பிரேம் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து விடுவதாக சொன்னான். தீபா உற்சாகமடைந்தாள். குமரகுருவும் வரப்போவதாக தகவல் கிடைத்தது . அவர் ஒரு 15 நாள் தங்குவதாகவும் திரும்ப போகும் போது ரஞ்சனியை இரண்டு மாதங்கள் சுற்றி பார்க்க அழைத்து போவதாகவும் சொல்லி இருந்தார். ரஞ்சனியும் தீபாவும் அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.அதே சமயம் பிரேம் தீபா ஹனிமூன் ஏற்பாடும் குமரகுரு செய்திருந்தார். இதனால் சகோதரிகள் இருவருமே பயணம் செய்ய ஆவலாய் இருந்தனர். சொன்ன மாதிரி சுபா இந்த சண்டே வந்து விட்டாள். அவள் வருகைக்காக அவளுக்கு பிடித்ததை வீட்டிலேயே சமைத்து வைத்திருந்தனர்.சுபா காலை 11 மணி போல வந்தாள். வேலையெல்லாம் எப்படி போகிறது என்று ரஞ்சனி விசாரித்தாள். நன்றாக போகிறது. பிரேமிடம் பேசினேன் அவனுக்கு தீபாவை பிரிந்து இருப்பதில் விருப்பமில்லை . நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது. அவர் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை . கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள்.