காதல் என் உலகம்

(58)
  • 1.9k
  • 573

மலருக்கு 16 வயது இருக்கும் போது, அவள் வீட்டிற்கு எதிரே சூர்யா குடும்பம் குடி வந்தது. சூர்யா அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தான். தினமும் காலையில் மலர் பள்ளிக்கு போகும் போது அவனை பார்ப்பாள். மாலையில் விளையாடும் போதும் பார்ப்பாள். ஆனால் அந்த வயதில் அவளுக்கு அவன் மேல் எந்த காதல் எண்ணமும் வரவில்லை. வெறும் எதிர் வீட்டு அண்ணன் போல தான் தோன்றினான்.வருடங்கள் வேகமாக ஓடின. மலருக்கு இப்போது 21 வயது. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள். அவள் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பெண். அப்பா ஒரு சின்ன கடையில் வேலை பார்க்கிறார். அம்மா வீட்டு வேலை.21 வயதானதும் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். முதல் வரன் வந்தது, பையனுக்கு 28 வயது, சொந்தமாக தொழில். மலரிடம் போட்டோ காட்டினார்கள், மலர் ஒன்றும் சொல்லவில்லை. மனதில் எந்த ஈடுபாடும் இல்லை. அந்த வரன் தள்ளிப்போனது.