Sivavin Malare Mounama.. Part 2 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் மலரே மௌனமா.. Part 2

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

சிவாவின் மலரே மௌனமா.. Part 2

Hi, நான் உங்கள் சிவா..
தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். ஒரு Continuity க்கு..

அம்மாவிற்கும், கல்யாணி க்கும் மலரை ரொம்ப பிடித்து போக அவர்களுக்குள்ளே ஒரு நல்ல Understanding ஏற்பட்டது. இதெல்லாம் எனக்கு ஒரு positive Boost தர.. எப்படியாவது மலரிடம் propose பண்ண வேண்டும் என்று மனசு துடித்தது.

என் close friend class mate இப்ப என் Office Colleague நந்தா வுக்கு மட்டும் தெரியும் நான் மலரை விரும்புவது. அவனும் என் கம்பனியில் என் Wing லேயே work பண்ண.. எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. நந்நா தான் இன்னும் ஏண்டா wait பண்ற..‌ போய் மலர்கிட்ட propose பண்ணுடா என்று சொல்லி கிட்டே இருந்தாலும்.. எனக்குத்தான் என்னவோ போலிருந்தது.

மலரை பார்க்கும் போதெல்லாம் அவள் அழகான முகம், அதுவும் அந்த கன்னக்குழி சிரிப்பு இதையெல்லாம் பார்த்தால் நான் மயங்கி போய் மனதில் இருப்பதை சொல்ல வந்ததை வெளியே சொல்ல முடியாமல்.. தவித்து போய் விடுவேன். எப்பவும் இதேதான் நடக்கும்.

ஒரு தடவை கல்யாணி மூலமாக மலரின் Birthday date எப்படியோ தெரிய வர.. நந்தா தான் idea கொடுத்தான்.

நேரா மலரோட University போற.. வெளியே எங்காவது நல்ல place like coffee shop கூட்டி போயிட்டு Gift கொடுத்துட்டு B'day wishes சொல்லிட்டு அப்படியே propose பண்ணிடு.

இல்ல மச்சான் கொஞ்சம் உள்ளுக்குள்ள பயமாயிருக்கு.. அவ Reject பண்ணிட்டாள்னா?

டேய்.. மன்னாரு .. உனக்கென்னடா.. ஆளு Super ஆ Height Weight ட Handsome ஆ இருக்க.. நானே நம்ம Office ல பார்க்கிறேனே. நம்ம ladies staffs super figure ங்க நிறைய பேர் உன்னய பார்த்து ஜொள்ளு விடறாள்க. நீ தான் அவங்க யாரையும் கண்டுக்க மாட்டேங்கிற.. பாரேன்.. நம்ம Staffs யாரோ ஒருத்தர் உனக்கு propose பண்ணப்போறாங்க.. அப்ப முழிக்க போற நீ.

டேய் நீ வேற பயமுறுத்தாதடா.. இந்த Week யே மலர்கிட்ட சமயம் பார்த்து propose பண்ணிடறேன்.

இதையேதான் நான் இந்த Company ல Join பண்ணதிலிருந்து நீ சொல்லிகிட்டிருக்க.. ஆனா No Progress.. மவனே இந்த வாட்டி நீயா போய் சொல்லலை நானே போய் மலர்கிட்ட சொல்லிடுவேன்... இதோ பார் மலர்.. உன்னய ரவி லவ் பண்றானு..

சூப்பர் டா.. அப்படியே சும்மா லவ் பண்றேன்னு சொல்லாம ரவி உன்னய ரொம்ப Deep ஆ லவ் பண்றான். அவன் ரொம்ப நல்லவன் அப்படி இப்படினு இன்னும் நல்லா நிறையா பாசிட்டிவா ஏத்தி சொல்லுடா ..

அடச்சீ.. நான் ஏதோ விளையாட்டு க்கு சொன்னால்.. படுவா.. அதையே பிடிச்சி கிட்டு.. இங்க பார் இந்த லவ் விஷயத்தில் மட்டும் அவனவன் லவ் வை அவனவன் தான் போய் propose பண்ணனும். அதான் அழகு.. நடுவில mediator யே இருக்க கூடாது. போடா போய் ஒழுங்கா propose பண்ற வழியைப் பாரு.

அவன் சொல்வதும் உண்மைதான்.. நாம தான் நம்ம லவ் வை propose பண்ணனும்..
அதற்கு தகுந்த மாதிரியே ஒரு நல்ல Situation யாரும் எதிர்பார்க்காத வேளையில் நந்தாவின் தங்கை Friend Marriage ல ஏற்பட்டது. நானும் மலரும் தெரியாமலே அந்த Function ல சந்தித்து கொண்டோம்.
ஆனால் நடந்தது?

நானும் நந்தாவும் அவன் sister யாமினியின் ஃப்ரண்ட் சுவேதா marriage attend பண்ண போக,

எதிர்பாராதவிதமாக மலர் அவ ஃப்ரண்ட்ஸ்டன் அந்த marriage க்கு வர எனக்கு இன்ப அதிர்ச்சி.. மலரும் அங்கே என்னை பார்த்தவுடன் ஷாக்காகி.. கண்கள் விரிய முகம் மலர்ந்து சிரித்தாள். என் கூடவே நிறைய நேரம் செலவழித்தாள். புரிந்துகொண்ட நந்தா எனக்கு Carry On என்று சொல்லி.. போகும் போது.. டேய் இப்ப வாவது சொதப்பாம ஒழுங்கா Propose பண்ணு என்று சொல்லி விட்டு நகர்ந்து கொண்டான். எனக்குத்தான் திக்.. திக் என்றிருந்தது. ஆனால் எனக்கு அவள் கூட time spend பண்ணுவது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. மண்டபத்தில் privacy ஆக நிறைய இடம் இருக்க.. நானும் மலரும் ஒரு மூலையில் chair ல் உட்கார்ந்து பேசிக் கொண்டே topic எங்கெங்கோ போய் கடைசியில் என் Marriage பக்கம் வந்தது.

என்ன ரவி எப்ப உன் Marriage? இந்த yr. ஏதாவது Plan இருக்கா?

அப்படியெல்லாம் plan இல்லை சித்தி.. நல்ல பொண்ணா இருந்தா போதும்.. மத்தபடி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை.

சூப்பர்.. உனக்கென்ன ஆளு சூப்பரா Handsome ஆ இருக்க.. இந்நேரம் Set ஆகயிருக்கனுமே. உண்மையிலேய சொல்லு. ஏதாவது லவ் அப்படி?

அதெல்லாம் இப்பவரைக்கும் ஒண்ணுமில்லை சித்தி..
உன்னை மாதிரியே அழகா இருந்து.. என் மனசுக்கும் பிடிச்சிருந்தால் போதும்.. கண்டிப்பா லவ் தான்.

மலரின் முகம் மாறத் தொடங்கியது.

சரி நீ சித்தி, ஏன் இன்னும் Marriage பண்ணாம?..

அப்படியெல்லாம் இல்லை ரவி.. எனக்கு நிறைய Personnel Problems.. Marriage னாலே கசப்பா இருக்கு.. அதுவும் என் Past life இன்னும் Bitter Experience..
வேணாம் விடு.. அத பத்தி யோசிச்சாலே எனக்கு mood out ஆயிடும்.

ஓகே... ஓகே.. இப்ப எல்லாம் நல்லா தான் போயிகிட்டிருக்கில்ல.. ஏன் நீ உனக்கு பிடிச்ச இல்ல.. உன்னய உண்மையா லவ் பண்ற யாரையாவது Consider பண்ண கூடாது.

சித்தி ப்ச்சு.. என்று அலுத்து கொண்டே சிரித்தாள். பின் அத விடு ரவி.. என் problems என்னோடயே போகட்டும். உன்னயபத்தி சொல்லு உன் Office works லாம் எப்படி போயிகிட்டிருக்கு? என்று பிடி கொடுக்காமல் topic யை மாற்ற முயன்றாள்.

நானும் விடாமல் அதெல்லாம் நல்லாதான் போயிகிட்டிருக்கு சித்தி.. அத விடு.. இப்ப உண்மையிலேய உன்னய உயிருக்கு உயிராய் உருகி லவ் பண்றவன்..‌ உன் Past life பத்தி கவலைப்படாதவன் உன் லைஃப் ல கல்யாணம் பண்ணிக்கனும்னு முன் வந்தால்.. உன் முடிவு என்ன?

என் கண்களை டக் கென்று நிமிர்ந்து பார்த்தவள்.. விரக்தியாக சிரித்துக்கொண்டே.. இப்போதைக்கு நான் தயாரா இல்லை.. ஏன்னா.. என்றவள் மேலும் பேச முடியாமல்.. தலை குனிந்து கொண்டு தன் கண்ணீரை மறைக்க விரும்பினாள்.
நானும் அவளை ஏதும் Compel பண்ண விரும்ப வில்லை.
அதற்குள் அவள் Friends Ladies சிலர் அங்கு வர.. உடனே முகத்தை துடைத்துக் கொண்டு.. சிரித்தபடியே என்னை Introduce பண்ண.. நானும் Respond ஆனேன். அதில் சிலர் என்னையே பார்த்துக் கொண்டிருக்க.. எனக்கு அது தெரிந்தாலும், என் மனது முழுவதும் மலர் நிறைந்திருக்க.. நான் மட்டும் என் மலர் முகத்தையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்க.. அதை தெரிந்து கொண்ட மலர்.. என்னிடம் Bye என்று சொல்லி விட்டு அவர்களுடன் புறப்பட்டு சென்றாள்.

எழுந்து நின்று கொண்டிருந்த நான் மனம் கனக்க., கொஞ்சம் Feelings டன் அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச தூரம் போனவள்.. திரும்பி என்னை பார்த்தவள், என்ன நினைத்தாலோ.. அவள் ஃப்ரண்ட்ஸ் ம் ஏதோ சொல்லி விட்டு என்னிடம் வேகமாக வந்தவள்..

என்னைப்பார்த்து.. அப்படி என்னையே பார்க்காதடா ப்ளீஸ்.. என்னால போக முடியலை.. நீ என் முதுகுக்கு பின்னால் பார்த்தாலும் அது என்னை வதைக்குது. என் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. உன் நல்ல மனசுக்கு நீ நினைச்சதவிட உனக்கு இதைவிட இன்னும் நல்லதாவே அமையும் பாரேன் என்று சொல்லி விட்டு.. கொஞ்ச நேர அமைதிக்கு பின்.. என் கண்களை பார்த்து மெதுவாக சரி நான் வரட்டுமா? கிளம்பவா? என்று கேட்க..

நான் மௌனமாக தலையாட்டியபடியே.. என் மனசுக்கு பிடிச்சது மட்டும் நடந்தால் எனக்கு அதுவே போதும்.. அத விட அதிகமா நல்லது நடக்கவும் வேணாம். அதுக்கு நான் ஆசைப்படவும் இல்லை. அதை எல்லாரும் புரிஞ்சிகிட்டா சரி..

அப்படியே கண்கள் கலங்க என்னை பார்த்தவள், பின் தலை குனிந்துபடியே சேரின் மேல் இருந்த என் வலது கையை தன் வலது கையால் பிடித்து அமுக்கி சில செகண்ட்ஸ் இருந்தவள்.. மறுபடியும் என் கண்களைப் பார்த்தவள்.. தன் கண்களாலே வரேன் என்று சொல்லி விட்டு டக்கென்று திரும்பி நடந்தாள். நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருக்க.. அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே தெரியும் படி தலையாட்டியபடியே கைகளால் சைகை செய்து மறைந்தாள்.
நான் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.

தொடரும்..
உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன. pl. mail to
siva69.com@gmail.com