அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக இருந்த போதும் தீபன் தள்ளியே இருந்தான்.தீபன் அடுத்து என்ன என்பது போல அவளை பார்த்தான். தீபன் நான் உன்னுடன் நீண்ட காலம் வாழ விரும்புகிறேன். அது உன் மீது கொண்ட காதலுக்காக மட்டுமே. நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அதுவரை நாம் சற்று அவன் அவள் வாயை மூடினான். நீ சொல்லவே வேண்டாம் வெறும் உடல் மீது ஆசை கொண்டு உன்னை சிறிய எல்லைக்குள் அடைக்க விரும்பவில்லை. உன் விருப்பம் போல இரு என்றான் . மறுநாள் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தார்கள். அவர்களை பிரிக்கும் சக்தி ஒன்று இருப்பதாக அவர்கள் கருதவில்லை. யுவனை எப்படி சமாளிக்க போகிறாள் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. யுவன் காலையில் போன் பண்ணியிருந்தான். அவள் பொறுப்பாக பதில் சொன்னாள். ஏமாற்றம் ஏதுமில்லாத வாழ்க்கையை அனுபவிக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்.
மாலை 5 மணிக்கு அவள் பெங்களூர் புறப்பட வேண்டும்.அவன் அவளுக்காக இன்னும் சில உடைகளை வாங்கி கொடுத்தான். பிரத்யேகமாக அவள் வேறெதையும் விரும்பவில்லை. என்ன சுஜா உனக்கு வேறெதுவும் வேண்டாமா ? ம் நீ மட்டும் போதும் என்றாள். நீ என்னை இந்த உடைகளை போல தழுவிக்கொண்டிரு போதும் என்றாள்.
ரயில்வே ஸ்டேஷன் போய் சுஜாவை வழி அனுப்பி வைத்தான், இருவருமே நடைமுறை வாழ்க்கையின் சிக்கலை உணர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் திட்டங்களை வகுக்கவில்லை.தங்களை தாங்களே மீட்டெடுக்கும் காதல் பயணங்களை மேற்கொள்ளவே விரும்பினார்கள். சுஜா தீபனின் மீதான காதல் வெறும் புனிதம் என்று கருதவில்லை.யுவன் அவளை வந்து அழைத்து போனான். எப்படி இருந்தது ட்ரிப் என்றான். பரவாயில்லை நீ எப்படி இந்த இரண்டு நாட்கள் சமாளித்தாய். என்றாள்.கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது, நீ எப்போது வருவாய் என இருந்தது . சரி நான் பிரெஷ் அப் ஆகி விட்டு வந்து ஏதாவது செய்கிறேன். நீ சரியாக சாப்பிட்டிருக்க மாட்டாய் என்றாள்.
யுவனுக்கு சுஜா மீது சந்தேகம் ஏதும் எழவில்லை. அவனுக்கு காதல் தீராத காதல் சுஜா மீது. டிபனுக்கு பிறகு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளுக்கென இருந்த அறைக்கு போனாள் .தீபனுக்கு போன் செய்தாள். அவன் உடனே எடுக்கவில்லை. இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.கவனம் வேண்டும் என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாள்.தீபன் 10 நிமிடம் கழித்து திரும்ப அழைத்தான். சுஜா நான் கொஞ்சம் பிஸி ஆக இருக்கிறேன் திரும்ப கூப்பிடுகிறேன் என்றான். இவள் லவ் யு தீபன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்,அன்று அவள் ஆபீஸ் 11 மணி போல போனாள். செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. தீப்தியை கூப்பிட்டு பேசினாள். சில மீட்டிங்குகளில் கலந்து கொண்டாள். தீப்தியுடன் சேர்ந்து லஞ்ச் சாப்பிட்டாள். தீப்தி பொதுவாக பர்சனல் காரியங்கள் பற்றி பேசுபவள் இல்லை.ஆபீசில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசினார்கள். இந்த புதிய உடை எப்படி இருக்கிறது என்று கேட்டாள் சுஜா. உடை நன்றாக இருக்கிறது என்றாள் தீப்தி. தீபனிடம் அடுத்த ட்ரிப் எப்போ என மெசேஜ் அனுப்பியிருந்தாள்.சீக்கிரமே என்று ரிப்ளை அனுப்பியிருந்தான்.
தீப்தி யுவனை அழைத்து கொண்டு அடுத்த வாரம் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி சொன்னாள் . என்ன விஷேஷம் என்றாள் சுஜா. நீங்கள் என் வீட்டிற்கு வருவதில் எனக்கொரு மகிழ்ச்சி என்றாள் தீப்தி. நிச்சயம் வருகிறேன் . வீணாவின் கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. வீணா கல்யாணத்துக்கு 3 நாட்கள் முன்பாகவே செல்ல வேண்டும் என தோன்றியது சுஜாவுக்கு .தீப்தி வீட்டுக்கு சென்றார்கள் யுவனும்,சுஜாவும். மதியம் லஞ்ச் சிறப்பாக இங்கே செய்திருந்தாள்.தீப்தி ஒரு வகையில் தீபனுக்கு தூரத்து சொந்தம் என தெரிந்தது. தீப்தி தனியாகத்தான் வசித்து வந்தாள். தனியாக இருக்க என்னவோ போல இல்லையா என்றாள் சுஜா, நான் என் பாய் friend ஒருத்தனுடன் வசித்து வந்தேன். அவன் என்னை ஏமாற்றி விட்டான் ஓ சாரி என்றாள் சுஜா. தீராத பிரச்னைகளை நாம்தான் தேடிக்கொள்கிறோம் என்றாள் தீப்தி. யுவன் வீடு நன்றாக இருக்கிறது என்றான். அடிக்கடி இருவரும் வாருங்கள் எனக்கு அதில் சந்தோசம் தான் என்றாள்.வீணா கல்யாணத்துக்கு தீபன் இரண்டு நாட்கள் விடுப்பில் இருக்க போவதாக அறிவித்து விட்டான் . எப்படியும் சுஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தீபனிடம் இருந்தது,
வீணாவிடம் சொன்ன மாதிரி மூன்று நாட்கள் முன்பே யுவனும், சுஜாவும் வீணாவின் கல்யாணத்துக்காக சென்னை வந்து சேர்ந்தனர் .வீணாவின் வீட்டு மாடியிலேயே சுஜாவும்,யுவனும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனக்கு கொஞ்சம் சென்னை ஆபீஸ் வரை போக வேண்டும் என்று சொல்லிவிட்டு தீபனை பார்க்க ஆவலாய் ஆபீஸ் போனாள்.அவன் பிஸி ஆக இருந்த போதும் அவளை வரவேற்றான், உட்காரு சுஜா பைவ் மினிட்ஸ் என்றான். அவள் அவன் நாற்காலியில் ஏறி அவன் மடியில் அமர்ந்தாள்.போதும் நீ என் மீது கொண்ட காதல் அவ்வளவுதானா என்றாள்.ம்ம் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான். சரி இப்போதைக்கு இது போதும் என்று இறங்கி எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.அன்று இரவு சதீஷ் ,சுஜா,யுவன், தீபன் எல்லோரும் ஷாப்பிங் போனார்கள். யுவன் தனக்கும் , சுஜாவுக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லாத போதும் பழைய நெருக்கம் இல்லாததை உணர்ந்திருந்தான். தீபன் யுவனுடன் சகஜமாக பேசினான், அவனிடம் குற்ற உணர்வு இல்லை. தான் யுவனை ஏமாற்றுகிறோம் என்று கூட அவனுக்கு தோன்றவில்லை
ஏன் சுஜா உன் பாஸ் தீபன் யாரையாவது காதலிக்கிறாரா என்றான் யுவன். என்ன திடீர் என்று கேட்கிறாய் ?ஒன்றுமில்லை எனக்கு அவர் நடவடிக்கையில் அவ்வாறு தோன்றுகிறது என்றான், ம் இங்கே நான் இருக்கும் போதும் உனக்கு சிந்தனையெல்லாம் வேறு இடத்தில் இருக்கிறது என்றாள்.அப்படி இல்லை சுஜா கோபித்து கொள்ளாதே. புதியதொரு ஒளியை அவர் கண்களில் பார்த்தேன் என்றான். சதீஷ் ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்து இருந்தான். யுவனும், தீபனும் அதில் காலத்து கொண்டிருந்தனர். யுவன் குடிப்பதில்லை என்ற போதும் சதீஷின் கட்டாயத்துக்காக கலந்து கொண்டிருந்தான். தீபன் அளவாக குடித்திருந்தான். யுவன் நீங்கள் வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்றான். எப்படி சார் அடுத்தவரின் நிம்மதியை கெடுத்தா ? இதை கேட்ட தீபன் அப்படி நான் ஒன்றும் சொல்லவில்லையே என்றான்.
தீபன் யுவன் உங்கள் பேச்சும், எழுத்தும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்றான். வெளியே வந்து சுஜாவுக்கு ஃபோன் செய்தான் தீபன். என்ன சுஜா தூங்கி விட்டாயா என்றான். தூக்கம் எப்போதோ போய்விட்டது என்றாள். ரொம்ப குடிக்காதே தீபன் என்றாள்.ம் சுஜா யுவன் குடிக்கவில்லை மொத்த போதையும் அவர் பேச்சில் இறங்கி விட்டது என்றான். வீணா கல்யாணத்தன்று எல்லா ஏற்பாடுகளையும் யுவன் செய்து கொண்டிருந்தான். சுஜா அவனுக்கு உதவி கொண்டிருந்தாள்.தீபன் ஆளையே காணவில்லை. பட்டு வேஷ்டி சகிதமாக கொஞ்சம் லேட் ஆக வந்து சேர்ந்தான் சதீஷ் துணை மாப்பிள்ளையாக.சுஜா வீணாவோடு மணப்பெண் தோழியாக நின்றாள்.
வீணா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது . வீணாவின் கழுத்தில் சதீஷ் தாலி கட்டினான். அப்போது சுஜாவும்,தீபனும் கண்களாலேயே பேசிக்கொண்டனர். மதியம் 3 மணிக்கு எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். தீபன் சுஜாவை இழுத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றான் . பட்டு சாரி கசங்க அவளை அணைத்தான். ம் யாரவது பார்த்து விட போகிறார்கள் என்றாள் .நான் என்ன பண்ணிவிட்டேன் எனக்கு பிடித்த பெண்ணோடு இருக்கிறேன் யார் என்னை கேட்பது என்றான், ம் ஆசை புரிகிறது, யுவன் என்னை தேடுவார், அவளை மென்மையாக விடுவித்தான். நமக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடக்க வேண்டும் என்றான் . கூடவே முதல் இரவும் என்று சிரித்தான். அவள் நான் போகிறேன் என்றாள்.யுவன் அதற்குள் அவளை தேடினான். அவளுக்கு போன் செய்வதற்குள் அவளே எதிரில் வந்தாள்.என்னாச்சு யுவன் என்னையா தேடுகிறீர்கள் நான் என்ன சிறு பிள்ளையா என்றாள்.ம் எனக்கு அப்படித்தான் என்றான். சரி வா வீணா ஏதோ உன்னை கூப்பிட்டாள்.தீபன் மனதில் சுஜாவோடு குடும்பமே நடத்தும் அளவுக்கு மயக்கம் இருந்தது. இரவு வீணாவை சிரிப்போடு முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தார்கள் சுஜாவும்,யுவனும்.
மறுநாள் யுவனும் சுஜாவும் வீணாவிடம் விடைபெற்றுக்கொண்டு பெங்களூரு செல்ல ஆயத்தமானார்கள்.சதீஷ் கூடவே இருந்தான் தீபன். இன்னும் ரெண்டு நாள் இருந்து விட்டு போகலாமென வீணா சொன்னாள். இல்லை ஏற்கனவே நிறைய லீவு போட்டுவிட்டேன் என்றாள் சுஜா .பாஸ் இங்கிருக்கும்போது உனக்கென்ன அங்கே வேலை என்றாள் வீணா. அதுவும் சரிதான் என்றான் தீபன். பெங்களூர் போய் சேர்ந்தார்கள் சுஜாவும், யுவனும். கல்யாண போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தாள் சுஜா. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் யுவன். என்னாச்சு சுஜா நீ இவ்வளவு பரவசப்பட்டு நான் பார்த்ததில்லையே என்றான். என்னவோ நம்முடைய கல்யாணம் நினைவுக்கு வந்துவிட்டது. அன்று நடந்த எதுவும் என்னால் மறக்க முடியாது என்றாள். இரு காபி போட்டு எடுத்து வருகிறேன் என்றான். இருவரும் அவர்கள் கல்யாண நினைவை பகிர்ந்து கொண்டார்கள். அன்று சண்டே என்பதால் அவளுக்கு அதிகம் ஆபீஸ் பற்றிய சிந்தனை இல்லை.தீபனுக்கு சுஜாவை பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் கஷ்டமாய் இருந்தது. அவளை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என தோன்றியது .அப்போது அந்த எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. உனக்கு அவசியம் அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதோ என்று அந்த குரல் கேட்டது,தீபன் மலைத்து போனான், .