நிழல் தரும் வசந்தம் - 22

  • 135

திட்டமிட்டபடி ரமேஷ் கல்யாணம் நடந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.அவர்களோடு சொந்த ஊருக்கு போய் வந்தான். தீபா போகவில்லை. எல்லா சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ரஞ்சனி டிகிரி வாங்கும் விழா அந்த மாத கடைசியில் இருந்தது. ரஞ்சனியை விட பிரேம் பரபரப்பாய் இருந்தான். ஆளுநர் கையால் பட்டம் என்றாள் சும்மாவா? போட்டோகிராபர்களிடம் சொல்லி வைத்திருந்தான்.தீபா நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க என்றாள். இது என்னவோ என் பெண்ணே சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க் என்றான். பிரேம் அம்மா , அப்பா ஒரு வாரமாகியும் திரும்ப வரவில்லை. இவள் தனி ஆளாய் சிரமப்படுவாள் என நினைக்கவும் இல்லை. புது மருமகள் வந்ததும் எல்லாம் மாறி விட்டது போல என நினைத்தான். தீபா ஃபோன் பண்ண போனாள் பிரேம் அம்மாவுக்கு , இவன் தடுத்துவிட்டான். அவர்கள் இஷ்டப்படி இருக்கட்டும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்றான். பிரேம் அவசரப்படாதே வார்த்தைகளை அள்ளி வீசாதே. பிறகென்ன