iravukku aayiram kaigal - 21 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 21

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 21

ராம் புதிய சவால்களை எதிர்கொள்ள ட்ரைனிங் அவசியம் என நினைத்தான் . பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தான் . லதா , தீபக் ஆகியோரும் கலந்து கொள்வதாக ஏற்பாடு .மூணு நாள் நிகழ்ச்சி . பெங்களூரு குளுமையை எப்போதோ இழந்து விட்டிருந்தது . நிகழ்ச்சியின் முதல் நாளில் மன அமைதியை பேணுவதில் தொடங்கினார்கள். அப்போதுதான் அங்கிருந்த பிற பிரைவேட் agency உறுப்பினர்களை பார்த்து பேச தொடங்கினார்கள் . சிக்கலான கேஸ் மற்றும் பணம் வராத கேஸ் முதற்கொண்டு பேசி சிரித்தார்கள் . லதா ரொம்ப ஆர்வமாக technical செஷன் பகுதிகளில் பங்கேற்றாள்.அப்போதுதான் கோவை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை சந்தித்தான் . குமரேசன் இப்போதுதான் சிறிய அளவில் துவங்கி இருந்தார்.

மாப்பிள்ளை பின்புலம் அறிவதில் இருந்து வேலைக்கு ஆள் எடுப்பது வரை சிறிய வேலைகளை செய்து வந்தார் . அவராகவே அறிமுகபடுத்திக்கொண்டார், சமீபத்துல ஒரு பையன் என்னை ரொம்பவே சோதிச்சுட்டாப்லே சார் . பேரு உல்லாஸ் நெறைய பொண்ணுங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கான் . என்கிட்டே விசாரிக்க சொன்னாங்க .

நானும் விசாரிச்சேன் அப்புறம்தான் தெரிஞ்சுது எல்லாமே செட்டப் .அப்பா, அம்மா, அக்கா எல்லாமே செட்டப் .
அப்புறம் என்ன ஆச்சு அந்த பொண்ணு வாழ்ந்தா அவன் கூடத்தான் வாழ்வேன்னு சொன்னுது . அவனை தேடுறேன் கிடைக்கலை . இதுல அவன் டீடெயில்ஸ் இருக்கு . அந்த பெண்ணுக்காக இதை செய்றீங்களா சார். நான் முயற்சி செய்றேன்.பொண்ணு டீடெயில்ஸ் ம் குடுங்க .பொண்ணு சென்னைதான் . ஐ டி கம்பெனி ல வேலை .பொண்ணுகிட்ட பேசிடறேன் . என்னால இந்த கேஸ் handle பண்ண முடில . அதனால ராம்கிட்ட handover பண்றேன்னு சொல்லிடறேன் . அந்த பெண்ணே உங்களை காண்டாக்ட் பண்ணுவா .

ரெண்டு நாளில் அந்த பெண்ணிடமிருந்து கால் வரவில்லை . குமரேசனும் போனை எடுக்கவில்லை . மூணாம் நாள் காலையில் குமரேசனிடம் இருந்து போன் வந்தது . அந்த பொண்ணு தெரிஞ்ச போலீஸ் மூலமா கேஸ் deal பண்ணிக்க போகுதாம் சார். நாம ஏதோ நல்லது நெனைச்சா அதனால அந்த கேஸ் எடுக்க வேண்டாம் சார். சரி ஓகே என்றான் .
மறு நாள் பேப்பரில் போலி ஏஜென்ட் குமரேசன் கைது . திருமண வரன் பார்ப்பதாக மோசடி . பெண்ணின் புகாரின் பேரில் நடவடிக்கை என வந்திருந்தது . இவன் கீர்த்தனாவிற்கு போன் அடித்தான் . நானே உங்க ஆபீஸ் வரேன் லொகேஷன் சென்ட் பண்ணுங்க என்றாள்.படித்த பெண்களே இவ்வாறு செய்வார்கள் என ராம் எதிர்பாக்கவில்லை .

கீர்த்தனா 30 வயதிருக்கும் . சொல்லுங்க கீர்த்தனா குமரேசன் என்ன தப்பு பண்ணாரு . சுத்த fraud சார் அந்த ஆளு என்கிட்டே பணம் வாங்கிகிட்டு
இன்னொரு fraud என் தலைல கட்ட பார்த்தாரு . லாஸ்ட் minute ல விசாரிச்சப்ப தான் எல்லாமே தெரிஞ்சுது . நீங்க இந்த கேஸ் எடுக்க வேண்டாம் . நான் போலீஸ் கிட்டே complaint பண்ணிட்டேன். குமரேசன் உங்ககிட்டே குடுத்த டீடெயில்ஸ் எல்லாம் குடுங்க .குமரேசன் ஒன்னும் என்கிட்டே அந்த மாதிரி சொல்லல . நீங்க போலாம் . எதுக்கும் என் கார்டு வெச்சுக்குங்க . குமரேசன் கிட்டே பேசிட்டு உங்ககிட்டே குடுக்குறதான்னு முடிவு பன்றோம் .

சென்னை புழலில்தான் குமரேசனை வைத்திருந்தார்கள் .மனு போட்டு பார்த்தான் . ரொம்ப பரிதாப நிலையில் இருந்தார். எப்படியாவது அந்த பொண்ணுகிட்ட சமாதானம் பேசி என்னை வெளியே கொண்டு வாங்க சார் .அந்த பொண்ணோட வீடியோவெல்லாம் இப்போ அவன்கிட்டே இருக்கு. அதுக்கு பயந்துக்கிட்டுதான் இப்படி பண்றா. எனக்கும் ஒரு பொண்ணு கல்யாண வயசுல இருக்கா சார் . ஹெல்ப் பண்ணுங்க சார் என்றார். உடனடி ஜாமீன் கிடைக்காது 15 நாட்கள் ஆகுமென்று சொன்னார்கள் . யார் சொல்வது உண்மையென்று தெரியாமல் எப்படி கேஸ் அணுகுவது ?.அவருடைய மகள் நேஹா சென்னையிலே சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தாள். அவள் நம்பரையும் கொடுத்திருந்தார்.

ரெண்டு நாளா வேலைக்கே போகல சார் . எங்கப்பா பாவம் சார் . யார் மூலமா உல்லாஸ் உங்க அப்பாவை காண்டாக்ட் பண்ணான். திருப்பதின்னு ஒரு புரோக்கர் அவர்தான் அறிமுகப்படுத்தி வெச்சாரு .இந்த பிரச்சனை ஆரம்பிச்ச உடனே அவரு மிஸ்ஸிங் . எப்படி உல்லாஸ் போலின்னு தெரிஞ்சுது அவனோட payslip கேட்டப்போ .திடீர்னு டௌரி 20 பவுன் அதிகம் கேட்டான் .சந்தேகம் வந்து செக் பண்ணோம் .

தீபக் இன்டர்நெட்ல உல்லாஸ் டீடெயில்ஸ் தேடி எடு . யார் யாரெல்லாம் ஏமாத்திருக்கான் எந்த பேர்ல எல்லாம் ஏமாத்தி இருக்கான்னு பாரு . சார் ஒரு கம்பளைண்ட் கூட இல்ல சார் இப்ப கூட மேட்ரிமோனி ல அவன் ப்ரொபைல் இருக்கு சார் . சீக்கிரம் அவனை பாக்கணும் ஏற்பாடு பண்ணு தீபக் . ஏற்கனவே 20 பவுன் நகையை கீர்த்தனா கிட்டே இருந்து வாங்கிருக்கான். எப்படி ஒரு கம்பளைண்ட் கூட file பண்ணாம இருக்காங்க போலீஸ்.

அன்று சாயங்காலம் உல்லாஸ் இவனை தேடி வந்துவிட்டான். வாங்க மாப்பிள்ளை சார் என வரவேற்றான் ராம் . நாளைக்கு எங்களுக்கு வடபழனி கோயில்ல காலைல 8 மணிக்கு கல்யாணம் . கீர்த்தனாவும் அதை புன்னகையுடன் ஆமோதித்தாள் .அவசியம் வந்துடுங்க சார்.நாம அவசியம் போனும் தீபக் அந்த திருப்பதி கண்டிப்பா வருவான் . என்ன நடக்குதுன்னு பொறுமையா இருந்து தான் பாக்கணும் . மறு நாள் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது . விசாரித்ததில் பொண்ணோட அப்பா அம்மா கூட கல்யாணத்துக்கு வரவில்லையென தெரிந்தது . திருப்பதியிடம் நல்ல வரன் இருப்பதாக சொல்லி அவனுடைய முகவரியை வாங்கிக்கொண்டான் . குமரேசன் மேலே திருப்பதியும் கம்பளைண்ட் செய்திருந்தான்.

ரெண்டு நாட்களில் உல்லாஸ் மொத்த நகையையும் எடுத்து கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டதாக கீர்த்தனா ராமிடம் அழுதவாறே சொன்னாள். அந்த விடீயோவையாவது வாங்குனீங்களா ..இல்ல சார் அத வெச்சு பிளாக்மெயில் பண்ணித்தான் கல்யாணமே பண்ணான் .கல்யாணத்துக்கு அப்புறம் திருந்திடுவான்னு நெனச்சேன். மொதல்லே குமரேசன் மேல குடுத்த கேஸ் வாபஸ் வாங்கு .அப்புறம் உல்லாஸ் மேல கேஸ் குடு .சரிங்க சார் . அவன்கிட்ட வீடியோ இருந்தாலும் பிரச்னை இல்லை . அவன் மறுபடி உன்கிட்டே வருவான் . ஏன்னா நீ போட்டுருந்தது டூப்ளிகேட் நகைங்க .அதெப்படி சார் உங்களுக்கு தெரியும் .இது கூட தெரியாமலா இருப்பாங்க ?.

குமரேசன் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போயிருந்தார் . நீங்க கவலை படாதீங்கப்பா ராம் அங்கிள் எல்லாத்தையும் பார்த்துப்பார் . உல்லாஸ் மேல எப் ஐ ஆர் போட்டுருக்கு . ரெண்டு நாள்ல அரெஸ்ட் பண்ணிடுவாங்க.
சொல்லுங்க கீர்த்தனா ஏன் டூப்ளிகேட் நகையை போட்டீங்க . எனக்கு வேற வழி தெர்ல சார். சரி அவன் போன் பண்ணா உடனே எனக்கு கால் பண்ணுங்க.

உல்லாஸ் திருப்பதியை காண்டாக்ட் பண்ணி இருப்பான் . திருப்பதி ஆபீஸ் அட்ரஸ் ல போய் பார்க்கலாம் . நேஹாவையும் அழைத்து கொண்டு போனார்கள் .அலுவலகம் பூட்டியிருந்தது . மாடியில் ஒரு போட்டோ ஸ்டூடியோவும் இருந்தது . அதுவும் திருப்பதிக்கு சொந்தமானதுதான் . வாசல் கதவை திறந்து உள்ளே போனார்கள் . கீழ்தள சாவி ஜன்னல் இடுக்கில் இருந்தது . உள்ளே எல்லாம் ஒன்றுமில்லை . காலி செய்துவிட்டான் போல . மேலே ஸ்டுடியோவிற்கு போனார்கள் . கதவை திறந்து பார்த்தார்கள் . எல்லாம் சரியாக இருப்பது போல தோன்றினாலும் பீரோவின் இடுக்கில் வேட்டி துணி மாட்டியிருப்பது தெரிந்தது . பீரோவை திறக்க முயற்சிதான் தீபக் உள்ளிருந்து பொத்தென விழுந்தான் திருப்பதி .கீர்த்தனாவையும் போலீஸ் விசாரித்தது . திருப்பதி அடித்து கொலை செய்யப்பட்ட சமயத்தில் எங்க இருந்தீங்க. ஆபீஸ் ல. நீங்க அவனை காண்டாக்ட் பண்ணீங்களா . ஆமா உல்லாஸ் எங்கேன்னு கேக்க கால் பண்ணியிருந்தேன் சுவிட்ச் ஆப் னு வந்தது . வேற யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகமா . இல்ல சார் .
நீங்க ஏன் சார் அங்க போனீங்க . சாதாரணமாத்தான் போனோம். எதிர்பாராவிதமா இறந்து கிடந்தார் என்றான் ராம். எதுவும் எவிடென்ஸ் எடுத்தீங்களா இல்ல சார்.
போலீஸ் திருப்பதியின் உடலை கைப்பற்றியது .அவன் சில பெண்களின் விடியோவும் வைத்திருந்தான் . அதையும் போலீஸ் பறிமுதல் செய்து அலுவலகத்தையும் சீல் செய்தது.

திருப்பதியால பாதிக்கப்பட்ட யாரோதான் அவரை கொன்னிருக்காங்க .அவரோட காண்டாக்ட் லிஸ்ட் ல இன்னும் கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்களையும் விசாரிச்சிகிட்டுதான் இருக்கோம் என்றது போலீஸ் தரப்பு .

நேஹா மீது சந்தேகம் எழுந்தது . நேஹா நீங்க எங்க இருந்தீங்க நான் ஆபீஸ்ல தான் இருந்தேன் .ஓகே நேஹா உல்லாஸ் கிட்டே பேசி compromise பண்ணலாம் வர முடியுமான்னு கேக்குறீங்களா . நானா? நீங்கதான் . சரி ட்ரை பணறேன் . அவன் வாட்ஸாப்ப் நம்பர் இது மெசேஜ் பண்ணிட்டே இருங்க கண்டிப்பா ரிப்ளை பண்ணுவான் .நேஹா போன் செய்தாள். அவன் ரெஸ்பான்ஸ் பண்ணல சார். ஆனா எல்லா மெசேஜ் படிச்சிருக்கான் . அவன் சிம் லொகேஷன் எதுவும் தெரிஞ்சுதா பெங்களூரு தான் காட்டுது . இன்னொரு தரகரை புடிப்போம் அவனை வரவழைக்க ட்ரை பண்ணுவோம் . அதே மாதிரி இன்னொரு ப்ரோக்கரை வைத்து பேசி பார்த்தார்கள் . ம்ம்ஹ்ம் உஷாராகிவிட்டான் போலிருக்கிறது .

நேஹாவுக்கு ரெண்டு நாள் கழித்து மெசேஜ் வந்தது . தான் வரமுடியாது எனவும் அவன் friend கௌதமை அனுப்புவதாகவும் சொன்னான் . சரி மீட் பண்ணலாம் . கெளதம் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் அவனிடத்தில் 10 லட்சம் கொடுத்தால் அனைத்து பெண்களின் விடீயோவையும் குடுத்து விடுவதாகவும் இனிமேல் இது போல் செய்யமாட்டேன் என்றும் சொன்னான் .ஆனால் நேஹா மட்டுமே வர வேண்டும் .பணம் கேஷ் ஆக வேண்டுமென்று சொன்னான் . கீர்த்தனா பணத்தை ஏற்பாடு செய்தாள் .