Oru Devathai Paarkkum Neram Ithu - 33 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 33

Featured Books
  • एक कब्र का रहस्य

    **“एक कब्र का रहस्य”** एक स्कूल का मासूम लड़का, एक रहस्यमय क...

  • Kurbaan Hua - Chapter 45

    अधूरी नफ़रत और अनचाहा खिंचावबारिश अब पूरी तरह थम चुकी थी, ले...

  • Nafrat e Ishq - Part 24

    फ्लैट की धुंधली रोशनी मानो रहस्यों की गवाही दे रही थी। दीवार...

  • हैप्पी बर्थडे!!

    आज नेहा अपने जन्मदिन पर बेहद खुश थी और चहक रही थी क्योंकि आज...

  • तेरा लाल इश्क - 11

    आशना और कृषभ गन लोड किए आगे बढ़ने ही वाले थे की पीछे से आवाज...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 33

அனன்யா அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக வந்த செய்தி கேட்டு அதிர்ந்தான். அனன்யா மனமுடைந்து போனாள்.இவனை கட்டிகொண்டு அழுதாள் . எல்லா வித இறுதி சடங்குகளையும் விஷால் செய்தான். அனன்யாவுக்கு தீபாவும், சுபாவும் ஆறுதல் கூறினர். அனன்யா அப்பாவின் எதிர்பாராத இழப்பை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அனன்யாவுக்கு ஆறுதல் கூற அவனிடத்தில் வார்த்தைகள் இல்லை.அனன்யா அப்பா சொத்து முழுவதையும் அனன்யாவுக்கும் , விஷாலுக்கும் சேர்த்து எழுதி இருந்தார். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று அனன்யாவின் உறவினர்கள் சொல்லி வந்தனர். விஷால் அனன்யா ஆஸ்ட்ரேலியா போய் வந்த பிறகுதான் கல்யாணம் என்று உறுதியாக சொல்லிவிட்டான். இரண்டு மாதங்கள் கழித்து நிச்சயம் வைத்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார்கள். அனன்யாவும்,விஷாலும் சென்னை திரும்பினார்கள். சுபா ஏற்கனவே சென்னை போய் பாரமரிப்பின்றி கிடந்த வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாள். அனன்யா உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருந்தாள் . அவளை வேலைக்கு போ அனன்யா கொஞ்ச நாளில் காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்றான் விஷால்.

நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன.இப்போது கொஞ்சம் தைரியம் வந்தவளாக இருந்தாள் அனன்யா. தீபாவும், சுபாவும் எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று செய்தனர்.engagement சென்னையில் நடந்தது. அலுவலக நண்பர்கள் , காலேஜ் நண்பர்கள் கலந்து கொண்டனர். எளிய முறையில் விழா நடந்தது . விஷால் அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்றாள் அனன்யா. அனன்யாவும், விஷாலும் மோதிரம் மாத்தி கொண்டார்கள். கல்யாண தேதி அனன்யா ஆஸ்ட்ரேலியாவில் இருந்து வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என சொல்லி விட்டான் விஷால். நான் கட்டாயம் போகனுமா விஷால்?உன் படிப்புக்கு ,திறமைக்கு தகுந்த அங்கீகாரம் வேண்டும் அனன்யா என்றான்.தீபாவும், சுபாவும் இவர்களை உற்சாகபடுத்தினார்கள். விஷால் நீ ஆசைபட்ட மாதிரி வாழ்க்கை மாறுது என்றார்கள். கொஞ்சம் பெரிய வீடாக பார்த்து குடி போனார்கள்.

கல்யாண களை வந்துவிட்டது. அனன்யா விஷால் உடன் கோவிலுக்கு போய் வந்தாள். பட்டமளிப்பு விழா காலேஜில் நடைபெற்றது . நான்கு பேரும் அதில் கலந்து கொண்டு கொண்டாடினார்கள். அனன்யா இப்போது அதிகம் பேசுவதில்லை . என்ன அனன்யா என் மேல் ஏதாவது வருத்தமா என்றான் விஷால். அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்ன செய்ய போகிறேன் என்றாள். அவளை அணைத்து முத்தமிட்டான்.இருவரும் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். அனன்யா படிப்புக்காக லோன் அப்ளை செய்திருந்தான் விஷால். அது சற்று தாமதமானது . சுபா ஊருக்கு போய் டான்ஸ் ஸ்கூல் நடத்த ஏற்பாடுகளை செய்தாள். அவளும் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தாள்.விஷாலுக்கு வேலை நிரந்தரம் ஆனது. அனன்யா மகிழ்ச்சியில் நிறைந்தாள்.எல்லாமே உன் காதல் வந்த பிறகுதான் என்றான் விஷால். சுபாவும் தீபாவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அனன்யா நாம எங்கேயாவது ரொம்ப தூரம் போவோம் விஷால் என்றாள்.சுபாவுக்கும், தீபாவுக்கும் டான்ஸ் ஸ்கூல் வேலை இருந்ததால் வரவில்லை என்றார்கள்.darjeeling போகலாம் என முடிவெடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். டூர் போவதற்கு தேவையான உடைகளை ஷாப்பிங் செய்தார்கள். அனன்யா எல்லவற்றையும் நன்கு திட்டமித்திருந்தாள். அனன்யா சுபாவும், தீபாவும் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னாள். விஷால் டிரைன் ல போலாமா இல்ல ஃப்ளைட் ல போலாமா என்று கேட்டான். டிரைன்லேயே போகலாம் என்றாள். சென்னையில் இருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் டார்ஜிலிங் இருந்தது.எங்கேஜ்மெண்ட்டுக்கு பிறகு செல்லும் முதல் ட்ரிப் என்பதால் அவள் மனம் அவனுடனான சிறு இடைவெளியையும் தாங்காததாக இருந்தது. ac coach புக் பண்ணி இருந்தார்கள். விஷால் இறுக்கமான மன நிலையில் இருந்து விடுபட்டு அனன்யாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியும் என்பதை பற்றி சிந்திக்க தொடங்கினான்.

அனன்யாவை குழந்தை போல ஏந்திக்கொண்டு பனிமலைகளை சுற்றி வந்தான் விஷால். புலிகள் சரணாலயம் மற்றும் டீ தோட்டங்களையும் கண்டு களித்தார்கள்.அனன்யா இப்பவும் பனிமலை கனவு வருதா என்றான். இப்போதெல்லாம் பனிமலை கனவில் வருவதில்லை.நாம தான் பனி மலைக்கே வந்துவிட்டோமே என்றாள். அவளுடனான உறவு இன்னும் நீண்டு கொண்டே போக வேண்டும் என நினைத்தான்.சுபா , தீபா இருவரிடமும் ஃபோன் பண்ணி பேசினார்கள்.அவர்களை அடுத்த ட்ரிப் அழைத்து போவதாய் சொன்னான். அனன்யாவுக்கு மலர்கள் அடங்கிய போக்கே ஒன்றை வாங்கி குடுத்தான். அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது . அனன்யாவும் விஷாலும் இரவின் மடியில் பனி காற்றில் மிதந்தார்கள். அனன்யா நேற்று ஒரு கனவு கண்டேன் என்றாள். இப்போ என்ன எரிமலை கனவா என்று கிண்டல் செய்தான் விஷால். இல்ல விஷால் ஒரு நதி அதில் நாம் இருவரும் நீந்திக்கொண்டு இருக்கிறோம் நீ திடீரென நகர்ந்து போய் கொண்டே இருக்கிறாய். நான் என் கையை நீட்டி கத்துகிறேன் .. ஆனால் நீயோ நீந்தியபடி போய்கொண்டே இருக்கிறாய் என்றாள். இருவரும் பனிமலை போட்டோக்களை ரசித்து எடுத்தனர். அவர்களுடைய இரவு அற்புதமாய் இருந்தது. அவளுக்கு தடைகள் எதுவும் இருக்கவில்லை. விஷால் தான் அவளை பார்த்த அந்த நொடியை இப்போதும் நினைவு கூர்ந்தான்.காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அவள்தான் இவனை எப்படி மாற்றிவிட்டாள்.

ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பினார்கள்.தினசரி வேலைகளில் அனன்யாவுக்கு உதவி செய்தான் விஷால். அவளுடைய அந்தரங்கத்தின் கண்ணாடி ஆகி விட்டான். அவனுக்கும் அவளுக்கும் இருந்த உறவு ஒரு இழை அளவு கூட நெருக்கம் குறையாதது. லோன் கிடைத்து விட்டது. இனி விசா வந்தவுடன் ஆஸ்ட்ரேலியா போக வேண்டியது தான். இன்னும் ஒரு 6 மாசம் கழித்து போகிறேன் என்றாள். இவனுக்கு அவளை கட்டாய படுத்த மனம் வரவில்லை. விஷால் நான் ஆஸ்ட்ரேலியா போயிட்டா நீ எப்படி தனியா சமாளிப்ப என்றாள்.சுபாவும், தீபாவும் கூட இருக்க மாட்டார்கள் . அதெல்லாம் பார்த்துக்கொள்வேன் உன்னுடைய கற்பனையிலேயே வாழ்ந்தவன் நான் ஒரு ரெண்டு வருஷம் பொறுக்க மாட்டேனா என்றான். ம்ம் எனக்கு ரொம்ப கஷ்டம் விஷால் என்றாள் அனன்யா. அனன்யாவுக்கு ஹெச் ஓ டி ஃபோன் பண்ணியிருந்தார். வாழ்த்துக்கள் அனன்யா சாரி உன்னுடைய engagement ஃபங்சன் வர முடியவில்லை என்றார். விஷால் எப்படி இருக்கிறான் என்றார். நல்லா இருக்கான் சார் என்றாள். ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடும்மா என்றார். ஓகே சார். விஷாலுக்கு வேலை நிரந்தரமான பின் நேரமே குறைவாக இருந்தது. இருக்கிற கொஞ்ச நேரத்தில் தான் அனன்யாவை பார்க்க முடிந்தது.

ஊரில் இருந்து சுபாவும், தீபாவும் வந்திருந்தார்கள். தீபா இவனை கட்டிக்கொண்டாள். பிரிவு அவளை ரொம்பவும் பாதித்திருந்தது. சுபா டான்ஸ் ஸ்கூல் வேலையெல்லாம் எப்படி போகுது என்றான். நெக்ஸ்ட் month ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கோம். கொஞ்சம் பேரு சேர்ந்து இருக்காங்க என்றாள் சுபா. அனன்யா லீவு போட முடியவில்லை. இவனுக்கு அன்று லீவு கிடைத்தது. அனன்யா டிபன் சமைத்து வைத்துவிட்டு நான் ஈவினிங் சீக்கிரம் வந்து விடுகிறேன் என்றாள். சுபாவும், தீபாவும் அவனை ஏக்கத்துடன் பார்த்தனர். சுபா அப்பா ஏதாவது சொன்னாரா? அவர் சீக்கிரம் நம்ம கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும் என்று சொன்னார். சரி எங்காவது வெளியே போகலாமா என்றான். சாயங்காலம் அனன்யா வரட்டும் சேர்ந்து போகலாம் என்றார்கள்.சுபா விஷால் டார்ஜிலிங் ட்ரிப் எப்படி இருந்தது என்றாள். சூப்பர் உங்களைத்தான் மிஸ் பண்னினேன் என்றான். தீபா இப்போ டாக்டர் போய் பார்த்தியா, சரி நாம போய் இன்னைக்கு பார்ப்போம் என்றான். வேண்டாம் விஷால் என்றாள். அதெல்லாம் சொல்லக்கூடாது என்று சுபாவையும் அழைத்து கொண்டு போனான் விஷால்.

டாக்டர் அவங்க நல்லா ஆயிட்டாங்க நீங்க அவங்க ஹஸ்பண்ட் ஆ என்றார். ஆமாம் என்றான் விஷால். தீபாவுக்கு வெட்கம் தாங்கவில்லை சிரித்து கொண்டே இருந்தாள். இருவரையும் அருகில் இருந்த ஹோட்டல் அழைத்து போய் சாப்பிட வைத்தான். ரொம்ப நாள் ஆச்சு சேர்ந்து சாப்பிட்டு என்றாள் சுபா. தீபாவும் , சுபாவும் இவனோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இன்னும் ரெண்டு நாள் இங்கே இருப்பீங்க தானே என்றான். இல்ல விஷால் நாளைக்கே கிளம்பனும் நிறைய வேலை இருக்கு என்றாள் சுபா.4 மணி போல வந்துவிட்டாள் அனன்யா . ஷாப்பிங் போகலாம் என்றான் விஷால். அனன்யா எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தாள். என்ன ஆச்சு டாக்டர் என்ன சொன்னாரு தீபா ? இப்போ எல்லாம் ஓகே என்றாள் தீபா. ரொம்ப சந்தோஷம் . சூப்பர் மார்க்கெட் போனார்கள் . வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள் நான்கு பேரும்.

அனன்யா, தீபா, சுபாவோடு பனிமலை அனுபவங்களை சொல்லி கொண்டிருந்தாள். இவன் தூங்கி விட்டான்.மறுநாள் கோவிலுக்கு சென்றார்கள் நான்கு பேரும். அடுத்த மாசம் டான்ஸ் ஸ்கூல் opening நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும் என்றாள் சுபா.டேட் கன்பர்ம் ஆன உடனே சொல்லுறேன் என்றாள். நிச்சயம் வருகிறோம் என்றான் விஷால். சுபா நீ ரொம்ப பொறுப்பானவனா மாறி விட்டாய் விஷால் என்றாள். பீச்சுக்கு போலாமா என்றாள் தீபா ஆசையாக . சரி போவோம் கடல் கன்னி என்றான்.தீபாவுக்கு கடற்கரையில் இருந்த கடைகளில் இருந்து அவள் ஆசைபட்டதை வாங்கி கொடுத்தான். அனன்யாவும் சுபாவும் கால் நனைத்தவாறே ஆஸ்ட்ரேலியா ட்ரிப் போவது பற்றி பேசிகொண்டிருந்தனர். எனக்கு போறதுக்கு மனசே இல்லை சுபா இவன் பிடிவாதமா இருக்கான். எல்லாம் நல்லதுக்கு தான் என்றாள் சுபா.

தீபா, சுபா இருவரையும் ஊருக்கு வழி அனுப்பி வைத்தான். தீபாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்பது இவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை குடுத்தது .அடுத்த மாதம் கட்டாயம் டான்ஸ் ஸ்கூல் opening போக வேண்டும் விஷால் என்றாள் அனன்யா. சுபாவுடைய கனவும் நிறைவேற போகிறது .விஷால் பழைய போட்டோக்களை எல்லாம் பார்த்துகொண்டிருந்தான். அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் எல்லாம் கற்பனையிலும் அவன் நினைக்காதவை. அனன்யா என்ற தேவதையின் பார்வை பட்டு எல்லாமே மாறியதாக தோன்றியது . விஷால் அவளை இரண்டு வருடங்கள் பிரிய போவதை நினைத்து வேதனையும் அடைந்தான். ஆனால் அந்த பிரிவு பல மடங்கு அனன்யாவின் காதலின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தும். என்ன விஷால் என்ன பண்ணுற என்றாள். போட்டோஸ் பார்த்து கொண்டிருக்கிறேன் என்றான்.அவள் அருகில் போய் அணைத்தான்.தேவதை வரம் தந்த கதை தெரியுமா உனக்கு என்றான். யார் அந்த தேவதை . நீ தான் என்றான்.

டான்ஸ் ஸ்கூல் opening நடந்தது . சுபாவின் அப்பா வந்திருந்தார். தீபா அம்மா இவனை ரொம்பவும் விசாரித்தாள் .தீபாவும், சுபாவும் வந்தவர்களை வரவேற்றனர். இவன் வந்தவர்களுக்கு உணவு பரிமாறினான். சுபா நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு ட்ரீம் ஸ்கூல் ஓபன் பண்ணிட்டே என்றான். அனன்யா சில பாடல்களை விழா மேடையில் பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினாள் . சுபா , விஷால். தீபா மூவரும் சேர்ந்து நடனம் ஆடினர். விஷால் மனதுக்கு நிறைவாய் இருந்தது . அன்று இரவு நால்வரும் சுபா வீட்டு மாடியில் அமர்ந்திருந்தனர். தீபா இவன் மடியில் அமர்ந்து கொண்டாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அனன்யா , சுபா இருவரும் அன்று எடுத்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தனர்.சுபா இன்னைக்கு நைட் ஸ்டடி பண்ணுவோமா என்றாள். எல்லோரும் சிரித்தார்கள்.