அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவரவர் தங்களின் இரவு உணவை உண்டு விட்டு,அது செரிமானம் ஆவதற்காக கேளிக்கை பேச்சும், வேடிக்கையுமாக இருந்து,இப்போது பறவைகள் கூடு அடைந்தது போல் தங்கள் அறையில் நித்திரையில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பர்..இத்தனைக்கும் அந்த மாளிகையில் இன்றைய நிலவரப்படி குறைந்தது நாற்பது பேர் வேலைக்காரர்கள் உட்பட இருக்கின்றனர்..ஆனால் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்
தேடி வந்த பேரன்பே....?? - 1
அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவரவர் தங்களின் இரவு உண்டு விட்டு,அது செரிமானம் ஆவதற்காக கேளிக்கை பேச்சும், வேடிக்கையுமாக இருந்து,இப்போது பறவைகள் கூடு அடைந்தது போல் தங்கள் அறையில் நித்திரையில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பர்..இத்தனைக்கும் அந்த மாளிகையில் இன்றைய நிலவரப்படி குறைந்தது நாற்பது பேர் வேலைக்காரர்கள் உட்பட இருக்கின்றனர்..ஆனால் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல் ...Read More
தேடி வந்த பேரன்பே....?? - 2
வாழ்க்கை என்பது எப்போதுமே ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒரு பேழை.. அந்த பேழைக்குள் இருக்கும் ஆச்சரியங்களை சராசரி மனிதனால் கணிக்க இயலாது...அந்தப் பேழையிலிருந்து வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ஆச்சரியம் சர்வேஸ்வரனுக்கு காத்திருந்தது அன்றைய இரவு..ஆம், அவன் உலகை வெறுத்து தனிமையாக உணவு எடுத்துக் கொள்ளவதாக நினைத்து மனவலி கண்டது போல் அவன் தனிமையில் இருக்கவில்லை..அவன் உணவு உண்ணும் நேரத்தையும், அவன் முகத்தில் வந்து போகும் பாவனைகளையும், அவனின் தனிமையின் வலியையும் கணித்தபடி அங்கு இரு விழிகள் அவனை கண் சிமிட்டாமல் பார்த்தபடி ஊன்றி கவனித்தது..அவன் தனிமை வலியை உணர முடிந்தது.. முல்லைக்கு மனதின் ஓரம் ஏதோ ஒரு உணர்வு காலமாக அவளை ஊடுருவி அசைத்துப் பார்த்தது...அதற்காக உடனே மனம் சமாதானமாகி அவனிடம் சென்று பேசுவோம், அவனுக்கு உணவு பரிமாறவும் மனம் முன்வரவில்லை...ஆனால், ஏதோ ஒரு உந்துசக்தியால் அவனின் நடவடிக்கைகளை உற்று கவனித்தவாறு அமைதியாக அந்த இரவில் நின்றிருந்தாள்...இதுவரை அவன் எத்தனை மணிக்கு ...Read More
தேடி வந்த பேரன்பே....?? - 3
கடந்த ஒரு வாரமாக சர்வேஸ்வரனை தொடர்ந்து உற்று கவனித்ததில் அவனுக்கு அந்த வீட்டில் நடக்கும் அநியாயம் முல்லைக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது..இதில் தன் வாழ்வும் இருப்பதால், இப்போது தன்னையும் அதில் பகடைக் காயாக உபயோகித்து, சர்வேஸ்வரனின் வாழ்விலிருந்து விலக்கிவிட்டு,அவனின் முழு உழைப்பின் பலனையும் அனுபவிக்க பேராசைபடும் குடும்பத்தினரின் உண்மை முகம் விகாரமாக வெளிப்பட்டிருக்கிறது...ஒருபுறம் சர்வாவிற்காக பரிதாபபட்டாலும், இன்னொரு பக்கம் தன் வாழ்வைப் பற்றி சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி அவர்கள் அழிக்க நினைப்பது கோபத்தை தீ கங்குகளாக உள்ளத்தை எரித்தது..இப்போது முல்லைக்கு இரண்டு வாய்ப்பு கண் முன்னே இருந்தது...ஒன்று அவன் குடும்பத்தின் உண்மை முகத்தை சர்வாவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி,அவனுடன் தன் வாழ்வை மாற்றி சந்தோஷமாக வாழலாம்...ஆனால் இப்போதும் சர்வாவின் மீது முழு கோபம் வடிந்து விட்டதா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் பதில் கிடைக்கும்...ஏனெனில் இந்தக் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஓரளவிற்கு புரிபட்டாலும், அதில் சர்வாவின் ...Read More