காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல் எழுந்து கொண்டாள் கண்களைச் சுருக்கியபடி. கண்ணெல்லாம் எரிந்தது. இரவு தனது அலுவலக வேலை முடிந்து வரவே அத்தனை நேரம் கடந்து விட்டிருந்தது. தன் இடை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டவள் வெளியே வரவும், அவளைப் போலவே இன்னொரு ஜீவனும் வெளியே வந்து நின்று தன் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை அவளது தம்பி தான்.
என் வானின் வானவில் நீ - 1
என் வானின் வானவில் நீவானவில்-01காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் எழுந்து கொண்டாள் கண்களைச் சுருக்கியபடி.கண்ணெல்லாம் எரிந்தது. இரவு தனது அலுவலக வேலை முடிந்து வரவே அத்தனை நேரம் கடந்து விட்டிருந்தது.தன் இடை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டவள் வெளியே வரவும், அவளைப் போலவே இன்னொரு ஜீவனும் வெளியே வந்து நின்று தன் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை அவளது தம்பி தான். என்னக்கா, தூக்கம் போச்சா? என்று சிறு புன்னகை அவனிடத்தில். ஏனோ அவள் தூக்கமும் கலைந்ததில் இன்ஸ்டன்ட் திருப்தி அவனுக்கு. போடா அகில்,இந்தம்மா எப்போ பார்த்தாலும் இதைத்தான் செய்றாங்க என்று அலுத்துக் கொண்டவள், நொடியும் தாமதிக்காமல் சமையலறைக்குள் புகுந்தாள். ஏ எருமை, குளிக்காம பல்லு விளக்காம எதுக்குடி கிச்சன் வர்ற? என்று தோசைக்கரண்டியை ஓங்க ம்மா, காலையிலையும் எந்த ஆஃபிசருக்கு ...Read More