Kvs கல்லூரி...விடுமுறை முடிந்து இன்று தான் திறக்கப்படுகிறது.... காலை நேரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.....முதலாம் ஆண்டு கல்லூரியில் நுழையும் மாணவ மாணவிகளை சீனியர் மாணவ மாணவிகள் ராக்கிங் செய்து கொண்டிருக்க.... மை யிட்ட கண்கள் மருண்டு விழிக்க, கைகள் இரண்டும் நோட்டை இருகப்பற்றி இருக்க தேகம் ஒருவித நடிக்கததுடனே நடந்து வந்து கொண்டிருக்கிறாள் அவள் மான்விழி....பெயருக்கேற்றார் போல் தான் அவளது விழிகள் துள்ளி கொண்டு இருக்கிறது.
மற்ற மாணவர்களை களாட்ட செய்து கொண்டிருந்த அவன் ருத்ரா, அவளை கண்டதும் மற்றவர்களை அனுப்பிவிட்டு அவளை அழைக்கிறான். ஏய்.....என்று கீழ் உதட்டை முன் பற்களால் கடித்து கண்ணை உருட்டி கையை நீட்டி அழைக்க....அவனை பார்த்த மாத்திரத்தில கண்கள் கலங்க தொடங்கி விட்டது..... இருப்பினும் அவன் முன்பு போய் நின்றாள். உன் பேர் என்ன?? என்றான் திமிராக....மான்விழி...என்றால் அவள் கூறியது அவளுக்கே கேட்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
சரியா கேக்கல என்றான் மிரளும் அவளின் விழிகளை பார்த்து கொண்டே...திரும்பவும் தனது பெயரை சொல்ல....அவனுடன் இருந்தவன் ருத்ரா என்ன பேர்லாம் கேக்கற இவள.....நீச்சல் அடிக்க சொல்லு என்றான்.
டேய்...கம்முன்னு இரு என்று நண்பனை அடக்கிவிட்டு எந்த கிளாஸ்? என்றான். Bsc computer science என்றால் கற்றிர்க்கும் நோகும் வண்ணம் அமைதியாக.... ஏணோ அவளை அதற்கு மேல் பயமுறுத்த அவனுக்கும் பிடிக்கவில்லை. எனவே சரி போ....என்றான் அவளுக்கே ஆச்சர்யம் அவ்ளோ தானா என்று...உடனே அவர்களிடம் இருந்து தப்பித்து வகுப்பிர்க்குள் சென்றுவிட்டாள்.
அவள் செல்லும் வரை அவளை பார்வையால் துளைத்தவன் அவள் மறைந்ததும் அங்கிருந்து சிறிய புன்னகையுடன் நடந்து சென்றான். ஏதோ அவளை பார்த்த நொடி முதல் அந்த மருண்ட விழிகளில் தொலைந்துதான் விட்டான் போலும்...வகுப்பறைக்கு சென்ற பின்னும் அவளின் அந்த மான்விழிகளே இவனது நினைவில் இருக்க...மனம் அவளை கான ஆர்வம் கொண்டு வகுப்பு முடியும் வரை காத்திராமல் ஆசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கும் பொழுதே கிளம்பிவிட்டான். ஆசிரியர் அவன் செல்வதை பார்த்து தலையில் அடித்துகொண்டார். அவனை கேள்வி கேட்க முடியாது காரணம் கல்லூரி தாளாளர் அவனது தாய்மாமன். எனவே இவனை இங்கு யாரும் பகைத்துக்கொள்ளமாட்டார்கள். அது மட்டுமின்றி...இவன் வகுப்பிற்கு வரவில்லை என்றாலும இவன் தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாணவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்....எனவே அவனை யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். இவன் கலகலப்பான ஆள்தான் மற்றபடி பெரிதாக எந்த பிரச்சனையும் இவனால் வராது எனவே இவனுக்கு சலுகைகள் அதிகம்.
வகுப்பை விட்டு வெளியே வந்தவன்.....மான் இருக்கும் வகுப்பு அறைக்கு முன் சென்று நின்றான். அந்த வகுப்பிற்கு முதல்நாள் எனவே அறிமுகம் செய்து கொள்வது மட்டுமே அன்றைய நாள். எனவே ஆசிரியர்கள் யாரும் அங்கு இல்லை....அது இவனுக்கு சாதகமாக போக அவளை விஷில் அடித்து வெளியே வருமாறு அழைத்தான்.
ருத்ரா அவளை பார்த்து செய்கையில் வருமாறு சொல்லிக்கொண்டிருக்க....அவனின் இடப்புறம் இருந்து அவனை ஒருவன் தாக்கினான்.....அதில் நிலை தடுமாறி கொஞ்சம் தள்ளி சென்றவன்...தன்னை தாக்கியவரை திரும்ப தாக்க கை ஓங்க....ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில நின்றுவிட்டது....
அது யார் என்று பிறகு காண்போம்....அவன் ஓங்கிய கையை உதறிவிட்டு வேகமாக கல்லூரியை விட்டு வெளியே சென்றுவிட்டான். வெளியில் வந்தவன் நேரே ஒயின் ஷாப் க்குள் நுழைந்து ஆத்திரம் தீரும் மட்டும் குடித்தான்.....இருந்தும் கோபம் குறையாமல் இருக்கவே...அங்கிருந்த ஒரு காலி பாட்டிலை தன்கரத்தாலயே உடைத்தும் விட்டான்...இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க அப்படியே மயங்கி சரிந்தான்.
திரும்ப அவன் கண்விழிக்க அவன் கரத்தில் கட்டு போடப்பட்டிருந்தது. டிரிப்ஸ் இறங்கி கொண்டிருக்க தலை லேசாக சுற்றவே.....தலையில் கை வைத்து கொண்டு அந்த இடத்தை கண்களால் துழாவினான். அப்பொழுது அவன் கண்களில் விழுந்தால் அவள்....மாயா.
ஒரு மூலையில் அமர்ந்து உறங்கி கொண்டிருந்தாள். இவன் அவளை அழைக்காமல் மெதுவாக எழுந்திரிக்க போக ஓடிவந்து அவனை தடுத்து மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து என்னாச்சு ருத் உங்களுக்கு எது வேணும்னாலும் என்னய கேளுங்க எடுத்து தரேன் நீங்க ஸ்டெயின் பண்ணிக்க வேண்டாம் என்றவள்....அவனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து தர அதை வாங்கி குடித்தவன்....என்னாச்சு நீ எப்டி இங்க? என்னய யார் இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணுனா? என்றான்.
ஏன் ரூத்....இங்க நா மட்டும் தான் இருக்கேன். வேற யார் அட்மிட் பண்ணிருப்பா உங்களை....ஹான்? என்று ஒற்றை புருவம் தூக்கி கேட்க. அவன் எதும் பேசாமல் அமைதியாக இருந்தான். இங்க பாருங்க ரூத்....நேத்து ஏன் அவ்ளோ போதை உங்களுக்கு கைல வேற நிறைய இரத்தம் போய்டுச்சு....அப்படியே மயங்கி கடந்திங்க....நா தான் கார்ல உங்களை தூக்கி போட்டு கூட்டி வந்தேன் இங்க வந்தா ட்ரிங்க்ஸ் பண்ணிருக்க நாள ட்ரீட்மென்ட் தர மாட்டேன் சொல்லிட்டாங்க....நா திரும்ப டாக்டர் கிட்ட கெஞ்சி என்னோட அப்பா பேர சொல்லி மிரட்டி உங்களை கவனிச்சுக்க சொன்னேன். என்னாச்சு ரூத்.....நீங்க இவளோ குடிக்கிற அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது....இணிக்கு நீங்க காலேஜ் போகளையா? என்றால்...ருத்ராவின் அத்தை மகள் மாயா. பாதியாக வெட்டிவிட்ட சுருட்டை முடி தோலில் புரள தலையை ஆட்டி ஆட்டி கேட்கிறாள் நவீன மடல் அழகி மாயா.
பத்தாம் வகுப்பு முடித்ததும் படிப்பில் விருப்பம் இல்லை என்று சொல்ல இவர்களின் கம்பனிக்கு மாடலிங் செய்ய சொல்லி இவளின் தந்தை கூற...அதுவே அவளின் எதிர்காலம் என்றாகி போனது. இவளை தான் ருத்ரா படித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இவனுக்கான கட்டளை....
அதை ஏர்ப்பான? இல்லை எதிற்பான? இவனை கல்லூரியில் அடித்தது யார்? எதறகாக??? நாளை காண்போம்