Sivavin Malare Mounama.. - 7 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் மலரே மௌனமா.. Part 7

The Author
Featured Books
  • દાદા ભિષ્મ

    પૌરાણિક દ્રષ્ટાંત કથા –                      પિતામહ ભીષ્મની...

  • અધુરો પ્રેમ

    જિગ્નાસુ ખુબ જ સરળ અને શાંત છોકરી.... પરીવાર મા વડિલ અને નાન...

  • વહુના આંસુ

    સવીતા રસોડામાં રસોઈ કરતી હોય છે,  ત્યાં જ છાંયા બહેન જોરથી ચ...

  • ભાગવત રહસ્ય - 164

    ભાગવત રહસ્ય-૧૬૪   પિતાજી નામદેવને કહે છે- કે “સવારે વહેલા જા...

  • ભિષ્મ પિતામહ

    पितामह भीष्म अने मकरसंक्राती   રાત્રી નો બીજો પહોર છે... આરત...

Categories
Share

சிவாவின் மலரே மௌனமா.. Part 7

Hi, நான் உங்கள் சிவா..
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ப்ளீஸ்..

இரண்டு நாள் கழித்து அதிசயமாக
காலையிலேயே மலரிடமிருந்து ஃபோன் வர,

ரவி இன்னைக்கு ஈவினிங் ஃப்ரீயா?. உன்னய Meet பண்ணனும்.

ஃப்ரீ தான் சித்தி அதுவும் நீ கூப்பிட்டு நான் Busy யா இருப்பேனா? சொல்லு எப்ப எங்க Meet பண்றது.

ம்.. ம்.. நம்ம Last Week போனோமே அந்த Coffee Shop. கொஞ்சம் Privacy யா இருக்கும். Coffee ம் நல்லா இருந்தது.

Okay Done. Anything spl.?
இல்லையில்லை சும்மா தான் என்னய 6pm க்கு University Out Gate ல Pickup பண்ணிக்கோ.

ஃபோனை Cut பண்ணிவிட்டு யோசித்தால் ஏதோ Something மனதை நெருடியது.

Office போனவுடன் என்னுடைய Boss என்னை வரச்சொல்ல அவர் Chamber க்கு போனேன்.
ரவி, நம்ம Ahmadabad Branch ல Some IT issues.. So நம்ம Help கேட்குறாங்க. இது ஒரு நல்ல Opportunity நம்மளை Prove பண்ணிக்கிறதுல. உன் Team லேருந்து எல்லா Logic தெரிஞ்ச யாராவது அங்க உடனே போகனும். ஒரு 40 to 60 Days Work இருக்கும். எனக்கு தெரிஞ்சு நீ தான் Best. But As a Project Manager நீ அங்க போக முடியாது and I Won't Afford you. இங்கேயே நிறைய Work உனக்கு இருக்கு. So, நாளைக்கு உங்க Team லேருந்து யார் போறாங்கிறதை Consult பண்ணிட்டு எனக்கு Inform பண்ணு.‌ நிறைய Formalities, Protocol இருக்கு. கொஞ்சம் சீக்கிரம் பாரு.

நான் என் Cabin வந்து என் Team ட Discuss பண்ணதில் எனக்கு அடுத்த படியாக அந்த Issues ல, Auditing ல நல்ல Knowledge Skills உள்ளது Ramesh தான். But Ramesh 60 Days Out of Station Sister Marriage Progress இதெல்லாம் யோசிக்க..
நான் Okay Ramesh, இப்ப Leave it. Night வீட்ல Consult பண்ணிட்டு நாளைக்கு சொல்லு என்று Full stop வைத்தேன்.

Evening Coffee Shop.

நானும் மலரும் எதிரெதிரே உட்கார்ந்திருக்க, Coffee Order பண்ணியிருந்தோம்.
மலர் இன்னைக்கு Sandal colour Design Saree Sleeveless Black Blouse Simple Makeup with Light Red lipstick, தலை முடியை தூக்கி வாரி Ponytail போட்டு ரொம்பவும் அழகாக இருந்தாள். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் Open place ல் கொஞ்சம் உள்ளடங்கி நல்ல காற்றோட்டமாக Privacy ஆக இருந்தது.

நான் புன் சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மலர் என் கண்களை பார்க்க முடியாமல்,

டேய் ரவி அப்படி என்னையே பார்த்துகிட்டிருக்காதே. எனக்கே என்னமோ போல இருக்கு. யாராவது இங்கே இருக்கிறவங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க.

இங்கே தான் யாருமே இல்லையே. அப்படியே யாராவது பார்த்தால் தான் என்ன? லவர்ஸ் னு நினைச்சுப்பாங்க. சித்தி இன்னைக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? உன்னோட Lips யை பார்த்தால் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? சும்மா மனசுக்குள்ளே ஜிவ் வுனு..

உஷ், டேய் என்ன இது? யாருக்காவது கேட்டுட போகுது. நீ இருக்கிற Mood யை பார்த்தால் எனக்கு பயமாயிருக்கு. நான் உன் கிட்ட ஒரு விஷயம் Discuss பண்ண வந்தேன்.

சித்தி அதெல்லாம் விடு. இப்ப நீ ஓகே னு சொல்லு. இப்பவே இங்கேயே வச்சு உனக்கு தாலி கட்டிடறேன். சித்தி ப்ளீஸ் இன்னைக்கு என்னமோ தெரியலை உன்னய பார்த்தாலே எனக்கு ஆசையா இருக்கு. நீ எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கனும் னு தோணுது.

மலர் சிரித்து கொண்டே அய்யய்யோ என்ன ரவி நீ இன்னைக்கு செம மூடுல இருக்க போல, நான் தான் தெரியாமல் வந்து மாட்டிக்கிட்டேனா?

இதற்குள் Order பண்ணிய Coffee வர இருவரது பேச்சும் தடைபட்டது. நான் காஃபி குடித்து கொண்டே,

இல்ல மலர், என்னமோ தெரியலை உன்னய பார்த்த வுடனே எனக்கு மனசெல்லாம் லேசாகி ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது லைஃப் Full ஆ வரணும் னு ஆசைப்படறேன்.
நான் சொல்ல சொல்ல மலரின் கண்கள் விரிந்து முகம் ஜொலித்தது. ஆனால் ஏனோ மறுபடியும் வாட தொடங்கியது.

மலரும் காபி குடித்து கொண்டே, ப்ச்.. ரவி உண்மையிலேயே நீ பேச பேச அவ்ளோ லவ்லியா இருக்கு. சில சமயங்களில் எனக்கே எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உன்னோட உன் லைஃப் ல இந்த செகண்ட் யே வந்துடணும்னு தோணுது.

அப்பறம் என்ன மலர், நானும் அதைத்தான் எதிர் பார்க்கிறேன். நீ என் லைஃப் ல வந்திட்டினா அத விட வேற எதுவும் எனக்கு தேவையில்லை.

இல்லை ரவி, அத என்னால செய்ய முடியாது. மனசறிஞ்சி அந்த பாவத்தை அதுவும் உனக்கு என்னால பண்ண முடியாது.

என்ன சித்தி இது, நீ என்ன எனக்கு பெரிய பாவத்தை பண்ணிடப்போற. என்னோட உயிரே நீதான். அது உனக்கு நல்லா தெரியும். அதே மாதிரி நீயும் என்னை உன் மனசுக்குள்ளே லவ் பண்ற. எனக்கு அதுவும் நல்லா தெரியும். இல்லன்னு மட்டும் சொல்லாத. சித்தி எங்கே என் கண்ணை பார்த்து சொல்லு.

மலர் என் கண்களை பார்க்க முடியாமல் கண்ணீரோடு தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு வேறு பக்கம் பார்த்து பின் நான் சொல்வதை ஆதரிப்பது போல ஆமாம் என்று தன் தலையை ஆட்டினாள்.

நான் அவள் கைகளை பிடித்து கொண்டு சித்தி நீ இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை. நீ என்ன Problem னு Open ஆ சொல்லு அத நான் Solve பண்றேன்.

ரவி, நான் அதை பத்தி தான் பேச உன்ன கூப்பிட்டேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ என் மேல வச்சிருக்க உண்மையான காதலுக்கு நான் அருகதை கிடையாது அத நீ முதல்ல புரிஞ்சுக்கோ.

என்ன சித்தி மறுபடி மறுபடி அதையே சொல்ற.

இரு இரு நான் சொல்ல வந்ததை
சொல்லிடறேன். உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன். எனக்கும் கஷ்ட்டமாதான் இருக்கு. என் மேல வச்சிருக்க லவ்வை தயவு செஞ்சு வேற யார் மேலயாவது ஒரு நல்ல பொண்ணு மேல வச்சி அவளையே Marriage பண்ணிக்கோ.

இத சொல்லத்தான் என்னய இங்க வரச்சொன்னியா? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, உன் மேல வச்ச காதல் எப்பவும் எந்த நிலையிலும் மாறாது. அத நீ புரிஞ்சுக்கோ.

இல்ல ரவி, உனக்கு தெரியாது. உன்னோட அழகான லைஃப் யை நீ எனக்காக Waste பண்ணிக்கிற. அத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. நான் இவ்வளவு தூரம் சொல்லியும் பிடிவாதம் பிடிக்காதே ரவி.

யாரு நானா பிடிவாதம் பிடிக்கிறேன். என் கண்ணை பார்த்து சொல்லு.

ஐயோ ரவி உன் கண்ணை பார்த்து பேசினா என்னால தாங்க முடியாது. என் நெஞ்சே வெடிச்சிடும். நான் அப்படியே Melt ஆகி உன் மடியில விழுந்துடுவேன். உன்னோட ஃப்யூர் லவ் க்கு முன்னாடி என்னால பேசி ஜெயிக்க முடியாது.

நான் மலர் பக்கத்தில் போய் Sofa வில் உட்கார்ந்து, அவளை என் தோளில் சாய்த்து, சித்தி எல்லாம் போதும். இப்போதைக்கு இத பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ். உனக்காக உன் மனசு மாறுவதற்காக நான் எவ்வளவு நாளானாலும் Wait பண்றேன்.

அதுதான் வேணாம் னு சொல்றேன் ரவி, எனக்காக Wait பண்ணி, பண்ணி நீ உன்னோட நல்ல லைஃப் யை Waste பண்ணிக்காதே.

மலரை அப்படியே என் மார்பில் மெதுவாக சாய்த்து கொண்டு ஏன் சித்தி தெரியாமல் தான் கேட்கிறேன்? தப்பா நினைச்சுக்காத, கல்யாணம் பண்ணிகிட்டா ஏதாவது Problem வரும் னு நினைக்கிறாயா? அதாவது எப்படி சொல்றது.. நாம இரண்டு பேரும் சேருவதற்கு i mean Sex - intercourse இதுல ஏதாவது problem or உனக்கு கொஞ்சம் கூட அதுல விருப்பம் இல்லை அந்த மாதிரி ஏதாவது problems..

மலர் என்னை நிமிர்ந்து சீரியஸாக பார்த்தவள் தன் வலக்கை முட்டியால் என் நெஞ்சை கொஞ்சம் பலமாக இடித்து, ச்சீ பேச்சை பாரு.. அதுலலாம் ஒண்ணும் Problem இல்லை. I am perfectly Alright, ஆனா மனசுலதான்..‌ ஆனா அதெல்லாம் இப்ப எதுக்கு?

இடித்த வலியில் ஐயோ அம்மா என்று நான் அலற..‌ உடனே மலர் என் நெஞ்சை மெதுவாக நீவி விட்டு படுவா.. நல்லா வேணும், எப்படியெல்லாம் என்னை Questions கேட்குற அசிங்கமா ? என்று என் கண்ணை பார்க்க, எனக்கு மலர் perfectly alright என்று சொன்ன பதிலில் சந்தோஷமாகி அவளை பார்த்து புன்னகைத்து, பக்கத்தில் சந்திர பிம்பம் போன்ற அவள் அழகான முகத்தை பார்த்து கிறங்கி போய் சித்தி என்று அவளுக்கு மட்டும் கேட்கும்மாறு அவள் காதில் ஆசையோடு கூப்பிட்டு அவள் Lips யை ஆசையோடு பார்க்க, என் நிலைமையை புரிந்து கொண்ட மலர் கிசு கிசு ப்பான குரலில் டேய் ரவி வேண்டாம்டா, இது Public place. யாராவது பார்துட போறாங்க, ப்ளீஸ் டா.. என்று என்னை தடுத்து நிறுத்த, அப்படினா நீயே எனக்கு ஒரு Kiss கொடுத்துடு. இல்ல நான் kiss கொடுத்தா Lips to Lips தான். அதுவும் நீ இன்னைக்கு ரொம்ப அழகா என்னய மயக்குற மாதிரி இருக்க. பார்த்துக்கோ.

டேய் ரொம்ப படுத்துறடா. சரி கிட்ட வா நானே உன் கன்னத்தில முத்தம் தர்றேன்.

நான் அவள் பக்கம் கொஞ்சம் குனிய மலர் என் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். முதன் முதலாக என் வாழ்க்கையில் மலரிடமிருந்து அந்த முத்தம் கிடைத்தவுடன், நிஜமாகவே என் உடல் சிலிர்த்து, நான் பரவசமாக என் இதயத்துடிப்பு இன்னும் அதிகமானது. அது மலருக்கும் புரிந்தது.

மலரின் வலக்கையை என் இடக்கையால் பிடித்திருந்த நான் வேண்டுமென்றே அந்த முத்தத்தினால் மயக்கம் வந்தது போல் Sofa ல் பின்னால் சரிந்து வாவ்.. சொர்க்கத்தில இருக்கிற மாதிரி இருக்கு. சித்தி உன்னோட இந்த ஒரு முத்தத்துக்கே எனக்கு இப்படி உடம்பெல்லாம் சிலிர்க்குதே, நீ மட்டும் என்னோட லவ் வை Accept பண்ணி நாம Marriage பண்ணிகிட்டா அப்ப ஐயோ நினைச்சு பார்க்கவே எப்படி இருக்கு தெரியுமா? Daily எப்பவும் சொர்க்கம் தான்.

மலர் கன்னக்குழி விழ அழகாக சிரித்து என் தோளில் சாய்ந்து கொண்டு இந்த மாதிரி மனசுக்கு பிடிச்ச மாதிரி பேச உன்னால் மட்டும் தான் முடியும்டா. I like it.
சித்தி அதையே மாத்தி I Love You னு சொல்லேன். நானும் சந்தோஷப்படுவேன்ல.

என் தோளில் தன் கையால் மெதுவாக அடித்து பின் தோளில் முத்தமிட்டாள். நானும் அவள் தலையில் முத்தமிட்டேன்.
பின் அப்படியே என் தோளில் கண்களை மூடியபடியே மலர் சாய்ந்திருக்க, அவளை Disturb பண்ணாமல் நானும் அவள் கைகளை என் கைகளுடன் கோர்த்த படி அமைதியாக இருந்தேன். நடுவில் Bearer ஏதாவது வேண்டுமா? என்று கேட்பதற்கு வர, நான் என் உதட்டில் விரலை வைத்து பின் மலரை காண்பித்து Disturb பண்ண வேண்டாம், அப்பறம் வா என்று சைகையால் சொல்ல, அவனும் புரிந்து கொண்டு போய் விட, சிறிது நேரம் இருவரும் அப்படியே இருந்தோம். எனக்கு அப்படி மலர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளுடைய கைகளை உரிமையுடன் என் கைகளுடன் கோர்த்து கொண்டு, அவள் வாசனை எனக்கு ஒரு நல்ல pleasant feelings யை கொடுக்க, இப்படியே காலம் பூராவும் இருந்திடக்கூடாதா என்று மனம் ஏங்கியது. மலருக்கு Disturbance இல்லாமல் மறுபடியும் மறுபடியும் அவள் நெற்றியில், வகிட்டில் மெதுவாக முத்தமிட்ட படியே இருந்தேன்.

போதும் முத்தம் கொடுத்தது, கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ நாளைக்கும்.

சிரித்து கொண்டே, இல்ல சித்தி நீ அப்படியே Tired ஆன மாதிரி இருந்தது. அதான் எனக்கு நல்ல சான்ஸ் உனக்கு தெரியாம..

எல்லாம் எனக்கு தெரிஞ்சது. கொஞ்சம் உன் பக்கத்தில இருந்தால் I Feel Comfortable, அதான் சின்ன Rest. என்று மறுபடியும் என் தோளில் அழுத்தமாக முத்தமிட்டு பின் சாய்ந்து கொண்டு என்னை ஏறெடுத்து பார்த்து புன்னகைக்க, எனக்கு மலரின் முகத்தை அவ்வளவு பக்கத்தில் பார்க்கும் போது ஜிவ்வென்றிருந்தது. அவள் கண்ணாலே என்னை பார்த்து என்னவென்று கேட்க, நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க என்று சைகை செய்து உதட்டை குவித்து முத்தம் கொடுத்தேன். அவள் புன்னகைக்க அந்த கன்னக்குழி என்னை மதிமயக்க, என் விரலால் அவள் கன்னக்குழி யை நான் ஆசையோடு தொட்டு பார்க்க, அவள் இன்னும் அழகாக சிரித்து என் கைகளை முத்தமிட்டாள்.

ரவி உன் கிட்ட ஒண்ணு கேட்கனும். உண்மையை சொல்லு.

என்ன சித்தி ஏதோ பெரிசா பீடிகை போடுற? என்ன கேளு.

மலர் என் கண்களை நேருக்கு நேராக பார்த்து,
ரவி Last Saturday எங்கே போயிருந்த?

எனக்கு தூக்கி வாரி போட்டது, Automatic ஆக என் பார்வை மலர் கண்களிலிருந்து விலக,
மலர் மறுபடியும் ரவி, என் கண்ணைப் பார்த்து சொல்லு? Saturday நீயும் உன் Friend ம் எங்க போனிங்க?

எனக்கு அந்த AC யிலும் வேர்க்க ஆரம்பித்தது.


தொடரும்..

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனுப்ப please Mail to siva69.com@gmail.com
உங்கள் சிவா.