இந்த கிரீஷ் எங்க போய் தொலைஞ்சான் என்றாள் . அவனும் ஒரு பக்கம் எனக்காக பிரின்சிபால் கூட சண்டை போட்டுட்டு இருந்தான். அவரை பார்க்கத்தான் போயிருக்கான் . நீ ஸ்ட்ரைன் பண்ணாதே ரெஸ்ட் எடு என்றாள் . ப்ரவீனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாள் . அவன் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றான். முதலில் கை சரியாகட்டும் பிறகு மற்றவற்றை பார்க்கலாம் என்றும் சொன்னான். கிரீஷ் வந்து விட்டான்.. என்ன மச்சான் சொன்னாரு பிரின்சிபால் என்றான் தீபன் . ஹாஸ்பிடல் செலவெல்லாம் காலேஜ் மேனேஜ்மென்ட் பார்த்துக்கும், நீ எதுக்கும் கவலைப்படாதே அப்படின்னு சொன்னாரு. அந்த பசங்கள சும்மா விடக்கூடாது என்றான் கிரிஷ்.இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்றாள் சாம். நான் உனக்காக மதியம் சமைச்சு எடுத்து வரேன் .. இந்த கான்டீன் சாப்பாடு நல்லா இல்லை என்றாள் சாம். எதுக்கு உனக்கு வீண் சிரமம் என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் போயிட்டு மதியம் வரேன் என கிளம்பினாள் . நீங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போயிட்டு வாங்க நான்தான் இவன் கூட இருக்கேனே என்று தீபனின் அப்பா, அம்மாவை பார்த்து கூறினான் கிரீஷ் . சரிப்பா நாங்களும் கிளம்பறோம் கவனமா பார்த்துக்க என்றார்கள்.
என்னடா நடக்குது இங்கே பிரவீன் கூட நிச்சயம் ஆனவுடன் உன்னை விட்டு விலகி போயிடுவான்னு பார்த்தா இந்த சாம் இன்னும் உன்னை நெருங்கி வரா என்றான் கிரீஷ். அப்படியெல்லாம் பேசாதே மச்சான் அவ மனசுல என்ன இருக்கோ ? அவ மனசுல நீதாண்டா இருக்க என்றான் கிரீஷ். ம் முடிவு அவ கையிலதான் இருக்கு . சரி ஜூஸ் குடிக்கிறாயா நான் போய் வாங்கி வருகிறேன் என்று போனான். அவன் கைகளில் இன்னும் வலி இருந்தது. கண்களை மூடி தூங்க முயன்றான். பறக்கும் குதிரை நினைவுக்கு வந்தது . அதில் சாமுடன் பறப்பது தீபனாக இருப்பது போல கனவு கண்டான். பறந்து கொண்டே இருந்தான் இந்த உலகத்தை விட்டு. மச்சான் என்ற குரல் கேட்டு கண் விழித்தான். ஜூஸ் குடித்தான். என்னடா கனவா என்றான் கிரீஷ் சிரித்து கொண்டே.. ம் அது ஒரு போதும் நடக்காத கனவு.
மதியம் போல சாம் வந்தாள் . எதுக்காக இந்த சமையல் வேலை உனக்கு ? அதெல்லாம் அப்படித்தான் என்று சொன்னாள் . கிரீஷ் எங்கே என்றாள் . எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு டாக்டர் கிட்டே கேக்க போயிருக்கான். ம் என்ன அவசரம் உனக்கு இப்போ வலி இருக்கா? லேசா என்றான். சரி நானே ஊட்டி விடறேன் என்றாள் . யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? என்றான் .நினைச்சா நினைச்சுட்டு போகட்டும் என்றாள் . கைகளில் அவள் நிச்சய மோதிரம் மின்னியது. கொஞ்சம் போலதான் சாப்பிட்டான். அவள் கண்கள் எதையோ சொல்ல வந்தது போல தோன்றியது. கிரீஷ் வந்து விட்டான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க என்றான். அப்போ நான் இங்கேயே வெயிட் பண்றேன் reception ல என்றாள் . எதுக்கு வீணா நானும் இவனும் போதும் . அதெல்லாம் முடியாது நானும் இருப்பேன் என்றாள் . சரி உன் விருப்பம் என்றான். நீ ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு reception அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு போனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் ப்ரவீனுடைய கார் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள் . இருவரும் கைத்தாங்கலாக கதிரை காரில் உட்கார வைத்தார்கள் . நானே டிரைவ் பண்ணுகிறேன் என்றாள் சாம். இன்னும் ஒரு சோதனை என்றான் கதிர். டேய் நீ எனக்கு டூ வீலர் கத்து கொடுத்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு என்றாள் . அவன் வாய் விட்டு சிரித்தான்.
தீபனின் கைகள் குணமாக மூன்று வாரங்கள் பிடித்தன . அதுவரையில் அவன் கூடவே இருந்தாள் சாம். அவளுக்கு மனதளவில் தீபன் கூட நேசம் ஏற்பட்டுவிட்டது. அதை வெளிப்படுத்த சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பிரவீனை நினைத்தால் பயமாய் இருந்தது. பிரவீனுக்கு சென்னையில் வேலை கிடைத்து விட்டது. அவன் சாமுடைய அப்பா அம்மா அதோடு சாமையும் சென்னைக்கு அழைத்து செல்ல விரும்பினான். அது குறித்த பேச்சு வார்த்தை கொஞ்சம் வீட்டில் நடைபெற்றது. கொஞ்சம் பொறுமையா இரு பிரவீன் இன்னும் 6 மாசம் தான் . அதுக்குள்ளே இவ படிப்பு முடிஞ்சுடும் அப்புறம் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போ என்றாள் சாமின் அம்மா. அவனுக்கு தீபனை நினைத்தால் கவலையாக இருந்தது எங்கு சாம் தீபன் கூட போய் விடுவாளோ என்ற அச்சம் இருந்தது.
மாறாக சாம் எதிர் காலம் குறித்த கணக்கு போட்டாள் . ஒரு வேலைக்கு போய்விட்டால் பிரவீனுடைய தயவு தேவையில்லை அதோடு தீபனை தான் திருமணம் செய்து கொள்ள எண்ணினாள் .
தீபன் ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ண விரும்பினால் செய்து கொள்வாயா என்று மனதுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டாள் . அடுத்த வாரம் தீபன் பிறந்த நாள் வருகிறது அப்போது சொல்லிவிடலாம் நடப்பது நடக்கட்டும் என நினைத்தாள் . அவனுக்கு பிடித்த கிப்ட் ஒன்றையும் வாங்கி வைத்திருந்தாள் . கிரிஷ் என்னடா சாம் உன்கிட்ட தான் நெருங்கி பழகுறாளே பிறகு என்ன தயக்கம் தாலி கட்டி தூக்கிற வேண்டியதுதானே என்றான். அவ அப்பா இருக்கிற நிலமைய பார்த்துதான் நான் யோசிக்கிறேன். நாளைக்கு அவங்களுக்கு ஏதோ ஒண்ணு அப்படின்னா சாமால தாங்க முடியாது என்றான். மொதல்ல இந்த படிப்பு முடியட்டும் அப்புறம் கல்யாணம் தான் என்றான். தீபனின் பிறந்த நாளில் எல்லோர் முன்னினலையிலும் தான் தீபனை விரும்புவதாக சொன்னாள் சாம். தீபன் நிதானமாய் இருந்தான். அவள் அவனுக்கு சொந்தமாகிவிட்டாள். விஷயத்தை கேள்விபட்ட பிரவீன் முதலில் கோவப்பட்டான். அவளை விட்டு பிடிப்பதென முடிவு செய்தான். நானே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் முதலில் படிப்பை முடி என்றான் பிறகு வேலைக்கு போ என்றான். அடுத்த 6 மாதங்களில் படிப்பு முடிததும் தீபனும் , சாமும் பெங்களூர் போனார்கள் வேலை தேடி. கிரிஷ் சென்னையில் வேலை தேட போனான்.
பிரவீன் திட்டப்படி சாமை வெளிநாடு அழைத்து போய் திருமணம் செய்ய தீர்மானித்தான். அதரக்காக அவளுக்கு ஆசை காட்டினான். சாம் நாம் மூவருமே வெளிநாடு போகலாம் என்றான். இப்போது வேண்டாம் பிரவீன் என அவனிடம் சொல்லிவிட்டாள். முதலில் தீபனுக்கு வேலை கிடைத்தது. அவன் மனதில் முதலில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. சாமுக்கு அடுத்த மூன்று மாதங்களில் வேலை கிடைத்தது இருவரும் ஒரே அபார்ட்மெண்ட் எடுத்து தங்கலாம் என எடுத்தனர். என்ன தீபன் தயங்குகிறாய் என்றாள். நான் தயங்கவில்லை. நாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொண்டால் என்ன என்றான். நாளைக்கே ரிஜிஸ்டர் ஆபீஸ் போவோம் என்றாள். பிரவீன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஊருக்கு போய் சாம் அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு வருவோம் என்றான். சரி போவோம் என்றான் தீபன்.
அவன் மனம் யோசனைகளில் மிதந்தது. சாம் அப்பா ஒரு வழியாக அரை மனதுடன் சம்மதித்தார். சாம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் .
ஒரு நல்ல நாள் குறித்து இருவருக்கும் திருமண நிச்சயம் ஏற்பாடு செய்தனர். சாமுக்கும், தீபனுக்கும் அதில் மகிழ்ச்சி ஆனால் பிரவீன் என்ன செய்வான் என்பது பற்றி புரியாமல் இருந்தது. அப்போது நிச்சயம் முடிந்து சாமும், தீபனும் பெங்களூர் திரும்பினார்கள். அவர்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருப்பதாய் உணர்ந்தார்கள். கிரிஷ் நிச்சயத்துக்கு வந்திருந்தான். என்ன சாம் எதுவுமே இப்போது பேச மாட்டேன் என்கிறாய் என்றான் தீபன். ம் நான் நீ என்பதெல்லாம் என்பதெல்லாம் மறந்து விட்டது. இப்போது நம்முடைய கல்யாணம் என்பதுதான் என் கண்ணில் நிற்கிறது. இன்னும் மூன்றே மாதம் தான் அதற்குள் எனக்கு வேலை நிரந்தரமாகிவிடும் அதன் பிறகு உன் அப்பா அம்மாவை நம் கூட அழைத்து வந்து விடலாம் என்றான்.
பிரவீன் ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். அதில் சாமும், தீபனும் கலந்து கொண்டிருந்தார்கள். பிரவீன் குடிக்கு அடிமை ஆகியிருந்தான். அவனால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. வேலையையும் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சாமும் தீபனும் அவனை தங்களோடு தங்க வைத்து கொண்டனர். கிடைக்கிற வேலையை செய்து வந்தான். அவர்கள் எதிர்காலத்தையே சிதைக்கும் செய்தி ஒன்று அகாலத்தில் வந்து சேர்ந்தது.கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது . சாமின் அப்பா அம்மா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதே அந்த செய்தி, தீபனும் , சாமும் தாங்கமுடியாத மன உளைச்சலுக்கு ஆளானார்கள். பிரவீன் சுய நினைவிலேயே இல்லை.
போலீஸ் விசாரித்தார்கள். அவர்கள் தற்கொலைதான் செய்து கொண்டார்கள் என்பது உறுதியானது. தீபன் சாமை எவ்வளவு சமாதான படுத்தினாலும் அவள் மனம் ஆறவில்லை. அம்மா அப்பா என்று அழுது கொண்டிருந்தாள். இந்த நிலைமையில் கல்யாணம் வேண்டாம் என்று தீபன் நினைத்தான். அதையே சாமும் நினைத்தாள். இருவருமே பிரிந்து விடலாம் என்று நினைத்தார்கள். பிரவீன் எவ்வளவோ பேசி பார்த்தும் இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. சாம் தான் இந்த நாட்டிலயே இருக்க விரும்பவில்லை என்றாள். பிரவீன் அவளோடு வெளிநாடு செல்ல தீர்மானித்தான். எதற்காக சாமின் அப்பா அம்மா அப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பது புரியாத புதிராக இருதது. ஏர்போர்ட் சென்றிருந்தான் தீபன், அவனுக்கு திசைகள் புரியவில்லை. தான் காண்பது கனவா இல்லை வெறும் பிரம்மையா என்பது போல அவள் பிரிவு இருந்தது. இனி நான் என்ன செய்ய போகிறேன் என்பது போல ஏர்போர்ட் லான்சில் அமர்ந்திருந்தான் தீபன். இனி வாழ்க்கையில் முன்னேறுவதை விட தனக்கு வேறெதுவும் முக்கியமில்லை என முடிவெடுத்தான். சாம் என்கிற சம்யுக்தா இனி என் வாழ்வில் எப்போதுமே திரும்ப வரப்போவதில்லை என்றே அவன் கருதினான்.