See Avanamkuti in Tamil Short Stories by c P Hariharan books and stories PDF | ஆவனம்குடி ஓரத்திலே (Tamil)

Featured Books
  • चुप्पी - भाग - 2

    क्रांति की हॉकी खेलने की चाह को महसूस करके और उसकी ज़िद को हद...

  • छिनार

    बसंत बाबू, ये ही बोलते थे लोग, 23 साल का खूबसूरत युवक, 6 फिट...

  • बन्धन प्यार का - 33

    और नरेश,हिना और मीरा स्वामी नारायण मंदिर के लिये निकल लिये थ...

  • I Hate Love - 12

    जिसे देख जानवी ,,,,एक पल के लिए डर जाती है ,,,,,क्योंकि इस व...

  • आशा की किरण - भाग 3

    अब जो ठीक समझो, करो,’’ बेटे ने कहा, ‘‘सेना के एक कप्तान से म...

Categories
Share

ஆவனம்குடி ஓரத்திலே (Tamil)

ஆவனம்குடி ஓரத்திலே

C P Hariharan

cphari_04@yahoo.co.in


© COPYRIGHTS

This book is copyrighted content of the concerned author as well as Matrubharti.

Matrubharti has exclusive digital publishing rights of this book.

Any illegal copies in physical or digital format are strictly prohibited.

Matrubharti can challenge such illegal distribution / copies / usage in court.


ஆவனம்குடி ஓரத்திலே

டையில்த் தான் ஆவனம்குடி என்ற அந்த அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு முருகன் கோயிலும் இருந்தது. ஆவனம்குடி ஓரத்திலே காவடிகள் ஆடியது. அந்த கிராமத்தின் சுற்றிலும் காவிரி நதி கரையோரத்தில் தென்னம் தோப்புகள் இருந்தன. பனை மரங்களும், மலை வாழை மரங்களும் ஏராளமாக இருந்தன. இடைவெளியில் வீசும் இளம் தென்றல் அந்த கிராமத்தின் மக்களை தாலாட்டியது.பக்கத்திலேயே ஒரு மிக பெரிய பூங்காவும் இருந்தன. அந்த பூங்காவில் வண்ண வண்ண பூக்கள் இருந்தது . அதில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளும், தேன் வண்டுகளும் வட்டமிட்டு பறந்துகொண்டிருந்தது. பொன்வண்டின் ரீங்காரம் பூக்களை தாலாட்டியது. பூமரங்களின் வாசம் நுகர்ந்து, பால்வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசியது. அதி காலையில் சேவல் கூவல் கேட்டு தான் அந்த கிராமம் உணர்வது பழக்க வழக்கமாகயிருந்தது. அதி காலையில் குயிலோசையின் பரிபாஷைகளின் வரவேற்புகள் மனதுக்கு இதமாக இருந்தது. அழகு மயில்கள் ஏராளமாக காணபட்டது.மழைவரும் முன்னே மயில்களின் நடனம் பார்க்க சுவாரசியமாக இருந்தது. அதே நேரத்தில், வானவில் ஒன்று தென்பட அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அந்த வானவில் கிராமத்தின் அழகுக்கு அழகூட்டியது.அந்த கிராமத்தின் இயற்கையின் சூழ்நிலை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. தேனாம்பேட்டை சூப்பர்மார்கெட் பிரபலமானது. அங்கே பக்கத்திலேயே ஒரு அம்மா கேன்டீனும் இருந்தன. அது ஏழை மக்களுக்கு மிக பெரிய உதவியாக இருந்தது.

அந்த கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் ஒரே குடும்பத்தினர் போன்ற ஒருவருக்கொருவராக வாழ்ந்து வந்தார்கள்.அன்பு, ஆதரவு, பாசம், நேசம் எதற்கும் குறை ஓன்றும் இருக்கவில்லை. அன்பு பாசம் வந்து வாழ, அந்த குடும்பமே கோயில் ஆகிவிட்டது.சீரான குடும்பம், தைவ நிலை தந்த வசந்தம்.

மார்கழியில் மல்லிகை மலர்ந்து, ஊரெங்கும் பூவாசம் நிரம்பி பரவியது. செம்தாழம் பூவும், செம்பகவும் வாசனையை அள்ளிக்கொட்டியது. அந்த கிராமம் தூய்மையாக இருந்தது. சாலைகள் சிறப்பாக இருந்தது. ஓடைகள் கூட தூய்மையாக இருந்தது.

அந்த கிராமமே ஒரு கோயிலாக தெரிந்தது . அது ஊரார்களின் பரவசத்தை ஊட்டியது.எங்கும் மகிழ்ச்சியின் அலைகள் அலைபாய்ந்தது. சண்டை சச்சரவு எதுவும் கிடையாது. மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்று பட்டார்கள். சின்னன்சிறுசுகள் சண்டை போட்டாலும் பெரியவர்கள் எடுத்து சொல்லி சமாதானம் செய்வார்கள். எல்லோரும் மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்கிக்கொள்வார்கள். அவர்கள் இனிப்பாக தென்மதுரை சென்தமிழ் பேசுவார்கள். எங்கும் வளை ஓசை, எங்கும் தமிழோசை . தண்ணீரிலே ஓடங்களில் தாலாட்டியது பொங்கும் தமிழோசை.செந்தமிழின் இனிப்பான இசை தேன் சிந்தியது. அதுவே தேனாக இனித்தது. அது அங்கே வசிக்கும் உயிர்களுக்கு உயிரூட்டியது. அந்த கிராமும் எப்பவுமே கலகலப்பாக, ஆரவாரமாக இருந்தது. அடுத்தவங்க மனதை புண்படுத்தும்படி யாரும் நடந்துகொள்ளமாட்டார்கள். யாரும் வீணா வம்பை விலைக்கு வாங்க மாட்டார்கள். முடிந்த வரைக்கும் எல்லோரும் எல்லோருக்கும் உதவி செய்வார்கள். யாரும் உதவாக்கறைகளாக இருந்ததேயில்லை. முடிந்தவரைக்கும் தான தர்மங்கள் செய்து வந்தார்கள். அந்த கிராமமே ஒரு சொர்கமாக தெரிந்தது. அவர்கள் பசி தாகம் மறந்து மதிமறந்து வாழ்ந்தார்கள்.

எல்லோரும் கடுமையாக உழைப்பார்கள்.ஒரு சிலர் தைய்யல் வேலை சையது

வந்தார்கள் என்றால் மத்தவங்க நிலக்கடலை, கோதுமை, நெல் வ்யவசாயம் பண்ணி வந்தார்கள். இன்னும் சிலர், தகவல் நுட்பத்தில் திறமைசாலிகளாக இருந்தார்கள். சிலர் முறுக்கு விற்றுக் கூட முன்னுக்கு வந்தார்கள். ஒரு சிலர் காபி கடை போட்டு வாழ்க்கையின் வண்டியை ஓடினார்கள்.

அந்த கிராமமே மற்றவங்க பொறாமை படும் அளவிற்கு வளர்ந்து வந்தது.

ஒரு சிலர் ஓலைக்குடிசையில்த் தான் இருந்தார்கள். சிலர் ஓட்டுப்புரையில் வசித்தார்கள். இன்னும் சிலர்அடுக்குமாடி கெட்டிடங்களில் வாழ்ந்து வந்தார்கள். என்றாலும் மிக்க மகிழ்ச்சி அந்த கிராமத்தில் என்றும் இருந்தது. ஒருவருக்கொருவர் குற்றம் குறைகள் ஏதும் சொல்லிக்கொள்ளாமல் ஏவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

பெண்கள் அதி காலையில் வீட்டு வாசலை சாணக தண்ணீரினால் சுத்தம் பண்ணி வண்ண வண்ண மாக்கோலங்கள் போடுவதிலும் போட்டி போட்டுக்கொண்டார்கள். சாயங்காலம் குத்துவிளக்கை வீட்டு வாசல்களில் ஏற்றி வைப்பார்கள். பெண்கள் எல்லோரும் குத்து விளக்காக, குலமகளாக வாழ்ந்தார்கள்.

கல்யாணம்,கார்த்தி, போகி,பொங்கல் பண்டிகைகளில் அந்த கிராமம் உற்சாகத்தின் உச்சியில் ஆறாடியது. வண்ண வண்ண காகிதங்களால் கொடி கட்டி ஊர் முழுவதும் தோரணங்களால்

தோரணை செய்வார்கள்.

தேர் திருவிழாவில் எல்லோரும் கைய்யை கட்டி நிற்காமல், கை கொடுத்து, ஓயாத அலை போல் ஒற்றுழைப்பார்கள். எல்லோரும் ஒற்றுமையாக உழைத்தால் தானே தேரும் தெருவிற்கு வரமுடியும்.

இது போன்ற கிராமத்தில் வாழ கொடுப்பினை வேணும் என்று மல்லிகா எண்ணினாள். அவள் பட்ட படிப்பை முடித்து ஒரு வஙகியில் பணி புரிந்து வந்தாள்.முதலில் ஓலைக்குடிசை ஒண்றில்த் தான் இருந்தாள். வேலை கிடைத்த பின் அடுக்குமாடி கெட்டிடத்துக்கு வந்து விட்டாள். எந்த சூழ்நிலையிலும் அந்த கிராமத்தை விட்டு போக அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஆனாலும் கல்யாணம்ன்னு வந்தால் ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் ஒரு பெண் தன் ஊர்

உற்றார் உறவினர்களை விடைபெற்று புகுந்த வீட்டுக்கு வந்து தானே ஆகணும்.

அதனாலேயே கலயாணத்தை தள்ளி போட முயன்றாள்.

அவள் அம்மா அப்பாவுக்கும் வயதாகிவிட்டதால் கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஸ்ரீதர் என்ற ஒரு தகவல் நுட்பம் என்ஜினியரை திருமணம் பண்ணிக்கொண்டாள். அவர்

வில்லிவாக்கத்தில்த் தான் குடியிருந்தார். மல்லிகாவோ மா நிறம். ஸ்ரீதரோ சிவப்பாக இருந்தார்.

ஜாடிக்கு ஏற்ப மூடி போன்ற ஜோடிப் பொருத்தம் மிகவும் சிறப்பாக இருந்தது. எல்லாம் சரியாக அமைந்தாலும், அந்த கிராமத்தை விடை பற்றுப் போக முற்றிலும் வருந்தினாள். ஆனாலும் பக்கத்து ஊரில், வாழ்க்கைப்பட்டதால் அடிக்கடி சொந்தம் கிராமத்துக்கு, வந்தது போக வாய்ப்பு இருக்கே என்று மனதை தேத்திக்கொண்டாள். கூடிய சீக்கிரம் மல்லிகாவின் திருமணம் முடிந்து விட்டது. அவள் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாள். காதல் வானம் பூ மழை தூவியது. காலபோக்கில் அவர்களுக்கு ஒரு ஆண்பிள்ளையும் பிறந்தது. அவனை கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று நினைத்து அவனுக்கு பிரசாத் என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். எதிர்பார்த்தபடியே அவள் அம்மா அப்பாவும் காலமாகிவிட்டார்கள். அந்த ஊரில் இருக்கிற வீட்டையும் விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டை சமாளிப்பது சிரமம் என்று எண்ணித்தான் வீட்டை விற்றுவிட்டார்கள். அந்த கிராமத்துக்கு போக்கு வரவும் இல்லாமல் போய்விட்டது. அதை நினைக்கும்போதே அவள் கண்ணில் நீர் பெருகியது. நெஞ்சம் படபடத்தது.வாழ்க்கையே ஒரு போராட்டம் போன்ற அவளுக்கு தோன்றியது.

அப்போதுதான் திடீர்ன்னு அலைபேசியில் அலாரம் அலறி அடித்தது. கூடவே சேவலும் கூவியது. திடுக்கிட்டு எழுந்துகொண்டாள்.

இதுவரலும் நடந்தது எல்லாமே கனவு தான் என்று அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவள் மனம் காற்றாடி போல் ஆடியது. அவள் மனதை நிலை நாட்ட அவதிப்பட்டாள். அவள் உள்ளம் தடுமாறியது.திடுதிப்பென்று இரண்டு டம்ப்ளர் தண்ணீரை பெருகிக்கொண்டாள். அப்போது தான் கனவில் இருந்து நினைவுக்கு வரஅவளால் முடிந்தது.

நாம இன்னும் ஓலைக்குடிச்சையில்த்தானே இருக்கிறோம்.அவ்ளவு சுலபமா அடுக்குமாடி கட்டிடத்துக்கு வந்து விட முடியுமா என்னா? ஏழைக்கென்று உலகம் எழுதியவர் யாரும் கிடையாதே. ஏழை என்று ஒரு வகை அமைதி இருந்தாலும், இந்த ஊர் உலகம் ஏழைகளை வேடிக்கை பார்க்கத்தானே செய்கிறது. நமக்கென்று ஒரு விடிவுகாலம் அவ்ளவு சீக்கிரம் வருமா என்னா? நாம நினைத்தபடி ஒரு கிராமம் கனவில்த் தானே இருக்க முடியம். கிராமவும் அதன் சூழ்நிலையும் நன்றாகத் தானே இருக்கிறது. மனிதர்கள் மநதில்த் தானே பேய் இருக்கிறது. இப்பல்லாம் எல்லோரும் சுயநலமாகவும் சுய உறுதியாகவும் தானே இருக்கின்றார்கள். யாரையும் நம்பி யாரும் வாழ்ந்திட முடியாதே. அப்படியே பிறரை நம்பி வாழ்ந்தாலும் ஏமாற்றம் மட்டும் தானே மிஞ்சும். சரி போகட்டும் , தனக்காக ஒரு சூரியோதயம் இல்லாமலா போய்விடும் என்று எண்ணினாள்.யாரோ எப்படியோ எக்கேடு கெட்டு போகட்டும். தன் எதிர் காலம் நன்றாக இருக்க

இன்று முதல் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மனதில் உறுதிப்படுத்திக்கொண்டாள்.

யாரையும் நம்பி நாம் வாழ்க்கையில் அவ்ளவு சுலபமா முன்னுக்கு வரமுடியாது. இது தான் இந்த கனவு தனக்கு கற்று தந்த பெரிய பாடம் என்று எண்ணினாள். சீக்கிரம் எழுந்து முகம் கழுவி ஜன்னல் ஓரத்தில் நின்று வெளியே வெறித்து பார்த்தாள். பனி மழை பொழிந்துகொண்டிருந்தது. மழை பைந்துதான் கிணற், ஆறு குளம் நிறைய முடியும். பனி பொழிந்து நிறையாதே. அது போன்றத் தான் வாழ்க்கையிலும்.சுய உழைப்பினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியுமே தவிர அடுத்தவர் உதவுவார்கள் என்று எண்ணி வாழ்வது முட்டாள்த்தனம் தானே. அப்படியே மற்றவங்களை நம்பி வாழ்ந்துவிட்டால், வறதப்பா வறதப்பா கஞ்சி வறதப்பா என்று இருக்கவேண்டியது தான். வாழ்வவர்களைவிட, வாழாதவர்களைத் தான் இந்த உலகம் முற்றிலும் சுட்டிக்காட்டுகிறது, உதைக்கிறது. வாழும் வரை வாழ்ந்திருப்போம். வாழ்ந்தவரை வாழ்த்தி செல்வோம் என்ற ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று முதல் கடுமையாக உழைக்க திட்டவட்டமாக திட்டமிட்டாள். தன் கை தான் தனக்கு ஒசரம் என்று நினைத்தாள். இந்த கனவு மட்டும் வராமல் போயிருந்தால் தனக்குனு ஒரு விடிவு காலமே வந்திருக்காது என்று நினைத்தாள். அந்த கனவுக்கு நலம் புரிந்ததற்கு நன்றி உறைத்தாள்.வெயில் வெளியில் வயலில் வ்யவசாயம் பண்ணி காலத்தை கழித்தாள். காலம் போகின்ற போக்கில், ரசிகர்களுக்கு ஏற்ப இசையின் ராகமும் தாளமும் மாறத் தானே செய்கிறது. காலத்துக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய சூச்சநிலை தானே இருக்கிறது.

மல்லிகாவின் அம்மா மரகதத்துக்கு அவளில் திடீர் என்று ஏற்பட்ட மாற்றத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.இது வரைக்கும் சோம்பேறியாக இருந்தவள் எப்படி இப்படி திடீர்ன்னு திருந்திவிட்டாள். நாம் சொன்னால் எதுவும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாளே. என்னாச்சு இவளுக்கு என்று மரகதம் அதிர்ந்து நின்றாள். நடப்பதெல்லாம் அவர்களுக்கு புரியாத புதிர் போன்றவே இருந்தது.

இரண்டே மாதத்தில் மல்லிகா வேலையெல்லாம் நன்றாக கற்றுக்கொண்டாள். தான் செய்யும் தொழிலே தைவம் என்று நினைத்தாள். கடுமையாக உழைத்தாள். உழைப்பவர்களுக்கு கடவுள் பக்கவாத்தியம் போல பக்கத்தில் இருந்து பக்கபலமாக இருப்பார் என்று நம்பினாள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.

கூடிய சீக்கிரமே சொந்தம் காலில் நின்று கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்தாள். மற்றவங்களுக்கு அவள் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தாள். பணம் இருந்தால் வாழ்க்கையும் தானாகவே அமையும் என்பார்கள். அது மல்லிகாவை பொறுத்த வரலும் நூத்துக்கு நூறு சரியாகத் தான் இருந்தது. கூடிய சீக்கிரம் மாப்பிள்ளை வீட்டார்கள் அவளை அணுகினார்கள்.

நினைத்தபடியே அவள் திருமணமும் நடந்து நிகழ்ந்தது. ஒரு வ்யவசாயியையே திருமணம் செய்து கொண்டாள். அவர் பெயர் முத்து. ஒரு காலத்தில் எப்படி சோம்பேறியாக இருந்தோம்.

இப்ப எப்படி மாறிவிட்டோம் என்று அவளால் நம்பமுடியவில்லை. தனக்குனு குறிப்பிட்ட வேலைகளை சீராக செய்து வந்தாள். சீரும் சிறப்புமாக நீடூடி வாழ்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று, சிகரங்களின் உச்சியில் கொடி கட்டி பறந்தாள்.

முற்றும