத்தை சொன்னான். அப்போது பார் பையனிடம் இருந்து போன் வந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்வாதி சார்.ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று போனை வைத்தான். ஏற்கனவே நிறைய பேர் ஸ்வாதி வீட்டில்தான் painting கடைசியாக பார்த்ததாக சொன்னார்கள். ஸ்வாதி வீட்டுக்கு போன போது ஸ்வாதியுடைய அப்பா மட்டுமே இருந்தார்.ப்ரியாவுடைய ஓவியம் வரவேற்பறையை அலங்கரித்து கொண்டிருந்ததது .இதை வாங்கத்தான் ப்ரியா வந்திருக்க வேண்டும். ஸ்வாதியை வரவழைத்து விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என்றாள்.நீங்கதான் விக்ரமுக்கு கால் பேசியிருக்கீங்க அதோட நீங்களும் நீங்களும் விக்ரமும் காதலர்கள்னு தெரிஞ்சு போச்சு . நீங்க போட்ட இன்ஸ்டாகிராம் reels காட்டவா உங்களுக்கு ? எனக்கு விக்ரமை தெரியும் ஆனா லவ் பண்ணவெல்லாம் இல்லை.இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணி இவங்க மேல complaint கொடுப்போம் . ஸ்டேஷனுக்கு போனாதான் உண்மைய சொல்லுவாங்க போல . நீங்களும் விக்ரமும் நெருக்கமா இருக்குற போட்டோஸ் எங்களுக்கு வருண் மொபைல் மூலமா கிடைச்சிடுச்சி .அதையும் காட்டட்டுமா ? வேணாம் சார் அவ மேல எந்த தப்பும் இல்ல என்றார் பிரபாகர்.நாந்தான் அவளை கண்டிச்சு வளர்த்திருக்கணும் இப்போ நானே கொலைகாரனா நிக்கிறேன் என்றார். அன்னிக்கி ப்ரியா painting வாங்க வந்தப்போ விக்ரமும், ஸ்வாதியும் எல்லை மீறி போயிட்டதா சொல்லி போட்டோக்களை காண்பிச்சா .விஷயம் வெளியிலே தெரிஞ்சா என் பொண்ணோட எதிர்காலமே பாழாயிடும்னு நானே ப்ரியாவோட கழுத்தை நெரிச்சு கொன்னேன் .விக்ரமை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன்.அவன் ஸ்வாதிக்காக எதையும் செய்ய தயாராய் இருந்தான். சாட்சியா இருந்த வருணை accident பண்ணி கொன்னேன்.இப்போ வருண் மூலமாகவே மாட்டிகிட்டேன் என்றார். என் பொண்ண விட்டுடுங்க சார் அவளுக்கு எதுவும் தெரியாது என்றார்.பிரபாகரை போலீஸ் அரெஸ்ட் செய்தது. அந்த குதிரை ஓவியத்தை அங்கிருந்து பார்த்திபன், சதீஷ் சோகத்துடனே எடுத்து சென்றனர்.