The Flower that Rules Fire - 8 in Tamil Love Stories by swetha books and stories PDF | அக்னியை ஆளும் மலரவள் - 8

The Author
Featured Books
Categories
Share

அக்னியை ஆளும் மலரவள் - 8



 மலர் தோட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து வேகமாக உள்ளே நுழைந்தவள், அங்கு அவளுக்காகவே காத்திருந்த அவளின் பெரியம்மாவிடம் மாட்டிக்கொண்டாள்.

“ஏய் நில்லுடி! காலையில அவ்வளவு சீக்கிரம் எதுக்கு காலேஜுக்கு போன? அவ்வளவு சீக்கிரத்தில் உனக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலையா? உன் கூடதான ஸ்வேதாவும் படிக்கிறா, அவ எல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகல. நீ மட்டும் எதுக்கு அவ்வளவு சீக்கிரம் போன? யாரைப் பார்க்க போன? உண்மைய சொல்லு!” என்று சத்தமாக கத்தினார்.

அவர் சத்தத்தைக் கேட்டு உள்ளே இருந்த பெண்கள் அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.

 ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால் பெண்கள் அனைவரும் ஹாலில் நின்றனர்.

வெளியே தோட்டத்தில் இருந்த (ஜெய் கைலாஷ்) அவர்களும் இவரின் சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்தனர்.

அனைவரும் அவளையே பார்க்க, என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள் மலர்.

 “ஏன் அத்தை அந்தப் பெண்ணை திட்டுறீங்க?” என்று கேட்டான் கைலாஷ்.

“காலையில எல்லா வேலையும் முடிக்காமலேயே காலேஜுக்குப் போறேன்னு சீக்கிரமா இங்கிருந்து ஓடிப் போயிட்டா. அதுக்குத்தான் கைலாஷ் திட்டிட்டு இருக்கிறேன்,”.

“ஏய், நீ சொல்லுடி! எதுக்கு அவ்ளோ சீக்கிரமா இங்கிருந்து போன?”

“ஐயோ மேடம்! நான் எல்லா வேலையும் முடிச்சுட்டுதான் இங்கிருந்து போனேன். நீங்க வேணா அங்கே சமையல் பண்ற அந்த அக்கா கிட்ட கூட கேளுங்க, நான் எல்லா வேலையும் முடிச்சுட்டுதான் போனேன்,”.

“சரி விடுங்க அத்தை, ஏதோ சின்னப் பொண்ணு. ஒரு நாளைக்கு சீக்கிரமா போய் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசலாம்னு போயிருப்பா. விடுங்க,” என்று மலருக்கு ஆதரவாகவும், அவள் பக்கம் இருப்பது போலவும் நடித்தான் கைலாஷ்.

 இப்படி செய்தால் அவளுக்கு அவனைப் பிடிக்கும் என்று நினைத்து ஆதரித்தான்.
கைலாஷ் அவர் கூறுவதை கேட்டு ஜெய் தான் அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெய் அவனைப் பார்ப்பதைப் பார்த்த கைலாஷ் உடனே பேச்சை மாற்றினான்.
“ஆமா, யாரு இந்தப் பொண்ணு அத்தை?” என்று கேட்டான்.

“இந்த வீட்டு வேலைக்காரி,” என்று சிறிதும் மனசாட்சின்றி கூறினார் மலரின் பெரியம்மா. 

அவர் அப்படி கூறியும், அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மலரின் அம்மா ஒரு வார்த்தைகூட, “ஏன் அப்படி சொன்னீங்க?” என்று கேட்கவில்லை.

(இப்படி ஒரு அம்மாவை நான் பார்த்ததே இல்லை. கண்டிப்பா ஒரு நாள் இந்த மலர் அம்மா அனுபவிப்பீங்க!)

“இவங்க அம்மா அப்பா யாராவது இங்க வேலை செய்றாங்களா அத்தை? அவங்களோட பொண்ணா இது?” என்று கைலாஷ் கேட்டான்.

அதற்கு மலரின் பெரியம்மா பதில் சொல்வதற்கு முன்னால், காலேஜிலிருந்து வந்த ஸ்வேதா, “அவள் ஒரு அனாதை,” என்று கூறியவாறு வீட்டினுள் நுழைந்தாள்.

அதைக்கேட்டு மலரின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் உருண்டது. அதை யாருக்கும் தெரியாமல் உள்ளே இழுத்துக்கொண்டு தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.

ஆனால் அதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் யாரும் ஸ்வேதாவை, “ஏன் அந்த மாதிரி சொன்ன?” என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

ஸ்வேதா கூறியதை கேட்ட ஜெய், “ஓ, இவ அனாதை பொண்ணா! அப்ப இவளுக்கு ஏதாவது ஆனா கூட யாரும் கேட்க மாட்டாங்களே,” என்று தன் எண்ணத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

“இவள் அனாதை,” என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்த ஸ்வேதா, மலருக்கும் கைலாஷுக்கும் முன்னால் வந்து நின்றவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கைலாஷிடம், “என்ன கைலாஷ் மாமா அப்படி பார்க்குறீங்க? நிஜமாகவே நான் சொல்றது உண்மைதான்,” என்று கூறினாள்.

“நீங்க வேணா இங்கே இருக்கிற யாரை வேணாலும் கேட்டுப் பாருங்களேன். ஏன், அவளையே கேட்டுப் பாருங்களேன். அவளுக்குன்னு யாரும் கிடையாது,” என்று மலரைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.

மலரும் அங்கிருந்து யாரையும் பார்க்காமல், கீழே குனிந்தபடியே, “ஆமா, நான் அனாதைதான். எனக்கு யாரும் கிடையாது,” என்று சொல்லிவிட்டு, அவளுக்கென இருக்கும் அறைக்கு நுழைந்து கொண்டாள்.

மலரின் அம்மாவும் போகும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவருடைய அறைக்குச் சென்றுவிட்டார்.

இங்கு நடந்ததை எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்த மதியழகனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன், வீட்டில் உள்ளே சத்தம் கேட்கவும் அப்படியே வாசல்படியில் நின்று கொண்டான்.
அவன் உள்ளே பார்க்கும் போதுதான் ஸ்வேதா மலரை அனாதை என்று சொன்னதையும், அதை மலரின் வாயாலையே சொல்ல வைத்ததையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.

பார்த்தும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான் என்று அவனுக்கும் தெரியும்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவள் அவனிடம் வந்ததே இல்லை. வந்தது இல்லை என்பதை விட, அவர்கள் அவனை அவளிடம் விடவில்லை. அவள் அவனிடம் வந்தால், “உனக்குப் பிடிச்ச தரித்திரம் அவனுக்கும் பிடித்துவிடும், அவன்கிட்ட வராத,” என்று சொல்லி தடுத்து விடுவார்கள். அவன் ஒன்பதாவது படிக்கும் போதுதான் அவனுக்கு அனைத்து உண்மையும் தெரிந்தது. தெரிந்த பிறகு அவன் வந்து நின்ற இடம் அவன் அன்னையிடம் தான்.

“ஏம்மா, அக்காவை எல்லாம் அனாதைன்னு திட்டுறாங்க,” என்று கேட்க.

 “நீ சின்னப் பையன், உனக்கு ஒன்னும் தெரியாது,” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டார் அவனின் தாய்.

ஒரு நாள் மலரிடம் அவனே சென்று பேசினான். அவர்கள் இருவரும் பேசுவதை ஸ்வேதா பார்த்துவிட்டு அவள் பெரியம்மாவிடம் போட்டு கொடுத்துவிட.
அங்கு வந்த அவர்களின் அம்மா அவளை திட்டிவிட்டு மதியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அவனை தனியாக அழைத்து, “அவளிடம் நீ பேசக் கூடாது,” என்று கண்டித்துவிட்டுச் சென்றார்.

அப்போதிலிருந்து அவனும் அவளிடம் பேச மாட்டான். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவளிடம் பேசுவான். அந்த வீட்டில் அவளிடம் இரண்டு பேர் மட்டும் பேசுவார்கள். அதில் அவளின் தம்பி மதியழகன் ஒருவன். இன்னொருவர் யார் என்று பின்னால் தெரிந்து கொள்வோம்.

மலர் பெரியம்மா, அவளின் அக்கா, வீட்டின் வேலை ஆட்கள் அனைவரும் மலர் செல்வதை பார்த்துவிட்டு அவர்களின் வேலையைச் செய்யச் சென்றுவிட்டார்கள்.

ஸ்வேதா நின்று கைலாஷிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவளை ஒரு பார்வை மதியழகன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

உள்ளே சென்று தனது ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு, டிரஸ் மாற்றிக்கொண்டு வெளியே வந்த போது ஹாலில் யாரும் இல்லை. அதனால் யாருக்கும் தெரியாமல் மலர் இருக்கும் அறைக்குச் சென்றான். வெளியே நின்று கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

மலர் உள்ளே வந்ததும் தனது காலேஜ் பேக்கை வைத்துவிட்டு, கட்டிலுக்குக் கீழே உட்கார்ந்து, கால்களை இறுக்கி அணைத்துக்கொண்டு, அதன்மேல் தலையை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். அப்போதுதான் மதி உள்ளே வந்தான்.
யாரோ தன்னுடைய அறைக்கு வந்திருக்கிறார்கள் என்று தன் தலையை நிமிர்ந்து பார்த்தாள். வந்திருப்பது தன் தம்பி என்று பார்த்துவிட்டு மறுபடியும் அதேபோல் தலையை சாய்த்து உட்கார்ந்து கொண்டாள்.

மதி நடந்து வந்து தன்னுடைய அக்காவின் அருகே உட்கார்ந்தவன்.
“அக்கா, ஏன் அழுவுற? இவங்களைப் பத்திதான் உனக்குத் தெரியும் இல்ல? அப்புறம் ஏன் அக்கா இவங்க பேசுறதை நினைச்சு நீ அழுவுற? அழாதீங்க அக்கா, ப்ளீஸ்,” என்று தன் அக்காவின் முகத்தை கையில் ஏந்தி அவளின் கண்ணீரை துடத்தான்.

“இல்லை மதி, அவங்க பேசுனது கூட எனக்கு அவ்வளவு வலிக்கல. ஆனா, அதைக்கேட்டு அம்மா ஒரு வார்த்தைகூட அவங்களை எதுவும் சொல்லல பார்த்தியா? அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப அழுகையா வருது,” என்றாள்.

“அக்கா, அவங்க கேட்கணும்னு எதிர்பார்க்காத. அவங்களுக்கு உன் மேல எப்பவுமே பாசம் இருந்தது இல்லை. நீ எதுக்கு அவங்க உன்மேல பாசம் காட்டுவாங்கன்னு எதிர்பார்க்குற? உனக்கு வேண்டாம் அக்கா இந்தக் குடும்பம். நீ இங்கிருந்து போயிரு. இங்கிருந்து போனாலாவது நீ கொஞ்சம் நிம்மதியா இருப்ப,” என்று தன் அக்காவிடம் இந்த வீட்டை விட்டுச் சென்றுவிடுமாறு கெஞ்சினான். அவனும் எத்தனை நாள்தான் பொறுத்துக்கொண்டே இருப்பான்? தன் அக்கா படும் வேதனைகளையும், வலிகளையும் அதனால்தான் அவனே வீட்டை விட்டுச் சென்றுவிடுமாறு சொல்லிவிட்டான்.

“நான் இங்கிருந்து போனா எங்கே தங்குவேன் மதி? யாரும் இல்லாமல் எப்படி இருப்பேன்? எப்ப, எது நடக்கும்னு பயமா இருக்கும். இங்கே நான் இருந்தால் நான் கொஞ்சம் நிம்மதியவது இருப்பேன். அவங்க திட்டுறது என்ன புதுசா? எப்போதும் திட்டுறதுதான். அது கொஞ்ச நேரம் வலிக்கத்தான் செய்யும். அதுக்கப்புறம் நான் மறந்துட்டு சகஜமா ஆகிடுவேன். நீ போ உன்னோட ரூமுக்கு நீ என்கிட்ட பேசுறதை பார்த்தால் உன்னை தான் திட்டுவாங்க,” என்று அவனை அனுப்பிவிட்டு, தன் முகம், கை, கால் எல்லாம் கழுவிக்கொண்டு டிரஸ் மாற்றிக்கொண்டு சமைக்கச் சென்றுவிட்டாள்.

சமைக்கவில்லை என்றால் அதுக்கும் தனியாக திட்டு விழும். அவள் வெளியே வரும்போது ஜெய் மட்டும் ஹாலில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள்.

ஆனால் ஜெய், போகும் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான், எப்படி தன் வலையில் அவளை விழ வைப்பது என்று.
 மலர் கிச்சனுக்குள் நின்று சமைத்துக்கொண்டு இருந்தாள். அப்பொழுது தன் பின்னால் தன்னை யாரோ பார்ப்பதுபோல் இருக்க திரும்பிப் பார்க்க.
அங்கு ஜெய்தான் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் பயந்துவிட்டாள்.

 அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
“சார், சொல்லுங்க சார், ஏதாவது வேணுமா உங்களுக்கு?” என்றாள்.

“ஒன்னும் வேண்டாம், தண்ணி குடிக்கதான் வந்தேன்,” என்று அவளைப் பார்த்துக் கொண்டே ஃபிரிட்ஜிலிருந்து தண்ணி எடுத்து குடித்தான்.

ஆனால் அங்கே நின்றிருந்த மலருக்குத்தான் கை, கால் நடுங்க ஆரம்பித்தது. அவன் பார்வையை வைத்தே புரிந்துகொண்டாள் அவன் நினைக்கும் காரியம் என்ன என்று. இருந்தும் ஏதும் காட்டிக்கொள்ளாமல் அவள் காய்களை நறுக்கிக்கொண்டிருந்தாள். அப்போது வேலைக்காரப் பெண் தோட்டத்தில் இருந்து கிச்சனுக்குள் நுழைந்தாள். அந்த வேலையாலை பார்த்ததும் ஜெய் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அந்தப் பெண் வந்ததும் கடகடவென இரவு உணவுகளைச் சமைத்து வைத்துவிட்டு அறைக்குள் சென்று முடங்கிவிட்டால். அன்று இரவு அவள் சாப்பிடக்கூட வெளியே செல்லவில்லை.

***********

அதே நேரம் நம் நாயகன் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஃபிளைட்டில் அமர்ந்து இருக்க, அவனுக்கு அருகில் துருவன் அமர்ந்து இருந்தான்.

அக்னிக்கு என தனி ஃபிளைட் இருக்கிறது. அதில் தான் இருவரும் கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தனர். ஃபிளைட்டில் கூட அவனுக்கு என தனி அறை இருந்தது. அதில் தான் இருவரும் ஆபிஸ் ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தனர். 

இரவு ஒரு மணிக்கு ஃபிளைட் கோயம்புத்தூரில் தரையிறங்கியது. ஃபிளைட் தரையிறங்கிியதும் அவன் மனது ஏதோ லேசாக இருப்பது போல் உணர்ந்தான். எப்போதும் இருக்கும் இறுக்கமான உதடுகள் கூட லேசாக வளைந்தன. அதை அவனே அறியவில்லை.

அதில் இருந்து இறங்கி தனக்கென இருக்கும் காரில் இருவரும் ஏரிகொள்ள. அந்த காரானது கோயம்புத்தூரில் இவர்களுக்கு என இருக்கும் பங்களவிற்கு சென்றது.


(நாளைக்கு ஹீரோ, ஹீரோயின் மீட்டிங் வச்சிருவோமா ஃபிரண்ட்ஸ்?)


        மலர் வருவாள்...