நிழல் தரும் வசந்தம் - 19

  • 547
  • 213

குமரகுரு இறந்த அதிர்ச்சியில் இருந்து பிரேம் இன்னும் மீளவில்லை. தீபாவும், ரஞ்சனியும் இன்னும் அழுது கொண்டிருந்தனர். பிரேம் அம்மா , தம்பி, அப்பா உள்ளிட்டோர் அவர்களை எப்படி சமாதானபடுத்துவது என்று புரியாமல் தவித்தனர். கதிரேசன், சுபா வந்திருந்தனர். இப்போதான் எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தினார். அவருக்கு தன் பொண்ணுங்க மேல இருந்த பாசம் விலைமதிப்பில்லாதது என்றான் பிரேம். அவர் கடைசி காரியங்களை பிரேம் செய்தான். சொந்தக்காரர்கள், ஆபீசில் வேலை பார்ப்பவர்கள், பிஸினஸ் பார்ட்னர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். அவர்கள் ரஞ்சனியை நல்ல இடத்தில் கல்யாண செய்து கொடுக்க வேண்டியது பிரேமின் பொறுப்பு என்றனர். பிரேம் தீபாவை என்ன சொல்லி சமாதானபடுத்துவது என தவித்தான். அவர்களுடைய உலகமே அப்பா தான். ஒரு வாரம் கழித்து பிரேம் குடும்பத்தார் கிளம்ப தயாரான போது தீபா, நீங்களும் எங்களை தனியாய் விட்டு போக வேண்டாம். எங்களோடு வந்து விடுங்கள் என்றாள். சரிம்மா இன்னும் ஒரு வாரத்தில் வருகிறோம்