DAD'S ARE ALWAYS LIER'S - 4 in Tamil Fiction Stories by Pramila books and stories PDF | DAD'S ARE ALWAYS LIER'S - 4

The Author
Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

DAD'S ARE ALWAYS LIER'S - 4

சரி குட்டி உனக்கு நம்பிக்கை இல்லை எனில் நீயே சென்று எங்கள் அறையில் பார் ...... தனு கண்களில் மட்டும் இப்பொழுது கண்ணீர் இல்லை எனில் , நான் ஒப்புக் கொள்கிறேன் , நீ சொன்னது சரிதான் , உன் அம்மா மேல் தான் தவறு என்று , அதுமட்டுமில்லை சற்று முன்பு என்னிடம் இம்முறை நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று சொன்னாள் அல்லவா , ஆனால் அவள் நிச்சயம் உன்னிடம் மன்னிப்பு கேட்பாள் , அப்படி நடந்தால் நீ உன் அம்மாவை மன்னித்து விட வேண்டும்.

மகா : சரி அப்பா அதையும் பார்க்கலாம் (மகா தனது அம்மாவின் அறைக்குள் செல்கிறாள் )

கிருஷ்ணா : என்ன அண்ணா இப்படி செய்துவிட்டீர்கள் .... இப்பொழுது மட்டும் நீங்கள் சொன்னபடி நடக்கவில்லை , எனில் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிடும் நீங்கதான் மாட்ட போகிறீர்கள் 🙄 🙄 ( இம்முறை அக்கறையோடு )

அசோக் : இல்லை ... இல்லை .... கிருஷ்ணா நீ நினைப்பது போல் எதுவும் நடக்காது , எனக்கு தனுவைப் பற்றியும் தெரியும் , மகாவை பற்றியும் தெரியும் நான் நிச்சயமாக சொல்வேன் இருவரும் சேர்ந்துதான் வருவார்கள் பார் ....

கிருஷ்ணா : ஆமா ... ஆமா ... உங்களுக்கு என்னதான் தெரியாது 🧐 , சொல்லுங்க அவங்க இரண்டு பேர் பற்றியும் தெரியும் , என்னை பற்றியும் தெரியும் , இந்த உலகத்தில் இருக்கும் அனைவரைப் பற்றியும் தெரியும் . ஆனால் அண்ணா உங்களுக்கு பிரச்சனை என்ன என்பது தெரியாதே ...... ( இம்முறை வழக்கமான கிண்டல் பேச்சு 😉😛 😋 😜 🤪 ஆனால் அது அசோக்கிற்கு பழகிப்போன ஒன்று தான் )

ஆஹா மகாவை மறந்து விட்டோமே 😅 .... சரி

மகா அறைக்கு செல்கிறாள் . அப்பொழுது தனு தனது அறையில் படுத்துக்கொண்டு இருப்பதை பார்க்கிறாள். இன்னும் அருகில் மகா செல்ல தனு கையில் ஏதோ இருப்பதை பார்க்கிறாள். வேறு என்னவாக இருக்க முடியும் , அது மகாவின் போட்டோ தான் குழந்தையாக இருக்கும் போது எடுத்தது .

மகா ( நேரில் எப்பொழுதும் என்னை திட்டுவது பிறகு அறைக்கு வந்து போட்டோவோடு பேசுவது .... என மனதில் எண்ணியவாறு அந்த போட்டோவை எடுக்க முயற்சிக்கும் போது தனு விழித்துக் கொள்கின்றாள் தனு கண்கள் நன்றாக சிவந்து இருப்பது அசோக்கின் வார்த்தைகள் உண்மை என காண்பித்தது.... )

மகா : அம்மா....

அவ்வளவு தான் அந்த ஒரு வார்த்தை தான் .. இவ்வளவு நேரமும் மகா முன் நடித்துக் கொண்டே இருந்த கண்கள் உண்மை பேச தொடங்கின... ( அட கண்ணீரைத் தான் அப்படிக் கூறினேன் 😥 )

தனு : மகா குட்டி அம்மா செய்தது தவறு தான். ( தவறு இல்லாத போதும் ) அம்மா உன்னை அப்படி திட்டி இருக்கக்கூடாது . அம்மாவை மன்னித்து விடு ( எனச்சொல்லி விட்டு அழத் தொடங்கினாள் )

( அசோக்கின் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகி விட்டது ..... இதற்கு மேல் மகாவினால் என்ன என்ன பேச முடியும் சொல்லுங்கள் என்ன இருந்தாலும் தாய் பாசம் எப்போதும் மாறாதது அல்லவா .... அது எப்போதும் பாரபட்சம் காட்டாது .... அப்படித் தான் தனுவும் ..... இப்பொழுது மகா ஓடிச் சென்று தனது தாயை கட்டி அணைத்து முத்த மழையை 👩‍👧💁‍♀️ பொழிகிறாள் .... அதில் தனு முழுவதும் நனைந்தே விட்டால் 🙃 🙃 😜 😜 . )

( அடடா ..... மகாவைப் பற்றி சொல்ல மறந்து விட்டேனே ... மகா விடம் உள்ள பிரச்சனை சண்டை போடுவது மட்டுமல்ல , அவள் தனது அம்மாவை பெயர் சொல்லித் தான் அழைப்பாள் . பலரும் பல முறை சொல்லியும் மகா ஏற்பதாக இல்லை . எல்லாம் தனு கொடுக்கும் இடம் தான் ..... தனுவுக்கு யாரும் மகாவை எதுவும் சொல்லக் கூடாது . அந்த உரிமை அப்பாவாகிய எனக்கும் கிடையாது 😅 😁 . அப்புறம் எப்படி சண்டை ? அப்படி தானே யோசிக்கிறீங்க .... அதெல்லாம் அப்படித் தான் முடிந்ததை பற்றி எதற்கு பேச வேண்டும்.... விடுங்க விடுங்க . ஒரு வழியாக அவங்க இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை முடிந்தது 😀 ஆனால் இனி பிரச்சனை எனக்குத் தான் எப்படி சமாளிக்கப் போகிறேனோ 😅 🙃 🙄 )

மகா : வா , தனு போய் சாப்பிடலாம் ....

( இருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதை பார்த்த , கிருஷ்ணாவிற்கு ஒரே ஆச்சரியம் தான் ... ஆனால் அதை வெளிக் காட்டவில்லை ... அண்ணன் வார்த்தைகளில் கிருஷ்ணாவுக்கு எப்பொழுதும் நம்பிக்கை அதிகம் ... ஆனால் அதை எப்பொழுதும் வெளியில் சொன்னது இல்லை 🤭 🤭 🤫 )

(மகா தன் கைகளால் தன் அம்மாவிற்கு உணவை தருகிறாள். இப்பொழுது இங்கு அன்பும் பரிமாறப்படுகிறது. )

( கிருஷ்ணா மகாவிற்கு ஜாடை 😉காட்டுகிறான் . அதை அசோக் கவனித்தும் கவனிக்காதது போல் இருக்கிறான் . ஆனால் மகா விடுவதாக இல்லை 🙃 😉 . )

மகா : அப்பா நீங்க சொன்ன கதையில் கிரீடம் எங்கே போனது என்று சொல்லவே இல்லையே ....

அசோக் : அது வந்து.... அது வந்து மகா.... அதை நீீ உன் சித்தப்பாவை தான் கேட்க வேண்டும் .... 😜 😉

மகா : சித்தப்பா சொல்லுங்க எங்கே அந்த கிரீடம் .... ( முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ) 😕 😕

கிருஷ்ணா : ( ஐயோ அண்ணா ..... நேரம் பார்த்து என்னை மாட்டி விட்டு விட்டாரே ... என்ன செய்வது 😐 என்று தெரியாமல் அசோக்கை முறைக்கிறான் 🤨 🤨 )

அசோக் : சரி விடு ... நானே சொல்கிறேன் ... , ஏன் என்று எனக்கு தெரியாது ஆனால் உன்னோடய இந்த சித்தப்பா அவனுடைய மேஜிக் மூலமாக , அந்த கிரீடத்தை மறைய வைத்து விட்டான் ....

மகா ( கோபமாக 😡 ) : சித்தப்பா .... ஏன் இப்படி செய்தீர்கள் ?

( மீண்டும் கிருஷ்ணா பதில் தெரியாமல் விழிக்க 🙄 மகா தொடர்கிறாள் . )

மகா : அந்த கிரீடம் எங்கே சொல்லுங்கள் சித்தப்பா ...

அசோக் : மகா குட்டி , அப்பா என்ன சொன்னேன் உன்னிடம் , கிருஷ்ணா அந்த கிரீடத்தை மறைய வைத்தான் என்று தானே சொன்னேன் , மறைத்து வைத்தான் என்றா சொன்னேன் ....

மகா : அப்படி என்றால் ? இதற்கு என்ன அர்த்தம் 🤔 🤔 அப்பா ....

அசோக் : அப்படி என்றால் .... அந்த கிரீடம் உன்னுடைய தலையில் தான் உள்ளது 😜🙃 .மகா குட்டி ...

மகா : ( மீண்டும் தலையை தடவி விட்டு ) அப்பா ...

அசோக் : மகா குட்டி , அப்பா சொன்னால் நம்ப மாட்டாயா...

மகா : சரியப்பா நம்புகிறேன். ஆனால் , .... இப்பொழுது தாங்கள் தானே சொன்னீர்கள் ... கிரீடம் கீழே விழுந்து விடும் என்று .... அப்படியென்றால் நான் கீழே குனிந்தால் அது விழுந்து விடுமே .... அப்பொழுது என்ன செய்வது அப்பா .... 🤥 😕

அசோக் : அது .... 😅 🙄 அது .. 😬 😬 🙄அப்படியெல்லாம் விழாது கவலைப் பட தேவையில்லை . உன் சித்தப்பா இருக்கிறானே அவன் வழக்கம் போல் செதப்பி விட்டான் . ஆனால் மகா குட்டி அது மேஜிக் 😜 🤭 நீ அழும் போது மட்டும் தான் அது கீழே விழும் . ஆனால் அது கீழே விழுந்தால் நம்மால் கண்டு பிடிக்க முடியாது . அதன் பிறகு நீ உன் அப்பா தந்த பரிசை தொலைத்து விடுவாய் . பிறகு அது உனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை . இப்பொழுது நீ தான் சொல்ல வேண்டும் மகா குட்டி இனி நீங்க ...

மகா : எப்பவும் இனி அழவே மாட்டேன் அப்பா .... 🙂 ஆனால் சித்தப்பா நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் .... 🤨 😕அப்பாவின் பரிசை என்னால் பார்க்கவே முடியவில்லை 😓 😞 ....

கிருஷ்ணா : ( அப்படி ஒன்று இருந்தால் தானே குட்டி பார்க்க முடியும் )

அசோக் : அதற்கும் ஒரு காரணம் இருக்கு மகா குட்டி ....

மகா : காரணமா ..... அது என்ன காரணம் ? 🤔 🤔 அப்பா ..

அசோக் : மகா குட்டி நீ எங்கள் இளவரசி ... ஆனால் இது மற்றவர்களுக்கு தெரியாதே ..

மகா : ஆமாம் அப்பா ... ஆனால் அதற்கு என்ன ..? மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் .... 🤔

அசோக் : எதுவும் ஆகாது மகா குட்டி ..... ஆனால் குட்டி அப்படி தெரிந்தால் உன்னோட நண்பர்கள் தாங்கள் இளவரசி இல்லை என்று வருத்தப்படுவார்கள் அல்லவா ...... 😅 அதுவும் இல்லாமல் நீ இளவரசி என்பது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் .... 😉 🙃 நீ இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து இருக்கிறாய் அல்லவா ...

மகா : ஆமாம் ... ஆமாம் ... அப்பா நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். என் நண்பர்கள் யாரும் வருத்தப்பட கூடாது ... 🙂 அப்பா
அசோக் : என் செல்லம் 😀 ( தப்பித்தோம்
என்ற மனநிலையில் 🤪 🙃 😅 )
( சிறிது அமைதிக்குப் பிறகு )

மகா : ஆனால் சித்தப்பா நான் உங்ககிட்ட பேச மாட்டேன் போங்க .... வா தனு போய் தூங்கலாம் .... ( இருவரும் தூங்கச் செல்கின்றனர் )

கிருஷ்ணா : மகா ... மகா ... குட்டி நில்லுடா..

( இப்பொழுது அசோக் முகத்தில் அந்த கேலிச் சிரிப்பு 😆 🤣 )

கிருஷ்ணா : இப்பொழுது உங்களுக்கு சந்தோஷம்தானே ....🤨

அசோக் : ம்ம்ம்..... மிக்க மகிழ்ச்சி 😄😃😀

( இந்த உலகம் இப்படித்தான் கிருஷ்ணா பொய் சொல்பவர்களை நம்பும் . ஆனால் ... உண்மைக்கு காலமே இல்லை என தன்னைத்தானே நொந்து கொள்கிறான் 😔 🤦‍♂️ )

கிருஷ்ணா : எவ்வளவு பொய் .... மகா பிறந்த போது நீங்கள் ஊரிலேயே இல்லை . அதற்குள் எவ்வளவு பொய் சொல்கிறீர்கள் .... பாவம் அந்த சின்ன பொண்ணு , நீங்க சொன்னதெல்லாம் உண்மை என்று நம்பி என் மீது கோபமாக செல்கிறாள் . இதில் சத்தியம் வேறு ... அப்பொழுது தானே அவள் யாரிடமும் சொல்ல மாட்டாள் நீங்களும் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள் .... என்ன ஒரு சதி வேலை .... 🤨

அசோக் : டேய் .... நானும் ஒப்புக் கொள்கிறேன் . நான் சொன்னது எல்லாம் பொய் தான் . அதனால் என்ன இப்பொழுது .... முதலில் சிறிது யோசி கிருஷ்ணா ... எனக்கு என் மகா சிரிக்க வேண்டும் , அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ... இப்பொழுது ஒரு பொய்யான கிரீடத்தை அவளுக்கு சூட்டினேன் ... அதனால் என்ன மாறி விட்டது இப்பொழுது .... அவள் எப்பொழுதும் அவள் அப்பாவின் பரிசை இழக்க விரும்ப மாட்டாள் ... அதனால் அழவும் மாட்டாள் .... அப்படி ஒரு சூழல் வந்தாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள் . அவள் இளவரசி 👸 🧚‍♀️ அவள் சிரிப்பு ஒன்றுதான் எனக்கு வேண்டும் .. 😀 பிறகு தனு பற்றி நான் கூறியது ஒன்றும் பொய்யில்லையே ... எல்லோர் மீதும் அன்பு காட்டுவது தனுவின் ... இயல்பு , அது உனக்கும் தெரியும் . மேலும் மகாவும் இப்பொழுது தன் அம்மாவை புரிந்து கொண்டாள் . இனி தனு விடம் சண்டை போட நிச்சயம் யோசிப்பாள் . விட்டுக் கொடுக்கவும் செய்வாள் ... உண்மைதான் நான் சத்தியம் வாங்கினேன் . ஆனால் அதற்காக அவள் இதை வெளியில் சொல்லாமல் இருப்பாளா என்று எனக்கு தெரியாது .... ஆனால் நிச்சயம் அவளுடைய நண்பர்கள் வேதனை படக் கூடாது என்பதற்காக சொல்லாமல் இருப்பாள் . இதைவிட நல்ல விஷயம் என்ன இருக்க முடியும் . என்னுடைய வார்த்தைகள் எல்லாம் பொய் தான் .... ஆனால் என் எந்த வார்த்தையும் மகா குட்டியின் வாழ்க்கையை மாற்றப் போவதும் இல்லை , ... வீணாக்கப் போவதும் இல்லை ..... அதை நான் நிச்சயமாக கூறுவேன் கிருஷ்ணா ....

( கிருஷ்ணாவால் எதுவும் பேச இயலவில்லை 😐 )

அசோக் : ஆனால் கிருஷ்ணா .... நீ இதையும் நினைவில் வைத்துக்கொள் ... இப்பொழுது மகா உன் மீது கோபமாக 😡உள்ளாள் . நாளை உங்களை சேர்த்து வைக்கவும் நான்தான் கதை கூற வேண்டும் 😅 🤣 😉 🙃 🤭 ...... அதனால் என்னிடம் கொஞ்சம் யோசித்து பேசு ..... 😅 ( எனக் கூறிவிட்டு சிரிக்கிறான் 😀 )

கிருஷ்ணா : ஆஹா .... இப்படி சொல்லி சமாளித்து விட்டீர்களா ..... அருமை அருமை ( உண்மையில் சமாளிப்பது யார் என தெரிந்தும் 😅 🤭 😅 )

கிருஷ்ணாவிற்கு தன் அண்ணனை பற்றி நன்றாக தெரியும் ..... 😀 அவர் இந்த குடும்பத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறார் 😍 💕 என்பதும் தெரியும் .... ஆனால் அவன் தன் அண்ணனை கேலி செய்யும் பணியை தொடர்ந்து கொண்டு தான் இருப்பான் 😅 🤣 . என்ன இருந்தாலும் அது உடன்பிறந்தவர்களின் உரிமை தானே 😃 😉 🙃 😅 .....

**************** the end 😍 💕 ***************

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் ? எனக்கு தெரியும் நிச்சயம் நன்றாக தான் இருப்பீர்கள் . நான் என்னால் முடிந்த அளவிற்கு எல்லா உணர்வுகளையும் ( கோபம் ,சிரிப்பு, மகிழ்ச்சி , எதிர்பார்ப்பு , கேலி ) என அனைத்தையும் இக்கதையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு நன்றாக தெரியும் இந்த கதையின் தலைப்பை கேட்டதும் பலருக்கு என் மேல் கோபம் தான் வந்திருக்கும். ஏனெனில் அப்பாவை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஆனால் என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்பாக்கள் எப்பொழுதும் அப்படித்தான் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தன் மனைவி மற்றும் குழந்தைகள் முகத்தில் சிரிப்பைக் காண பொய் சொல்வது மட்டுமல்ல, எந்த எல்லைக்கும் செல்வார்கள்.... எதை வேண்டுமானாலும் செய்வார்கள்..... பல சமயங்களில் தங்களை தாழ்த்தி கொள்வார்கள்.... தன் குழந்தை வாழ்வில் உச்சத்தை தொட படிக்கட்டாக அமைவதும் நம் பெற்றோர்களே..... அவர்கள் நமக்காகத்தான் வாழ்கிறார்கள் . நமக்கு தேவைப்படும் அனைத்தையும் செய்கிறார்கள் அது அவர்கள் சக்திக்கு மீறியதாக இருந்தாலும் சரி .... ஆனால் நாம் அவர்களை புரிந்து கொள்வதே இல்லை. மகன் அல்லது மகளாக இருக்கும் நாம் அவர்களை வாழ்வில் உயர்த்த வேண்டும்....
ஆனால் குறைந்தபட்சம் தாழ்த்தாமல் இருக்க முயற்சி செய்வோம்

ஒரு வழியாக நான் இந்த கதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டேன். உங்கள் மனநிலை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் என் மனநிலை மிகவும் மோசம். ஏனெனில் பல விஷயங்கள் நடந்து விட்டது. பலரது கருத்து என்னவெனில் இந்த காலத்தில் காதல் கதைக்குத்தான் மதிப்பு. அப்பா , அம்மா பாசம் , அவர்களின் காதல் அதற்கு எல்லாம் எந்த மதிப்பும் இருக்காது என்று. நான் அதை ஒப்புக் கொள்ள வில்லை. ஆனால் ....
நீங்க சொல்லுங்க....
உங்களுடைய எண்ணங்களை ... அப்பொழுது தான் , என்னால் அந்த சிலருக்கு உண்மையை புரிய வைக்க முடியும். அப்பா , அம்மாவின் காதலும் உயர்ந்தது தான் என்று.

உங்கள் கருத்துகளை நோக்கி காத்திருக்கும்.....

உங்கள் அன்பு தோழி......