Chithi please 6 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 6

The Author
Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 6

 வணக்கம் நான் உங்கள் சிவா.. முந்தைய பாகங்களை படித்து விட்டு தொடரவும். இந்த தொடர் ஒரு உணர்வுபூர்வமான காதல் காவியம்.

 

உங்கள் கருத்துக்கள், suggestions

வரவேற்கப்படுகின்றன.

siva69.com@gmail.com

 

நான் மாலினி...

 

 

ஆற்றங்கரை ஐயனார் கோவிலில் உட்கார்ந்து wait பண்ணிக் கொண்டு இருந்த எனக்கு பொறுமையாக இருக்க முடியவில்லை. அடிக்கடி watch யை பார்த்து கொண்டே இருந்தேன். . இருக்க முடியாமல் எழுந்து அங்கேயும் இங்கேயும் நடக்க... தூரத்து தோப்பில் குயில் கூவும் ஓசை காதுக்கு மிக இனிமையாக இருந்தது. தூரத்தில் எந்த வண்டி சத்தம் கேட்டாலும் அது சிவாவின் Bike சத்தம் தான் என்று மனது அடித்துக்கொண்டு பரபரப்பாக.. பின் அது இல்லை என்று தெரிந்து ஏமாந்தவுடன்..சின்ன கவலையுடன் என்னை நினைத்து எனக்கே சிரிப்பாக வந்தது. கொஞ்ச நேரத்தில் Pulsar bike sound கேட்டவுடன் எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.

கிட்ட வர வர அது என் சிவா தான்.

Bike stand போட்டு விட்டு என்னை நோக்கி ஓடி வந்தான். நான் செயலிழந்து அப்படியே நின்று விட்டேன். நிஜமாகவே என்னால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நெஞ்சம் விம்மியது.

என் இரு கைகளையும் விரித்து காதலுடன் தழு தழுத்த குரலில் சிவா.. என்று கூப்பிட.. ஓடி வந்து என்னை அப்படியே கட்டி பிடித்து நெற்றியில் கண்களில் முத்தமிட்டு, பின் தூக்கி தட்டாமலை சுற்றி கீழே இறக்கி .. சித்தி இதோ Placement order.. என்று காண்பிக்க.. என் கண்களில் கண்ணீர்.. ஒன்றும் தெரியவில்லை. என் இடது கையை தன் கைகளுடன் கோர்த்து கொண்டு அடிக்கடி முத்தமிட்டு கொண்டே இருந்தான். அவ்வளவு சந்தோஷமா இருந்தான். அது அவன் என் மீது காட்டிய அன்பிலிருந்து, சிவா Body language லிருந்து தெரியவந்தது. எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அவன் Placement Order+ Details பற்றி கொஞ்ச நேரம் கழித்து பொறுமையாக பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். நல்ல Offer. இருவரும் மெதுவாக நடந்து அப்படியே ஐயனார் கோவில் அரசமர மேடையில் உட்கார்ந்து கொண்டோம். நான் அவன் தோளில் கொஞ்சம் சாய்ந்து கொண்டு அவன் பேசுவதையே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். 

சிவா வந்ததிலிருந்து பேசிக்கொண்டே இருந்தான். இது எல்லாமே என்னால் தானாம்.. நான் அவன் பக்கத்தில் இருந்தால் போதுமாம்.. எதையும் சாதித்து விடுவேன். நான் அவன் அதிர்ஷ்ட தேவதை, என் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்து விடுவேன் என்று .. என் கைகளை பிடித்து வருடியபடி அடிக்கடி என் கைகளில் முத்தம் கொடுத்து கொண்டே .. எனக்கு ரொம்ப பெருமையாகவும் அவனை பார்க்க பார்க்க சந்தோஷமாகவும் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து, சிவா என்னை பார்த்து.. சித்தி உன்னோட மடியில படுத்துக்கனும்னு ஆசையா இருக்கு என்றான்.

நான் நெகிழ்ந்து போய் என் மடியில் படுக்க வைத்து அவன் தலைமுடியை கோதி கொண்டே அவன் கன்னம், நெற்றி, கண்கள், உதடு களில் அவ்வப்போது முத்தம் கொடுத்து கொண்டே இருந்தேன்.

 

சிவா ஆனந்தத்தில் என் கன்னங்களை வருடிக் கொண்டே.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சித்தி.. என்னோட அழகான தேவதை மடியில படுத்துகிட்டு இந்த மாதிரி உன்கிட்ட இப்படி முத்தமா கிடைக்கிறது நான் செஞ்ச அதிர்ஷ்டம். நீ என் கூட இருந்தால் போதும், வேற எதுவும் வேணாம். நீ என் வாழ்க்கையில் கிடைச்ச மிகப்பெரிய Gift. இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்? மனசு நிறைஞ்சு இருக்கு. இப்படியே இந்த சந்தோஷத்தோடு செத்து போயிடலாம் னு போல தோணுது. 

அவன் சொல்லி முடிப்பதற்குள், சிவா, அப்படியெல்லாம் பேசாதே, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது, என்று குனிந்து என் மடியில் படுத்திருந்த அவன் உதடுகளை என் உதடுகளால் லாக் பண்ணினேன் மேற்கொண்டு பேச விடாமல்.

 

அப்படியே மெய் மறந்து இரண்டு பேரும் இருந்து விட்டோம். மாலினி என்று ஒரு குரல் எங்கோ கேட்டது.,

சரியாக எனக்கு காதில் விழ வில்லை.

திரும்ப வும் மாலினி என்ன இது என்று

கொஞ்சம் கோபத்தில் குரல் கேட்க,

நிமிர்ந்து பார்த்தால் என் அப்பா..

கண்கள் சிவந்து, கோபத்தில் என்னை பார்த்து ஏதோ கத்திக் கொண்டு இருந்தார். பதட்டத்தில் இருவரும் சடாரென்று எழ, சிவாவை என் மடியில் பார்த்து இன்னும் அவருக்கு அதிர்ச்சி.

மாலினி என்ன காரியம் இது.

உன்னோட Bike அங்க அனாதயா நிக்குதே னு பார்க்க வந்தால்.. இது என்ன அசிங்கம்.?

என்ன நடக்குது இங்க? இவன் எப்படி இங்கே? எத்தனை நாளா நடக்குது இது?

சிவா உடனே இல்லை தாத்தா நான் தான்.. எனக்கு job.. offer.. அதை சித்தி கிட்ட சொல்ல லாம்னு.. என்று தந்தியடிக்க..

உனக்கு அவ சித்தி னு ஞாபகம் இருக்கா?

மாலினி என்ன இதெல்லாம்? நீயா இப்படி? ச்சே.. என்னால் நம்பவே முடியலை.

மறுபடியும் சிவா, இல்லை தாத்தா நான் தான் சித்தி யை லவ் என்று உளற..

கருமம்.. முதல்ல இவளை சொல்லனும் என்று முன்வந்து என் கன்னத்தில் பளார் என்று அறைய.. 

என்னால் எதுவும் பேச முடியவில்லை... 

என் கண்களில் இருந்து கண்ணீர் கர கர வென்று வந்தது. 

என்னை அடித்ததை பார்த்த சிவா தாங்க முடியாமல் 'யேய்' என்று அப்பா மேல் கை ஓங்க,

 

நான் பதறி போய் சிவா என்ன இது? என்ன காரியம் பண்ற?

 

இல்ல சித்தி உன்னய போய் அடிக்கிறாரே இந்த ஆளு?.

என்ன வார்த்தை இது சிவா? பெரியவங்க னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல்? 

சிவா நீ Calm ஆ இரு.. நான் சொன்னா கேட்பல?

நீ சொன்னா கண்டிப்பா கேட்பேன் சித்தி.

அப்ப இங்க என்ன நடந்தாலும் நீ பேசாம ஏதும் react ஆகாம இரு. எது நடந்தாலும் சரி.. ஓகே.. நான் பேசிக்கிறேன்.

அப்பா, இதை நாங்கள் உங்க கிட்ட முன்னாடியே தெரியப்படுத்தி இருக்கனும்.இது ஒரு சிக்கலான issue.

தயவுசெய்து அமைதியா, கோபப்படாமல் நான் சொல்றதை கேளுங்க.

இனிமேல் என்னத்த கேட்குறது. அவன் என்னமோ என்னய அடிக்க கை ஓங்குறான்.. இங்கே என்ன நடக்குது.

அப்பா please.. இங்கே எதுவும் பேச வேணாம். சிவா க்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

இப்ப இங்க இதை Discuss பண்ண வேண்டாம்.

வீட்டுக்கு போய். நான் உங்களுக்கு எல்லாம் clear ஆ explain பண்றேன்.

அதெல்லாம் தேவையில்லை. நான் தான் என் கண்ணால பார்த்தேனே.. இந்த அசிங்கத்தை .. முதல்ல இவனை அடிக்கனும். அங்கேயிருந்து பைக் ல வந்திருக்கான் பாரு..

என்று சொல்லி சிவா கன்னத்தில் மாறி மாறி பளார் பளார் என்று அடிக்க..

சிவா எந்த உணர்ச்சியும் காட்டாமல் நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு அப்படியே அசையாமல் கை கட்டிக்கொண்டு நின்றான்.

எனக்கே பாவமாக இருந்தது.

 

அப்பா நான் சொல்றதை கேளுங்க.. அவனை அடிக்காதிங்க ப்ளீஸ்..

உன்னையும் தான் அடிக்கனும் என்று என்னையும் கன்னத்தில் அடித்து ஓய்ந்து ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு வாங்க.. லஷ்மிக்கும் மாப்பிள்ளை க்கும் முதல்ல Inform பண்ணனும் இந்த அசிங்கத்தை..

வீட்டுக்கு வாங்க வச்சிக்கிறேன் பஞ்சாயத்தை..

என்று என்னை தர தர வென இழுத்து கொண்டு நீ போ முதல்ல.. அவன் வரட்டும் பின்னாடி ., என்று என்னை என் பைக் கிடம் தள்ளி கொண்டு போனார்.

நான் என்ன நடக்க கூடாது, யாருக்கு முதலில் தெரியக் கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்திருந்தது. அப்பா பயங்கர கோபக்காரர். கோபத்தில் என்ன பண்ணுவார் என்று அவருக்கே தெரியாது. இந்த பிரச்சினை யை எப்படி Solve பண்ணப்போறோம் என்று தெரியவில்லை. எனக்கு தலையே சுற்றுவது போல இருந்தது.

பாவம் சிவா, நான் சொன்ன ஒரு வார்த்தை க்கு கட்டுப்பட்டு, அத்தனை அடி வாங்கி னாலும்... எனக்கு அழுகையாக வந்தது.

என்ன நடந்தாலும் சரி நாம் Stubborn ஆக இருக்க வேண்டியதுதான். எது நடந்தாலும் சரி Face பண்ணுவோம்.

இப்போது இங்கே வீட்டுக்கு அக்கா, மாமா வருவார்கள். அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன்? அவங்க எப்படி இந்த issue வை எடுத்துக்குவாங்கனு தெரியவில்லை.

சின்ன வயசிலிருந்தே அக்கா என்னை திட்டினதோ சண்டை போட்டதோ கிடையாது. நான் late ஆக பிறந்தேன் என்பதற்காக என் மீது அவ்வளவு பாசம், அன்பு. ரொம்ப நாள் நான் அக்காதான் என் அம்மா என்று நினைத்திருந்தேன்.

இப்ப எப்படி? அக்கா என்ன சொல்லுவாள்? என்னை பற்றி என்ன நினைப்பாள்? பின்னாடி திரும்பி பார்த்தால் தூரத்தில் சிவா bike யை தள்ளி கொண்டு வருவது தெரிந்தது.

வீடு போய் சேரும் வரை இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சில மணிநேரம் கழித்து வீட்டில் அப்பா, அம்மா, மீனா, மாமா, அக்கா, நான், சிவா எல்லோரும் ஹாலில் கூடியிருக்க.. இறுக்கமான சூழ்நிலை காணப்பட்டது. வேலைக்காரர்களை வீட்டுக்கு போக சொல்லி விட்டார்கள்.

அப்பா எல்லாம் சொல்லி முடித்து விட்டு, என்ன மாப்பிள்ளை இப்ப சொல்லுங்க? நீங்க? என்ன பண்ணலாம்?.

மாமா, நீங்க சிவா வை அடிச்சிங்களா?

அது இல்லை மாப்பிள்ளை.. அவன் என் மேலே கையை ஓங்கினான்.

 

அது ஓகே.. உங்களை அடிக்கல லை.

டேய் சிவா இங்கே வா..

பாருங்க அவன் உதட்டை.. Blood.. எப்படி கன்னி போயிருக்கு னு..

என்ன பெரிய மனுஷன் நீ? இப்படி அடிச்சிருக்க?

ஓஹோ.. உங்களுக்கு இப்ப நான் அவனை அடிச்சதுதான் Problem ஆ?

அவன் என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்கான்? அதக்கேட்க துப்பில்லை உங்க எல்லாருக்கும்.. 

நிலைமை வேறுவிதமாக Serious ஆக.. அம்மா வும், அக்காவும் பரிதவித்து நின்றார்கள். 

யாரை நிப்பாட்ட சொல்வது.. யாரை கண்டிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

என் நிலைமை யோ வேறு விதமாக இருந்தது. என்னால் தலைநிமிர்ந்து யாரையும் பார்க்க முடியவில்லை. குற்றவாளி போல் நிறுத்தப்பட்டிருந்தேன். சிவா நிலைமையோ அதைவிட மோசம். ஆனால் அவன் மன உறுதி யுடன் கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். சில சமயங்களில் எங்கள் பார்வைகள் கலந்த போது எனக்கு அவன் கண்கள் தைரியமாக இரு. நான் இருக்கிறேன். மனம் தளர்ந்து விடாதே . என்று சொல்வது போலிருந்தது.

அப்பாவும் மாமாவும் இருவரும் கோபத்தின் உஷ்ணத்தில் ஏக வசனத்தில் Argue பண்ணிக்கொண்டிருக்க..

அப்பா திடீரென்று கோபத்தில்..

வளர்ப்பு சரியாய் இருந்தால் எல்லாம் சரியாய் இருக்கும்.. இங்கே தான் எல்லாம் தலைகீழாக இருக்கே..

என்ன வளர்ப்பு சரியில்லை.. அப்படி என்ன என் பையன் கிட்ட கண்டுட்ட?

நீயெல்லாம் பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிற? பேசுற? 

ஆமாமாம்.. வளர்ப்பும் சரியில்லை.. பிறப்பும் சரியில்லை.. அவன் லஷ்மி வயித்துல பிறந்திருந்தால் இப்படி பண்ணியிருப்பானா? அனாத பயதானே., என்று சொல்ல..

அக்கா.. உடனே அப்பா என்ன பேசறிங்க, வாய மூடுங்க..

நம்ம கோவில்ல பண்ணிய சத்தியம் என்னாச்சு? என்று அலற..

நான் பயந்துபோய் சிவாவை பார்க்க.. அதுவரை உறுதியாக நின்று கொண்டிருந்தவன், இரும்பை காய்ச்சி தலையில் ஊற்றியது போல் துடி துடித்து.. 

தாத்தா என்ன நான் அம்மா வயித்துல பிறக்கலையா? நான் அனாதையா? என்று கண்ணீருடன் 'அம்மா ' என்று கத்த..

அக்கா விற்கு மயக்கம் வருவது போல் இருந்து, சிவா.. இல்லை.. சிவா..என்று பிதற்ற.. மாமாவும் மீனாவும் அக்கா பக்கத்தில் போய் முதலுதவி பண்ண.. நான் உறைந்து போய் நின்றேன். அம்மாவும் கூட சிலை போல ஒரு தூணில் சாய்ந்து ஒண்ணும் பண்ண முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

எந்த பிரம்மாஸ்திரம் விழுந்தால் பிரளயமே ஏற்படும் என்று பயப்பட்டேனோ .. அதுவே நடந்தது.

அதன் விளைவுகள் மிக பயங்கரமாக இருந்தது.

அதற்குள் அப்பா.. கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்.. லஷ்மி யை ஏண்டா கேட்குற.. என்னய கேளு.. சொல்றேன்.

 

கல்யாணம் ஆகி 4 வருஷமா லக்ஷ்மி க்கு குழந்தை தங்காதது னால மருதமலை முருகன் கோவிலுக்கு வேண்டிகிட்டு கடைசி வாரம் விரதம் முடிச்சி கோவிலுக்கு போனா 3 மாச குழந்தை யா நீ எங்களுக்கு கிடைச்ச. யாரோ உன்னய கோவில் பிரகாரத்தில அனாதயா விட்டுட்டு போயிட்டாங்க. முருகன் கோவில்ல நீ எங்களுக்கு கிடைச்சது னாலதான் உனக்கு சிவகுமார் னு பெயர் வச்சி எங்கள் பிள்ளையா நினைச்சி வளர்த்துகிட்டிருக்கோம். சொல்லி முடிப்பதற்குள்...,

அக்கா மயக்கத்தில் இருந்து எழுந்து அப்பா.. என்று கத்தி, கூச்சல் போட்டு.. என்ன காரியம் பண்ணிட்டிங்க.. ஐயோ.. யாருக்கு தெரியக்கூடாது னு நினைச்சேனோ அவன் கிட்ட போய் சொல்லிட்டிங்களே.. இதுக்கு தான் அன்னைக்கு கோவில்ல நாம எல்லாரும் சத்தியம் பண்ணோமா? எந்த சமயத்திலும் இந்த ரகசியத்தை வெளியிடக்கூடாது னு.

இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே. ஓ வென்று அழுது கீழே விழுந்தாள். மாமா, மீனா அக்காவை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் மட்டும் சிவாவையே கண் கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன். எனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று மட்டும் நிச்சயம் தெரிந்தது.

சிவா, உடைந்து போய்.. கும்பிட்ட கைகளோடு அக்காவிடம் அழுது கொண்டே போய்.. அம்மா நான் உன் பிள்ளை இல்லையாம்மா? உன் வயித்துல பிறக்கலையா? என்று அக்கா காலை பிடித்து கொண்டு கதற.. அரை மயக்கத்தில் இருந்த அக்கா சிவா.. சிவா.. என்று அரற்றினாள். பிறகு அப்பா.. மீனா என்று அவர்களையும் அழுதுகொண்டே கட்டிப்பிடித்து, ஒரு வித மயக்க நிலையில் இருந்தான். பின் கைகளை கும்பிட்ட படியே என் பக்கம் திரும்பி நேராய் என்னை பார்த்து.. கண்களாலே... என்னை மன்னித்து விடு... சித்தி.. என்று 

சொல்வதை போல் உணர்த்தி.. வாசலை நோக்கி பொம்மை போல நடக்க ஆரம்பித்தான். எல்லோரும் அக்காவை சமாதானபடுத்துவதிலும்.. முதலுதவி செய்வதில் Busy ஆக இருந்தனர்.

எனக்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. இந்த மாதிரி நிலையில் நான் சிவாவை எப்பொழுதும் பார்த்ததில்லை. அந்த நிலையில் சிவா வை பார்த்த பின் நான் நானாகவே இல்லை. என்னுடைய ஆலோசனை முழுவதும் சிவா மேல் தான் இருந்தது. மனது முழுவதும் சிவா தான் நிறைந்திருந்தான். அவன் உடைந்து போனதை கண்கூடாக பார்த்த பின் வாழ்க்கை யே விரக்தி யானது போல் இருந்தது. அப்படியே பின்னால் நகர்ந்து ரூமிற்குள் சென்றேன். அலமாரியில் பண்ணை தோட்டத்துக்கு தேவையான பூச்சி மருந்து மற்றும் உர மருந்துகள் கண்ணில் பட்டது.. கையில் ஏதோ பூச்சி மருந்து ஒன்றை எடுத்து ரூம் கதவை தாளிட்டேன். வெளியே மீனா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே சிவா பைக்கில் செல்லும் சத்தம் கேட்டது. அப்படியே மீனா அலறும் சத்தம்.. 

Dady.. சிவான்னா bike எடுத்துகிட்டு speed ஆ எங்கேயோ போறான். சிவான்னா.. அண்ணா.. 

பின் நான் கதவை மூடுவதையும், கையில் ஏதோ Bottle இருப்பதையும் பார்தது, ஏதோ Strike ஆகி... 

Daddy, பாட்டி, சித்தி யை பாருங்க.. உள்ள போயி Room யை lock பண்ணிகிட்டாங்க.. கையில ஏதோ Bottle இருக்கு. 

அவர்கள் ரூமை நோக்கி ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் அதற்குள் bottle யை திறந்து சிவா ஐ லவ் யூ என்று சொல்லியபடியே கசப்பாக இருந்த ஏதோ ஒன்றை குடித்தேன். பாதி உள்ளே போய்.. குமட்டி கொண்டு மீதி பாதி வெளியே வந்தது. கண்கள் சொருக அப்படியே மயங்கி கீழே விழுந்தேன்.

 

 

நான் சிவா....

பைக் கை எடுத்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமலே மனம் போன போக்கிலே போய்க் கொண்டிருந்தேன். என் ஆலோசனை எல்லாம் நான் அனாதை.. அம்மா வயிற்றில் பிறக்கவில்லை.. என்பதை சுற்றியே வந்தது. மனம் வலித்தது. 

சித்தி யை நினைக்கையில் நெஞ்சம் விம்மியது. நிஜமாகவே மனதில் தென்றல் வீசியது போல் இருந்தது. எனக்கு இப்போதைக்கு உள்ள ஒரே ஒரு ஆறுதல் என் சித்தி மட்டும் தான். ஆனால் நான் அனாதை என்று தெரிந்த பிறகு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் செல்போன் ரிங் ஆகியது, அம்மா call. 

நான் call attend பண்ணவில்லை.. சித்திக்கு முன்பே இது பற்றி தெரியுமா?. தெரிந்திருக்கும்... தெரிந்தும் என்னை லவ் பண்ணுகிறாள் என்றால் எனக்கு இன்னும் சித்தி மீது அபிமானம் கூடியது.

மறுபடியும் செல் போன் ரிங் ஆகியது.. Daddy.. எடுக்க வில்லை.

அம்மா தான் பாவம்.. அதிர்ச்சியில் மயக்கமடைந்து விட்டாள். எனக்கு அந்த வீட்டில் இனிமேல் வேலை இல்லை. நான் ஒரு அனாதை.. செல் போன் மறுபடியும் ரிங் ஆனது. முதலில் இதை switch off பண்ண வேண்டும். இல்லைனா எங்காவது தூக்கி விசிறியடித்து விடலாம்.

ஃபோனை எடுத்து பார்த்தால் Angel என்று display.. என்னோட தேவதை, என்னுடைய உயிர், என் சித்தி.. உடனே பைக் கை neutral ல போட்டு , ஹலோ.. சித்தி.. சித்தி.. என்று கூப்பிட..

ஹலோ அண்ணா நான் மீனா.. ப்ளீஸ் call ஐ cut பண்ணிடாத.. யார் போன் பண்ணாலும் நீ எடுக்க மாட்ட னு எனக்கு தெரியும். அதனாலதான் சித்தி போன் லிருந்து call பண்றேன். அண்ணா சித்தி oison சாப்பிட்டுடாங்க... பொள்ளாச்சி Hospital க்கு கொண்டு போயிட்டிருக்கோம்.. மயக்கத்தில சிவா..சிவா.. னு உன் பேரைத்தான் சொல்லிகிட்டு இருக்காங்க. ப்ளீஸ் அண்ணா நீ வா.. உடனே வா..

எனக்கு இடிமேல் இடி விழுந்த மாதிரி இருந்தது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. என்னோட சித்தி.. என் தேவதை.. விஷம் குடிச்சிட்டாளா? அதுவும் எனக்காக.. உடனே சித்தி யை பார்க்கணும் போல தோன்றியது.. இந்த சமயத்தில் நான் சித்தி அருகில் இருக்க வேண்டும்...

Hospital address தெரிந்து கொண்டு பைக்கை திருப்பி வேகமெடுத்தேன். மனம் முழுவதும் சித்தி.. சித்தி.. நினைவெல்லாம் சித்தி யைப் பற்றியே.

பக்கத்து ரோட்டில் திரும்ப.. பைக் ஸ்பீடில் ரோடில் வளைந்து ஏறி தடுமாற.. இன்னொரு வளைவில் இருந்து வந்த டிராக்டரை நான் கவனிக்கவில்லை. ப்ரேக் பிடிக்க வேண்டும் என்று நினைப்பதற்குள்.. டிராக்டர் ஓட்டுபவரும் கன்ட்ரோல் பண்ணுவதற்குள்.. பைக் வேகமாக மோதியது. நான் தூக்கி எறியப்பட்டேன்.

கீழே விழும் போது என் வாயிலிருந்து சித்தி என்ற வார்த்தை மட்டும் தான் வந்தது. தலை எதிலோ மோதியது. சூடான இரத்தம் என் நெற்றியில் இருந்து வடிந்து கண்களை நனைத்தது. மயக்கம் ஆனேன். அந்த காரிருள்.

 

கடைசி பாகம் விரைவில்..

உங்கள் சிவா.

 

உங்கள் கருத்துக்கள், suggestions

வரவேற்கப்படுகின்றன. Please mail to 

siva69.com@gmail.com

 

தொடரும்...