நெருங்கி வா தேவதையே - Part 18

  • 510
  • 153

என்ன விஷயம் மேம் சந்தோஷமா இருக்கீங்க என்றான் ராகவ். நாம எல்லோரும் ஊட்டி ட்ரிப் போறோம் . அருண் இப்போதான் சொன்னான் என்றாள் ரஷ்மி. சொல்லிவிட்டானா நானே உங்களிடம் முதலில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன் என்றாள் சௌமியா. மேலும் சில விஷயங்களை சொல்லிவிட்டு கிளாஸ் இருக்கு என்று கிளம்பிவிட்டாள். ரஷ்மியும் ராகவும் வகுப்புக்கு போன போது வகுப்பு தொடங்கி 10 நிமிடம் ஆகியிருந்தது. ஜோ சாயங்காலம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என தென்றலையும், ராகவையும் அழைத்திருந்தான். அருண் ஏற்பாடு தான் அது. மறுபடி ஒருமுறை நீங்கள் இருவரும் சேர்ந்தால் என்ன என்று கேட்டான். தென்றல் எதுவும் சொல்லவில்லை. ராகவ் அதெல்லாம் சரியா வராது அவளுடைய விருப்பங்கள் வேறு என்னுடைய விருப்பங்கள் வேறு இப்போது எதற்கு முடிந்து போன விஷயத்தை கிளறுகிறாய் ஜோ என்றான். என்ன ராகவ் அப்படி சொல்லிவிட்டாய் தென்றல் உன்னை பிரிந்து எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பது உனக்கு தெரியவில்லையா