Aditi - 6 in Tamil Fiction Stories by Ganes Kumar books and stories PDF | அதிதி அத்தியாயம் - 6

Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

அதிதி அத்தியாயம் - 6



ஜூலியின் கண்ணில் இருந்து கண்ணீர் ததும்புகிறது...தன் கண்ணை துடைத்தவாறு அழுதுகொண்டே தன் ரூமிற்கு ஓடுகிறாள்.

மோகன் கோவத்தில் ரகுவை கை ஓங்குகிறான் ஓங்கிவிட்டு அடிக்காமல்

"சீ..உங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு இப்படி சாவுறதுக்கு பேசாம அவளுக்கு பதிலா நான் தூக்கு போட்டிருக்கலாம்...செய்..."தன் தலையில் அடித்துக்கொண்டு ஜூலியை சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடுகிறான்.

ரகு அன்றிரவு முடிவு செய்தான் ஜுலி இந்த வீட்டை விட்டு போகும் வரை தான் சாப்பிடப்போவதில்லை என்று..சொல்லி ஒரு நாள் சாப்பிடாமலும் இருந்துவிட்டான்.

ஜூலியும் தான் ஒரு இரண்டு நாள் தன் தந்தை வீட்டிற்கு சென்று வருகிறேன் என் மனதிற்கும் கொஞ்சம் ஆறுதளாக இருக்கும் என மோகனிடம் சொல்லிவிட்டு சென்றாள்..மோகனும் ஜுலி சென்றதை காரணமாக சொல்லி ரகுவை சாப்பிட வைத்துவிட்டான்.

அடுத்த வாரத்தில் மல்லிகா இறந்து ஓர் வருடம் ஆயிருந்தது...அவளுக்கு சடங்கு செய்யும் பொருட்டு ஷர்மி உட்பட சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர்.

அப்பொழுது ரகு ஷர்மியை தனியாக அழைத்து அழுதுவிட்டான்

"சித்தி...என்ன கூட்டிட்டு போ....இங்க இருக்க எனக்கு புடிக்கல....நா உன்கூட வர்றேன்... ப்ளீஸ்...அவளுக்காக அப்பா என்ன அடிச்சுட்டாரு தெரியுமா...நா எவ்வளவு நாள் தனியா உக்கார்ந்தது அழுதுருக்கேன் தெரியுமா யாருமே என்ன இங்க கண்டுக்க கூட மாட்டீங்காங்க...ப்ளீஸ் என்ன உன் கூட கூட்டிட்டு போ...இல்ல அம்மாவ மாதிரி நானும் ஏதாவது பண்ணிப்பேன்...ப்ளீஸ்"

ஷர்மிக்கு ரகுவின் அழுகையை கண்டு அவனை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று தான் தோன்றியது...ஆனால் இதை மோகனிடம் எப்படி சொல்லுவது என்பதுதான் அவளுக்கு முக்கிய கவலையாக இருந்தது எனவே அவள் சொந்தங்கள் அனைவரும் சென்ற பின் இதனை பேச முடிவு செய்தாள்...என்றும் இரண்டு நாட்கள் தங்கும் ஷர்மி இம்முறை நான்கு நாட்கள் தங்க முடிவு செய்தாள்.

சடங்குகள் முடிந்து அனைவரும் கிளம்பலாகினர்...ஷர்மி மட்டும் அங்கேயே தங்கியிருந்தாள்...அன்று இரவு டைனிங் டேபிளில் ரகு ஷர்மி மோகன் ஜுலி
உணவருந்தினர்...நீண்ட நாட்களுக்கு பின் ரகு முதல் முறையாக மோகன் ஜூலியுடன் சேர்ந்து உணவருந்தினான்.

"என்ன மேடம் எப்பவும்ரெண்டு நாள்ல கிளம்புடிவிங்க பெண்டிங் ஒர்க் அது இதுனு சொல்லிட்டு..."மோகன் சிரித்தவாறே கேட்கிறான்

"ஏன் மாமா நாங்க தங்கக்கூடாதா மூணாவது நாள் இங்க..."ஷர்மி அவனை மடக்க

"இல்ல...தங்கனும்னு தான் சொல்றேன்...ஏன் இவ்வளவு நாள் அப்படி தங்களனு கேக்குறேன்.."மோகன்

"இந்தாங்க இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..சரோஜா அவங்களுக்கு இன்னும் ரெண்டு வையு"ஜுலி எதிரில் இருக்கும் சிக்கன் லெக் பீஸை எடுத்து சரோஜாவிடம் கொடுக்க

"இல்லங்க இல்லங்க....முடிச்சிட்டு நானே எடுத்துக்குறேன்..."ஷர்மி நாசுக்காக மறுத்து விட

"ஜான் என்ன பண்ணுறாரு தொழில் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..."

"போய்கிட்டு இருக்கு அவருக்கு என்ன இருபத்தி நாலு மணி நேரமும் தொழில கட்டி அழுத்துட்டு இருக்கார்..."

"என்னமா இப்படி சொல்லிட்ட...நாங்க யாருக்காக வீட்டுக்கும் உங்களுக்கும் தான.."

"வீட்டுல உள்ளவங்களுக்கு டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...பிரம்மச்சாரியாவே இருந்து தொழில கண்டின்யு பண்ண வேண்டிதான..."ஷர்மி

"நல்லா சொன்னிங்க நல்லா காதுல விழுகிற மாதிரி அடிச்சு சொல்லுங்க..."ஜுலி மோகனை கை காட்டி சொல்ல மூவரும் மாற்றி மாற்றி சிரிக்கின்றனர்.

"இன்டீரியர்ஸ்லா மாத்திருக்கிங்க போல..."ஷர்மி

"எல்லா ஜூலியோட வேலை தான்..."மோகன்

"ப்ரெட்டி நைஸ்...ஒருநாள் எங்க வீட்டுக்கும் வாங்க எங்க வீட்டுளையும் கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணனும்...எனக்கும் என் ஹஸ்பண்ட்க்கும் ஆர்ட்ல கொஞ்சம் புவர் டேஸ்ட்.."

"கண்டிப்பா..."ஜுலி....அனைவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்துகின்றனர்..அப்பொழுது ஜூலியிடம்

"நா கூட நீங்க என்கிட்ட இவ்வளவு ஃப்ரீயா பேசுவிங்கனு எதிர்பார்க்கல...பட் யூ வெர் சோ நைஸ்.."ஜுலி சொல்ல ஷர்மி சிரிக்கிறாள்

"ஷ்ரமி கொஞ்சம் ரகுக்கு சொல்லி புரிய வை போறதுக்கு முன்னாடி...இங்க யாரும்"மோகன் சொல்லி முடிப்பதற்குள் ஷர்மி குறுக்கிடுகிறாள்

"மாமா...நா ரகுவ பத்தி கொஞ்சம் பேசணும்..."ஷர்மி

"சொல்லு..."

"நாங்க ரோகனையும் மகிமாவையும் பெங்களூர்ல ஹாஸ்டல்ல சேர்த்து அங்கையே படிக்க வைக்கலாம்னு இருக்கோம்..."ஷர்மி தயங்குகிறாள்

"சரி..."மோகன்

"ரகுவையும் அவங்களோட சேர்த்து அங்க அனுப்பலாம்னு நான் யோசிச்சிருக்கேன்.."

"இல்ல ஷர்மி அதுலா வேண்டாம்...அவன் இங்கேயே இருக்கட்டும்..."

"இல்ல மாமா நா என்ன சொல்ல வரேன்னா.."

"எதுவா இருந்தாலும் அவன் எங்கையும் போக வேண்டா..."

"இல்ல மாமா இப்ப தான் உங்களுக்கு கல்யாணம் ஆயிருக்கு அதான் கொஞ்ச நாள் உங்கள..."

"ஷர்மி ப்ளீஸ்...இங்க ரகுவ டிஸ்டர்பன்ஸ்னு நினைக்குறவங்க யாரும் இல்ல..."

"இல்ல...நா அப்படி சொல்லல...நாம பெரியவங்க எல்லா விஷயத்தையும் ஈஸியா அடாப்ட் ஆய்டுவோம் ஆனா சின்ன பசங்களால அவ்வளவு ஈஸியா அடாப்ட் ஆக முடியாது..அதுக்கு அவனுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படும்...அதுக்கு நாம டைம் கொடுக்கணும்... அந்த டைம்ல நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தூரத்துல இருக்குறது தான் நல்லது...ஒரே இடத்துல இருந்தா ரெண்டு பேருக்கும் தேவையில்லாத மனஉளைச்சல் தான் வரும்...அதான் நா சொல்றேன்.."

"கைக்குள்ளயே வளர்ந்த பையன் அவ்வளவு தூரம் போய் தனியா இருக்கமாட்டான் ஷர்மி.."

"இல்லப்பா...நா தனியா இருந்துப்பேன்...நான் ரோகன் கூட பெங்களூர் போறேன்..."

"உனக்கு ஒன்னும் தெரியாது நீ அமைதியா இரு...பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல..."

"இல்லைங்க எனக்கு என்னமோ ஷர்மி சொல்றது தான் சரியா படுது..."

"ப்ளீஸ் ஜுலி,சாரி ஷர்மி எனக்கு இதுல உடன்பாடு இல்ல... இந்த பேச்ச இதோட நிப்பாட்டிடுவோம்..."மோகன் டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்றுவிடுகிறான்.

ஷர்மியும் ரகுவும் ரகுவின் ரூமில் படுத்துக்கொண்டிருக்கின்றனர்.

"சித்தி...அப்பா வேண்டாம்னு சொன்னா என்ன..நா வரேன்...துணிக்கூட எடுத்து வச்சுட்டேன் பேக்ல..." ரகு

"இல்ல ரகு உங்கப்பாவ மீறி என்னால உன்ன கூப்பிட்டு போக முடியாது.."ஷர்மி

"ப்ளீஸ் சித்தி..."ரகு கெஞ்சுகிறான்

"இல்ல ரகு... அந்த அளவு எனக்கு உன் மேல உரிமையும் கிடையாது...நா வேணா ஜூலிட்ட பேசி உன்ன நல்லா பாத்துக்க சொல்றேன்...அப்பாகிட்ட இனி அடிக்கக்கூடாதுனு அட்வைஸ் பண்றேன்..."ஷர்மி

"சித்தி..."ரகு

"தூங்கு..."ஷர்மி

ஜூலியும் மோகனும் தங்கள் ரூமில் பேசிக்கொண்டிருக்கின்றனர்

"ஏன் நீங்க இவ்வளவு அடமென்டா இருக்கீங்க...எனக்கு அவங்க சொல்றதுல நியாயம் இருக்குற மாதிரி தோணுது...நாம ஏன் அப்படி பண்ணக்கூடாது..."

"இல்ல ஜுலி உனக்கு புரியாது...என் கண்ண விட்டு விலகாம வச்சிருந்த பையன் ரகு இப்ப அவன திடீர்னு எங்கேயோ போய் வச்சிடுனு சொன்னா எப்படி ஜுலி...என்னால அவன பிரிஞ்சி இருக்குறது கஷ்டம்...என்ன ஆனாலும் அவன் இங்கேயே இருக்கட்டும்.."

"ரகு இங்கேயே இருந்தா என்ன ஆகும் அவன் பண்றத பாத்து நீங்க அவன வெறுத்துடுவிங்க இல்ல நீங்க பண்றத பாத்து அவன் உங்கள வெறுத்துடுவான்...கண்டிப்பா இதுல ஒன்னு நடந்துடும்...அவன் இங்க இருக்க ஆசைப்படல மோகன்.."

மோகன் குழப்பத்துடன் ஜுலியை பார்க்கிறான்

"இப்ப அவனுக்கு கொஞ்சம் ரிஃப்ரெஷமெண்ட் தேவை...அவன் உலகத்தை தெரிஞ்சிக்கணும் அப்ப தான் உங்கள புரிஞ்சிப்பான் என்ன புரிஞ்சிப்பான் நம்ம அன்ப புரிஞ்சிப்பான் யார நம்பலாம் யார நம்பகூடாதுன்னு புரிஞ்சிப்பான்..அது அவனுக்கு இங்க கிடைக்காது...நாம நேசிக்கிற ஒருத்தர் நம்ம கூடையே இருக்கணும்னு நினைக்குறது அன்பு இல்ல...அவன் எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறதுதான் அன்பு...கொஞ்சம் யோசிச்சு பாருங்க.."ஜுலி

ஜூலி சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள் ஆனால் மோகனுக்கு தூக்கம் வரவில்லை அவள் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தான்...காலையில் எந்திரித்தவுடன் ஜூலியிடம் தான் ஷர்மி சொன்னதிற்கு சம்மதித்து விட்டதாக அவளிடம் தெரிவித்து விடுமாறு கூறினான்.

ரகுவுக்கு அதை கேட்டதில் இருந்து சந்தோஷம் தாங்கவில்லை வானுக்கும் மண்ணுக்குமாக குதித்தான்...அந்த வாரம் முழுவதும் துள்ளி குதித்துக்கொண்டு இருந்தான்...ஜுலி தன் வந்ததில் இருந்து பார்த்த ரகு இதுவல்ல என்று அவனை மகிழ்ச்சியுடன் ரகுவின் சந்தோஷமான மற்றோரு முகத்தை அன்று முதல் முதலாக பார்த்தாள்...மோகனுக்கு என்ன தான் மகனை பிரியப்போகிற சோகம் இருந்தாலும் அவன் அதை ரகுவின் மகிழ்ச்சியாய்க்கலைக்கும் விதமாக அவனிடம் காட்டவிரும்பவில்லை..அவன் பெங்களூர் பயனத்திற்காக அவனுக்கு வேண்டிய பொருள்கள் வாங்குவதற்காக மோகன் ஒரு நாள் முழுவதும் விடுப்பு எடுத்து ரகுவும் மோகனும் சென்னையில் உள்ள அனைத்து கடைகளையும் சுற்றி வந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே ரகு பெங்களூர் செல்ல வேண்டிய நாளும் வந்தது...

அவனுக்காக வாங்கப்பட்ட புது துணி,வாட்ச்,பேக் என அத்தனையும் போட்டுக்கொண்டு ஹிந்துஸ்தான் அம்பாஸடரில் கிளம்பலனான் இரயில்வே ஸ்டேஷனுக்கு...அங்கு ஷர்மியின் குடும்பத்தினர் ஏற்கனவே வந்து இவர்களுக்காக காத்திருந்தனர்.அங்கு ரோகனை பார்த்தவுடன் ரகுவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

ரோகன் ரகுவை விட ஆறுமாதம் இளையவன் முன்பு மல்லிகாவைப்பார்க்க ஷர்மி வரும்போதெல்லாம் ரோகனை அழைத்து வருவாள்...மல்லிகா ஷர்மியை பார்க்க செல்லும் பொழுது அங்கு ரகுவை அழைத்து செல்வாள்...அப்படித்தான் அவர்களுக்குள் அந்த நட்பு உண்டானது என்னதான் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்தாலும் அவர்களது நட்பு உறுதியாகவே இருந்தது ஆனால் மல்லிகா இறந்ததில் இருந்து ஷர்மி அவ்வளவாக அங்கு வருவதில்லை அப்படி வந்தாலும் ரோகனை அழைத்துக்கொண்டு வருவதில்லை...மோகனும் ரகுவை அங்கு அழைத்துசெல்வதில்லை அதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் ரோகனை சந்தித்ததே ரகுவின் இந்த சந்தோஷத்திற்கு காரணம்.

ஜன்னல் சீட்டிற்கு ரோகனும் ரகுவும் சண்டைப்போட்டு இறுதியில் ரகு வெற்றிக்களிப்புடன் ஜன்னல் சீட்டில் அமர்ந்தான்.மணி பத்தாக மாஸ்டர் கொடியைக்காட்ட இரயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டது.


அவன் திரும்பி வரும்பொழுது தங்களைப்பற்றி புரிந்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் பிளாட்ஃபார்மில் இருந்து ஜானுடன் சேர்ந்து கையசைத்து வழியனுப்பிக்கொண்டிருக்க தனது வாழ்க்கையின் புதிய அதியாத்தை நோக்கி ரோகன் மற்றும் ஷர்மியுடன் தொடங்க ஆசையுடன் புறப்பட்டான் ஏழு வயது ரகு....