Kurunthogai Manaiyal in Tamil Short Stories by Prasanna Ranadheeran Pugazhendhi books and stories PDF | குறுந்தொகை மனையாள்

Featured Books
  • નિતુ - પ્રકરણ 70

    નિતુ માટે જન્મેલ નવીનનું નાનકડું આકર્ષણ દિવસેને દિવસે પ્રબળ...

  • દાદા ભિષ્મ

    પૌરાણિક દ્રષ્ટાંત કથા –                      પિતામહ ભીષ્મની...

  • અધુરો પ્રેમ

    જિગ્નાસુ ખુબ જ સરળ અને શાંત છોકરી.... પરીવાર મા વડિલ અને નાન...

  • વહુના આંસુ

    સવીતા રસોડામાં રસોઈ કરતી હોય છે,  ત્યાં જ છાંયા બહેન જોરથી ચ...

  • ભાગવત રહસ્ય - 164

    ભાગવત રહસ્ય-૧૬૪   પિતાજી નામદેવને કહે છે- કે “સવારે વહેલા જા...

Categories
Share

குறுந்தொகை மனையாள்

யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர தேசம் சென்ற தலைவனை எண்ணி எண்ணி வள்ளுவனின் பசப்புறுபருவரலால் ஆட்கொண்ட எத்தனையோ தலைவிகளில் இவளும் ஒருத்தி.

பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் இந்த உளவியல் சார்ந்த நோய்க்கு இன்ன மருந்து என்று இன்று வரை யாரும் கண்டறியவில்லை. இப்போது இந்த பசலை நோயால் வாடும் தலைவியை எங்கனம் கொண்டு சரி செய்வது. ஹைபோக்ரோமிக் அனிமியா என்று இன்றைய மேதாவிகள் சொல்லி திரிவது உண்டு. ஆனால் முகப் பொலிவும் மேனி அழகும் மட்டும் பறித்துக் கொள்ளும் இந்த நோய் எப்படி ஒருத்தியை தொற்றிக் கொண்டது என்று கேட்டால் மவுனத்தை தவிர வேறொன்றையும் தரமுடியாது. பசுவின் மடியில் இருந்து பாலை உறிஞ்சும் நிலத்தை போல இந்தப்
பொல்லாத பசலை நோய் அவளை தின்று மிச்சத்தை இருப்பை மரத்தின் நிழலில் கிடத்தி இருந்தது.

வைரமுத்துவின் திருமொழியினால் இதை சொல்ல வேண்டும் என்றால் தலைவன் அணிவித்த மோதிரம் வளையலாக துரும்பென இளைத்தவள் இப்போது அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகும் மட்டும் ஏக்கத்துடன் தலைவனை எண்ணி காத்திருக்கிறாள். நாச்சியாரையே விஞ்சிய உறுப்புநலனழிதலினை அவள் எந்த மணிமுடி மைந்தனிடம் ஒப்புவிக்க முடியும்.
அவள் இடையும் தோளும் சிறுக்கும் மட்டும் ஏக்கம் கொண்டவள் அல்ல கச்சுக்குள் அடித்து துடிக்கும் இதயக்கூட்டில் வாழும் செங்கிளியின் ஏக்கத்துக்கும் தான்.

தலைவனோ தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தன் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து ஆகாயத்தையும் நிலத்தையும் மேலும்கிழுமாய் பார்த்துக் கொண்டிருந்தான். வழியில் வந்த வக்கத்த ஒருவனை கத்தி முனையில் அவன் உடைமைகளை அபகரித்தான்.
பசியின் விளிம்பில் வழிபறி தான் பற்றுதல் கயிறு அதை பிடித்து மேடேற வேண்டும். பசி ஒருபக்கம் உயிர் எடுக்க; காத்திருப்பு மறுமுனையில் உயிர் கொல்ல பார்க்கிறது.

தன் தலைவனை எண்ணி இடை சிறுத்து தோள் மெலிந்து நின்ற தலைவிக்கென்னவோ கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். காத்திருப்பின் பொழுதுகளில் தேடல் சேர்ந்துவிட்டால் அந்த தருணங்கள் யாவும் நரகமாகும். காதலுக்கும் காத்திருப்பிற்கும் நடக்கும் ஊடல் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஓர் சல்லாப வெக்கை. அந்த வெக்கையை தணிக்க கொற்றவையும் குழல் இசையுடன் பவனி வரப் போவதில்லை. குறிஞ்சியும் முல்லையும் திரிந்த இந்த பாலை நிலம் இப்போது ஆண்பாலும் பெண்பாலும் திரியும் காதலும் காதல் சார்ந்த இடமுமாய் காட்சியளிக்கிறது.

"கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே."

பூரிக்கோவே சற்று குழம்பி தான் போயிருப்பான் அவன் உச்சரிப்புகளை கேட்டிருந்தால். மேலே சொன்னதை அவன் அப்படி பாடவில்லை எம்பதுகளின் கோர பிடியில் கண்ணங்களில் விழும் சுருக்கம் கொஞ்சம் நாவிற்கும் தொற்றுவது போல வார்த்தைகள் குளற வாசித்தான் அந்த எம்பது வயது கிழவன். பார்கின்சன் அவன் நரம்புகளில் பார்க் செய்ததால் கூட இது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதை பொறுக்க முடியாமல் ஒரு சத்தம் கேட்டது.
"வில் யூ ஷட் அப்...

இப்ப எதுக்கு இப்படி காலங்காத்தால கத்திட்டு இருக்க

சும்மா ஏதாவது உளறிட்டே இருப்பியா" கேட்ட கேள்வியில் சப்த நாடியும் ஒடுங்கி போனது அந்த கிழவனுக்கு. பேரன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் அமைதி காத்தான் அந்த கிழவன். நல்ல வேளை மாமூலனாரும் வெள்ளிவீதியாரும் இல்லை இதை கேட்க. இல்லையென்றால் அவர்களும் வாய்ப்பொத்தி நின்றிருக்க கூடும். நியுகிளியர் குடும்பங்கள் விர்ச்சுவல் குடும்பங்களாக மாறும் அந்த இருபத்தோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்படி ஒரு கிழவனை ஒரு குடும்பம் தாங்கி கொண்டு நிற்க வேண்டும் என்றால் ஒன்று அவன் பணம் படைத்திருக்க வேண்டும் இல்லை அவன் புகழையாவது சேர்த்து இருக்க வேண்டும். இந்த இரண்டில் நிச்சயமாக அவன் ஒன்றை செய்யவில்லை மற்றொன்றை செய்திருந்தான்.

மூன்றாம் மில்லினியமின் பொது ஆண்டு இரண்டாயிரத்து அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு அது. உலகில் இசுலாம் பெரிய மதமாக உருவெடுத்து இருந்தது. இந்தியாவில் இந்துவாக்கள் வேரூன்றி இருந்தன. பத்தில் இருவரை சமயம் மாற்றப்பட்டு இருந்தார்கள். அண்டார்டிகாவில் மூன்று பனிப்பாறைகள் உருகி கடலுக்குள் விழுந்தன. நான்கு மடங்கு பூமி வெப்பத்தை தகித்துக் கொண்டிருந்தது. மனிதனின் சராசரி வயது ஐம்பதாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வீடுகள் அனைத்தும் தானியங்கி ஆகி இருந்தது. வீட்டுக்கொரு ரோபோக்கள் சுற்றி திரிந்தன. பயலாஜிகல் பாதர் அல்லாத குழந்தைகள் அதிகளவில் இருந்தார்கள். ஆடைகள் நுனிவிரல்களில் எடுத்து செல்லப்பட்டன. குரோமோ டைனமிக்ஸ் மூலம் நொடி பொழுதில் வைரஸ்கள் ஆராயப்பட்டன. பணக்காரர்களில் நூற்றில் பத்து பேர் டிரில்லியன் டாலர் பிசினஸ் செய்து கொண்டிருந்தார்கள். மின்சார வாகனங்கள் பெருகி இருந்தன. வயர்லெஸ் மூலம் மின்சாரம் விநியோகப்படுத்தபட்டது. செல்லுலார்கள் இசட் ஜியில் இயங்கி கொண்டிருந்தது. அமேரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா அசுர வளர்ச்சி அடைந்திருந்தது. நாசா வியாழனில் மனிதனை தரை இறக்கியது. செவ்வாயில் பல ஆயிரம் பேர் நிலங்களை வாங்கி போட்டார்கள். நிலவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினார்கள். விண்வெளிக்கு எளிவேட்டர்கள் அமைக்கப்பட்டன. லட்சக்கணக்கான உயிரினங்கள் அழியும் தருவாயில் இருந்தது. இந்தியா வளரும் நாடுகளில் ஒன்றாகவே வளர்ந்து கொண்டே இருந்தது. ஊழல்கள் பெருகி இருந்தன. ஜனத்தொகையில் சீனாவை தோற்கடித்து இருந்தது. பசி பட்டினியால் இறப்பது வழக்கொழிந்து உடல் பருமனால் நிறைய மக்கள் உயிர் நீத்தார்கள். பெண்களின் விகிதம் மூன்றில் ஒரு பங்காக குறைந்திருந்தது. காதலர்கள் பல காதல் பிராஸஸ்களை கையாண்டார்கள். ஒருவர் இருவர் மேல் காதல் கொண்டார்கள். காதல் மட்டும் அப்படியே இருந்தது.

பதினோரு நாட்களாகியும் இன்னும் அவள் அவன் கண்களை விட்டு அகலவில்லை. காட்சி பிழையாகி மீண்டும் மீண்டும் தன் ஒளித்திரையில் அவள் மாட்டிக் கொள்வது அவனுக்கு அசௌகரியமாக இருந்தது. அந்த ஆதங்கத்தில் அந்த வக்கத்த கிழவனிடம் எரிந்து விழ வேண்டி ஆகிப்போனது சே. அவன் பெயரை அப்படி உச்சரித்தால் தான் அவன் மனம் நிம்மதி அடையும். அவன் முழு பெயரையும் சொன்னால் அவன் பாட்டனுக்கு இன்னும் கொஞ்சம் கீர்த்தனைகள் கிடைக்கும் பிறகு அது எந்த இராகத்தில் அமைந்தது என்று நம்மால் கண்டு பிடிக்கவே இயலாது.

"டேய் காலங்காத்தாலயா

மணிய பாருடா பதினொன்னு...

இன்னிக்கு தியாவோட மேரஜ் தெரியும்ல...

போ

சீக்கிரம் போய் பிரஷ் அப் ஆய்ட்டு

லாகின் பன்னு

நீ வரலன்ன ரொம்ப அப்சட் ஆகிருவா" சே வை அடக்க இந்த பெண் குரலுக்கு மட்டும் தான் அத்துனை ஆளுமையும் அதிகாரமும் உள்ளது. அவளை எப்போதும் பெயர் சொல்லி அழைத்தாலும் அவ்வப்போது அம்மா என்றும் அழைப்பதுண்டு. அது தானே அவள் வாங்கிய வரம்.

"நடக்குறது ஆன்லைன்ல இதுல என்ன அப்செட் வேண்டி கிடக்கு ..

எதனா கிஃப்ட் ஆர்டர் பண்ணி விடுமா" சே கொஞ்சம் அதட்டலாகவே சொன்னான்.

கல்யாணங்கள் சம்பிரதாயங்களுக்கு செய்யும் பொழுது இப்படி ஒரு பதிலை தான் நாம் எதிர்பார்க்க முடியும். மஞ்சள்
கயிற்றில் கோர்த்து வைத்த தங்கத்துக்கு இத்தனை மவுசா இல்லை தாலி என்று சொல்லி பல தார்மீகத்தை வைத்த அந்த மாங்கல்யத்துக்கு இத்தனை மவுசா எனத் தெரியவில்லை. தொல்காப்பியனின் உடன் போக்கையும் கடந்து அவன் வழி வந்த பூர்வகுடிகள் திசைமாறி தடம்மாறி இன்று சீர்திருத்த கல்யாணம் பால் வந்து நிற்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களில் கூட ஒரு தாத்பரியம் இருந்தது. கண்ணகியும் சீதையும் எந்த தாலியை கட்டிக் கொண்டு தழைய தழைய நடந்தார்கள். தாலி மட்டும் இரண்டு மணங்களை சேர்த்திடுமா என்ன?. கிளியை கூண்டில் வைத்து தான் கொஞ்ச வேண்டுமா என்ன. கிளி என்று குறிப்பிட்டதற்கு மாதர் சங்கங்கள் கொதித்து எழவேண்டாம். பெண்களை கிளியுடன் ஒப்பிடுவது தான் சங்க இலக்கிய மரபு .

சொன்ன சொல்லுக்கு லாகின் செய்து வீடியோவை ஆப் செய்து ஆடியோவையும் மூயுட் செய்தான். பதினோரு நாட்களாய் அவன் மண்டைக்குள் ஓடிய அந்த முகம் மறுபடியும் இந்த வலைக்காட்சியில் பார்த்தவுடன் இன்னும் அவன் மூளையை சலசலப்புக்குள்ளாக்கியது.
"பார்த்தது போதும்

சரி வா

பிரேக் பாஸ்ட் சாப்ட" அவனை அதட்டி கண்களாலே மிரட்டினாள் அவன் தாய்.

"அவன் சமைப்பான்...

நீ வா வந்து உட்காரு" என்றான் அவனை பெற்றெடுத்தவன்.

"எது

நான் சமைக்கவா...

என்ன டாட் ஏன்

உன் வைப் சமைக்க கூடாதா" அப்பாவை பார்த்து கேட்டான் சே.

"இட்ஸ் நாட் ஃபார் மை சேக்

பட் ஃபார் யுவர் குட்னஸ்" கொஞ்சம் நிதானமாகவே சொன்னான் சேவின் தந்தை.

"என்ன கதவுடுறியா

சும்மா இரு...

நீ போ மலர்" சே அவன் தாயை பார்த்து மெல்ல சைகை செய்தான்.

"அப்புறம் உன் இஷ்டம்

யு வில் டிஸர்வ்" அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்.

"என்னப்பா ரொம்ப பயமுறுத்துற" எதோ ஒன்றை உணர்ந்ததை போல கேட்டான் சே.

"பயமுறுத்தலடா

இது தான் தம்ப் ரூல்

ரூல் ஃபார் த ரிலேஷன்சிப்

மோஸ்ட் இம்பார்டன்ட் கான்வர்சேன்ஸ் எப்ப நடக்கும் தெரியுமா இரண்டே இடம் ஒன்னு டைனிங் டேபிள் இன்னொன்னு பெட் ரூம்

இதுல இன்னொரு முக்கியமான ஃபார்முலா என்ன தெரியுமா இரண்டு இடத்துலயும் பொண்டாட்டிய பேசவே விடக்கூடாது.

டைனிங் டேபிள்ள பேசவிடாம பண்றதுக்கு ஜெஸ்ட் அவங்கள பரிமாற விடாம உட்கார சொல்லி சாப்ட சொன்ன போதும்...

அன்ட் இன் பெட் ரூம்...

ம்ம்..

இப்ப நீ சின்ன பையன் நேரம் வரும் போது உனக்கே தெரியும்" சே தந்தை இப்படி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவன் கைப்பேசி மின்னியது. அனைக்க அனைக்க மறுபடியும் மின்னியது. ஒரு கட்டத்தில் மின்னியதை மின்னியபடி விட்டான் அப்போதும் எல்லை மீறி மின்னியது.

எழுந்து நகர்ந்து தனியே வந்தவன் தாழ்வாரம் அருகே சென்று பரந்து விரிந்து ஆர்ப்பரித்து கொண்டிருந்த கடலை பார்த்துத் கொண்டிருந்தவன்,

"ஏய் ஏன் இப்படி கால் ரெக்வஸ்ட் கொடுத்துடே இருக்க..." கைப்பேசி அழைப்பில் சொன்னான்.

"ஆம் பிரக்னன்ட்" அழைத்தவள் அப்படி தான் சொன்னாள்.

"சோ வாட்" சே கடுப்பாகி கேட்டான்.

"இல்ல என்ன பன்றதுனு கேக்கலாம்னு தான்...." எதிர் முனையில் அவள் சொன்னாள்.

"அத ஏன் என்கிட்ட கேட்குற" சே நிதானமாக பேச ஆரம்பித்தான்.

"யு ஆர் த ரீசன் னா

அதான்" அவள் குரலிலும் நிதானம் தொற்றிக் கொண்டது.

"ஹே யு அக்சப்டட்
வீ என்ஜாய்ட்

தட்ஸ்இட்

வீ ஆர் ஜெஸ்ட் இன் எ ஃஎப் டப்ள்யூ பி ரிலேஷன்ஷிப்

அன்ட் மோரோவர் அது ஒரு ஒன் நைட் அக்ரிமென்ட்

நீ இப்படி சொல்லுவேனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா...

உன் கூட படுத்துருக்கவே மாட்டேன்

சரியா

உனக்கு பெத்துகனும்னா பெத்துக்கோ இல்ல

ஜெஸ்ட் அபார்ட்" சே ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி சொன்னான்

"எனக்கு பெத்துகனும்னு ஆச" அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.

"தென் வாட் த பக்கிங் கொஸ்டின் இஸ் திஸ்" சேவின் நிதானம் தடுமாற பார்த்தது.

"இல்ல

வீட்ல தெரிஞ்சுசுனா" அவள் பதட்டத்துடன் கேட்டாள்.

"ஆம் தொப்பை போட்டுறுச்சுனு சொல்லு" கடுப்பாகி சொன்னான் சே.

"உன் ஜோக் சகிக்கல சே" அவள் வெறுத்து போய் சொன்னாள்.

"ஏய் இப்ப உன் கூட பேசுற மூடுல நான் இல்ல பிளிஸ் கால் கட் பண்ணு" என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே அவன் கைப்பேசியில் இன்னோரு மின்னல் வெட்டியது. அந்த மின்னஞ்சலை அவன் திறக்க முற்பட்டான். அவளோ மறுபுறம் 'சே' 'சே' என்றவாறு இருந்தாள். அந்த அஞ்சலை படிக்க படிக்க அவன் கண்களில் நீர் கோர்த்தன வழிய இடமில்லாமல் அவன் தாடி மீசை மயிரிழைகளில் மாட்டிக் கொண்டன. எல்லாவற்றையும் வெறுத்து ஆக்டோ மனைவியரை துறந்த சீவகனை போல அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். சலிக்காமல் ஆர்ப்பரித்து கொண்டிருந்தது கடலலை.

அவள் அழைப்பை இன்னும் துண்டிக்கவில்லை இவனும் கூட

"லிஸன் காஷ்மீரா, டோன்ட் மெக் இட் அஸ் கம்ப்ளிகேடட்...

பாஸ்ஸிங் க்ளவுட்ஸா நினச்சு மறந்துரு..

எனக்கு இந்த லவ் கல்யாணம்லாம் சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல...

எனக்கு என் கேரியர் தான் முக்கியம் ஐ வான்ட் டு சக்ஸீடு இன் ம லைஃப்...

யூகே போனும் என் கரியர் எக்ஸ்புளோர் பண்ணணும்

ஹாக்கிங் இஸ் மை பேஷன் காஷ்மீரா

லண்டன் இஸ் மை டீரிம்

புரிஞ்சுக்கோ..." மயிரிழைகளை ஊடுறுவி இப்போது நிலத்தை அடைந்தது அவன் உயிர் துளிகள்.

ஃபோனை அனைத்துவிட்டு தாழ்வாரத்தை திறந்து அந்த அலைகளை பார்த்தான். ஆண்அலை ஒன்று தன் முன்னே ஒடி சென்ற பெண்அலையை துரத்தி சென்றது எத்தனை முறை துரத்தி சென்றும் ஏமாற்றத்தோடு கரையை அடைந்தது. ஆனால் அது ஒரு போதும் தன் முயற்சியை கைவிடபோவதில்லை என்று அந்த கரைக்கு தெரிய வாய்ப்பில்லை.

அந்த வங்ககடலில் தான் கதிரவன் ஆனந்தமாக சூரியக்குளியல் போட்டு கொண்டிருந்தான்.

வேகமாக எழுந்தான் சே. முன்னோரு முறை அரபிக் கடற்கரையோரம் வாங்கிய ஃபென்னியை தேடினான். துலாவினான். அது சிக்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நேரே அந்த கிழவன் முன் நின்றான்.

"நீ தான் எடுத்தியா" அது ஒரு வில்லங்கமான பார்வை கருமுழிகள் இரண்டும் தன் இரு துருவங்களையும் உரசி கொண்டு இருந்தது. முந்திரி ரசத்தின் மேல் அந்த கிழவனுக்கு அப்படி ஒரு பிரியை. அந்த கிழவனை எதுவும் சொல்லாமல் வெளியே வந்தான். மீண்டும் வந்து அமர்ந்தான். மலர் வேகமாக அவன் தட்டில் இரண்டு பேன் கேக்குகளை வைத்தாள். அப்படி இருந்தது அதற்கு வேறு பெயர் கூட இருக்கலாம் பொத்தாம் பொதுவாக அதை பேன் கேக் என்று சொல்வதினால் அவை கோவித்துக் கொள்ள போவதில்லை. சே பார்த்தவுடனே அவன் நா சொல்லியது இது தனக்கு ஏற்றாற் போல் இல்லை என்று.

"எனக்கு சான்ட்விச் தான் வேனும்"

"சான்விட்ச்க்கு பிரட்டும் இல்ல சீஸூம் இல்ல சே" மலர் சொன்னாள்.

"ஷிட் வீடா இது!" சே மீடியம் செஸ் கோவதுடன் சொன்னான். எக்செல் டபுளெக்சல் இன்னும் பிராமாதமாக இருக்காலாம்.

"எதுக்கு இவ்ளோ கோவம்"

போ ...

போய் ஃபுட் பிரிண்ட் போட்டு சாப்பிடு" அவன் தந்தை மெதுவாக சொன்னான்.

"எனக்கு எதுவும் வேனாம்" சே சொல்லி விட்டு எழுந்தான்.

"சொல்ற எதையும் கேக்க கூடாதுன்னு இருக்கியா சே

வர வர இப்படி தான் பண்ணிட்டு இருக்க...

அன்னைக்கு இப்படி தான்

நான் எவ்வளவோ சொல்லியும் அந்த பொண்ண வேணாம்னு சொன்ன.

ஷி வாஸ் டேம்ன் குட்

தெரியுமா"

மலரின் வார்த்தைகள் பழுத்தன.

"அவ என்ன சொன்னானு உனக்கு தெரியாது" சேவின் லார்ஜ் வெளியே வந்தது.

"அப்படி அவ என்ன சொன்னா" மலர் நடுவே வாய் மறித்தாள்.

"வேனா என்ன பேச வைக்காத மா"

"சும்மா சொல்லு

எங்களுக்கும் தெரியனுல" மலர் லார்ஜை மீடியமாக அடக்கிட நிதானமாக கேட்டாள்.

ஆண் பெண் உரையாடல்கள் என்பது சதுரங்க ஆட்டத்தை போல. ஆட்டத்தை தொடங்கும் வெள்ளை காய் வைத்திருப்பவருக்கு பத்து வாய்ப்புகள் கிடைக்கும். எந்த காயை நகர்த்தினால் எந்த பதில் வரும் என்று எதிரில் இருப்பவரின் மூளையை ஊடுருவ வேண்டும். ஏனென்றால் அவருக்கும் அந்த பத்து வாய்ப்புகள் காத்திருக்கும். நான்கு நகர்த்ததிலிலே செக்மேட்கள் நடப்பதுண்டு. அது போல நான்கு வார்த்தைகளிலே காதல் முடிந்து போன கதைகளும் இங்கு உண்டு. அதனால் பெண்களிடம் பேசும் வார்த்தைகளின் ஜாலம் தெரிய வேண்டும். அது ஒரு சிதம்பர இரகசியம். புறக்கண்னால் காணாது ஞானக்கண்ணால் கண்டுணரும் மாபெரும் இரகசியம். கேரி காஸ்பரோவை தோற்கடித்த டீப் புளு ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் பெண் வடிவமாகத்தான் இருந்திருக்கும்.

அன்று பத்தில் எந்த காயை முதலில் நகர்த்தலாம் என்று சேவுக்கு பெரும் குழப்பம். எத்தனையோ பெண்களிடம் அவன் பழகியிருந்தாலும் எல்லா பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கைவசம் ரேடாரும் சோனாரும் இல்லை. அதனால் எதை கொண்டு தொடங்குவது என்று தடுமாறினான். பெருமூச்சை வாடகைக்கு எடுத்து கொண்டு ஆஸ்தான கிங்ஸ் காம்பிடிலேயே தொடங்கினான். துரதிருஷ்டவசமாக அவன் எதிர்ப்பார்ப்புகளை அவள் நகர்த்தலின் மூலம் சுக்கு நூறாக்கினாள். குயின்ஸ் காம்பிட்ல் தொடங்கிய அவள் உரையாடல்கள் போட்வின்னிகின் செமி ஸ்லாவ் டிபன்ஸில் முடிந்தது.

"ஹாய்! நைஸ் டு மீட் யூ" சேவின் கிங்ஸ் காம்பிட்டுக்கு அவள் நகர்த்திய சொற்கள்.

"ஆக்சுவலா ஐ சா யுவர் புரோபைல் இன் டின்டர்

ஐ ஜஸ்ட் தாட் இட் வுட் பி சூட்டபிள் ஃபார் மீ

அதான் பேசலாமேனு"

"ஹாலோ!

ஐ செட் நைஸ் டு மீட் யூ" சேவின் எக்செல் எட்டிப் பார்த்தது.

"சோ" அவள் கூலாகவே கேட்டாள்.

"ஆர் யூ நாட் நைஸ் டு மீட் மீ" சே நகர்த்தலுக்கு அவள் நகர்த்தல் சற்று கலக்கத்தை உண்டாக்கியது.

"ஓ...

எனக்கு இந்த கான்வோ எட்டிகுட்டிஸ்லாம் சுத்தமா பிடிக்காது...

அண்ட் ஐ டோண்ட் ஹாவ் இனப் டைம்"

"அதுக்காக......" சே நிதானமாக கேட்டான்.

"இப்ப என்ன

இட் வாஸ் சோ நைஸ் டு மீட் யூ மிஸ்டர்...

யூ ஆர் லுக்கிங் கூல்,

யூயர் பியர்ட்...

யூயர் கிரீன் காண்டாக்ட்ஸ்...

மெஸ்ஸி ஹார்

எவிரிதிங் இஸ் சோ நைஸ்

ஒகேவா

போதுமா" சலித்து போய் தான் சொன்னாள் சஹானா.


மனங்கள் ஒன்றுக்கூடி அனுபவிக்கும் ஓர் உன்னத உணர்வைதான் அகத்திணையாக்கி வைத்தார்கள். ஆனால் இவர்களின் உணர்வுகள் எந்த திணையை தாங்கி நிற்க போகிறதோ என்ற பதைபதைப்பு தான் உள்ளூற ஊறிக் கொண்டு இருக்கிறது.

காட்டில் துள்ளித் திரியும் மானை போல இருவருக்கும் பாவணை செய்ய தெரியவில்லை. சுனையில் இருக்கும் நீரை இந்த சேவும் சஹானாவும் பங்கு போட்டுக் கொள்வதை அந்த மான்கள் சத்தியமாக விரும்பாது.

"ஐ திங் யூ ஆர் சோ டையர்டு

நம்ம வேனா இந்த காண்வர்சேஷன ஈவினிங் வச்சுகலாமா" சஹானா சொன்னாள்.

"நோ நோ

நத்திங்...

ஐ ஆம் எ டிசேனியாக்

மத்தபடி ஒன்னுல்ல" சே உரையாடலின் ஆளத்தை கருத்தில் கொண்டு நீளத்தை அதிகரித்தான்.

"ம்ம்

இன்சோமேனியாக்

நான்

நைட் அவுல்" இப்போது தான் அவள் நகர்த்தலில் கொஞ்சம் மனநிறைவு கொண்டான்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டபடி சே தொடர்ந்தான்.

"வி போத் ஹாவ் சோ மச் ஆஃப் காண்ட்ராடிக்சன்ஸ்ல" என்று சொல்லி முடிக்கும் போது சட்டென மறைந்தாள். இயங்கலையில் ஏற்பட்ட அலைக்கற்றையின் ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்டிருக்களாம் என்று நினைத்தான்.

"சாரி

ஃப்ரண்டோட ப்ர்த் டே பார்ட்டி" என்று திடிரென தோன்றியவள் மூச்சிறைக்க சொன்னாள்.

"ஹோ

அட்லீஸ்ட் யு ஹாவ் எ கர்டஸி டு சே இட் " சே சிரித்துக்கொண்டே சொன்னான்.

"ஹலோ

ஐ திங்

என்ன ரோம்ப ஆட்டிடியுட்னு நினைச்சுட்டு இருக்க

இருக்கட்டும்

ஐ டோண்ட் பாதர் அபவுட் இட்" ஒரு வித அணுகுமுறையோடு பதில் கூறினாள்.

"நவ் யு மீன் இட்" சொல்லி பலமாக சிரித்தான் சே.

அவன் சிரிப்பை சகிக்க முடியாமல் தன் சுயவிவரங்களை அவிழ்த்தாள்.

"சி நான் நேரா விஷயத்துக்கு வரேன்

என்ன பத்தி உங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை

சோ என்ன பத்தி ஒரு ஷார்ட் பயோ சொல்றேன்

ஆம் சஹானா !

சஹானா பிரித்வி

ஏஜ் தர்ட்டி ஒன்னு

ஹய்ட்டு பைவ் ஃபோர்

வெய்ட்டு லாஸ்ட் வீக் சிக்ஸ்ட்டி டூ

இப்ப மே பி பிளஸ் டூ

கிராச்சுவேடட் ஃபிரம் பிட்ஸ் பிலானி.

அன்ட்

நான் ஒரு டேட்டா ஸசைன்டிஸ்ட் பை புரேபஷன்

எஃப் வொய் ஐ

அம் எ நான்விர்ஜின் பட்
நாட் எ புரோமிஸ்குயஸ்" பல்லவியை முடித்த தலைவியை தொடர்ந்த நாயகனை போல தொடர்ந்தான் சே.

"ம்ம்

ஐம் எ எதிக்கல் ஹேக்கர்

எல்லா இஷனுமே அதான்

ஐ மீன் ஃபஆஷன் அன்ட் புரோஃபெஷன்

ஐஐடியன்

டிவன்டி செவன் திஸ் அக்டோபர்"

வயதில் என்ன இருக்கிறது. காதலுக்கு வயதுக்கு சம்பந்தம் இல்லை என்று நீங்களே அறிவீர்கள் உங்கள் மனதுக்குள்ளே சில தம்பதியர்களை நினைத்து சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் நான் டெமுஜினை தான் உகாவிற்கு அழைக்கிறேன். வரலாறு அவனை செங்கிஸ்கான் என்று கூறுவதுண்டு. 'இராமன் என்னடா பெரிய இராமன் இவன் காதலுக்கு முன்னாடி' என்று இவன் காதலை எல்லாம் செங்காயணமாக வடித்திருக்கலாம் ஆனால் மங்கோலியாவில் வால்மீகியும் இல்லை மொழி பெயர்க்க இங்கு கம்பனும் இல்லை. தன்னை விட வயது மூத்த காதலியை அவன் கரம் பிடிக்க, எதிரிகள் அவளை சிறைப்பிடித்தார்கள். தேடி திரிந்து போர் புரிந்து அவளை மீட்கும் போது அவள் நிறை மாத கர்ப்பிணி. இருந்தால் என்ன அவள் அவன் காதலி. அவள் அக்கினி பிரவேசம் எல்லாம் செய்யவில்லை அதற்கு வேலையும் இல்லை. அதன் பின் இருவரும் சேர்ந்து மாபெரும் பேரரசை உருவாக்கியது எல்லாம் வேறு கதை. அது தானே காதல்.

"ஆக்சுவலி நான் பிறக்குறதுக்கு இரண்டு வருஷம் முன்னாடி என் அப்பா இறந்துட்டாரு.."

"ஒ ஆம் சாரி...

வாட்" பதற்றத்துடன் கேட்டான் சே.

"ஆமா மை ஃபாதர் மெட் வித் ஆன் ஆக்சிடன்ட். ஹி வாஸ் பிரைன் டெட் தென்...

என் அம்மா கஷ்டப்பட்டு எங்க அப்பாவோட செமன்ஸஸ எடுத்து பேங்க்ல ஸ்டோர் பண்ணாங்க..

பட் அன்பார்சுனேட்லி என் அம்மாவால அப்பாவோட உயிர சுமக்க முடியல..

ஷி ஹேட் யுட்ரைன் மையோமா

சோ ஷி டிசைடட் டு கோ ஃபார் சரோகசி

இதான் என்னோட பர்த் ஹிஸ்டரி"

"சோ வியர்டு" சே வியப்புடன்
சொன்னான்.

"பார்டன்"

"இல்ல நாட் லைக்க எ சிம்பத்தி பட் ஐயம் ரியலி ஹாப்பி பார் யூ" சேவின் குரலில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

"ஆன் ன்

உங்க ஃபுல் நேமே 'சே' தான

இல்ல

வேற எதுவும் இருக்கா" சஹானா பட்டென கேட்டாள்.

"ஃபுல் நேம் சொல்லுவேன்

பட் நீங்க சிரிக்க கூடாது" சே அசடு வழிந்தான்.

"சிரிக்குற அளவுக்கு ரொம்ப காமடியான பேரா?"

"ஹலோ காமெடினு சொல்ல முடியாது

இட்ஸ் கம்பிளிட்லி அவுட் ஆஃப் ஃபேஷன்

ஒரு பழைய பேரு

அவ்ளோ தான்"

"ஓ நான் வேனா கெஸ் பண்ணவா

ஆன்...

லெட் மீ டிரை

'சேகுவேரா' " சஹானா சட்டென்று சொன்னாள்.

"இது இல்லை"

"இல்லையா

அப்ப என்னதான் உங்க பேரு

ஐ தாட் சேகுவேரா இஸ் ஷார்ட்டன் டூ சே"

"நோ

ம்ம்

மை நேம்"

"ஹரே சொல்லுயா"

"சே...

சே...

சேரன் செங்குட்டுவன்" சேரன் சொல்லி விட்டு மெள்ளச் சிரித்தான்.

"வாவ்!

வாட் எ நேம்!!

யார் இந்த பேர் வச்ச"

"ஆவ்யஸ்லி மை யூஸ் லெஸ் கிராண்ட் ஃபாதர்" சொல்லி விட்டு கடுப்புடன் தன் தாத்தனை தேடினான்.

"என் தாத்தா ஒரு ரைட்டர்

ஹி வாஸ் எ
விவாஸ் சம்மன் அவார்டி லாங் பேக்

அது வாங்கி இருவது வருஷம் ஆச்சு

அத இன்னும் சொல்லிட்டு இருப்பாரு...

கிரேசி ஓல்ட் மேன்

தமிழ் இலக்கியம் ரொம்ப பிடிக்கும்

இந்த குறுந்தொகை நற்றிணை
பத்து பத்து...

லைக் தட்

அது மேல இருந்த ஆசைல எனக்கு இப்படி ஒரு பேர வச்சுருக்காரு

புல் ஷிட்

ஆக்சுவலா ஹி வாஸ் மேரிட் இன் எ பேன்டமிக்

பிப்டி இயர்ஸ் பிபோர்

ஐ திங்

டிவன்டி டிவன்டில

ஒரு வைரஸ் வந்ததுல

அது நேம் கூட ச்ச எ குட் நேம்

ஆன் கோவிட்

அப்ப நடந்த பல கோவிட் கல்யாணங்கள்ல இவர் கல்யாணமும் ஒன்னு

அந்த கல்யாணம் நடக்காம இருந்திருக்கலாம்

இப்ப நான் வந்து கஷ்டப்பட்டு இருக்கேன்" சே தன் கனவுகளின் இயாலமையினால் அந்த கிழவனை திட்டி தீர்த்து கொண்டு இருந்தான்.

"ஹே ரிலாக்ஸ்...

உண்மையா எனக்கு இந்த பேர் ரொம்ப பிடிச்சிருக்கு...

பேசாமா உன் தாத்தாவயே கல்யாணம் பண்ணிக்கலாம் போல

சச்ச இன்ட்ரஸ்டிங் கேரக்டர்" சஹானாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த கிழட்டு தாத்தனின் மேல் உள்ள காதல் வெளிப்பட்டது.

"யூ ஆர் ரியலி ஃப்ரீக்கி

வெல்

சஹானா இந்த பேருக்கு எதும் அர்த்தம் இருக்க"

"அஃப்கோர்ஸ்"

"வெய்ட்

நான் கெஸ் பன்றேன்" சே குறுக்கிட்டான்.

"உங்க அப்பாவோட எக்ஸ் கேர்ள் ஃப்ரண்ட் நேம்

கரக்டா"

"உங்க லாஜிக் சகிக்கல"

"'சஹானா' ங்குறது ஒரு இராகத்தோட பேரு...

கர்னாடிக்

ஈவன் இன்

இந்துஸ்தானி

ஆரோகணத்தில ஏழு சுரமும் அவரோகணத்தில ஏழு சுரமும் இருக்குறதுனால இத "சம்பூர்ண" இராகம்னு சொல்லுவாங்க

அண்ட் ஐ வாஸ் பார்ன் ஆன் ஜூலை செவன்

இதுல எந்த சுரமும் முழுமையா இல்லததால இது ஒரு வக்ர இராகம்

அன்ஃபார்சுனேட்லி

என் லைஃப்ம் அப்படி தான்

எ க்ருக்ட் மெலடி"

எவ்வளவு பேசினாலும் தீராது காதல். காதல் ஒரு தீரா நதியின் ஊற்று. அது இப்போது இருவருக்குக்கிடையிலும் பெருக்கெடுக்க தொடங்கி இருந்தது. காதலின் பெருங்கொண்டாட்டங்கள் எல்லாம் கண்ணும் கண்ணும் கலவி கொண்டு விரிந்த காதலர்களின் இதழில் வழியும் மென்புன்னகை தானே. இருவரின் புன்னகையும் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இருந்தது. மலையில் விளையும் நாரத்தை கடலில் பிறக்கும் உப்புபை சொந்தம் கொண்டாடுவது இயல்பு தான். அது போல செம்புல பெயனீர் போல அன்புடை நெஞ்சம் இரண்டும் இப்போது மெள்ள கலந்து மகாசங்கமமாகியது. சேரனும் சஹானாவும் கொண்ட காதலை பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று அதை சொல்லிவிட முடியாது. அது ஒரு இயற்கை புணர்ச்சி. காதலை ஒரு பார்வையில் கடத்திவிடலாம் அது ஒளியை விட வேகமானது. அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்மீன் திரள்களின் இடைவெளியை அளக்கும் ஒளியாண்டை விட இருமனங்களின் வெற்றிடத்தை நிரப்பும் காதல் என்றும் அபரிமிதமானது. இடிக்கு முன் மின்னல் முந்திக் கொள்வது எப்படி வானியலின் விதியோ அப்படிதான் காதலுக்கு முன் ஊடல் முந்திக் கொள்வது வாழ்வியலின் மிகப்பெரும் சதி. அவர்கள் காதலுக்குள் ஊடல் மெள்ள நுழைந்ததை அவர்களும் நன்கு அறிவர். சதுரங்கத்தில் ராணி ராஜாவுக்கு செக் வைத்த பின் ராஜாவின் அடுத்த நகர்வு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சில சமயங்களில் அது ஆட்டத்தின் முடிவாக கூட அமையலாம்.


"சோ


லெட் மீ கம் டூ த ஃபாய்ண்ட்


ஒரு முக்கியமான விஷயத்த டிஸ்கஸ் பண்ணணும்" சாஹானா நிதானமாக தொடர்ந்தாள்.


"எதப்பத்தி" புரியாது கேட்டான் சேரன்.


"என்னோட கண்டிசன்ஸ்


ஐ மீன் த ஆஃப்ர்" சிரித்துக்கொண்டே சொன்னாள் சஹானா.


"ம்ஹூம்'


"ஒகே" பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தாள்.


"ஆக்சுவலி


எனக்கு ஜீன் கால்மென்ட் மாறி நூத்தி இருவது வருசம் வீல் சேர்ல உட்கார்ந்து சிகரெட் பிடிச்சிட்டு வாழ்றதுக்குலாம் சுத்தமா இஷ்டமில்ல ஐம்பது வருஷம் வாழ்ந்தாலும் சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்துரனும்


இந்த ஸ்டேட்மென்டுக்கு மெத்துசாலா என்ன கோச்சுகிட்டாலும்


ஐ டோண்ட் கேர்...


எனக்கு நெரயா எக்ஸ்புளோர் பண்ணணும்


என்ஜாய் பண்ணணும்


அவ்வளவுதான்


எனக்கு இப்ப பெல்ஜியம்ல இருந்து ஒரு நல்ல ஆஃப்பர் வந்துருக்கு


இது எனக்கு கிடைச்ச ஒரு பெரிய ஆப்பர்சுனிட்டி


பட்


நான்னா என் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் என்ன எங்கயும் தனியா விடமாட்டாங்க...


எதுனாலனு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்...


சோ


பெல்ஜியம்க்குலாம் சான்ஸே இல்ல


மோரோவர் ஷி இஸ் எ லிங்கர்லஸ்ட் எங்கேயும் வரமாட்டாங்க

ஆனா

நான் கல்யாணம் பண்ணிட்டு போனா

ஷி வில் டெஃபனட்லி அக்சப்ட்"

"ஓ!...." கவனத்துடன் ஆச்சரியத்தை ஓட்டினான்.

"உங்க புரபைல்ல டிரைய்ங் ஃபார் யுகே போட்டுருந்தது...

இப் யூ ஆர் இன்ட்ரஸ்டட் ஐ ஹாவ் எ டீல் ஃபார் யூ" புதிர் போட்டாள் சஹானா. இல்லை இல்லை ராஜாவுக்கு செக் வைத்தாள்.

"டீலா

என்ன டீல்" அது செக் என்று தெரியாமல் அவன் விழித்தான்.

"நீங்களும் யுகே போனும் டிரை பண்றீங்க நானும் என்னோட கரியருக்கு பெல்ஜியம் போனும்

சோ..."

"சோ வாட்" சேரனின் குரலில் ஆச்சரியம் இன்னும் கூடியது.

"உங்களுக்கு ஒகேனா

நான் உங்கள கூட்டிட்டு போறேன் அஸ் எ ஹஸ்பன்ட்

விசாலாம் நான் பாத்துகுரேன்...

அங்க போய்டோம்னா ஆப்வியஸ்லி யு வில் கெட் எ குட் சான்ஸ் ஃபார் லண்டன்

அன்ட் மோஸ்ட் இம்பார்டன்ட் திங்

இப்யூ டோன்ட் மைன்ட்

ஐ வில் பே யூ ஃபார் பீய்ங்க் மை ஹஸ்பன்ட்

லைக்க பேயிங் ஹஸ்பன்ட்

ஏன்னா அங்க உங்களுக்குனு சில எக்ஸ்பன்சஸ் இருக்கும்ல

சோ யூ கேன் மேனேஜ் வித் இட்

மன்த்லி ஒரு டூதவுசன்ட் யூரோ ஆர் பைவ்தவ்சன்ட் பிட் காய்ன்ஸ் எதர்...

சாய்ஸ் இஸ் யோர்ஸ்..." படபடவென சஹானா சொல்லிவிட்டு சேரனை பார்த்தாள்.


"ஹலோ என்ன பாத்த எப்படி தெரியுது" கோவத்தில் கன்னம் எல்லாம் சிவக்கவில்லை மாறாக கண்கள் கொஞ்சம் சிவந்தது.


"சி


உங்களுக்கு பே வேண்டானாலும் ஒகே தான்


வீ கேன் பீ இன் எ ரிலேஷன்ஷிப் ஜெஸ்ட் ஃபார் திஸ் டிரிப்


லைக் எப் டப்ள்யூ பி" சஹானா சொன்னாள்.


"ஓர் கேசனோவா மாறி"


"ஹே சீ நாட் லைக் தட்"


"பின்ன எப்படி


ஒரு மேல் எஸ்கார்ட் மாறி உன் பின்னாடியே வரனுமா


யூ லிட்டில் ஃபக்கிங் பிட்ச்


ம்ம் சொல்லு


திஸ் இஸ் ரியலி அட்ராசியஸ்" எக்ஸ்சல் கோவத்தில் இருந்தான் சேரன்.


"ஹலோ யூ ஆர் க்ராஸிங் யூவர் லிம்ட்ஸ்"


"யூ அல்ரெடி க்ராஸ்ட்"

அன்று அவள் எல்லை மீறியதாக, சேரன் மிக அழகாக தன் தாய் தந்தையரிடம் எடுத்துரைத்தான்.

"அவ புருஷனா இருக்க காசு தராலாம்

ஹவ் டேர் ஷி இஸ்" சே சொன்னதற்கு ஒரே ஒரு பதிலில் அவன் எக்செல் கோவத்தை துவைத்து போட்டாள் மலர் ‌.

"தெரியும்

நீ பேசுன அன்னைக்கே அவ எனக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா..

அவ சொன்னதுல என்ன தப்பு இருக்குனு தெரில..

ஒரு அம்மாவா தன் பையன்கிட்ட ஒரு பொண்ணு இப்படி சொன்னதுக்கு நியாயமா கோபப்படனும்...

ஆனா ஒரு பொண்ணா அந்த பொண்ணுக்கு நான் சப்போர்ட் பண்றது தான் நியாயம்னு தோனுது...

பொண்ணா பொறந்தா ஆண் துணையோட தான் வாழனும்னு எந்த நிர்பந்தமும் இல்ல...

அப்படி எதுவும் இருக்கா சே"

அவன் மௌனத்திலேயே அவன் பதிலை உணர்ந்து கொண்டாள்.

"நான் வல வலனு பேச விரும்பல
உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நீ சின்ன பையன் இல்ல

திஸ் இஸ் யூர் லைப்

யு ஹாவ் டூ டிசைட் இட்

பட் என்னோட சின்ன சஜஸன்

அவ ரொம்ப நல்ல பொண்ணு
கொஞ்சம் யோசிச்சுக்கோ"

மனம் குழப்பமடையும் போது முடிவெடுப்பது புத்திசாலிதனம் இல்லை. எமோஷனல் இன்டலிஜென்ஸின் முதற்கட்டத்தில் தான் சேரனும் இருந்தான். பெருங்குழப்பம், பெருங்கோவம் நிறைய காதல். வாழ்க்கை சேரனை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. ஜப்பானிய கிராமங்களில் ஒரு புகழ்பெற்ற பழமொழி ஒன்று உள்ளது. காதலையும் இருமலையும் அடக்கிட முடியாது என்று. அவன் அடக்கிட நினைக்கவில்லை அறிந்துக் கொள்ளவே நினைக்கிறான். அந்த சேரனின் இக்கிகயாக பல நாடுகளும் போர்களும் இருந்திருக்கலாம் ஆனால் இந்த சேரனின் இக்கிகய் இப்போது அவளும் காதலும் தான். காதலை அடக்க முடியவில்லை. தவித்தான். புலம்பினான். விசும்பினான். உளவியல் கோட்பாடுகளின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் கூட தடுத்திட முடியாத மோன நிலைக்கு சென்றான். ஆக்ஸிடாக்சின் தன் ரசங்களை அவன் உடலின் எல்லா செல்களிலும் பரப்பியது. ஏழாம் கிளியோபாட்ராவும் ஜூலியஸ் சீசரும் கையெழுத்திட்ட காதல் ஒப்பந்தத்தை விட சஹானா கேட்பது ஒன்றும் பெரிதில்லை. நிற்க அதை அரசியல் ஒப்பந்தம் என்றும் சொல்லலாம்.

அவன் மனதை மாற்ற 'கண்ணும் கண்ணும் பேசி கொண்டதா ஆதலால் காதல் செய்வீர்' என்று நம் சங்க இலக்கிய குறிப்புகளை துணைக்கு அழைக்கலாம். அல்லது முயுச்சுவலிசம், பாரசிட்டிசம் என்று வியாக்கியானம் பேசி‌ புரிய வைக்கலாம். ஆனால் இவையனைத்தும் தேவைபடாது என்று நினைக்கிறேன். 'கண்கயல் எனும் கருத்தினால்' போல் அவள் கண்களை மனக்கண்ணில் கொத்தி திண்ண பார்க்கிறான். மகரந்தச் சேர்க்கைக்கு உதவிய காற்றுக்கு டேன்டேலியன் பூக்கள் என்ன சன்மானம் கொடுத்திட முடியும் நறுமணத்தை தவிர. மோகத்தீயை மூட்டிய அவன் மனதுக்குள் ஏக்கத்தை எரிய விடுவதை தவிர காதலால் ஒன்றும் செய்ய இயலாது. ஆடி கும்மாயத்துக்கு காவிரியே தாங்காது இவன் எம்மாத்திரம்.

மீண்டும் தாழ்வாரம் அருகே வந்து நின்று அலைகடலை பார்த்தான். கரைக்கு சொல்லாத சேதியை அவனிடம் என்ன சொன்னதோ தெரியவில்லை. வேகமாக சென்று தன் கைப்பேசியில் அவளை அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மறுபடியும் அழைத்தான் அவள் எடுப்பதாக இல்லை. மூன்றாவது முறைக்கு ‌அவன் மனம் தளர்ந்து போனான். நதிகளில் நீராடி விட்டு மறைய தொடங்கினான் சூரியன். தட்சனின் சாபக்கேடாய் வந்து நின்றது மூன்றாம் பிறை. சந்திர தரிசனத்திற்கு அவன் தயாராக இல்லை. காமம், மயக்கம் மற்றும் வெகுளியை கடப்பதற்கான உத்தேசமும் அவனுக்கு இல்லை.

நேரம் பதினொன்றை கடந்த பிறகு ஒரு அழைப்பு‌. அது அவளாக தான் இருக்கும். அவளாக தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். ஆம் அது அவள் தான் சஹானா.


"எஸ் மிஸ்டர்...

மிஸ்டர்

ம்ம்

ம்ம்" என்று இழுத்தாள்.

"சே" என்றான் பட்டென்று சேரன்.

"ஆன்

சொல்லுங்க மிஸ்டர் 'சே'

சேரன் செங்குட்டுவன்" அவளுடைய அதிருப்தியை புரிந்து கொண்டு மேலே தொடர்ந்தான்.

"ஹாய்

கோவமா" தயங்கிக் கொண்டே கேட்டான் சேரன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கேட்டு சேரனிடம் பேச தத்தி தத்தி வந்த அவன் தாத்தா மெள்ள நகர்ந்தார்.

"ச்ச அப்படிலாம் இல்ல

உங்க மேல எனக்கென்ன கோவம்

சொல்லுங்க

என்ன விஷயம்

பிங் பண்ணீருந்தீங்க" அவள் எந்தவித சலனமும் இல்லாமல் கேட்டாள்.

மனத்தில் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்திவிடுபவர்கள் மேல் எப்போதும் பயமில்லை. ஆனால் உள்ளூர கோவத்தை அடக்கி கொண்டு சிரித்து பேசுபவர்களிடத்தில் பயம் எங்கிருந்தாவது வந்து தொற்றிக் கொள்ளும். அப்படி தான் அவனுக்கு அந்த பயம் அஸ்தியில் ஜுரம் காண வைத்தது. இருந்தும் எதுவும் நடக்காதது போல தொடர்ந்தான்.

"பேசனும்னு தோனுச்சு

அதான்

நீங்க பிஸியா இருந்தா சாரி

யூ கேரி ஆன்"

"இல்ல நீங்க அப்ப கால் பண்ணப்ப

கொஞ்சம் பிஸி

இப்ப ஒகே

ப்ரி தான்

அதுவும் இல்லாம நைட் பிஸினு சொன்ன நம்புற மாறி இருக்குமா

சும்மாவே நான் ஆட்டிட்யூட்னு நினைச்சுட்டு இருக்கீங்க"

ஷேக்ஸ்பியரின் போஷியாவின் மேல் பித்து பிடித்த முதலாம் எலிசபெத்துக்கு ஆட்டிட்யூடை பற்றி சொல்லியா தரவேண்டும். சொல்லப் போனால் சஹானாவும் அப்படி தான். பெண்களுக்கு ஆட்டிட்யூட் இருந்தால் ஆண்களுக்கு என்ன பிரச்சினை. இருந்துவிட்டு தான் போகட்டுமே. பெண்களுக்கு அது தான் கொள்ளை அழகு.

"ஆம் சாரி

இன்னும் நான் சொன்னத நினைச்சுட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன்

ஆம் டெரிபிலி சாரி"

"இட்ஸ் ஓகே

நான் அப்பவே‌ மறந்துட்டேன்"

இன்னும் கூட சேரனுக்கு குழப்பம். காஷ்மீரா மீது கொள்ளாத காதல் இவளுடன் எப்படி வந்தது. இது காதல் தானா இல்லை ஏதோ ஓர் ஈர்ப்பா. அவளிடம் ப்ளர்ட் பண்ணும் அளவுக்கு எனக்கு என்ன ஆனது என தன்னை தானே கண நேரத்தில் கேட்டுக் கொண்டான்.

ஒருவேளை இது பொலியமொரியாக இருக்குமோ. முதலாம் இராஜ ராஜன் வானவன் மாதேவியின் மீதும் உலோகமாதேவியின் மீதும் ஒரே சமயத்தில் காதல் வயப்பட்டானே அப்படி தான் இதுவுமா என்று குழம்பி போனான். சோழனின் காதலுக்கு சுவாரஸ்யமான கதை உண்டு அதை இங்கு‌ குறிப்பிடுவது பொருத்தாமாக தான் இருக்கும். ஒருமுறை அருள்மொழியின் மனைவியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாள் வீச்சில் ஈடுபட்டு கொண்டிருந்தார்களாம். தூரத்தில் இராஜராஜன் அவர்கள் சண்டை இடுவதை கண்டு ரசிப்பாராம். உலோகமாதேவி மற்ற மனைவியோடு சண்டையிடும் போதும் சரி வானவன்மாதேவி மற்றவரோடு சண்டையிடும் போதும் சரி. உதேவியையும் வாதேவியையும் வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்துவாராம். அவர்கள் இருவரின் பெயரை சுருக்கியதற்கு சோழன் என்னை என்ன செய்வானோ!. இருக்கட்டும். இதை கவனித்த இருவரும் தங்கள் இருவரில் யார் மீது காதல் அதிகம் என்று தெரிந்து கொள்ள உதேவியும் வாதேவியும் ஒருவருக்கொருவர் போர் செய்ய தொடங்கினார்களாம். சாதுர்யம் பேசாதடி என் வாளுக்கு பதில் சொல்லடி என்பதை போல போரிடுவார்களாம். போரின் முடிவை இராஜராஜன் கூறும் வரை விடமாட்டார்களாம் அந்த இரண்டு பாட்டிகளும். இவர்கள் இருவரின் துவந்த யுத்தத்தை பார்த்து விட்டு 'நான் தான் தோற்றுவிட்டேன்' என்று அசடு வழிய நிற்பானாம் அந்த பொன்னியின் செல்வன். புலியை முறத்தால் துரத்தி விட்டு இளைப்பாற தின்னையில் தண்டட்டி கிழவி சொன்ன கதையாக கூட இருக்கலாம்.
சோழனுக்கு உதேவியுடனும் வாதேவியுடனும் காதல் தோன்றுவதற்கு பெரிய காரணங்கள் தேவை இருந்திருக்காது. சொற்ப சில விஷயங்கள் போதுமாக இருந்திருக்கலாம் புனிதம், அன்பு, அழகு, காமம், ஈர்ப்பு போன்று. இதில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அந்த சோழனுக்கு இந்த சேரன் ஈடாக முடியாது தான் ஆனால் ஒன்று மட்டும் உறுதி காதலின் ரோலர் கோஸ்டரில் அவன் ஏறி வெகு நேரமானது. இறங்க தான் வழி இல்லை. மேத்தாவின் வரிகளில் விழுவதை போல 'வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே;
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே'

"உங்களுக்கு ப்ளூ ரொம்ப புடிக்குமா" பச்சையாக வழிந்தான் ம்ஹூம் இல்லை நீலமாக வழிந்தான்.

"எப்படி தெரியும்!" ஆச்சரியத்துடன் கேட்டாள் சஹானா.

"இந்த டாப்ஸ்

அன்ட் யூவர் சான்டல்ஸ்

ஐ திங் சோ

அன்னைக்கும் ப்ளூ தான் போட்ருந்தீங்க"

"ஒ சான்டல்ஸ் வரைக்கும் தெரிதா

ம்ம்" கண்களை உயர்த்தி உதடுகளை குவித்து கேட்டாள்.

"பதில்

சொல்லவே இல்லையே"

"ஆன்

ஆப்வியஸ்லி

ஐ ஆல்வேஸ் வான்ன பீ புளுபைடு" புன்னகைத்தபடியே சொன்னாள்.

"லைக்க வெரிபைடு அக்கௌன்ட்டா"

"ஹா ஹா"

"மோஸ்ட்லி கேர்ள்ஸ்க்கு பிங்க் பர்பில் அந்த மாதிரி தான பிடிக்கும்" சைக்காலஜி பேசும் பேர்வழியாக சே சொன்னான்.

"ஹோ

க்ரோமாடிக்ஸ்லாம் தெரியுமா

சார் பெரிய ஆள் தான்"

"க்ரோமாடிக்ஸா

நோ நோ

ஐம் ஜஸ்ட்

பொதுவா பொண்ணுங்களுக்கு அதான பிடிக்கும்

அதான் சொன்னேன்" சே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டான்.

'காதல் அற்பமானது'. இந்த ஜெயகாந்தனின் வரிகள் எவ்வளவு உன்மை. அற்ப காதலர்கள்!. காதல் உரையாடல்கள் சிலசமயங்களில் இப்படி தான் அற்பத்தனமாக இருக்கும். அதை நாம் கண்டு கொள்ளக்கூடாது. அது காதலின் ஊடல் பிரவாகம். அதில் நனையும் போது நாணம் என்ன வேண்டியது கிடக்கு.

"ம்ம் ம்ம்

பொண்ணுங்களுக்கு என்ன புடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்

சரி

உங்களுக்கு பொதுவா எத்தன பொண்ணுங்கள தெரியும்

ம்" கொஞ்சம் நமட்டு சிரிப்போடு கேட்டாள் சஹானா.

"இந்த விளையாட்டுக்கு நான் வரல

தயவு செய்து ஆளவிட்டுறுங்க" முழுவதுமாக சரண்டர் ஆனான் சேரன். 'போரடு தானைப் பொலந்தார் குட்டுவ' என்று ஐந்தாம் பற்றாய் போர் தொழில் செய்தவன் கன்னியிடம் மாட்டிக் கொண்டாள் சரணடைந்து தான் ஆக வேண்டும்.

"ஆக்சுவலி புளூ சூட்ஸ் யூ"

"தேங்யூ

உங்க காம்ப்ளிமென்ட்க்கு"

"நான் ப்ளர்ட் பன்ற மாறி தெரிதா என்ன"

"பச்சையா தெரிது"

"ம்ம் ஹாஹா

இருக்கட்டும்

பிகாஸ் ஐ லவ் கிரீன் மச்"

"அப்ப

நீங்க

கீரின் பாந்தரா"

"அப்படியும் சொல்லலாம்"

"தென் யூ ஆர் எ என்விரான்மென்டலிஸ்ட்

ஐ மீன்

நேச்சர் லவ்வர்"

"இப்ப நீங்க தான் சைக்காலஜிஸ்ட்டு மாறி பேசுறீங்க"

"ஹாஹா

ம்ம்

மே பி

பசங்க சைக்காலஜி தெரியும்"

"ஹலோ பசங்களோட சைக்காலஜி பத்தி என்ன தெரியும்"

"என்ன தெரியனும்

பசங்க பத்தி தெரிஞ்சுகுறது பெரிய குவாண்டம் பிசிக்ஸ் இல்ல

இரண்டு நிமிசம் போதும்
இன்னும் அரைமணி நேரம் பேசுனீங்கனா
உங்க ஜாதகத்தயே சொல்லுவேன்

சொல்லவா"

"வேணாம்

கேள்விபட்டுருக்கேன் மென் ஆர் ஃப்ரம் மார்ஸ் வுமன் ஆர் ஃப்ரம் வீனஸ்னு

உண்மை தான் போல

பட் யு கெஸ்டு ரைட் சஹானா

என்ன பொறுத்த வரைக்கும் இயற்கை தான் எல்லாம். கண் தெரிஞ்ச கடவுளா, அதிசயமா, ஆபத்தா, சாத்தானா!. நம்ம எப்படி நடத்துறோமோ அதுக்கு ஏத்த மாதிரி ரியாக்ட் பண்ணும்"

"யூ ஆர் சச்ச இன்ட்ரஸ்டிங் பர்சன்" சஹானா இப்போது மெல்ல வழிந்தாள். அவள் ஓரை விளையாட்டை விடுத்து வெகு நேரமாகியிருந்தது.

"நான் ஒன்னு கேப்பேன் என்ன தப்பா நினைக்க மாட்டீங்கள"

"கேளுங்க மிஸ்டர் சே
தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன்"

"நீங்க பெமினிஸ்டா"

"ஹா ஹா ஹா
ஏன் பெமினிஸ்ட்னா
பசங்களுக்கு காய்ச்சல் வந்துருதுனு தெரில
அன்ட் ரெக்கரெட்டப்லி ஐம் நாட் எ பெமினிஸ்ட்‌. சோ பயபடாதீங்க"

"பயப்படல
ஜெஸ்ட் தெரிஞ்சுகலாமேனு தான்"

"சுவீடன் போறேன் பிரான்ஸ் போறேனு சொல்லிருந்த இந்த கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கு

பெல்ஜியம் போறேன் சொன்னதுக்கா இந்த கேள்வி"

"நோ ஐ தாட் யூ ஆர் எ பெமினிஸ்ட்‌"

"என்ன பார்த்தா மேரி வோல்ஸ்டோனோட வின்டிகேஷன் ஆப் தி ரைட்ஸ் ஆப் வுமன பேஜ் டு பேஜ் படிச்ச மாதிரி தெரியுத" புருவங்கள் உயர மெல்ல சிரித்து கொண்டே கேட்டாள்.

"சாரி

கம் அகேன்"

"நத்திங் மிஸ்டர். சே

ஒரு வேள நான் பெமினிஸ்டா இருந்த என்ன பண்ணிருப்பீங்க"

" ஒரு பிரெஞ்சு கிஸ் கொடுத்துருப்பேன்" சொல்லிவிட்டு உதடுகள் விரிய சிரித்தான் சே.

"ம்ம்

தேங் காட் அன்பார்ச்சுனேட்லி ஐ டிட்ன்ட் சோ..

ஒகே பெமினிஸம் பத்தி வாட் ஸ் யுவர் தாட்"

"சின்ஸ் யு ஆஸ்க்ட்

என்னோட புரிதலுக்கு பதில் சொல்றேன்"

வாழ்க்கையில் சில கேள்விகள் தேவையில்லை என்றாலும் அதன் பதில்கள் சிலர் வாழ்க்கைக்கு அவசியாமாகிறது. இந்த கேள்விக்கு சேரன் என்ற லினியர் திங்கரின் பதிலாக எடுத்து கொள்ளக்கூடாது ஏனென்றால் இது அடுத்த தலைமுறையின் வாழ்வியலாக இருக்கும்.

"ஒரு பெண், பெண்ணா வாழ்றதுக்கு பெண்ணியம் தேவை இல்லைனு நினைக்கிறேன்

இந்த மனுவோட சாத்திரத்துக்கு வள்ளுவர் ஒரு நல்ல ஸ்லிப்பர் ஷாட் கொடுத்துருப்பாருல

அந்த மாதிரி...

ஐ திங் அந்த வரிகள் தான் ஒட்டு மொத்த பெண்களுக்கான பாதுகாவல்

ராமனோட மனைவிக்கு தான் பெண்ணியம் தேவைப்படும் மார்க்ஸோட மனைவிக்கு எதுக்கு"

சிவதனுஷை நாண்பூட்டி உடைத்த ராமனை கொண்டாடுவதில் ஒரு பங்கு கூட அனுதினமும் சிவதனுஷை கையில் எடுத்து விளையாடிய சீதையை குறிப்பிட மறுக்கிறது இந்த சமூகம். தன்னையே தோற்றப்பிறகு என்னை பணயம் வைக்க உரிமையில்லை என்று கூறியவளை மயிர் பிடித்து இழுத்து வந்த கயவர் வாழும் சமுதாயத்தில் பெண்ணியத்தின் குரலை கொஞ்சம் உயர்த்தி பிடிக்க தான் வேண்டி இருக்கிறது. மாதவியின் வியர்வை வாசத்தை மீசையில் ஏந்தி கொண்டு வந்த மாசாத்துவான் மகனை முறத்தால் சுத்தம் செய்யாமல் விட்ட குறை; தொட்ட குறையாக இப்போது உருமாறி நிற்கிறது.

இரட்டைப்படை ராசியில் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் சுக்கிரனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ஜனித்த பெண் வர்க்கத்தை சனியும் சுக்கிரனும் சம சப்தமத்தில் பரஸ்பர பார்வை பார்த்துக்கொண்டு நவாம்ச லக்கினத்தில் அவளை நிலைகுலைய செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

"நான் என்னமோனு நினைச்சேன்

பரவால்ல

ஐ லைக்ட் இட்...

சீ என்ன பொருத்த வரைக்கும் இட்ஸ் எ சோசியல் ஸ்டிக்மா எனக்கு இந்த பாகுபாடு பேதம் எல்லா கிடையாது.

யெஸ் அஃப்கோர்ஸ்
ஐ பிளீடு, ஐ க்யீப், அன்ட் ஐ வாக்ஸ்

டிபிகல்லி ஐ பார்ன் எக்டோஜெனிஸிஸ்

பாம்புனா சீறும்
சிங்கம் கர்ஜிக்கும்
இட்ஸ் நேச்சர் ஆர்டர்

மத்தப்படி

ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவ வேறுபாடுகள் தவிர மற்ற எல்லாமே சமம் தான்.

ஒகே இட் இஸ் கெட்டிங் போர்"

"ஹாஹா கல்ச்சர் ஆப் போர்டாம்"

"மார்டனிசம் இன் பெமினிசம்"

நேரத்தை விரயம் பண்ண அவன் இனிமேலும் விரும்பவில்லை. எதை எதையோ பேசி சொல்ல வருவதை மறந்தவன் போல சில நிமிடங்கள் யோசித்தான். திரையினூடே அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கண்களை பார்த்தவுடன் பாரதிதாசன் அவளும் நானும் என கவிதை படிக்க தொடங்கியதை போல கூறினான்.

"அம்மா சொன்னாங்க

யூ காட் கம்மிட்டடுனு"

"நாட் கம்மிட்டடு

ஐ ஜஸ்ட் க்ளோஸ் மை டீல்

அவ்ளோ தான்"

"ஆக்சுவலி

நானும்

ஆஆன்

ஐ ஹாவ் எ ஆப்பர் ஃபார் யூ" இழுத்துக் கொண்டே சொன்னான். சொல்லிவிட்டு எங்கெங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான். வாக்கியங்கள் எங்கேனும் எழுத்தியிருக்கிறதா என்று பார்த்தானோ என்னவோ. இன்னும் வார்த்தை மட்டும் வெளி வரவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.

"ஒ தட்ஸ் கிரேட்

பட் நாட் ரைட்

இப்ப என்ன புதுசா" சஹானா கேட்டாள் ஆர்வத்துடன்.

"ப்ளிஸ்

என் ஆப்பர் பத்தி கேளுங்க"

காதலை கொஞ்சம் உரக்க தான் சொல்ல வேண்டும். நான்கு பேருக்கு தெரியும்படி. இல்லையென்றால் தன் உயிர்த்தெழுதல் வரை கூட வந்த மாக்டலினை மத்தேயுவும் மார்க்கும் மறந்து போனது போல் இந்த சமூகமும் மறந்துவிடும். மறந்தாலும் இயேசு கோவித்துக் கொள்ள போவதில்லை.

கடலுக்கு அப்பால் சென்ற பசி மனிதனின் தவறுகளை அழகாக‌சொல்லியிருப்பார். முதல் தவறு பிறப்பது இரண்டாம் தவறு இறப்பது இந்த இரண்டுக்கும் இடையில் மூன்றாவது கல்யாணம் எனும் மாபெரும் தவறு. திருமணம் என்பது மாபெரும் தவறாம்.

"ப்ளிஸ் ப்ளிஸ்

கொஞ்சம் கேளுங்களேன்"

"ம்ம் ஒகே சொல்லுங்க"

ஐன்ஸ்டீன் தன் மகளுக்காக எழுதிய யுனிவர்சல் ஃபோர்ஸ் ஆஃப் லவ் என்ற கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார் அன்பு என்பது பேரொளி, அது கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும் அறிவூட்டும், மேலும் மனிதகுலம் அவர்களின் குருட்டு சுயநலத்தில் அழியாமல் இருக்க அனுமதிப்பதும் இந்த காதல் தான் என்று.

குருட்டு சுயநலத்தில் அழியாமல் இருப்பதற்கான தேவையாகத்தான் இப்போது காதல் சேரனின் முன்பு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

கிரேக்க நாகரிகம், காதலை தரம் பிரித்ததை போல இந்த காதலை அகேப், பிலியோ, ஸ்டோர்ஜ், ஈரோஸ் போன்ற எந்த வகையில் அடைப்பதென்று விளங்கவில்லை. எரோட்டோமேனியாவின் தாக்கத்தால் அவன் இப்படி கேட்டானா என்றும் புரியவில்லை.

"நீங்க பெல்ஜியம் ஆப்பர் சொன்னீங்கள
அது எனக்கு ஒகே. எனக்கு பே‌ பன்றேனு சொன்னீங்க சோ நானும் உங்களுக்கு பே பன்றேன். லெட் வி ஹாவ் எ மியுட்சுவல் அக்ரிமண்ட் வித் ஒபன் ரிலேசன்ஷிப்.

"ஒ..
பட் ஐ திங் இட்ஸ் டூ லேட்"

" ப்ளீஸ் ப்ளீஸ்

கன்ஸிடர் திஸ் ஆப்பர்

ஆக்சுவலி நீங்க ஃப்ர்ஸ்ட் என்கிட்ட கேட்டப்போ உங்க கிட்ட டைம் இல்ல. இப்போ என்கிட்ட டைம் இல்ல. சோ அதுனால தான். நல்ல ஆப்பர் தான. ஆப்பர் க்ளோஸஸ் சூன் சொல்லி என்னால ரீடெய்ல் சேல்ஸ்லாம் பண்ண முடியாது.‌ ப்ளீஸ் ஒகே சொல்லுங்க"

"ஹலோ பாஸ்!
எதுக்கு இவ்வளோ அவசரம் ஆன்
இதலாம் உடம்புக்கு ஆகாது. வாழ்க்கைய கொஞ்சம் பொறுமையா வாழுங்க. யாரும் உங்க வாழ்க்கைய எடுத்து போய்ற மாட்டாங்க. சீ டைம் மேல எனக்கு பெரிய அபிப்பிராயம் உண்டு நான் ஒன்னு சொல்லவா 'குட் திங்க்ஸ் டேக்ஸ் மோர் டைம்'. எனக்கு ஒரு நல்லது நடக்குனும்னா அந்த நல்லது ரொம்ப கஷ்டப்படும். ரொம்ப. வாழ்க்கையில இவகிட்ட மட்டும் வந்துறவே கூடாதுனு கிடந்து தவிக்கும். அடிபட்டு, மீதிபட்டு, இரத்தம் சிந்தி தான் என்கிட்ட வந்து சேரும். சோ ஐம் சொல்ட் அவுட். வெரி சாரி மிஸ்டர் சே. குட் லக் சாரி குட் பை"

அலைகளை பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவன். அவள் கட் செய்த பின்னும் எதோ ஓர் உரையாடல் நடந்து கொண்டிருப்பதை போன்ற உணர்வு. மெல்லிய சத்தம் கேட்டவுடன் தான் சுயநினைவு கொண்டு திரும்பி பார்த்தான்.

அவன் தாத்தன் தான் அப்படி தத்தி தத்தி நடந்து கொண்டிருந்தார். கதவின் அருகே நின்று லேசர் கண்கள் விரிய பார்த்தான் அந்த பார்வை மங்கிய கிழவன். அவனை பார்த்து விட்டு அலைகளில் நனைய தன் கண்களை திருப்பினான் சேரன். அவன் தட்டு தடுமாறி சேரன் அறைக்குள் நுழைந்து அவனருகில் இருந்த படுக்கையில் மெல்ல உட்கார்ந்தான். மூச்சை கொஞ்சம் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு கைகளை பஞ்சு மெத்தை நோகமல் ஊன்றி அவனை பார்த்து அழைத்தான். "சே எஎஎஎ ரா அஅஅஅ"

"இப்ப நீ எதுக்கு இங்க பேசமா போறீயா.

என்ன சரக்கு வேனுமா
இந்தா எடுத்துட்டு போ"

"ஹேஏஏ ச்சீஈஈ தூஉஉஉக்கி போஒஒஒடு"

அந்த எம்பது கிழட்டுக் தொண்டையில் தமிழ் இப்படி தவறி விழுந்து கொண்டே இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளாஅஅய் வடிப்பதுஉ தான் உத்தமம்.

"இப்போ கிளம்புவியா மாட்டியா
இல்ல நான் போகவா"

"ஹேஏஏஏய்ய் எங்கஅ போறஎஎ நில்லுராஅஅஅ உன்க்கிட்ட கொஞ்ஞ்சம் பேசனும் உட்காஅஅரு"

"ப்ச்" கொட்டிக் கொண்டே உட்கார்ந்தான்.

"உன்ன அஅ பாக்கும்ம் போது எனக்கு ஒரு பாஅஅட்டு ஞாஅஅபகம் வருது"

அந்த பாடலை அவன் குரலில் கேட்க வேண்டும் எனில் தமிழ் தாய் கொஞ்சம் கலங்கி போவாள். தன் தலைமகன் தன்னை குளறுவதை அவள் விரும்பமாட்டாள். அதனால் தாயின் அன்பிற்க்கும் வெள்ளிவீதியாரின் கவிக்கும் அதை அவ்வன்னமே கூறுகிறேன்.

'இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற்
கரிதே!' அந்த கையில்லா ஊமை காவலனை போல் ஒரு ஊமை காதலனாக தான் சேரன் அவன் தாத்தனுக்கு இப்போது தெரிகிறான். மேலும் அவனுக்கு ஒரு குட்டி கதையை சொல்ல மிகவும் அவா கொண்டான்.

உனக்கு ஒரு கதை சொல்லணும் சேரா. அது பண்டைய சீனால நடந்த ஒரு குறுநில மன்னனோட கதை. சீன கிராமங்கள்ல கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையா கூட இருக்கலாம். ஆனா பட்டர்பிளை லவ்வர்ஸ் கதைய விட ஆயிரம் மடங்கு காதல் நிறைந்த ஒரு காதல் கதை.
தன் ஊர்மக்களையும் ஊரையும் பார்க்குறதுகாக தினமும் அதிகாலை அந்த குறுநில மன்னன் நகர்வலம் வருவான். ஒரு நாள் அப்படி‌ தான் அவன் நகர்வலம் வர்றப்ப வழித்தவறி அவன் பக்கத்து தேசத்து எல்லைக்கு போய்ட்டான். வழிதேடி அலஞ்சப்போ அங்க இருக்கிற பூந்தோட்டத்தில ஒரு பொண்ணு மட்டும் தன்னந்தனியா பூப்பறிக்கறத பார்த்தான்.‌ அந்த சீன தேசத்துலேயே இப்படி ஒரு‌‌ பெண்ண பார்த்துருக்க மாட்டாங்க. அவ அப்படி ஒரு பேரழகு. பூக்களும் அவ பூப்பறிக்க வர்றதுக்காக காத்துட்டு இருக்குமாம். பூக்களுக்கு மயங்குனானோ அந்த பெண்ணுக்கு மயங்குனானோ தெரியல. அன்னைல இருந்து அனுதினமும் அந்த நந்தவனத்துக்கு வருவான். தூராமா இருந்த ஜிங்கோ மர நிழல்ல நின்னு அவ அழக ரசிச்சிட்டே இருப்பான். இப்படியே ஒரு நாள் இரண்டு நாள் இல்லை சுமார் நாலு வருஷம் அந்தப் பெண்ண பார்க்கிறதுகாகவே தினமும் அந்த நந்தவனத்துக்கு வந்தான். அது காதலா இல்ல காமமா இல்ல ரசனையா அவனுக்கு தெரியல. அவள தினமும் பார்க்கறது அவனுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்த கொடுத்தது.

அப்படி ஒரு நாள் வழக்கம்போல அவன் பூந்தோட்டத்துக்கு வந்தான். ரொம்ப நேரம் காத்திட்டு இருந்தான். ரொம்ப நேரமா. ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு வரவே இல்ல.

நொந்து போய் வாழ்க்கையே வெறுத்தது போல திரும்பி போனான். ஏன் வரல என்கிற கேள்வி மட்டும் அவன் மனசுக்குள்ள அன்னைக்கு ஃபுல்லா ஓடிட்டு இருந்தது. அடுத்தநாளும் வந்தான் அதுகடுத்த நாளும் வந்தான் ஆனா அவ வரவே இல்லை. பூக்களும் வாடிபோனது. இப்படியே இருபத்தோரு வருஷமா அவன் அந்த பூந்தோட்டத்துக்கு‌ வர்றதும் போனதுமா இருந்தான். பூப்பறிச்ச கரங்கள் மட்டும் அந்த கண்களுக்கு புலப்படவே இல்லை. மயிரெல்லாம் நரச்சு போச்சு அந்த மன்னவனுக்கு. கண்ணுல இருக்குற ஆதார சக்தியும் கொறஞ்சு போச்சு. மறுபடியும் ஒரு விடியல் வந்தது இந்த முறை அவ வந்தா. முதுமையோட வாசத்தோட. அவளோட ஒரு பதின் வயது சின்ன பொண்ணு இருந்தா. அப்ப தான் புரிஞ்சது. அவள் வராத நாட்களின் காரணம். சிரிச்சிட்டே அவள பார்த்தான். பார்த்துட்டே அவன் காலத்த அவளோட கழிச்சான்.

நீ உன் வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டத்துல இருக்க. உன்னோட இந்த சஞ்சலமான மனசுக்கு ஒரு நல்ல முடிவ இந்த கதை கொடுத்துருக்கும்னு நம்புறேன். உன் வாழ்க்கைய தீர்மானிக்கிற மிகப்பெரிய பொறுப்பு உனக்கு மட்டும் தான் இருக்கு. அந்த மன்னனோட வைராக்கியம் தான் அவள மறுபடியும் அவன் கண்களுக்கு கொடுத்ததா நம்புறாங்க. இப்படி அந்த மன்னனோட காதல இன்னமும் சீன மக்கள் சிலாகிச்சு பேசலாம். ஆனா சொல்லாத காதல காதல் ஏற்று கொள்வதில்லை சேரா. அந்த தப்ப நீயும் பண்ணிராத.

போ போய் உன்ன நீ தொலச்ச இடத்துல தேடு. தேடுனா தான் கிடைக்கும்"

இவ்வளவு நேரமும் அமைதியாக தன் தாத்தாவின் கதையை கேட்டு ஒரு குழந்தையை போல கண்களில் நீர் தேக்கி வைத்து இருந்தான். தொண்டை குழி வெடித்து கண்ணீர் வருவதற்குள் தாத்தனை இறுகி அணைத்துக் கொண்டான்.

பெல்ஜியத்தின் ஷெல்டு நதியின் கரையோரம் நின்று சஹானா ஆகாயத்தில் இருந்த சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 'சஹானா' என்று ஒரு குரல் அவளை அழைத்தது.

'சே' அவள் பிரம்மிப்பின் அளவீடுகள் எல்லாம் எல்லை தாண்டி போனது. இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. கண் இமைக்கவில்லை.‌ வார்த்தைகளும் வரவில்லை. முதல் முறையாக சேரனை அவள் விழித்திரைகள் முழுவதுமாக ஆராய்கிறது. அவனுக்கும் தான். அவள் பார்த்த மாத்திரமே இதய‌த்துடிப்பு எகிறியது. அவள் கண்களையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு மின்சாரம் தாக்கியதை போல ஓர் உணர்வு. சட்டென்று சட்டை பையில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

"சாரி...

நர்வெஸா இருந்தா ஸ்மோக் பண்ணுவேன்" அந்த புகைகளினூடே அவன் காதலும் புகைந்தது. சிகரெட்டை உதடுகளில் இருந்து எடுத்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் அது காதல் காற்றை அவள் முகம் முழுவதும் பரப்பியது.

"நீ எப்படி இங்க
இவ்வளவு தூரம்"

"காதல் கூட்டிட்டு வந்துச்சு"

"ஹூஹூம் யாரோட காதல்"

"ம்ஹ் ம்ஹ் அது ஒரு மன்னனோட காதல்" மென்மையான புன்னகையுடன் சொன்னான்.

"யு ஆர் எ டெவில் ஃப்ரீக்"

"நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா"
அவளுக்கு முழுமையாக விளங்கவில்லை "பார்டன்" என்றாள்.

"மேல இருக்குற ஆகாயம் சாட்சியா
உன் பாதங்கள தாங்குற இந்த பூமி சாட்சியா
உன் காது மடல உரசி போற இந்த காற்று சாட்சியா
நம்மல இங்க சேர்த்த இந்த ஷெல்ட் நதி சாட்சியா
உன் கண்ண போல இருக்குற இந்த நெருப்பு சாட்சியா

நம்ம கல்யாணம் பண்ணிகலாமா" சிகரெட்டை தட்டிக் கொண்டே கேட்டான் சே.

அவள் எதுவும் பேசவில்லை. அவனையே இமைக்காமல் பார்த்தாள். பின்பு மெள்ள நடக்க தொடங்கினாள். உதட்டோர சிரிப்பை அவள் அக்னாலேட்ஜ்மென்டாக விட்டு செல்லவில்லை. அவனுக்கு ஒன்றும் விளங்கவும் இல்லை. நம் கையை மீறி ஒன்று நடந்தால் அதை இழுத்து பிடித்து கொண்டு இருக்கக்கூடாது அதை காலத்தின் கையில் விட்டுவிட வேண்டும். காலம் அதன் கடமையை செய்யும். சேரன் காலத்தின் கையில் விட்டுவிட நினைத்தான்.

"ஓய்

பதில் சொல்லிட்டு போ" திரும்பி பார்த்தவளை மறுபடியும் கேட்டான்

"உன்னைத்தான்

பதில் சொல்லு" அவள் எதுவும் சொல்லாமல் நகர்ந்தாள்.

சட்டென ஒரு குறுஞ்செய்தி. அவன் கிரிப்டோ அக்கவுண்டில் ஐந்தாயிரம் பிட் காய்ன்கள்.

ஷெல்ட் நதி கரையோர மரத்தின் மீது சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டே சிரித்தான் 'சே' இல்லை சேரன் செங்குட்டுவன்.

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி