Sivavin Sithi.. Please.. 2 - 5 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 5)

The Author
Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 5)

சிவா மாலினி Part 5
Hi,
நான் உங்கள் சிவா..
இந்த தொடர் சித்தி.. ப்ளீஸ்.. நாவலின் தொடர்ச்சி.. சித்தி.. ப்ளீஸ்.. 2, மற்ற பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக.

சாமியும் நானும் என் வீட்டில்..

நான் தீர்க்கமான யோசனையில் இருந்தேன். சாமி அங்கிருந்து வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டே இருந்தான்.

என்னடா சிவா, அந்த பாட்டை அவா ரெண்டு பேரும் கேட்டதும் அவாளை பார்க்கனுமே.. என்ன ஒரு action.. சினிமா கெட்டது போ.. அதுவும் யாழினி.. முகத்தில என்னா Expressions.. கண்ணு பேசுது, உதடு துடிக்கிறது, ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிறா.. கண்ணுல ஜலம்.. அப்படியே சிரிச்சிக்கிறா.. எனக்கு என்னமோ Live Cinema பார்த்த ஒரு Feelings.
இன்னும் என்னென்ன நடக்கப்போறதோ ஈஸ்வரா.. எனக்கு இதையெல்லாம் நினைச்சு பார்த்தாலே.. மண்டையெல்லாம நம நம னு ஏதோ பண்ணுது, ரொம்ப குழப்பமா இருக்கு.

எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. இப்பதான் எனக்கு தெளிவாயிட்டு வருது எல்லாமே விளங்குது என்றேன்.

சாமி ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின், என்னடா சொல்ற? எல்லாம் விளங்குதா?
எனக்கு கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லேன்.

சாமி.. இவங்க சிவபிரசாத் - யாழினி தான் நான் எப்பவோ எழுதின கதாபாத்திரங்கள் சிவா - மாலினி னு Confirm ஆயிடுச்சு. இப்ப எனக்கு இதுல ஒரு சந்தேகமும் இல்லை. அதோடு நாம கிளம்பி வரும் போது யாழினி என்ன சொன்னா? இரண்டு நாளில் பிரசாத் Parents, Sister அதாவது என் கதைப்படி மாலினி அக்கா லஷ்மி, பாலு, பிரசாத் தங்கை மீனா Charecters.. ஓகேயா?
பார்ப்போம் அதையும். அவங்க யாரு? யாழினி, பிரசாத் அம்மாவை எப்படி கூப்பிடுறா? அக்கா ன்னா? இல்ல அத்தை ன்னா?

இப்ப Problem என்னன்னா? இவங்க சிவபிரசாத், யாழினி ஏன் இப்ப என் Lifeல எதிராகனும்? என்ன Motive?. ஏன்? ங்கிறதுதான் கேள்வி. இதுனால என்ன நடக்கப்போகுது? நான் எழுதின Story ல் வர மாதிரியே நடக்கப்போகுதா? இல்ல நான் இப்ப அந்த கதையை மாத்தி எழுதினா அதன் படி நடக்குமா?

என்னடா சொல்ற? நடக்கப்போற கதையை மாத்தி உன் டைரியில் எழுதினா இனி அது நடக்குமா? கொஞ்சம் குழப்புதே.

ஒரு மண்ணு குழப்பமும் இல்லை. இப்ப அந்த டைரியில நான் முடிவா என்ன எழுதியிருந்தேன்? அவங்க சிவா, மாலினி Bangalore போய் 6 Months இருந்துட்டு அப்பறம் Canada போய் Settle ஆயிட்டாங்கனு. அப்படிதானே?

ஆமாம்.

இப்ப என்ன? அந்த 6 Months period இங்க Trivandrum ல நடக்குது. அவ்வளவு தான். இப்ப Suppose நான் ஏதோ ஒரு Incident அங்க Bangalore ல நடக்கிற மாதிரி நான் அந்த டைரியில எழுதினா அப்ப Real ஆ இங்க இப்ப நடக்கனும் ல?

ஓ புரிஞ்சி போச்சு. இப்ப நீ இந்த டைரியில எழுதி Test பண்ணப்போற.

அதேதான். சரி என்ன எழுதலாம்? நீயே சொல்லு?.

சாமி ரொம்ப யோசிக்க..

நான் உடனே இத எழுதலாம். அங்க சிவா மாலினி Stay பண்ண இடத்தில இருந்த Neighbour பெயர் ஸ்வாமி கீழே விழுந்து கைய உடைச்சிகிட்டார் அப்படினு எழுதவா?

சாமி அரண்டு போய் டேய் மகா பாவி. நான் உனக்கு என்ன துரோகம்டா பண்ணேன். இந்த நோஞ்சான் பிராமணன் மேல உனக்கு ஏண்டா இத்தனை வெறுப்பு? யப்பா என்னய விடுறா நான் இந்த ஆட்டத்துக்கே வரலை. வயசான காலத்துல என்னோட கை கால் நல்லா இருந்தா போதும்டா.

நான் சிரித்து கொண்டே டேய் சும்மா வம்பிழுத்தேண்டா.

வம்பா ? டேய் எனக்கு வேஷ்டியே நனஞ்சுடும் போலாயிடுத்து. உண்மையிலேயே இப்பல்லாம் உன்ன பார்க்குறச்சே நேக்கு பயமா ஏதோ பூதம் பிசாச பார்க்குற மாதிரி இருக்கு.

நான் வாய் விட்டு சிரிக்க..

சிரிக்காதடா.. பயமாயிருக்கு. ஏதாவது Solution ஆலோசிப்போம்.

நான் ஏண்டா பிரசாத் க்கு ஒரு கோடி ரூபாய் கிடைச்ச மாதிரி எழுதவா?

ஏண்டா அத நேக்கு எழுதப்படாதா? ஆனாலும் வேண்டாம்டா.. உழைக்காத காசு உடம்பில ஒட்டாது. டேய் Be practical. அந்த Accident யை பிரசாத் க்கு நடக்கிற மாதிரி எழுந்தேன். சும்மா Bike Skid ஆகி Light ஆ அடிபடற மாதிரி.. Fracture மாதிரி பெருசா ஒண்ணும் வேணாம். சின்ன Sprain இந்த மாதிரி.. அப்படியே ஒரு நல்லதும் எழுது. தங்கம் சேர்ற மாதிரி ஏதாவது.. இல்ல யாழினி போய் கடையில நல்ல பெருசா Gold Chain, Necklace வாங்குற மாதிரி.. Controversial ஆ? எப்படி இரண்டும் ஒண்ணா நடக்குதுனு பார்ப்போமே? என்ன சொல்ற?

நான் யோசிக்க, சாமி சொன்னதும் கொஞ்சம் Logic ஆகத் தோன்றியது.
அப்போதே அந்த டைரியில் கரக்டாக அவர்கள் Bangalore ல் 6 மாதம் இருந்தார்கள் என்ற இடத்தில் இன்னும் நிறைய Gap ம் இருந்து 2 , 3 pages காலியாக இருக்க.. நான் எழுதினேன். சிவா வழக்கம் போல் Office போய் விட்டு Return வரும் போது Office Exit Gate வெளியே வரும் போது Road ல் எதிரில் Auto வர சிவா Break போட Just Skid ஆகி சிவாவிற்கு Left முழங்கையில் சின்ன சிறாய்ப்பு ஏற்பட்டது என்று அப்படியே அடுத்த நாள் மாலினி தன் வீட்டில் ஒரு 2 Lakhs Rupees க்கு மதிப்புள்ள Gold Chain போட்டு அழகு பார்க்க, பின் அவள் ஒரு பெரிய காரில் Shopping போய் விட்டு, வீட்டுக்கு வந்தாள்.

எப்படி Logic ஒத்து போகும் என்று பார்ப்போம். Accident, Gold, Car? பார்ப்போமே..

சாமிக்கு படித்து காண்பிக்க, சாமியும் ஓகே என்று சொல்ல.. என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். சாமிக்கு படித்து காண்பிக்கும் போது Injury, Gold Matter மட்டும் தான் படித்து காண்பித்தேன். Car Matter யை வேண்டும் என்றே விட்டு விட்டேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?.

ஆனாலும் இருவரது மனசிலும் இந்த Accident Injury நிகழ்ச்சி நடக்க கூடாது, பிரசாத் க்கு எந்த சின்ன காயமும் ஏற்படக் கூடாது என்று வேண்டிக் கொண்டோம். இது மட்டும் பொய்யானால் எல்லாவற்றையும் மறந்து விட்டு Happy யா இருக்கலாம் என்று என் அந்தராத்மா சொன்னது. ஆனால் Risk எடுக்கிறோமோ என்றும் தோணியது.

அடுத்த நாள் மதியம் 5 மணி போல இருக்கும். நான் என் Activa Bike எடுத்து கொண்டு Market போய் Groceries வாங்கி கொண்டு Payment பண்ண Phone எடுத்தால் நிறைய Missed calls. சாமியிடம் இருந்து, யாழினி, பிரசாத் திடமிருந்து நிறைய Calls. என்னுடைய போன் Silent Mode ல் இருந்தது. என்னை நானே திட்டிக்கொண்டேன். வரும் போது வழியில் கோவிலுக்கு போக Phone யை Silent mode ல் போட.. இப்ப மறந்து விட்டேன். முதலில் சாமிக்கு போன் பண்ண..

டேய் சிவா எங்கடா இருக்க.. எத்தனை தடவை உனக்கு போன் பண்றது. இங்க நாம நினைச்ச மாதிரி பிரசாத் க்கு சின்ன Accident.. Problem ஒண்ணும் இல்லை. நீ நேர்ல இந்த Hospital க்கு வா எல்லாம் புரியும். பாவம்டா யாழினி குழந்தை அழுதுண்டே இருக்கா. சீக்கிரம் வா.

நான் என்னையும் சாமியையும் சபித்து கொண்டே Hospital க்கு விரைந்தேன்.
Hospital போனவுடன் சாமி வெளியே எனக்காக Wait பண்ணிக்கொண்டிருக்க, அவசரமாக என்னிடம் ஓடிவந்து என்னடா சிவா நாம Discuss பண்ண மாதிரியே பிரசாத் க்கு சின்ன Injury தாண்டா. Thank God. எனக்கு உடம்பெல்லாம் பட பட னு வருது. சரி வா உள்ளே போவோம். ஆனா யாழினி தான் பாவம்.

நான் யோசனையுடன் எதுவும் பேசாமல் உள்ளே Room க்கு போனேன். பிரசாத் Bed ல் படுத்திருக்க, அவன் இடது காலில் முட்டிக்கு கீழே சின்ன Bandage கட்டு. பக்கத்தில் யாழினி விசும்பிய படி, அவள் பக்கத்தில் மாமி.
என்னை பார்த்ததும் யாழினி, அப்பா எனக்கு Office லேயிருந்து இந்த மாதிரி சிவா க்கு சின்ன Accident ஆயிட்டுனு போன் வந்தவுடனே எனக்கு ஒண்ணும் புரியலை. தெரியாத இடம். பயமா வேற இருந்தது. அதான் உங்களுக்கு போன் மேல போன் பண்ணேன்.

Sorry மா, என்னோட போன் Silent Mode ல இருந்தது. ஒண்ணும் பயப்படாதம்மா. நாங்களாம் இருக்கோம்ல. Dr. வந்தாரா என்ன சொன்னார்.

இப்ப தான் X Ray எடுத்தாங்க. Result வரணும்.

அதற்குள் பிரசாத் சித்தி என்று கூப்பிட்டு உடனே நாக்கை கடித்து கொள்ள, நான் அதை கவனித்தேன். சாமி, நான், மாமி மூவரும் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு Room வெளியே வந்தோம்.

யாழினி எனக்கு ஒண்ணுமே இல்லை. என்று பிரசாத் சொல்வது என் காதில் கேட்டு கதவை மூடும் போது கேட்டு மறைந்தது.

பிரசாத் இங்கே வா என்று கூப்பிட்டு யாழினியின் கைகளை பிடித்து கொண்டு மெதுவாக..
சித்தி I am Perfectly Alright. சின்ன காயம் தான். நீ தான் ஏதோ பெருசு னு நினைச்சிகிட்டிருக்க. ப்ளீஸ் சித்தி நீ அழாத. இப்படி உன்னய பார்த்தா எனக்கு மனசு ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு. என்னால தாங்க முடியாது. நீ அழுதினா எனக்கும் அழுகை வரும் நீ எப்பவும் சிரிச்சுகிட்டு இருக்கனும். உன்னோட Favourite Smile please..

உடனே யாழினி முகம் மலர்ந்து சிரித்து, சிவாவின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள்.

சித்தி ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்..

யாழினி மெதுவாக சிவா காதில் டேய் என்ன இது, Hospital. எல்லோரும் வெளியே இருக்காங்க.. Dr. வந்து உனக்கு ஒண்ணும் இல்லைனு சொல்லட்டும். உனக்கு ஒண்ணு என்ன? ஆயிரம் முத்தம் தரேன்.

வாவ் இன்னைக்கு எனக்கு லக்கி Day..
ஒரே நாளில் என் தேவதை கிட்டேயிருந்து எனக்கு ஆயிரம் முத்தம் கிடைக்க போகுது. சித்தி அப்பறம் பேச்ச மாத்த கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.
யாழினி சிரிக்க.. இருவரும் ஆனந்தமாக சிரித்து கொண்டனர்.

Dr. Reports with X Ray Film டன், Assistant Nurses படை சூழ Room க்குள் நுழைய, நாங்களும் அவரை பின் தொடர்ந்தோம். Nothing to Worry, பின் என்னை பார்த்து மலையாளத்தில் விசாரித்து விட்டு.. சின்ன சிறாய்ப்பு தான். No Fracture. இன்னைக்கு ஒரு நாள் Rest போதும். இப்பவே Discharge பண்ணிடலாம்.

எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கும் சாமிக்கும் டபுள் சந்தோஷம். நாங்கள் Room லிருந்து வெளியேற..

சிவா யாழினி கையை அமுக்கி சித்தி நான் தான் சொன்னேன்ல. ஆனா நீ Promise பண்ண படி வீட்டுக்கு போனதும் ஆயிரம் முத்தம் தரனும்.

யாழினி நெகிழ்ந்து போய் சிவா வை பார்த்து சிரித்தபடியே கண்ணடித்தாள்.
ஐயோ சித்தி இதெல்லாம் கூட பண்ணுவியா?

நான் வெளியே வந்த வுடன் சாமியை தனியாக தள்ளி கொண்டு போய்..
சாமி உன் வாயில மண்ண அள்ளி போட, ஐடியா கொடுறான்னா.. அடிபடுற மாதிரியாவா ஐடியா கொடுக்கிறது. ஆனால் என் புத்திக்கு என்னாச்சு? என்னய சொல்லனும்.

டேய் பாவி என்ன ஏண்டா குத்தம் சொல்ற? சரி விடு எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு.

இரு உனக்கு அந்த டைரியில எழுதறேன். சிவா பக்கத்து வீட்டு ஸ்வாமி Uncle க்கு மண்டை உடைஞ்சதுனு.

ஐயோ டேய் அப்படியெல்லாம் பண்ணாதடா. என்னய நம்பி மாமி இருக்காடா. அப்பறம் உன் தவிச்ச வாய்க்கு காபி கிடைக்காது பார்த்துக்கோ.

நான் சிரித்தபடியே சரி என்ன நடந்தது விபரமா சொல்லு. Auto வந்து மோதிட்டா?

அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நம்ம பிள்ளையாண்டான் Office விஷயமா எங்கேயோ வெளியே போக வெளியே Exit Gate வந்தப்ப தானே Skid ஆகி கீழே விழுந்துட்டான். கேட்டால் Front Brake அழுத்தி பிடிச்சதுனால Skid ஆயிட்டு னான். சரி ஏதோ ஒண்ணு.. No Problem No Worries.. வா‌ போலாம் வீட்டுக்கு. நான் அவா எல்லாத்தையும் Cab ல அழைச்சிண்டு வந்தர்றேன். நீயும் வந்துடு. ஆனா இன்னொன்னு எனக்கு பயங்கர Curiosity.. யாழினிக்கு இந்த Situation ல எப்படி Gold? எப்படி கிடைக்க போகுது? பார்க்கலாம்?

எனக்கு அப்போது தான் இது ஞாபகம் வந்தது. சாமி சொல்லிய படி Gold Chain அதோட அவனுக்கு தெரியாத ஒண்ணு Car.. என்ன எப்படி நடக்க போகுது? பார்ப்போம்..

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

உங்கள் சிவா.