Quotes by kattupaya s in Bitesapp read free

kattupaya s

kattupaya s Matrubharti Verified

@kattupayas.101947
(35)

it's been a hard life without you.. but one day you will come back to me until the day I live with your memories. goodnight

வானம் அன்று வெளிறிக்கொண்டிருந்தது

மழை வரும் போல தோன்றியது

அலைபேசி அழைப்புகளை நீ எடுக்கவில்லை

உனக்கு என்னை பிடிக்காமல் போயிற்று

காலம் கசந்தது

மழை துளிதுளியாய் பெருகத்துவங்கியது

நாம் பிரிந்து விடலாம் என்று நீ சொல்லிய போது

மழை நின்று விட்டிருந்தது .

Read More

life without love is tasteless. when you have other side of bitterness in love you never taste it again.

இந்த மாலை வேளையில் நீ நடக்கும் நிழலில் அத்தனை அழகிருக்கிறது. அதை கடந்து போகிறாய் வெகு வேகமாக. அங்கே அந்தி மயங்கி விழுகிறது. பூக்கள் தலை சாய்த்து கொள்கின்றன.

Read More

எப்போதும் காத்திருக்கிறேன் நீ வரும் வழியில்.. உன்னிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை . நீ என்னிடம் பேசும் நாளில் நிறங்கள் இல்லாத பூக்கூடை ஒன்றை பரிசளிப்பேன்

Read More

loving someone is a blessing. sometimes it's really deep or it may be a trap beware of it

எழுதி தீராத கவிதை நீ

நீ நான் எழுதுவதை வாசிக்க வேண்டியதில்லை

யாரோ போல முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதில்லை

இந்த வெயில் , மழையெல்லாம் காதலுக்கு இல்லை

உன் நினைவில் விடாது பெய்து கொண்டிருப்பேன் மழை போல

Read More

உன் நினைவாக என்னிடமுள்ளது ஒரு மழை நாளில் நீ கொடுத்த முத்தம். இப்போது மழையும் இல்லை.. நீயும் இல்லை

நீ ஏன் என்னை இத்தனை தூரம் விரும்புகிறாய் என்று கேட்டாள். நானோ கண்களற்றவனாய் இருந்தேன்..

எனக்கு பசிக்கிறதென்றாய் இதோ இந்த மரத்தை வெட்டி கொண்டு இருக்கிறேன். பாவம் பறவைகள் என்றாய் என்னை பார்த்தால் பாவமாய் இல்லையா

Read More