My boyfriend is my husband. - 1 in Tamil Fiction Stories by Naressh Lingeswaran books and stories PDF | என் காதலன் என் கணவன். - 1

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

என் காதலன் என் கணவன். - 1

திருமண வாழ்வு என்பது ஒரு இணையின் திருமண வாழ்க்கைப் பயணம் ஆகும்.அத்தகைய திருமணம் எங்கே நிச்சயிக்கப்படுகிறது என்று கேட்டால் எல்லோரும் சொர்க்கத்தில் என்று சொல்வோம் , ஆனால் இந்த கதையின் முடிவில் அது வேறுவிதமாக இருக்கும். இதை ஏன் சொல்றேன்னா , இங்க ஒரு திருமணம் நடக்குது. ஆமாம் எனக்குத் தான் கல்யாணம் இன்றைக்கு.மாலை ரிசப்ஷன் வைக்கலாமென்று இருக்கிறோம்,கண்டிப்பா என் எல்லா பிரண்ட்ஸூம் வருவாங்கனு நினைக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் வந்து இருக்காங்க நிறைய வயசாயிடுச்சு வீல் சேர் ல வந்து இருக்காங்க. என் துணைவியை கூப்பிட்டு intro கொடுத்தேன் . என் ஆசிரியர்க்கு மிகவும் சந்தோசமாக இருப்பதை பார்த்தேன் எனக்கு அமைந்த மனைவியை பார்த்து..
எங்கே யாரையுமே காணோம் னு முதலில் விஷ்ணுவுக்கு கால் பண்ணேன், வழக்கம் போல போனை எடுக்கவில்லை, சரியென்று கோபிக்குக் கால் பண்ணேன், வந்துட்டு இருக்கேனு சொன்னான் , ஹரிக்குக் கால் பண்ணேன் திரைத்துறையில் தவிர்க்கமுடியாத இயக்குனர்னால வரமுடில , இப்போது விஜயை வைத்து 75வது படம் பன்றான்.

சரி , ஸ்கூல் பிரண்ட்ஸ் எங்கடா காணோம்னு கால் பண்ண ஆரம்பிச்சேன் , ரமேஷ், தீபின், மில்லத்,விவேக் ,சுரேஷ், கோகுல்,ஸ்ரீ, யாருமே போனை எடுக்கவில்லை ..

யோசித்தபடியே நின்றேன் …

ஒளித்துப் பின்செல்லுதல்- Flash back

ஜூலை 29 , 2009.
நான் அப்போது 11ஆம் வகுப்பு. பள்ளியில்ல நான் சேர ஆனந்தமான வகை பிரின்சிபால் அந்தோனிஸ்வாமிக்கு என்னை நிறையவும் பிடிக்கும்.ஏன் என்றால் நான் 10வதுல பள்ளியில் முதலிடம் , விளையாட்டில் மண்டல அளவுல நிறையப் பரிசு வென்று பள்ளிக்கூடத்துக்குப் பெருமை சேர்த்து இருக்கிறேன்.

ஆகஸ்ட் 1, 2009.
அந்தோணிஸ்வாமி சார்க்கு பதவி உயர்வு மட்டும் பணியிடமாற்றம் வந்தது. நொறுங்கிப் போனேன் .அடுத்த நாள் பிரேமலதா என்ற புதிய முதன்மை ஆசிரியர் வந்தார்கள். இன்னும் 3 நாள் தான் 12ஆம் வகுப்பை முடிக்க.

ஆண்டோனிஸ்வாமி சார்க்குப்ரோமோஷன் மட்டும் பணியிடமாற்றம் வந்தது. நொறுங்கிப் போனேன் .
அடுத்த நாள் பிரேமலதா என்ற புதிய பிரின்சிபால் வந்தார்கள் அன்று இவனுக்கு 11வது வகுப்பு இன்னும் மூன்று நாள் தான் இருக்கிறது.
அப்போது அவனோடு மூத்தவர் ஓடிஏ farewell டே celebration வைத்தார்கள், அதுல மிக ஆட்டம் போட்டேன்.அந்த சமயம் வந்த புதிய பிரின்சிபால் என செமயா அடித்து எல்லாரும் முன்னாலும் அசிங்கப் படுத்தி ,வெளியே போகச் சொல்லிவிட்டார்கள் பள்ளியைவிட்டு கோவத்தில் வழிவந்த நான் , வாசலை உக்காந்தேன் . celebration கு நான் காரணமிலானு யாருமே சொல்ல முன் வறள. மிகவும் அற்புதமாக 12வது முடித்தேன் பள்ளி முதல் இடமும் கிடைத்தது.

பள்ளியை முடித்து வெளி நகரத்துக்குச் சென்று உயர் படிப்பை தொடங்கினேன்..

இன்று

Tring Tring ...தொலைபேசி எடுத்தேன் , அது ராகுல்.

நான்: சொல்லு மச்சான், எங்க இருக்க?
ராகுல் : நான் வந்துட்டேன், பார்க்கிங்ல இருக்கேன்டா , நீ ??
நான்: இங்க பார் , பின்னாடி என்றேன்!!!
ராகுல் : வாழ்த்துக்கள் மச்சான், இந்தாடா என்னுடைய small gift .
நான்: நன்றி மச்சான், எங்க நாம பசங்க கால் பண்ணினா எடுக்கமாட்டீங்குறாங்க ??
வினோதினி எப்படி இருகாங்கடா ??
ராகுல் : அதற்கு, நீ ராம் அக தன கேக்கணும்..
நான்: ஏன்டா என்ன ஆச்சி, எப்படி இருக்காங்க..கல்யாணம் ஆய்டுச்சுல ....இப்போது எங்கே இருக்காங்க...??

ராகுல்: டேய் இல்லை டா இல்ல, இன்னும் கல்யாணம் ஆகல , வினோதினி யா ஒரு இரண்டு ஆண்டுகள் முன்னாடி திருச்சியில பார்த்தேன்.எதோ துணை ஆய்வாளர் ஆ இருந்தாங்களாம். இந்தா இந்த கடிதாசியா பிடி, வினோதினி உங்கிட்ட கொடுக்கச் சொன்ன கடிதம். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்கிட்ட கொடுக்கவேண்டுமென்று நெனச்சிட்டு இருந்தேன், அனா முடியல, நீ உன் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணும்பொழுது எனக்கு திரும்பவும் கிடைத்தது அப்போது குடுக்கமுடில,அப்போதே குடுத்து இருந்தால் ஏதாவது மாறியிருக்கும் ...!!

மூன்று நாள் கழித்து...

ராகுல்: தங்கச்சிக்கு கல்யாணம் , மறக்காமல் வந்துவிடு டா ...
நான்: கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுறேன்., என்று சொல்லி தொலைபேசியை கட் செய்தேன்.

ராகுல் , வினோதினி குடுத்ததா ஒரு கடிதம் கொடுத்தானே , எங்க வைத்தேன் என்று யோசித்துத் தேடிக்கொண்டு இருந்தேன்..
எதைத்தேடுகிறீங்க, சொன்னிங்கன்னா நானும் தேடுவேன் என்றாள் அவள்.

Bero நிறம் கொண்ட நாட்குறிப்பு பாத்தியா , என்றேன்.
இதுவா என்றாள், திரும்பிய போது , அந்த நாட்குறிப்பு bero வில் இருந்து எடுத்தாள் அவள்.
சிறிது தயக்கத்துடன், வாங்கினேன். யோசித்தேன் . இதுக்குள்ள இருந்த லெட்டர படிச்சு இருப்பாளோ என்று யோசித்தேன்..

அருகில் வந்து அமர்ந்தாள்.

எனக்கு உன்னையும் தெரியும் விநோதினியும் தெரியும் என்றாள்.
என்ன எப்படித் தெரியும் உனக்கு என்று கேட்டேன்..

நான் விநோதினின் தோழி , 10ஆவது படிக்கிறப்போ நாங்க நெருங்கிய தோழிகள். இந்த லெட்டர் நான் உனக்கு எழுதியது என்றாள்.

என்ன சொல்ற என்றேன்.

ஆமா , இது நான் உனக்குக் கொடுக்க நினைத்த முதல் காதல் கடிதம்.அதான் வினோதினி மூலமா , ராகுல் கிட்டக் கொடுத்துக் கொடுக்கச் சொன்னேன் ஆனால் ராகுல் உன்னிடம் கொடுக்கவில்லை. இதுவரை இந்த காதல் கடிதத்தைப் படிச்சது 2 பேர் , ஒன்று நான், இன்னொன்னு வினோதினி என்றாள். இத படித்ததும் அவளுக்கு உன்மேல லவ் வந்துச்சு.அப்போதான் நீ farewell ஆட்டம் ஆடி திட்டு வாங்கின ஜூன் 11 2009. அப்போ நான் principal பேசி புரியவைத்தேன், மூத்தவர் கூப்பிட்டானால்தான் இவன் வந்தான் , இவன் மேல எந்த தப்பும் இல்லனு.ராமுக்கு நான் உன்ன லவ் பண்றேன்னு தெரியும் .ஒருநாள் ராம் என்ன காதலிக்கிறேன்னு சொன்னான், அப்போ தான் நான் அவனிடம் சொன்னேன், நான் உன்ன காதலிக்கிறேன்னு அதுமட்டுமில்லாமல் , வினோதினி உன்ன லவ் பண்றா இருந்தாலும் நான் உனக்கு லவ் பண்றேன்னு விளையாட்டுக்கு சொல்றேன்னு நெனச்சிட்டு இருந்தாங்க, அப்போது சொன்னதில் இருந்துதான் கால் பண்ணக் கூட எடுக்குறதில்ல.

எப்பா , எதோ மௌனம் பேசியதே படம் பாத மாரி ஒரே ட்விஸ்ட் ஆ இருக்கு என்றேன் ..

இரு அப்போ... , என்று சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினேன்..இரு இரு கதை இன்னும் முடியவில்லை என்றாள்...உன்னோட 10ஆம் வகுப்பு farewell பள்ளி uniform வெச்சிருக்கியா..?? என்றால் ...வைத்திருக்கிறேன் , ஏன்...!! என்றேன் .அதை எடுத்து பார் என்றாள் ...எடுத்து பார்த்ததும், பழைய நாள் ஞாபகம், ink அடித்த நாள் பத்தியும் , வினோதினி பத்தியும் ...யோசித்து ரசித்துக்கொண்டே இருந்தேன் ...தெரியுமே உடனே கனவுக்கு போய்விடுவ என்றாள் ...முன்னாடி பாக்கசொல்லல பின்னாடி திருப்பி பாருங்க என்றாள் ..என் சட்டையைத் திருப்பினால் ஒரே அதிர்ச்சியோ அதிர்ச்சி ..

I 💓U இப்படிக்கு என அவள் பெயர் இருந்தது.

ஹே , என்ன இது.. இதுவரை நான் கவனிக்கவேயில்லை இத என்றேன்.அப்போதே , பாத்திருந்தா எல்லாமே வேரமாதிரி நடந்திருக்குமே என்றாள் ...ஏண்டி என்கிட்ட வந்து சொல்லல??? என்றேன் ..எங்க சொல்ல முடிந்தது ,, நீங்க தான் விளையாட்டு , படிப்பு ,அப்பறம் வினோதினி பின்னலாவே சுத்துனீங்க. நாங்களாம் உங்க கண்களுக்குத் தெரிலேயே என்றாள் ...இல்லடி , நீ பள்ளியில் ராம் கூட பேசுவல்ல ,அதனால் நீங்க இரண்டுபேரும் லவ் பன்றிங்கனு சொன்னாங்க அதான் அப்படி நெனச்சிட்டேன்.ஓ... நீங்க ஷாஜஹான் பட விஜய் மாரிலாம் உதவிப் பண்ண ட்ரை பண்ணிங்களா என்றாள்..அது எப்படித் தெரியும்.அது ஆகஸ்ட் 05 2010 ல...என்றேன் ..இல்ல , அது அக்டோபர் 12 2010 ல ...அன்னிக்கு என்னோடப் பிறந்தநாள் ,அவனை எனக்கு gift கொடுக்க அனுப்புனால நீ .அதுமில்லாம தைரியத்துக்காக குடிச்சிருந்திங்க இரண்டுபேரும் ...என்றாள் ..

நாங்கலாம் குடிக்கலையே , யார் சொன்னா ??

டேய் , பொய் சொல்லலாம் ஆன ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது... அந்த gift கவர்ல இப்படிக்கு னு உன் பேரு எழுதிருந்துச்சு என்றாள் ..mind voice : அய்யயோ மாட்டிக்கொண்டேனே !!!!என்ன மைண்ட் வாய்ஸ் ஆ , மாட்டிக்கிட்டோமே ன்னு யோசிக்குறியா !!!! என்ன mindடா இது மானம்கெட்ட மைண்ட் ஆ இருக்கு. இவ்ளோ easyah கேக்குது என்றாள் .

மேல சொல்லு என்றேன் ..

அந்த gift ah இன்னும் பிரித்துப் பார்க்கவில்லை என்று என் கைகளில் கொடுத்தாள்...திருந்துபாத்ததும் வியந்தேன் ..

அதில் I 💓 U இப்படிக்கு என் பெயர் இருந்தது.

கட்டிய படியே ,Gift இல் எழுத்திருந்ததைச் சொன்னேன்,அவளும் சொன்னால் , இன்ப கண்ணீரில் இருவரும் நனைந்தோம் ...கண்ணீர் வருக சற்று திரும்பி வாய்களில் கைவைத்து மூடி அழுதபடியே நின்றாள்..
திரும்பிப் பார், சீக்கிரம் வாங்கிக்கோ முட்டிவலிக்குது என்றேன் ..
சரி என வாங்கினாள். I Love you என்று சொன்னாள்,அவள் அழகு கண்களில் முழுதும் தெரிந்தது அவளின் ஆழமான காதல். இந்த உலகத்திலே இன்றைக்கு நான்தான் மிகவும் சந்தோசமா இருக்கிறேன்.

சில நாள் கழித்து பூங்காவில் இருவரும்..
சொல்லுடி என்றேன்.
என்ன சொல்லவேண்டும் என்றாள் ...
என்ன பத்தி எல்லாம் தெரியும்னு சொல்ற ஆப்போ நான் கல்லூரி ல ஒரு பொண்ணு பின்னாடி சுத்திருக்கேன்ல அது தெரியுமா உனக்கு..
டேய் லூசுப்பயலே ...அந்த பர்தா போட்ட முஸ்லீம்னு நீ நம்பும் பெண்தானே, அந்த பொன்னே நான்தான் டா ... என்றாள்.
என்ன சொல்ற என்றேன்.
அவளை எப்படி கூப்புடுவ, FATI FATI னு தான கூப்புடுவா லூசுப்பயலே என்றாள்..
அப்போ அதுவும் நீதானா ..!! எங்க கைய காட்டு .... என்றதும் அவள் கைகளைப் பார்க்கத் தொடங்கினேன் , தேடினேன் ... எங்க காணோம் என்று நினைக்கும் நேரத்தில்..

டேய் , Tattoo தான தேடுற , அதற்கு என் இடது கைகளில் தேடுனா எப்படிக் கிடைக்கும் , என்னுடைய வலது கைகளில் தான எப்போவுமே நீ பிடிப்ப என்றாள் ..

அடிப்பாவி , என்னடி tattoo உன் கையில இருக்கு ...!!!!

டேய் லூசுப்பயலே , அதான் டா நான் சொல்றேன் , நான் தான் பாத்திமா,

மொஹம்மத் அலி boxer யின் பெண் ..

7ஜி ரெயின்போ கோலோனி,

சுப்ரமணியபுரம்,

திருநகர் ,சென்னை 600028.

அடிப்பாவி...
இதுக்கே இப்படியென்றால்,உங்கள் அலுவலகம்ல உங்கள் client ரூட் விட்டுட்டுஇருந்தியே , Rekha அதும் நானே...!!!!

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது...

-" இந்த உலகத்துல யாராவது ஒருத்தர் நம்மாள பாத்துக்கிட்டுதான் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க , ஆனால் நம்ம கண்களை மட்டும் பாக்குறவங்கள நாம பாக்குறதேயில்லை ஆனால் அதுதான் உலகின் மிகச் சிறந்த அழகு . அன்றும் இன்றும் நீ என்ன பாக்குறமாரி , நான் இப்போ உன்ன பாக்குறமாரி .. ஐ லவ் யு ( I Love you ). THE HAPPY ENDING IS A BEAUTIFUL BEGINNING."-

திருமணமாகி துணைவியைப்பற்றிப் புரிந்த பின்பு , இவளே நம்முடைய சிறுவயது தோழியாக இருந்திருக்கக்கூடாதா..!!
இவளே நம்முடைய பள்ளி காதலியாக , கல்லூரி காதலியாக , அலுவலக காதலியாக இருந்திருக்கக்கூடாதா என்று எண்ணுவோர்க்கு இந்த பதிவு…!!
மனைவியை நேசிப்போர்க்கு இந்த பதிவு…

தொடரும்...