அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை என்று. அவளின் மனதிற்குள்ளும், “தன்னிடமும் யாராவது இதுபோல் உண்மையான பாசத்தைக் காட்ட மாட்டார்களா?” என்று அங்கே 14 சிறுமிகளுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் உறவுகளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அக்னியை ஆளும் மலரவள் - 1
அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த என்று. அவளின் மனதிற்குள்ளும், “தன்னிடமும் யாராவது இதுபோல் உண்மையான பாசத்தைக் காட்ட மாட்டார்களா?” என்று அங்கே 14 சிறுமிகளுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் உறவுகளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அப்போது “மலரு” என்ற குரல் வீட்டினுள் இருந்து கேட்க, அவளும் தன் நினைவுகளிலிருந்து வெளியே வந்து உள்ளே சென்றாள்.இவள் தான் நமது நாயகி மலர்விழி. பெயருக்கு ஏற்ப அவளின் மனமும் மலர்களைப் போல மென்மையானது. அழகான விழிகள், ஆப்பிள் கண்ணங்கள், செர்ரி உதடுகள், கருநீல இடைதாண்டிய கூந்தல் என எல்லோரும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரம்மன் செதுக்கிய சிலை. அன்பு, அடக்கம், அழகு என எல்லாம் அதிகம் கொடுத்த கடவுள், அவளின் வாழ்க்கையில் துன்பங்களையும் அளவுக்கு அதிகமாக அள்ளி கொடுத்துவிட்டார்.தென்னிந்திய மான்செஸ்டர் என அழைக்கப்படும் மரியாதை ...Read More
அக்னியை ஆளும் மலரவள் - 2
அக்னியைப் பார்த்ததும் சதாசிவத்திற்கு முகம் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது “சார், தெரியாம பண்ணிட்டேன். என்ன விட்டுடுங்க சார்.” என்று கதறினார்.“எவ்வளவு தைரியம் இருந்தா என் அலுவலகத்தில் பொண்ணுங்க மேல கை வெச்சிருப்ப?” என்று பக்கத்தில் இருந்த கம்பியை எடுத்து சதாசிவத்தின் கையில் ஓங்கி அடித்தான்அக்னி.ஒரே அடியில் அவன் கை எலும்புகள் நொறுங்கிவிட்டன.“டேய் துருவா! அவனுக்கு ஒரு வாரத்துக்குச் சாப்பாடு, தண்ணி எதுவும் கொடுக்காம, அவனுக்கான தண்டனையைக் கொடுங்க. அப்பவும் அவன் உயிரோட இருந்தா நம்ம டெவில் கிட்ட அனுப்புங்க. அவன் பார்த்துப்பான்” என்றான். (டெவில், அக்னி வளர்க்கும் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட நாய்).“ஆதி, நீ போய் அந்தப் பெண்ணை அட்மிட் பண்ண மருத்துவமனையில் கூட இருந்து பார்த்துக்க” என்றான்.“சரிங்க பாஸ், நான் பார்த்துக்கிறேன். நீங்க இப்ப கிளம்புங்க. உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் இருக்கு. நானும் மருத்துவமனைக்குப் போய்ட்டு அலுவலகத்துக்கு வந்துடுறேன் பாஸ்” என்று ஆதி அங்கிருந்து கிளம்பினான்.அக்னியும் துருவனும் ...Read More
அக்னியை ஆளும் மலரவள் - 3
மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, மனைவியோ மலரை முறைத்துவிட்டுத் தன் கணவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள்.அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் அவள் அருகில் வந்த பிரதீப், “சாரி, சித்தி, வலிக்குதா?” என்று அவளின் காயத்தைத் தன் பிஞ்சு கரங்களால் தொட்டுப் பார்த்து, “என்னாலதான் உங்களுக்கு அடிபட்டுச்சு,” என்று அவளிடம் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டிருந்தான்.அப்போது உள்ளே இருந்து அவனின் தாய், “பிரதீப், அங்கே இன்னும் என்ன பண்ற? உள்ளே வா,” என்று சத்தம் வந்ததும், பிரதீப் உள்ளே செல்லாமல் மலரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.“பிரதீப், நீ உள்ளே போ. உன்னை கூப்பிடுறா அவ! இங்கே வந்தா நீ என்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்து உன்னைத்தான் திட்டுவாங்க,” என்றாள்.“நான் உள்ளே போறேன். நீ ஹாஸ்பிட்டலுக்குப் போ,” என்று பிரதீப் அங்கிருந்து சென்றான்.பிரதீப் அங்கிருந்து சென்றதும், மலர் ...Read More
அக்னியை ஆளும் மலரவள் - 4
காரில் இருந்து இறங்கிய அக்னி வீட்டின் வாயிற்கதவினைப் பார்த்ததும், தான் வீட்டை விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவனின் மூளையை சூழ்ந்து கொள்ள தனது ஒரு நிமிடம் இறுக மூடி முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு வீட்டின் வாயிலிற்கு நடந்தான்.இங்கே அன்னலட்சுமி பாட்டியின் அறைக்குச் சென்ற வேலாயுதம், அக்னி வீட்டிற்கு வந்ததைப் பற்றிக் கூற,உடனே அன்னலட்சுமி பாட்டி தனது அறையை விட்டு வெளியே வந்தவர், தன் வயதினையும் மறந்து வேக வேகமாக நேராக வாசலுக்கு அருகில் சென்றார். அங்கே தனது பேரனைப் பார்த்ததும் அப்படியே அதே இடத்தினில் நின்றுவிட்டார்.அக்னி அவரைப் பார்த்துக்கொண்டே தான் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே வந்தும் அவன் பார்வையை மாற்றவில்லை.இங்கு அவனின் பாட்டியோ தனது பேரனின் தோற்றத்தினைப் பார்த்து ஸ்தம்பித்து அதே இடத்தில் நின்றுவிட்டார். காரணம், தன் பேரனின் தோற்றம் தனது கணவரைப் போலவே இருந்தது.அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம், அவன் பார்வையில் இருக்கும் தீர்க்கம், நடையில் ...Read More
அக்னியை ஆளும் மலரவள் - 5
வேலையாட்களின் உதவியால் சமையல் வேலையை முடித்துவிட்டு அவசரமாக காலேஜுக்குச் செல்ல ரெடியாகி வெளியே வந்தாள். அவசரமாக வந்ததால் முன்னால் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். “யார் மீதோ என்று நினைத்து பயந்துகொண்டே விலகி நின்று நிமிர்ந்து முகத்தைப் பார்க்க, அங்கு புதிதாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மலர்.ஏனென்றால் இந்நேரத்திற்கு அந்த வீட்டில் யாரின் மீது மோதியிருந்தாலும் ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்கள். அவள் தன்னைச் சரியாக நிலைப்படுத்திக்கொண்டு முன்னால் இருந்தவனை இப்போதுதான் நன்றாக உற்றுப் பார்த்தாள். அவன் அவளை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் துகிலுறிக்கும் பார்வையில் சிறிது பயந்து தான் விட்டாள் மலர். அவனின் பார்வையை முறைத்து கொண்டே, “யார் நீங்க?” என்று கேட்டாள்.அவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “செல்வி அத்தை வீடு இதுதானே?” என்று கேட்டான்.அப்போதுதான் அவளின் பெரியம்மா நேற்று அவர்களின் அண்ணன் மகன் வருவதாகச் ...Read More