iravukku aayiram kaigal - 40 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 40

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 40

குமார் எனக்கு ஒன்னும் தெரியாது நான் சாதாரணமாத்தான் விசாரிச்சேன் என்றான். சரி உனக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா எங்களுக்கு அவசியம் சொல்லு . கண்டிப்பா சார். வேற யாராவது மெசேஜ் பண்ணியிருக்காங்களா ? இல்லை சார் . ஒரு வேலை திவ்யா டெலிட் பண்ணியிருக்கலாம். திவ்யாவுடைய அப்பாவுக்கு போன் செய்தான். ஏதாவது டெலிட் பண்ணியிருந்தீங்கன்னா ப்ளீஸ் சொல்லுங்க ..ஒண்ணுமில்ல சார் . என் பொண்ணும் cousin தீபனும் கார் பார்க்கிங்
ஏரியாவுல kiss பண்ண வீடியோ வந்திருந்திச்சு . ஓ அது எந்த நம்பர்லேயிருந்து வந்திருந்துச்சு .அது வேற யாருமில்ல அஞ்சலி அப்பாதான். இதை ஏன் மொதல்லேயே சொல்லலே . அவர் இப்படி செய்வார்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. எதுக்கும் அவர்கிட்ட விசாரிச்சு பாக்குறேன். அஞ்சலி அப்பாவுக்கு போன் போட்டான். அவர் காஞ்சிபுரத்தில் வேலை பார்த்து வந்தார். நீயெல்லாம் ஒரு மனுஷனா ஏதோ சின்ன பசங்க தப்பு பண்ணிட்டாங்க அத வீடியோ எடுத்து மெரட்டிருக்கே ? எந்த வீடியோ நான் எதுவும் பண்ணலே சார். உங்க போனிலேயிருந்தான் திவ்யாவோட வீடியோ போயிருக்கு, இல்லை சார் நான் அனுப்பலை. உங்க போன் எதுவும் யாருகிட்டயும் குடுத்திருந்தீங்களா. ஆமா சார் செல் ஷாப் ல ரிப்பேருக்கு கொடுத்திருந்தேன். நீங்க சொல்ற தேதியில் அந்த போன் எங்கிட்ட இல்ல . சரி எந்த கடையில சொன்னீங்க . அமரன் செல் ஷாப் என்று இருந்தது . உள்ளே பெண்களும், ஆண்களும் மும்முரமாக மொபைல் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ம்ம் அந்த வீடியோ எல்லோர்கிட்டையும் இருக்கு சார். என்ன சொல்லறீங்க பார்க்கிங் ல கிஸ் பண்ற வீடியோ தானே இது எங்கிருந்து வந்துச்சுனு தெரியல நீங்க சைபர் crime ல complaint பண்ணுங்க. ஆனா நீங்க அனுப்பலியே நாங்க ஏன் சார் அனுப்ப போறோம். இல்ல தெளிவா அந்த பெண்ணுக்கே அனுப்பிருக்காங்க அதுவும் அவ பிரண்டோட அப்பா போன் மூலமா. இங்கே யாரவது வேலை பார்த்து சமீபத்துல நின்னுட்டாங்களா ? இல்ல இந்த போனை அட்டென்ட் பண்ணது யாருன்னு ரெகார்ட் இருக்கா .இருங்க ஒரு நிமிஷம் பாத்து சொல்றேன் அந்த பொண்ணு பேரு ராகவி அவதான் இந்த போன் ரிப்பேர் அட்டென்ட் பண்ணா . வேலையை விட்டு நின்னு ஒரு வாரம் ஆச்சு.அவங்க போன் நம்பர் குடுங்க.

ராம் சைபர் crime இல் complaint செய்தான் . அது எங்கிருந்து டவுன்லோட் செய்யப்பட்டதோ அதை உடனடியாக அழிக்க ஏற்பாடு செய்தான். ராகவிக்கு போன் செய்தான் . எடுக்கவில்லை. சைபர் crime அலுவலகத்துக்கு சென்று ராகவி மீது புகார் குடுத்தான். அப்புறம் ராகவியிடம் இருந்து போன் வந்தது. மன்னிச்சிடுங்க சார் நான் வேணும்னு பண்ணலை . என் கூட வேலை பார்த்த பரதேசி பண்ண வேலைதான் அது . அன்னிக்கி அந்த போனை அட்டென்ட் பண்ணது நான்தான். நான் இல்லாத நேரம் பார்த்து இந்த வேலைய பார்த்துட்டான் சார். யாரு? குமாரு.. எந்த குமாரு அவங்க அப்பா கூட வாட்ச்மேனா இருக்காரே உங்களுக்கு எப்படி சார் தெரியும் .அவன் இப்போ இங்கே பார்ட் டைமா தான் சார் வேலைக்கு சேர்ந்தான். அவன் இப்படி பண்ணுவானு நினைக்கல சார். அந்த பொண்ணு செத்துடுச்சுனு தெரிஞ்சவுடனே வேலைய விட்டுட்டேன் சார். எனக்கு கல்யாணம் சார் என்னை விட்டுடுங்க சார் . சரிம்மா என்றான் ராம்.

லதாவும் தீபுவும் குமாரை பற்றி விசாரிக்க தொடங்கினர். மேற்கொண்டு ராம் குமாரை வரவழைத்தான். ராகவி எல்லாத்தையும் சொல்லிட்டா.. எதுக்காக இப்படி பண்ணே சொல்லு . அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சே , இந்த விடியோவை யார் எடுத்தா சொல்லு .. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை . எனக்கு தெரியாது . போலீஸ்ல already complaint பண்ணியிருக்கு . நீ சின்ன பையன் அதனாலதான் உன்னை இவ்ளோ பொறுமையா விசாரிக்குறோம். இன்னும் யார் யார் விடியோவெல்லாம் உன்கிட்ட இருக்கோ குடுத்துடு . நான் ஒன்னும் பொறுக்கி இல்ல சார். அப்புறம் ஏன் அப்படி செஞ்ச .திவ்யா கிட்ட என்ன சொன்ன .அவ தற்கொலை பணிக்கிற அளவுக்கு ஏன் போனா ?

நானா எதுவும் செய்யல தீபன் சொல்லித்தான் செஞ்சேன். வாட்? தீபன் சொல்லியா எக்ஸாம் வருது அதனாலே இனிமே என்னை பாக்க வரவேண்டாம் நாம breakup பண்ணிக்கலாம்னு திவ்யா சொல்லிட்டா . அந்த வீடியோவை நான்தான் எடுத்தேன் .திவ்யாவுக்கு இது தெரியும் நானும் அவளை விரும்புனேன் . அந்த நேரத்துல இருந்த கோபத்துல தீபன் விடியோவை அப்லோட் பண்ண சொல்லிட்டான். திவ்யாவை எப்படியாவது லவ் பண்ண வைக்கலாம்னுதான் அந்த விடியோவை வச்சு மெரட்டுனேன். ஆனா அவ இப்படி செய்வான்னு கனவுல கூட நினைக்கல. ராம் ஒன்றும் சொல்லாமல் அவனை போலீசிடம் ஒப்படைத்தான். அவனிடம் இருந்த விடீயோக்களை டெலிட் பண்ணுமாறு கேட்டுக்கொண்டான். தீபனையும் போலீஸ் அழைத்து சென்றார்கள் .அஞ்சலி ராமுக்கு நன்றி தெரிவித்து கொண்டாள். திவ்யா அப்பா வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பினார்கள் மறக்க முடியாத திவ்யாவின் நினைவுகளோடு .

ராம் சிறிது நாட்கள் ஓய்வில் இருந்தான். சில நாட்கள் கழித்து ஆபிசுக்கு வந்தான். வெல்கம் back பாஸ் என தீபு வரவேற்றாள். உங்களுக்கு ஒரு கல்யாண இன்விடேஷன் வந்திருக்கு சார். யார் அனுப்பியிருக்காங்க ? ரவின்னு ஒருத்தர். யார் சார் உங்க friend ஆ? ஆமாம் கொஞ்சம் லேட்டா marriage பண்றான். லவ் marriage ஆ . ஆமாம் வீட்டுல கடுமையான எதிர்ப்பு அதனாலே இப்போதான் சம்மதம் வாங்கியிருக்கான். அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூட லவ் இருந்தது அவன் சரியில்லை அதனாலே கொஞ்சம் பிரச்னை . கடைசியில போலீஸ் complaint குடுத்து பஞ்சாயத்து பண்ணி இப்போ இந்த கல்யாணம் நடக்குது . நீங்க போறீங்களா சார் . என்னைக்கு கல்யாணம் மே 5 . சரி போய்ட்டு வரேன் .

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன . ராம் முதல் நாள் இரவே போய் சேர்ந்து விட்டான். ரவி மணமகளை அறிமுகப்படுத்தி வைத்தான் இவன் என் friend ராம் சென்னையில டிடெக்ட்டிவ் agency வெச்சிருக்கான். இது ரேவதி சாப்ட்வேர் ல ஒர்க் பண்றாங்க என்றான். ரொம்ப சந்தோசம் நீங்க வந்தது என்றாள். எதுவும் பிரச்னை இல்லையே என்றான் ராம் . இருக்கு ஆனா அது தெரியாத மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்கோம் . அவன் பேரு விக்ரம் . எல்லாம் நல்லா போயிட்டு இருக்கப்ப திரும்ப ரேவதி வாழ்க்கையில திரும்ப வர ட்ரை பண்ணான் . ரேவதி அவனை accept பண்ணிக்கலை.அவன் எங்க ஒர்க் பண்றான். ரேவதி ஆபீஸ் ல தான். சரி ராம் கொஞ்ச வேலையிருக்கு . காலையில் பார்ப்போம் என்றான். ஓகே ரவி
ராமுக்கு தூக்கம் வரவில்லை . விக்ரம் திடீரென வந்து பிரச்னை பண்ணினால் என்ன செய்வது என்று யோசித்தான் . ம்ம் வரட்டும் பார்ப்போம் என தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டான். கல்யாணம் காலை வேளை என்பதால் அதிகாலையிலேயே முழிப்பு வந்துவிட்டது . சரியாக தூங்கியிருக்கவில்லை. ரவியை தேடினான். அவன் இன்னம் தூங்கிக்கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எல்லா வேலைகளும் மெதுவாக தொடங்கியது . நாதஸ்வரம் ,மேளக்காரர்கள் கச்சேரியை ஆரம்பிக்க துவங்கி இருந்தனர். யாரோ ஒரு பையன் வந்து இவனுக்கு coffee கொடுத்தான். அவனுக்கு தேங்க்ஸ் சொன்னான்

ராமுடைய அப்பா எல்லாரையும் அதட்டிக்கொண்டிருந்தார் வேகமா கிளம்புங்க . அவருக்கு விருப்பமில்லையெனினும் தன் ஒரே பிள்ளை கல்யாணமல்லவா ? ரேவதிக்கு அம்மா மட்டும்தான் . அவள் ஒரு ரூமில் அமைதியாக ரேவதி தோழிகளிடம் விசாரித்து கொண்டிருந்தாள் . முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க டென்ஷன் அதிகரித்து கொண்டே போனது . ரவி ரேவதியுடன் மெதுவா பேசி சிரித்து கொண்டிருந்தான் , ஆசீர்வாதம் வாங்க தாலி சுற்றுக்கு விடப்பட்டது , ஒரு கணம் யோசித்து கொண்டிருந்த பொது டுமீல் வேண்டும் சத்தம் கேட்டது . ரேவதியின் இடது தோள்பட்டையை குண்டு துளைத்திருந்தது . புடிங்கடா அவனை என்ற சத்தம் கேட்டது. ரேவதி ரேவதி என்று ரவி துடித்து போனான். ஆம்புலன்ஸ் வரவழைத்தான் ராம் . உடனே ரவியும், ராமும் ,ரேவதி அம்மாவும் ஏறிக்கொண்டனர்.

ரேவதி அம்மா அழுதவாறே இருந்தாள். ரவி அவளை சமாதானப்படுத்தினான். அந்த விக்ரமை சும்மா விடக்கூடாது என்றான் ரவி.ரேவதி ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டாள்.போலீசார் வந்து விசாரித்தனர். விக்ரம் பெயரில் ஒரு கம்பளைண்ட் குடுத்தான் ரவி. ரவி ராமை அவன் கூடவே இருக்கும்படி கேட்டுக்கொண்டான். ராம் ஆபிசுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி சென்னை வர 3 அல்லது நாட்கள் ஆகும் என தெரிவித்தான். யார் சுட்டிருப்பார்கள் என்பது புதிராக இருந்தது. விக்ரமை அரெஸ்ட் செய்து விசாரித்தத்தில் அவன் விடிய விடிய நண்பர்களுடன் குடித்துவிட்டு விழுந்து கிடந்தது உறுதியானது .

போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டது. விடியோவை ஆராய்ந்ததில் அந்த ஆளுக்கு 35 வயதிருக்கும் . கல்யாணத்திற்கு முதல் நாள் வந்தவர்கள் விடியோவில் அவன் இல்லை . கடைசி முகூர்த்த நேரத்தில் அவன் வருகை பதிவாகி இருந்தது. அவனுடைய போட்டோவை எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி ஏதாவது பழைய கிரிமினல் ரெகார்ட் உள்ளவனா என செக் செய்தனர்.அப்படி எதுவும் தெரியவில்லை. கள்ள துப்பாக்கி தயார் செய்பவர்கள் சில பேரை பிடித்து விசாரித்தனர் . இப்படியே விசாரணை நீண்டு கொண்டே போனது.ரேவதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாள். ரவி அவளிடத்தில் ஆறுதலாக பேசினான். எப்படியும் உன் கூடத்தான் கல்யாணம். என் உயிரே போனாலும் பரவாயில்லை என்றான். விக்ரம் அரெஸ்ட் ஆகி ஜாமீனில் வெளி வந்திருந்தான் .ராம் ரவியுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர்கள் யாரவது இந்த வேலையை செய்திருக்கலாம் என நினைத்தான். பழைய ஆல்பம் எல்லாம் பார்த்தான். நான் ஏன் தம்பி அப்டி எல்லாம் செய்யப்போறேன் என தழுதழுத்தார் ரவி அப்பா . உங்க ஜாதிகாரங்க யாராவது எதிர்ப்பு தெரிவிச்சாங்களா ? இல்லையே தம்பி. சங்கத்து ஆளுங்க யாரும் வரவே இல்லையே என்றார்.

ரேவதி அம்மா வகையில் ஒரு தம்பி உண்டென்றும் அவரும் இந்த கல்யாணத்துக்கு வரவில்லை எனவும் ரவி சொன்னான். அவருடைய போட்டோவையும் செக் செய்து பார்த்தான் ராம். ஒரு வேளை மண்டபம் மாறி ஆளை சுட்டிருந்தால் . அப்போதுதான் அதை கவனித்தார்கள் . மாடியில் இன்னொரு கல்யாண மண்டபம் இருந்தது . ஒரே நாளில் இரண்டு கல்யாணம் அதே முகூர்த்தத்தில் .